New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழைய கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றி -தொ.மு.சி.ரகுநாதன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பழைய கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றி -தொ.மு.சி.ரகுநாதன்
Permalink  
 


 

பிரடெரிக் எங்கெல்ஸ்

தமிழாக்கம் : தொ.மு.சி.ரகுநாதன்

1

பழைய கிறிஸ்தவத்தின் வரலாறு நவீனகாலத் தொழிலாளி வர்க்க இயக்கத்தோடு குறிப்பிடத்தக்க ஒற்றுமை அம்சங்களைக் கொண்டிருக்கிறது. தொழிலாளி வர்க்க இயக்கம் போன்று, கிறிஸ்தவமும் தோற்றக்காலத்தில் அடக்கப்பட்ட மக்களின் ஒரு இயக்கமாகவே இருந்தது; தொடக்கத்தில் அது அடிமைகளின், விடுதலை பெற்ற அடிமைகளின், எல்லா உரிமைகளையும் இழந்த ஏழை மக்களின், ரோமாபுரியினால் அடக்கியாளப்பட்ட அல்லது விரட்டப் பெற்ற மக்களின் மதமாகத்தான் தோன்றியது. கிறிஸ்தவம், தொழிலாளர்களின் இயக்கம் இரண்டுமே அடிமைத்தனத்திலிருந்தும் வறுமையில் இருந்தும் எதிர்காலத்தில் வரப்போகும் விமோசனத்தையே உபதேசம் செய்கின்றன;

கிறிஸ்தவம் இந்த விமோசனத்தை மரணத்துக்குப் பின்னர், விண்ணுலகிலுள்ள வாழ்க்கை யொன்றில் காண்கிறது; சோசலிஸமோ அதனை இந்த உலகத்தில், சமுதாயத்தின் ஒரு மாற்றத்தில் காண்கிறது. இரண்டுமே அடக்குமுறைக்கும், சித்திரவதைக்கும் ஆளாயின. அவற்றின் ஆதரவாளர்களும் தூற்றலுக்காளானார்கள்; சிறப்புச் சட்டங்களால் ஒடுக்கப்பட்டார்கள்; முன்னவர்கள் மனித இனத்துக்கே எதிரிகளென்றும், பின்னவர்கள் அரசாங்கம், மதம், குடும்பம், சமுதாய முறை எல்லாவற்றுக்கும் எதிரிகளென்றும் மதிக்கப்பட்டார்கள். எல்லா அடக்குமுறைகளும் இருந்தபோதிலும், அவை அந்த அடக்குமுறைகளாலேயே தூண்டப்பட்டும், தடுக்க முடியாதவாறு வெற்றிகரமாக முன்னேறின. கிறிஸ்தவம் தோன்றி முந்நூறு வருஷங்களுக்குப் பின்னர் அது ரோமானிய உலகப் பேரரசின் அரசு மதமாக ஏற்கப் பட்டது; சரியாக அறுபது ஆண்டுகளிலேயே, சோசலிசம் தானாகவே ஒரு நிலையை எட்டிப் பிடித்துவிட்டது; இதுவே சோசலிசத்தின் வெற்றியை எல்லா வகையிலும் உறுதிப்படுத்துகிறது.

christ_400எனவே, பேராசிரியர் ஆண்டன் மென்ஜெர் தனது ‘உழைப்பின் முழு உற்பத்திக்கு உரிமை’ என்ற நூலில், ரோமானியப் பேரரசர்களின் கீழ் ஏராளமான நில வுடைமைச் சொத்து குவிந்திருந்தும், கிட்டத்தட்ட முழுமையாக அடிமைகளான அந்தக் காலத்துத் தொழி லாளர் வர்க்கம் எல்லையற்ற துன்பங்களை அடைய நேர்ந்ததும், “ரோமானியப் பேரரசின் வீழ்ச்சியோடு, மேலை நாட்டில் சோசலிசம் ஏன் தொடர்ந்து வரவில்லை” என்று வியக்கிறார்; “சோசலிசம்” அந்தக் காலத்திலே அதற்குரிய வகையில் உண்மையில் இருக்கத்தான் செய்தது; அது கிறிஸ்தவத்தில் மேலாதிக்கம் செலுத்தியது என்ற உண்மையை ஆண்டன்மென்ஜெரால் காண முடிய வில்லை. கிறிஸ்தவமானது வரலாற்றளவிலான சூழ்நிலை களுக்குக் கட்டுப்பட்டிருந்த நிலையில், இந்த உலகத்திலே சமுதாய மாற்றத்தை நிறைவேற்ற விரும்பவில்லை; மாறாக, விண்ணுலகில் மரணத்துக்குப் பின்னுள்ள நிலையான வாழ்க்கையில், வரப்போகும் “திருகுமாரனின் ஆட்சி”யில் தான் அதனை நிறைவேற்ற விரும்பியது.

இந்த இரண்டு வரலாற்றுக் காட்சித் தோற்றங்களுக் கிடையேயுள்ள ஒற்றுமையானது இடைக்காலத்தின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட விவசாயிகள், குறிப்பிடத்தக்க நகரத்து ஏழை மக்கள் ஆகியோரின் முதல் எழுச்சிகளின் மீது நம் கவனத்தைத் திருப்புகின்றது. மத்திய காலத்தின் எல்லா வெகுமக்கள் இயக்கங்களைப் போலவே இந்தக் கிளர்ச்சிகளும் மதத்தின் முகமூடியை அணிந்து கொள்ளக் கடமைப்பட்டவையாயிருந்தன; பரவிவரும் சீர்கேட்டிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்திலேயே பழங்காலக் கிறிஸ்தவம் தோற்றம்பெற்றது.* ஆனால் மதச் சார்பான உணர்ச்சிவேகத்திற்குப் பின்னால், ஒவ்வொரு சமயத்திலும் ஒரு புலப்படத்தக்க உலகியல் நலனும் இருக்கத்தான் செய்தது.

ஜான் ஜிஸ்காவின் தலைமையில் போராடிய, புகழ்வாய்ந்த நினைவுக்குரிய, பொஹிமியன் டாபோரைட்டுகளின் அமைப்பில் அது மிகவும் சிறப்பான முறையில் தென்பட்டது; ஆனால் இந்தப் போக்கு மத்திய காலம் முழுவதிலும் பரவி நிற்கின்றது; ஜெர்மானிய விவசாயப் போருக்குப் பின்னால் அது படிப்படியாக மறைந்து போய், 1830-ஆம் ஆண்டின் கம்யூனிஸ்ட் தொழிலாளர்களோடு மீண்டும் புத்துயிர் பெறுகின்றது. புரட்சிகரமான பிரெஞ்சுக் கம்யூனிஸ்டுகள், குறிப்பாக வீட்லிங்கும் அவரது ஆதரவாளர்களும், ரெனான் சொல் வதற்கு வெகுகாலத்துக்கு முன்பே பழைய கிறிஸ்தவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்: “பழைய கிறிஸ்தவக் குழுக் களைப் பற்றி நான் உங்களுக்கு ஒரு கருத்தை வழங்க வேண்டுமென்று விரும்பினால், சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் ஒரு உள்ளூர்க் கிளையைப் பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.”

இந்தப் பிரஞ்சு இலக்கியப் படைப்பாளி, ஒரு வகையில் விவிலிய நூலைப் பற்றிய ஜெர்மானிய விமர்சனத்தைச் சிதைத்து, அதிலிருந்து திருச்சபைச் சரித்திரத்தைப் பற்றி ‘கிறிஸ்தவத்தின் தோற்ற மூலம்’ என்ற நவீன இலக்கியத் துறையில் கூட ஈடிணை காணமுடியாத நாவலை உருவாக்கிய இந்த ஆசிரியர், மேலே மேற்கோள் காட்டிய அவருடைய சொற்களில் எத்தனை உண்மை இருந்தது என்பதைத் தாமே அறிந்துகொண்டிருக்கவில்லை. நான் அந்தப் பழைய “சர்வதேச அகில”த்தின் பண்பைக் குறைந்தபட்சம் ஒரு அம்சத்திலாவது காட்ட விரும்புகிறேன். உதாரணமாக கொரிந்தியர்களுக்குப் புனித பவுல் எழுதிய இரண்டாவது திருமுகம் எனச் சொல்லப்படுவதில் பழைய புண்களைக் கிளறாமல் யாரேனும் படித்துப் பார்க்க முடியுமானால் இதனைக் காணலாம். அந்த திருமுகம் முழுவதுமே, எட்டாவது அத்தியாயம் தொடங்கி நிரந்தமான - ஓ! - மிகவும் பிரபலமான அந்தக் குறைபாடுதான் எதிரொலிக்கின்றது. அது “Ies Cotisations ne rentnent Pas” - “நன் கொடைகள் வந்து சேரக் காணோமே!” என்பது தான்.

60களில் மிகவும் ஆர்வமிக்க பிரசாரகர்களும் அந்த நிரூபத்தின் ஆசிரியர் யாராக இருந்த போதிலும், அவரது கருத்தை அனுதாபத்தோடு நோக்கிப் பின்வருமாறு மெல்லமாகச் சத்தமில்லாமல் சொல்வார்கள்: “ஓஹோ! உங்கள் காலத்திலும் அப்படித்தான் இருந்ததா!”. நாமும் கூட - கொரிந்தியர்களும் நமது சங்கத்தின் பட்டாளமாகத் தான் இருக்கிறார்கள் - வந்து சேராத, எனினும் நமது கண் முன்னால் போக்குக் காட்டி மிதந்து, நம்மைச் சித்திரவதை செய்கின்ற நன்கொடைகளைப் பற்றி ஒரு பாட்டுக்கூடப் பாடலாம். “சர்வதேச அகிலத்தின் லட்சோப லட்சங் களாக” அவைதான் புகழ் வாய்ந்திருந்தன!

முதல் கிறிஸ்தவர்களைப்பற்றி நமக்குக் கிட்டும் ஆதாரங்களில் ஒருவர், பழங்காலத்து வால்டேர் எனத் தகும் ஹமோ ஹாட்டாவைச் சேர்ந்த லூஸியன் ஆவர்; அவர் ஒவ்வொரு விதமான மதச் சார்பான மூடநம்பிக்கை மீதும் சமமான ஐயுறு நோக்கையே கொண்டிருந்தார்; எனவே கிறிஸ்தவர்களையும் இன்னொரு விதமான மதச் சார்பான சமூகத்தாராக நோக்கினாரே தவிர, அவர் சிலை வழி பாட்டின் அடிப்படைகளையோ, அல்லது அரசியல் அடிப்படைகளையோ எதையுமே பார்க்கவில்லை. அதற்கு மாறாக, ஜூபிடரைத் தொழுபவர்களையும், அதே அளவுக்கு கிறிஸ்துவைத் தொழுபவர்களையும் அவர்களது மூட நம்பிக்கைக்காகக் கேலி செய்தார்; அவரது ஆழமற்ற பகுத்தறிவுக் கண்ணோட்டத்தின்படி, ஒருவிதமான மூடநம்பிக்கை மற்றொரு விதமான மூட நம்பிக்கையைப் போலவே முட்டாள்தனமாகத்தான் இருந்தது.

எவ்வாறாயினும் இந்தப் பாரபட்சமற்ற சாட்சியானவர் பல்வேறு பிற விஷயங்களோடு, ஹெலஸ் பான்ட்டஸிலுள்ள - ‘பாரியம்’ என்ற இடத்தைச் சேர்ந்த பெரிகிரினஸ் ப்ரோட்டியஸ் என்ற பெயர் கொண்ட ஒரு குறிப்பிட்ட துணிகரமான நபரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறார். இளைஞனாக இருந்த பொழுது இந்தப் பெரிகிரினஸ் ஆர்மீனியாவில் முறையற்ற புணர்ச்சி செய்ததன் மூலம் தனது திருவிளையாடலைத் தொடங்கினான். அந்தச் செய்கையின் போதே அவன் பிடிபட்டான்; அந்த நாட்டின் வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. என்றாலும் அவன் அதிருஷ்டவசமாகத் தப்பியோடி வந்துவிட்டான்; பாரியத்தில் தனது தந்தையை நெரித்துக் கொன்றதன் பின்னர் அவன் அங்கிருந்தும் ஓட நேர்ந்தது.

நான் ஸ்காட்டின் மொழிபெயர்ப்பிலிருந்து இங்கு மேற்கோள் காட்டுகிறேன் : “இவ்வாறாக, அவன் கிறிஸ்தவர்களின் வியப்பூட்டும் கல்வியறிவைப் பற்றியும் கேள்விப்பட நேர்ந்தது; அவர்களது குருமார்களோடும், எழுத்தர்களோடும் அவன் பாலஸ்தீனத்தில் ஒட்டுறவை வளர்த்துக் கொண்டுவிட்டான். குறுகிய காலத்திலேயே அவனோடு ஒப்பிடும்போது ஆசிரியர்களெல்லாம் குழந்தைகளாகத் தோன்றும் வண்ணம் அவன் அத்தனை முன்னேற்றம் அடைந்துவிட்டான். அவன் ஒரு தீர்க்க தரிசியாக, ஒரு மூத்தோனாக, ஒரு ஒழுக்கம் மிக்க தலைவனாக, ஒரே வார்த்தையில் சொன்னால் எல்லா வற்றிலும் எல்லாமாக மாறிவிட்டான். அவன் அவர்களது நூல்களுக்கு விளக்கவுரை செய்தான், தானே பெரு மளவுக்குப் பல புத்தகங்களை எழுதினான்; அதன் மூலம் அந்த மக்கள் இறுதியாக அவனிடத்திலே ஒரு உயர்ந்த மனிதரைக் கண்டார்கள்; தங்களுக்கு நியதிகளை வகுத்துத் தருமாறு அவனை அனுமதித்தார்கள்; அவனைத் தமது மேய்ப்பராக (குருமாராக) ஆக்கிக் கொண்டார்கள்... அந்தக் காரணத்தால் (அதாவது அவன் ஒரு கிறிஸ்தவனாக இருந்த காரணத்தால்) ப்ரோட்டியஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுச் சிறைக்குள் தள்ளப்பட்டான்... அவன் அவ்வாறு விலங்கிட்டுக் கிடந்த போது, அவனது சிறை வாசத்தில் ஒரு பெரிய கெடுவாய்ப்பைக் கண்டுணர்ந்த கிறிஸ்தவர்கள் அவனை விடுவிக்க எல்லாச் சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொண்டு பார்த்தார்கள். ஆனாலும் அவர்கள் வெற்றியடையவில்லை.

பின்னர் அவர்கள் சாத்தியமான எல்லா வழிகளிலும் அவனுக்குத் தமது மிகப் பெரிய அக்கறையுணர்ச்சியைக் காட்டிக் கொண்டார்கள். பொழுது விடியும் தருணத்திலேயே, சிறை வாசலில் வயதான தாய்மார்களும், விதவைகளும், இளம் அனாதை களும் குழுமி நிற்பதை எவரும் காணலாம்; கிறிஸ்தவர் களில் மிகவும் முக்கியமானவர்கள் சிறைக் காவலாளி களுக்கு லஞ்சமும் கொடுத்து, இரவெல்லாம் அவனோடு தங்கிப் பொழுதைக் கழித்தார்கள்; அவர்கள் தமது உணவையும் அங்குக் கொண்டு சென்றார்கள்; அவனது சன்னிதானத்தில் புனிதப் புத்தகங்களை வாசித்தார்கள்; சுருங்கச் சொன்னால் அந்த அன்புக்குரிய பெரிகிரினஸ் (அவன் இன்னும் அந்தப் பெயரோடுதான் இருந்தான்) ஒரு புதிய சாக்ரட்டீசுக்கு எந்த விதத்திலும் குறைந்தவனாக அவர்களுக்கு இருக்கவில்லை. அவனுக்கு உதவி செய்யவும், அவனைத் தேற்றவும், அவனுக்காக நீதிமன்றத்திலே சாட்சியம் சொல்லவும் சின்ன ஆசியாவிலிருந்துகூட, கிறிஸ்தவ சமூகத்தாரின் தூதுக் குழுக்கள் அவனிடம் வந்தன. அவர்களது சமூக பிரச்சினையாக ஒன்றிருக்கும் போது அந்த மக்கள் எவ்வளவு விரைவாகச் செயல் பட்டார்கள் என்பது நம்புவதற்கே அரிதானதுதான்; அவர்கள் செலவையோ அலுப்பையோ பொருட்படுத்து வதில்லை.

இவ்வாறாக, எல்லாப் பக்கங்களிலிருந்தும் பெரிகிரினஸ்ஸுக்குப் பணம் ஏராளமாக வந்து குவிந்தது; அதன் மூலம் அவனது சிறைவாசமானது அவனுக்குப் பெரியதொரு வருமானத்துக்குரிய ஆதாரமாயிற்று. ஏனெனில் அந்த ஏழை மக்கள் உடம்பிலும் ஆத்மாவிலும் தாம் அழியாத் தன்மை பெற்றவர்கள் என நம்பிக் கொண்டிருந்தார்கள்; அதனாலேயே அவர்கள் சாவைப் பரிகசித்தார்கள்; அவர்களில் மிகப் பலர் தமது சொந்த விருப்பின் பேரிலேயே தமது உயிரையும் தியாகம் செய்தார்கள். முன்னர் அவர்களது மிகவும் முக்கியமான சட்ட நிறுவனர், அவர்கள் ஒருமுறை மதம் மாறிய பின்னர், அதாவது கிரேக்கக் கடவுளர்களைப் புறக்கணித்து விட்டு, சிலுவையில் அறையப் பெற்ற நீதிவானுக்கு விசுவாசம் தெரிவித்து, அவரது நிபந்தனைகளின்படி வாழத் தொடங்கிய பின்னால் எல்லோரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழவேண்டும் என்று போதித்தார்.

அதனால் தான் அவர்கள் எல்லாப் பொருட் செல்வங் களையும் எவ்வித வேறுபாடுமின்றி அலட்சியம் செய் கிறார்கள்; அவற்றைப் பொதுவாகவே கொண்டிருக் கின்றார்கள். சான்றோ, நிரூபணமோ இல்லாமல் நல்ல விசுவாசத்தின் மூலமே கோட்பாடுகளை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சந்தர்ப்பங்களைச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த ஒரு மோசடிக்காரன் அவர்களிடத்திலே வரும் பொழுது, குறுகிய காலத்துக்குள்ளேயே அவன் பணக்காரனாகவும், அந்த அப்பாவி மக்களைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்து விட்டுப் போகவும் முடிகிறது. மற்றப்படி பெரிகிரினஸ் அப்போது சிரியாவின் மாகாண அதிகாரியாக இருந்த வனால் விடுதலை செய்யப்பட்டான்.”

பின்னர் மேலும் சில வீரசாகசங்களுக்குப் பின்னர், “நமது நேர்மையாளன் இரண்டாவது முறையாக” (பாரியத்திலிருந்து) “தனது பயணத்தைத் தொடங்கினான்; கிறிஸ்தவர்களின் நல்ல மனப்பான்மை அவனது பயணத்தில் பணத்தின் வடிவத்தில் அவனுக்குத் துணைநின்றது; எங்குச் சென்றாலும் அவர்கள் அவனது தேவைகளைக் கவனித்துக் கொண்டார்கள்; ஏதாவது கிடைக்காமல் வருந்துமாறு அவர்கள் அவனை என்றுமே விட்டதில்லை. இந்த முறையிலே அவன் சிறிது காலம் ஊட்டமளிக்கப்பட்டான். ஆனால் பின்னர், அவன் கிறிஸ்தவர்களின் சட்டங்களையே மீறியவுடனே - ஏதோ ஒரு விலக்கப்பட்ட உணவைத் தின்றதற்காகவே அவன் பிடிபட்டான் என நான் நினைக்கிறேன் - அவர்கள் அவனைத் தமது சமூகத்தி லிருந்து விலக்கிவிட்டார்கள்”.

லூஸியனின் இந்தப் பகுதியைப் படித்துப் பார்த்துப் பார்க்கும்போது இளமைக் காலத்தின் நினைவுகள் அல்லவா நினைவுக்கு வருகின்றன! முதன்முதலாக 1840-ஆம் ஆண்டு வாக்கிலிருந்து பல வருட காலமாக, ஸ்விட்ஸர்லாந்திலிருந்த வீட்லிங் கம்யூனிஸ்ட் சமூகங் களை நிஜமாகவே கொள்ளையடித்து வந்த “தீர்க்கதரிசி ஆல்பிரெச்ட்” நினைவுக்கு வருகிறார்; நீண்ட தாடி கொண்ட அந்த உயரமான பலம் வாய்ந்த மனிதர் ஸ்விட்ஸர்லாந்தின் வழியாகக் கால்நடையாகவே பயணம் செய்து உலக விடுதலைக்கான தமது மர்மமான புதிய சுவிசேஷத்தைக் கேட்கக் கூட்டங்களைத் திரட்டினார்; என்னதான் இருந்தாலும் சகித்துக்கொள்ளக் கூடிய ஆபத்தற்ற ஏமாற்றுக்காரராகவே தோன்றுகின்ற அவர் சீக்கிரமே இறந்து போனார்.

இதன் பின்னர் இவரது வழிவந்தோராக, அத்தனை ஆபத்தான பேர்வழியாக இல்லாத, ஹோல்ஸ்டீனைச் சேர்ந்த “லாக்டர்” ஜார்ஜ் குல்மான் வந்தார்; வீட்லிங் சிறையிலிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பிரஞ்சு ஸ்விட்ஸர்லாந்திலுள்ள சமூகங் களைத் தமது சொந்த சுவிசேஷ மார்க்கத்துக்கு மாற்றுவதன் மூலம் ஆதாயம் கண்டார்; அவர்களில் மிகவும் அறிவாளி யான, எனினும் ஒன்றுக்கும் உதவாதவர்களில் மிகப் பெரிய ஆளான ஆகஸ்ட் பெக்கரையும்கூடத் தமது பக்கம் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு காலம் வரையிலும் வெற்றி கண்டார். இந்தக் குல்மான் பிரசங்கங்கள் செய்வது வழக்கம்; அவையனைத்தும் 1845-ஆம் ஆண்டில் ஜெனி வாவில் புதிய உலகம் அல்லது பூமியின் மீது ஆவியின் அரசு என்ற தலைப்பில் வெளிவந்தன. அவரது ஆதரவாளர்களில் ஒருவரால் (ஆகஸ்ட் பெக்கராகவே இருக்கக்கூடும்) அதற்கு எழுதப்பட்ட முன்னுரையில் நாம் பின்வரும் வரிகளைக் காண்கிறோம்:

“நமக்குத் தேவையாக இருந்ததெல்லாம் நமது எல்லாத் துன்பங்களையும், நமது எல்லா வேட்கை களையும், நம்பிக்கைகளையும், ஒரே வார்த்தையில் சொன்னால் நமது காலத்தைப் பாதிக்கும் எல்லாவற்றையும் தனது வாய்மொழியின் மூலம் உணர்த்தி வெளியிடுகின்ற ஒரு மனிதர்தான்... நமது காலம் காத்துக் கொண்டிருந்த இந்த மனிதர் தோன்றிவிட்டார். அவர்கள் தான் ஹோல் ஸ்டீனைச் சேர்ந்த டாக்டர் ஜார்ஜ் குல்மான். அவர் புதிய உலகம் அல்லது யதார்த்தத்தில் புனித ஆவியின் அரசு என்ற கோட்பாட்டோடு வந்துவிட்டார்.”

இந்தப் புதிய உலகக் கோட்பாடானது லாமென்ஸ் பாணியில், அரைகுறையான விவிலியச் சொற்சேர்க்கை களோடு ஆக்கப்பட்ட, தீர்க்கதரிசி போன்ற அகந்தையோடு பிரசங்கம் செய்யப்பட்ட, மிகவும் கொச்சைத்தனமான உணர்ச்சி வேக அபத்தக் குப்பையைத் தவிர வேறில்லை என்பதை நான் சொல்லத் தேவையில்லை. என்றாலும், ஆசியக் கிறிஸ்தவர்கள் பெரிகிரினஸ்ஸைத் தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடியது போல, இந்த முடிச்சுமாறியையும் நல்ல வீட்லிங்கர்கள் தூக்கிவைத்து ஆடுவதை எதுவும் தடை செய்யவில்லை. எந்தவொரு பள்ளியாசிரியரையும், பத்திரிகையாசிரியரையும் அல்லது பொதுவாகக் கைவினைத் தொழிலாளியாக இல்லாத எந்தவொரு மனிதனையும் சுரண்டுவதற்கு ஓரளவுக்கு “படித்தவ”னாக கருதுமளவுக்கு, போக்க முடியாத சந்தேகத்தை வளர்த்துக் கொண்டு தீவிர ஜனநாயக வாதிகளாகவும் அதிதீவிர சமத்துவவாதிகளாகவும் தோற்றமளித்தால் போதும்.

அந்த மனிதர்கள், வரும் “புதிய உலகத்தில்” எல்லோருக்கும் மேம்பட்ட ஞானியான, அதாவது குல்மான் ஆனவர் இன்பங்களின் வினியோகத்தை முறைப்படுத்துவார் என்றும், எனவே இந்தப் பழைய உலகத்தில் எல்லோரிலும் மேம்பட்ட ஞானியருக்குச் சீடர்களெல்லாம் கொப்பரை கொப்பரையாக இன்பங்களைக் கொண்டு வந்து குவிக்க வேண்டும் என்றும், அதே சமயத்தில் அவர்கள் மட்டும் துண்டு துக்காணிகளோடு திருப்தியடைய வேண்டு மென்றும், அதிநாடக சாமர்த்தியத்தோடு அடுக்கிச் சொன்ன குல்மானின் பேச்சிலே மதிமயங்கிவிட்டார்கள். எனவே அந்தச் சமூகம் இருந்த வரையிலும் அதன் செலவிலேயே பெரிகிரினஸ்கள், குல்மான்கள் இன்பம் நிறைந்த அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால், உண்மையில் இது வெகுகாலத்துக்கு நீடிக்கவில்லை. சந்தேகக்காரர்கள், விசுவாசமிழந்தவர்கள் ஆகியோரின் அதிகரித்து வந்த முணுமுணுப்புக்களும், வாடாய் அர சாங்கத்தின் தண்டனைப் பயமுறுத்தலும் லாஸன்னியில் “புனித ஆவியின் அரசு”க்கு ஒரு முடிவு கட்டியது; குல்மானும் மறைந்தோடிவிட்டார்.

ஐரோப்பிய தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் ஆரம்ப நிலைகளை அனுபவபூர்வமாக அறிந்த ஒவ்வொரு வருக்கும் இத்தகைய உதாரணங்கள் டஜன் கணக்கிலே நினைவிருக்கும். இன்றைக்கோ, குறைந்தபட்சம் பெரிய இடங்களிலேனும், இத்தகைய அதீத நிகழ்வுகள் சாத்திய மற்றவையாகிவிட்டன; ஆனால், ஒதுக்கமாயுள்ள மாவட்டங்களில், இயக்கம் புதிதாகத் தோன்றியுள்ள இடங்களில், இத்தகையதொரு சிறிய பெரிகிரினஸ் இன்னும்கூடத் தற்காலிகமான வரையறைக்குட்பட்ட வெற்றியைப் பெறக்கூடும். மேலும் அதிகாரபூர்வமான உலகத்திலிருந்து எதையுமே எதிர்பார்ப்பதற்கில்லா தவர்கள், முடிவு வரையிலும் சென்று அலுத்துப் போனவர்கள், - அதாவது தடுப்பு ஊசி போடுவதை எதிர்ப்பவர்கள், சாப்பாட்டு விஷயத்தில் கட்டுப்பாட்டை ஆதரிப்பவர்கள், சைவ உணவுக்காரர்கள், பிராணிகளை வெட்டிப் பரிசோதிப்பதை எதிர்ப்பவர்கள், இயற்கை வைத்தியர்கள், தமது சமூகங்களே உடைந்து நொறுங்கிப் பொடியான பின்னும் சுதந்திரச் சுமூகம் பற்றி உபதேசிப்பவர்கள், பிரபஞ்சத்தின் உற்பத்தி மூலம் பற்றிப் புதிய கொள்கைகளை உருவாக்குபவர்கள், உண்மையான அல்லது கற்பனையான அநியாயத்துக்குப் பலியானவர்கள், அதாவது அதிகாரவர்க்கத்தாரால் “ஒன்றுக்கும் உதவாத அற்ப நியாயக் காரர்கள்” என்று அழைக்கப்பட்டவர்கள், நேர்மையான முட்டாள்கள், நேர்மை கெட்ட முடிச்சு மாறிகள் - இத்தியாதியான எல்லோருமே எல்லா நாடுகளிலும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளை நாடிக் கூடுகிறார்கள்.

பழைய காலக் கிறிஸ்தவர்கள் விஷயத்திலும் இதுவேதான் நடந்தது. பழைய உலகத்தின் சீரழிவினால் கட்டவிழ்த்துவிடப் பெற்ற, அதாவது எந்தவொரு குறிப்பிட்ட வேலையுமற்ற எல்லாவிதமான அம்சங்களும் கிறிஸ்தவத்தின் எல்லைக்குள் - அந்தச் சீரழிவின் இயக்கப் போக்கை எதிர்த்துச் சமாளித்து நின்ற கிறிஸ்தவத்துக்குள் - ஒன்றன்பின் ஒன்றாக வந்து சேர்ந்தன; கிறிஸ்தவமும் அந்த இயக்கப் போக்கின் அத்தியாவசியமான விளைவாகவே இருந்தது; எனவேதான் ஏனைய அம்சங்களெல்லாம் புற்றீசல்களைப் போலிருந்த காலத்தில், கிறிஸ்தவம் மட்டும் நிலைத்து நின்று வளர்ந்தது. இளம் கிறிஸ்தவ சமூகங்களுக்குள்ளே எல்லைக்குள் வராத, குறைந்த பட்சம் கொஞ்ச காலத்துக்கேனும் தனித்துப் போன பகுதிகளில், தமது பேச்சைக் காது கொடுக்கின்ற, தம்மிடத்தே விருப்பத்தோடு விசுவாசம் கொள்கின்ற மக்களைக் கண்டறியாத இடத்தில் எந்த ஒரு வெறிவேட்கையும், எந்தவொரு முட்டாள்தனமும் எந்தவொரு சூழ்ச்சியும் இல்லையென்றே சொல்லலாம். மேலும் நமது முதல் பொதுவுடைமைத் தொழிலாளர் சங்கங்களைப் போலவே பழைய காலக் கிறிஸ்தவர்களும் தமது காரியத்துக்கு ஒத்து வந்த எந்த ஒரு விஷயத்தையும் அத்தகைய ஈடிணையற்ற அசட்டுத் தனத்தோடேயே ஏற்றுக்கொண்டு விட்டார்கள்; எனவே கிறிஸ்தவத்துக்காக அந்தப் பெரிகிரினஸ் “பெருமளவுக்கு எழுதித் தள்ளிய நூல்களில்” ஏதாவது சில பகுதிகள் நமது புதிய ஏற்பாட்டுக்குள்ளும் இடம் பெற்றிருக்கவில்லை என்பதற்கு உறுதியொன்றுமில்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: பழைய கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றி -தொ.மு.சி.ரகுநாதன்
Permalink  
 


2

பழைய கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றி இதுவரையிலே நமக்குக் கிட்டியுள்ள நமது அறிவின் அறிவியல் அடிப் படையாக விளங்குகின்ற, விவிலிய நூலைப் பற்றிய ஜெர்மானிய விமர்சனம் இரண்டுப் போக்குகளில் சென்றது.

முதற் போக்கானது, டுபிங்கென் சிந்தனைப் பள்ளி. விரிந்த நோக்குடன் அச்சிந்தனைப் பள்ளியில், டி.எஃப். ஸ்ட்ராஸ்ஸையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விமர்சன ஆராய்ச்சியில் ஒரு இறையியல் பள்ளி எந்த அளவுக்குச் சுவிசேஷங்களும் கண்ணாற்கண்ட சாட்சிகளின் விவரங் களல்லவென்றும், தொலைந்து போய்விட்ட விவரங்களின் பிற்காலத்தியத் தழுவல்கள்தான் அவையென்றும், மேலும் திருத்தொண்டர் பவுல் எழுதியதாகச் சொல்லப்படும் திருமுகங்களில் நான்கு மட்டுமே உண்மையானவை யென்றும், இத்தியாதியான விஷயங்களை அது ஒப்புக் கொள்கிறது. எல்லா அற்புதங்களையும் பற்றிய வரலாற்று விளக்கங்களையும், முரண்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளத் தக்கவையல்ல என்பதால் அவற்றை நீக்கிவிடுகிறது; ஆனால் மீதியுள்ளவற்றிலிருந்து, “காப்பாற்றக் கூடியவற்றைக் காப்பாற்ற” முயல்கிறது; பின்னர் இறையியல் பள்ளியைச் சேர்ந்த அதன் இயல்பும் வெளிப்படையாக அதில் தென் படுகின்றது.

இந்த இறையியல் பள்ளியின் சிந்தனையைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டிருந்த ரெனானுக்கு, இதே முறையைக் கையாள்வதன் மூலம் இன்னும் கொஞ்சத்தைக் காப்பாற்றுவதற்கும், மிகுந்த சந்தேகத்துக்குரிய விவரங்களும், மேலும் தியாகிகளைப் பற்றிய ஏராளமான பிற கதைகளும் நிறைந்த புதிய ஏற் பாட்டின் விவரங்கள் பலவற்றை வரலாற்றுப் பூர்வமான, உண்மையான விவரங்களென நம்மீது திணிக்க முயல் வதற்கும் உதவியுள்ளது. எவ்வாறாயினும், வரலாற்றுப் பூர்வமற்றவை என்றோ அல்லது சந்தேகமானவை யென்றோ, டூபிங்கென் சிந்தனைப் பள்ளி நிராகரித்து ஒதுக்கிவிடும் எல்லாவற்றையும், அறிவியலைப் பொறுத்த வரையில் இறுதியாக நீக்கப்பட்டவை.

இன்னொரு போக்குக்கோ ஒரே ஒரு பிரதிநிதிதான் இருக்கிறார். அவர்தான் புரூனோ பாயர். அவரது மகத் தான சேவை நற்செய்திகளையும், திருத்தொண்டர்களின் திருமுகங்களையும் பற்றிய ஒரு பரிவற்ற விமர்சனத்தை அவர் வழங்கியதில் மட்டுமல்லாமல், கிறிஸ்துவத்தில் யூத அம்சங்கள், கிரேக்க - அலெக்ஸாண்ட்ரியன் அம்சங் களைக் காட்டியதோடு நில்லாமல், மதத்தின் பதவிக்குக் கிறிஸ்துவத்துக்கு முதன்முதலில் வழிதிறந்துவிட்ட சுத்தமான கிரேக்க அம்சங்கள், கிரேக்க - ரோமானிய அம்சங்கள் ஆகியவற்றைப்பற்றி முதன்முறையாகத் தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டதிலும் அடங்கி யுள்ளது. கிறிஸ்தவமானது ஜூடாயிஸத்திலிருந்துதான் முழுமையான தயார் நிலையில் எழுந்தது எனவும், அதன் ஒழுக்க நீதிகள் ஆகியவற்றின் மூலம் பாலஸ்தீனத்திலிருந்து தொடங்கி உலகத்தையே வென்றது என்றும் சொல்லப் படும் கதையானது புரூனோ பாயரின் காலந்தொட்டு நிலையிழந்து போய்விட்டது; இறையியல் ஆராய்ச்சித் துறையில், அறிவியலை ஒதுக்கித் தள்ளிவிட்டு, “மக்களுக் காக மதத்தை உயிரோடு வைத்திருக்க” விரும்புபவர்கள் மத்தியில்தான் அந்தக் கட்டுக்கதை தொடர்ந்து பயிராக முடியும்.

அலெக்ஸாண்ட்ரியாவின் பிலோனிக் சிந்தனைப் பள்ளி, பிளேட்டோனிக் தத்துவமும், பிரதானமாக ஸ்டோயிக் தத்துவமும் கொண்ட கிரேக்க, ரோமானிய கொச்சையான தத்துவங்கள் ஆகியவை கான்ஸ்டன்டைன் ஆட்சியின் கீழ் அரசாங்க மதமாக மாறிய கிறிஸ்தவத்தின் மீது கொண்டிருந்த அமோகமான செல்வாக்கானது விளக்கமாக உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் அந்தச் செல்வாக்கு இருந்ததானது நிரூபிக்கப்பட்டிருக்கிறது; புரூனோ பாயரின் பிரதானமான சாதனை - இதுதான்; கிறிஸ்தவமானது வெளியிலிருந்து - ஜூடேயாவிலிருந்து (இஸ்ரேலிலிருந்து) - ரோமானிய, கிரேக்க உலகத்தினுள் இறக்குமதி செய்யப்பட்டு, அதன் மீது சுமத்தப்பட்டதல்ல என்பதையும், ஆனால் அதற்கு மாறாக, குறைந்த பட்சம் அதன் மத வடிவத்திலேனும், அது அந்த உலகத்தின் சொந்தப் படைப்பே என்பதையும் நிரூபிப்பதற்கான அடிப்படையை அவர் அமைத்துவிட்டார்.

ஆழமாக வேர் விட்டிருக்கும் விருப்பு வெறுப்புக்களை எதிர்த்துப் போராடும் எல்லோரையும் போலவே, பாயரும் இந்தப் பணியில் தமது குறிக்கோளின் எல்லைக்கும் அப்பால் சென்றிருக்கிறார். வெளிப்பட்டுவரும் கிறிஸ்தவத்தின் மீது பிலோவின் செல்வாக்கும், குறிப்பாக ஸெனீக்காவின் செல்வாக்கும் இருந்ததை இலக்கிய ஆதாரங்களையும் கொண்டு விளக்குவதற்காகவும், புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்களனைவரும் அந்தத் தத்துவவாதிகளை அப் பட்டமாகக் காப்பியடித்தவர்கள்தான் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் ரோமானிய வரலாற்றாசிரியர்களின் எதிரிடையான விவரங்களையெல்லாம் நிராகரிப்பதற்காக அவர் அந்தப் புதிய மதத்தின் தோற்றக் காலத்தையே அரை நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்தள்ளி வைக்கவும், அதற்காகப் பொதுவான வரலாற்று முறையியலை தமது இஷ்டப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளவும் துணிந்திருக்கிறார்.

அவரது கூற்றுப்படி அப்போதைய கிறிஸ்தவம் ஃபிளேவியன்களின் காலத்தில்தான் தோன்று கிறது; புதிய ஏற்பாட்டின் நூல்களோ அட்ரியன், அன் டோனியஸ், மார்க்கஸ் அரேலியஸ் முதலியோரின் காலத்தில்தான் தோன்றுகின்றன. இதன் விளைவாக, ஏசுவையும் அவரது சீடர்களையும் பற்றிப் புதிய ஏற் பாட்டிலுள்ள விவரங்களெல்லாம் பாயரைப் பொறுத்த வரையில் எந்தவிதமான சரித்திரப் பின்னணியும் இல்லாத வையாகப் போய்விடுகின்றன; அவையெல்லாம் கட்டுக் கதைகளிலே கரைந்துபோய்விட்டன; அந்தக் கதைகளில், உள்ளூர இருந்துவந்த வளர்ச்சியின் அம்சங்களும், முதல் சமூகங்களின் நியாயத்திற்கான போராட்டங்களும், கிட்டத்தட்ட கற்பனையான நபர்களின்மீது மாற்றப்பட்டு விட்டன. பாயரின் கூற்றுப்படி அந்தப் புதிய மதத்தின் பிறப்பிடம் கலீலியும் ஜெருசலேமும் அல்ல; ஆனால் அலெக்ஸாண்டிரியாவும் ரோமாபுரியும்தாம்.

எனவே, டூபிங்கென் சிந்தனைப் பள்ளி புதிய ஏற்பாட்டின் கதைகள், இலக்கியம் ஆகியவற்றில், இன்றைக்கும் கூட அறிவியலின் விவாதத்துக்குரியவை என ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் அதிகபட்ச விஷயங் களைத் தொடாமலே விட்டு வைத்து, அவற்றை நமக்குத் தருகின்றது. ஆனால் புரூனோ பாயரோ எதிர்த்துப் பேசக்கூடிய அளவுக்கு ஏராளமான விஷயங்களைத் தருகின்றார். சான்று பூர்வமான உண்மை இந்த இருவேறு எல்லைகளுக்கும் இடையில்தான் இருக்கின்றது. இன்று நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் அந்த உண்மையை விளக்கிவிட முடியுமா என்பது மிகவும் சந்தேகம்தான். குறிப்பாக ரோமாபுரியிலும், கீழை நாட்டிலும், எல்லாவற்றுக்கும் மேலாக எகிப்திலும் கண்டறியப்படும் புதிய கண்டுபிடிப்புக்கள்தான் எந்த வொரு விமர்சனத்தைக் காட்டிலும் இந்த விஷயத்தில் பெரிதும் உதவ முடியும்.

ஆனால், புதிய ஏற்பாட்டில் ஒரு தனியான புத்தகம் அடங்கியுள்ளதை நாம் பெற்றிருக்கிறோம்; அந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலத்தைச் சில மாத வரையறைக்குள்ளேயே நிர்ணயித்துவிட முடியும்; அந்நூல் 67-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 68-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக் கிடையில் எழுதப்பட்டிருக்க வேண்டும்; இதன் விளை வாக, அந்நூல் கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்துக்கு உரிய நூலாகவும், மிகவும் வெகுளித்தனமான விசுவாசத் தோடு எழுதப்பட்டதாகவும், அந்தச் சகாப்தத்தின் தொடக்கத்திலிருந்த கருத்துக்களை, அதற்குரிய சொற் சேர்க்கை கொண்ட தொடர்களில் எழுதப்பட்டதாகவும் உள்ளது. எனவே எனது கருத்துப்படி இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமான ஆதாரமாக, புதிய ஏற்பாட்டின் பிற நூல்கள் எல்லாவற்றிலும் காணப்படுவதைக் காட்டிலும், பழைய கிறிஸ்தவம் எவ்வாறிருந்தது என்பதைத் தீர் மானிக்கவும், கிறிஸ்தவத்தின் இன்றுள்ள வடிவம் மிகவும் பிந்திய காலத்தது என்பதைக் கண்டறிய உதவும் ஆதாரமாக உள்ளது. யோவானின் திருவெளிப்பாடு என்று சொல்லப் படுவதுதான் இந்த நூல் ஆகும். விவிலியத்திலுள்ள மிகவும் தெளிவற்ற நூலாகத் தோன்றிவந்த இந்த நூலில் ஜெர்மானிய விமர்சனத்தின் பயன்விளைவால், இன்று மிகவும் தெளிவான மிகவும் புரிந்து கொள்ளத்தக்க நூலாக மாறியுள்ளது; அதைப் பற்றிய ஒரு விவரத்தை நான் வாசகர்களுக்குத் தர முனைகின்றேன்.

அந்த நூலாசிரியரின் மாபெரும் தற்புகழ்ச்சி நிலையை மட்டுமல்லாமல், அவர் பழகிய “சுற்றுச் சார்பான சூழலை”யும் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், இந்த நூலுக்குள்ளே பார்த்தால் போதும், “நமது திருவெளிப்பாடு” ஆனது அதனுடைய காலத்தில், அந்த வகையில் தோன்றிய ஒரே ஒரு நூல் மட்டும் அல்ல. நமது சகாப்தத்துக்கு முந்திய 164-ஆம் ஆண்டில் நமக்குக் கிடைத்துள்ள டானியேலின் புத்தகம் என்ற நூல் எழுதப்பட்ட காலத்திலிருந்து, கம்மோடியனின் கார்மென் என்ற நூலின் உத்தேச காலமான நமது சகாப்தத்தின் 250-ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் வந்த போலிகளை யெல்லாம் கணக்கில் சேர்க்காது விட்டாலும்கூட, பதினைந்துக்குக் குறையாத, இன்னும் இருந்துவருகின்ற செவ்வியல் “திருவெளிப்பாடு”கள் உள்ளன என்று ரெனான் கணக்கிட்டிருக்கிறார் (நான் ரெனானை மேற்கோள் ‘காட்டுவதற்கு’க் காரணம் அவரது புத்தகம் சிறப்புப் பயிற்சி பெறாதவர்களுக்கும் நன்கு தெரிந்த நூல் என்பதாலும், மிக இலகுவில் கிட்டக்கூடியது என்பதாலும் தான்).

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மிகவும் பல்வேறுபட்ட மக்களின் அசட்டுத் தனமான மூடநம்பிக்கைகளின் முற்றிலும் விமர்சனரீதியற்ற ஒரு கலவை ரோமாபுரியிலும் கிரீஸிலும், அதைக் காட்டிலும் அதிகமாக சின்ன ஆசியா, சிரியா, எகிப்து ஆகிய நாடுகளில் பாரபட்சமற்ற முறையில் ஏற்கப் பட்டதும், பக்தி பூர்வமான ஏமாற்றலும், அப்பட்டமான போலி ஞானத்தாலும் பூரணமாக்கப்பட்ட காலம் அது; அற்புதங்கள், பரவசங்கள், தரிசனங்கள், மாயைத் தோற்றங்கள், தெய்வாம்சம் பெறுதல், ரசவாதம், கபாலா இன்னும் பிற ரகசிய மாய வித்தைகள் முதலானவை யெல்லாம் முக்கியத்துவம் பெற்ற காலம் அது. இத்தகைய தொரு சூழ்நிலையில் தான், மேலும் இந்த மீஇயற்கை கற்பனைகளைத் தவிர வேறு எதையுமே காது கொடுத்துக் கேட்க விரும்பாத ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில்தான் கிறிஸ்தவம் தோன்றியது.

ஏனெனில் ஏனைய நூல்களோடு லேடெனின் தாள் சுவடிகளும் நிரூபிப்பதைப் போன்று, நமது சகாப்தத்தின் இரண்டாவது நூற்றாண்டுக் காலத்தில், எகிப்திலிருந்த கிறிஸ்தவ நாஸ்டிஸவாதிகள் ரசவாதத்திலே பெரிதும் ஈடுபட்டதோடு, தமது போதனைகளிலும் ரசவாதக் கருத்துகளைப் புகுத்தினார்கள் என்பது நாமறிந்ததே. மேலும் டாஸிட்டஸின் ஆதாரப்படி, மந்திர வித்தைகளில் ஈடுபட்டதற்காக ஒரு முறை கிளாடியஸின் காலத்திலும் மீண்டுமொருமுறை விட்டெல்லியஸின் காலத்திலுமாக இரண்டு முறை ரோமாபுரியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களான சால்டியன், ஜுடேயன் கணிதாசிரியர்கள் யோவானின் திருவெளிப் பாட்டின் அடிப்படையிலே நாம் காணப்போகின்ற விதமான வடிவியல் கணிதத்தைத் தவிர, வேறு எந்தவிதமான கணிதத்தையும் அவர்கள் கையாளவில்லை.

இத்துடன் நாம் இன்னொரு விஷயத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். எல்லா ‘திருவெளிப்பாடு’ களும் தமது வாசகர்களை ஏமாற்றும் உரிமையைத் தமக்குத்தாமே வழங்கிக் கொள்கின்றன. அந்தப் புத்தகங் களின் ஆசிரியர்கள் என்று சொல்லப்படுபவர்களைக் காட்டிலும், முற்றிலும் வேறுபட்ட நபர்களால், பெரும் பாலும் மிகவும் பிற்பட்ட காலத்திலே இருந்தவர்களால் தான் அவை வழக்கமாக எழுதப்பட்டு வந்தன; உதாரண மாக டானியேலின் புத்தகம், ஹெனாக்கின் புத்தகம், எஸ்ரா, பரூக், ஜூடா முதலியோரின் திருவெளிப்பாடுகள், ஸிபிலின் புத்தகங்கள் முதலியனவாகும்; ஆனால், அவற்றின் பிரதான உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையிலும், அவை ஏற்கெனவே வெகுகாலத்துக்கு முன்பு நடந்துபோன, நூலின் உண்மையான ஆசிரியருக்கு முற்றிலும் நன்கு தெரிந்திருந்த விஷயங்களைத்தான் தீர்க்கதரிசனங்களாகச் சொல்கின்றன.

இவ்வாறாக, 164-ஆம் ஆண்டில், அதாவது ஆன்டியோக்கஸ் எபிபேன்ஸின் மரணத்துக்குச் சிறிது முந்திய காலத்தில் டானியேல் புத்தகத்தின் நூலாசிரியர், நெபுச்சட் நெஸ்ஸாரின் காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் டானியேலை, ரோமப் பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் தீர்க்கதரிசனமாகச் சொல்லி வைக்கிறார்; அவரது தீர்க்கதரிசன சக்தியின் இந்தச் சான்றின் மூலம், இஸ்ரவேலிலுள்ள மக்கள் எல்லாச் சிரமங்களையும் போக்கடித்து இறுதியிலே வெற்றி பெறுவார்கள் என்ற இறுதியான தீர்க்கதரிசனத்தை ஒப்புக் கொள்ளுமாறு வாசகரைத் தயார்ப்படுத்துகிறார். எனவே, யோவானின் திருவெளிப்பாடு அதன் ஆசிரியர் எனச் சொல்லப்படுபவரின் உண்மையான நூலாகவே இருக்கு மானால், எல்லாத் திருவெளிப்பாட்டு இலக்கியங்கள் இடையில் இது ஒன்றே விதிவிலக்காக இருக்க முடியும்.

எவ்வாறாயினும், அந்த நூலின் ஆசிரியரென்று உரிமை கொண்டாடும் இந்த யோவான் சின்ன ஆசியா விலிருந்த கிறிஸ்தவர்கள் மத்தியிலே மிகுந்த மதிப்பு வாய்ந்த மனிதராகத்தான் இருந்தார். இது ஏழு திருச்சபைகளுக்கும் விடுக்கும் செய்தியின் தொனியிலிருந்து வெளிப்படுகின்றது. ஒருவேளை அவர் திருத்தொண்டர் யோவானாகவே இருக் கலாம்; எவ்வாறாயினும் வரலாற்றளவில் அவர் இருந்த விஷயம் முற்றிலும் சான்றளவில் உறுதி செய்யப்பட வில்லை; எனினும் அவராகவே இருக்கக்கூடியது சாத்தியம் தான். அப்புனிதரே அந்நூலின் ஆசிரியராக இருந்தால், நமது கண்ணோட்டத்துக்கு அது அந்த அளவுக்குச் சாதகம் தான். அவ்வாறாயின் இந்தப் புத்தகத்திலுள்ள கிறிஸ்தவமே, உண்மையான கலப்படமற்ற ஆரம்பகாலக் கிறிஸ்தவம் என்பதற்கு அதுவே தலைசிறந்த உறுதிப்பாடாகும். இவ்வாறு சொல்லும்போது, யோவானின் பெயரிலுள்ள சுவிசேஷத்தையோ அல்லது மூன்று திருமுகங்களையோ எழுதிய ஆசிரியர் நிச்சயமாக இதே ஆசிரியரல்ல என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.

திருவெளிப்பாட்டில் தரிசனங்கள் வரிசையாக அமைந்திருக்கிறது. முதல் தரிசனத்தில் ஒரு பெரும் மத குருவின் உடையில் கிறிஸ்து தோன்றுகிறார்; ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு மெழுகுவத்திகளின் நடுவே செல்கிறார்; அந்தத் திருச் சபைகளின் ஏழு “திருத்தூதர்”களுக்குமான செய்திகளை “யோவானி”டத்தில் எழுதிக்கொள்ளச் சொல்கிறார். இங்கே ஆரம்பத்திலேயே நாம் இந்தக் கிறிஸ்தவத்துக்கும், நிக்கானோ சபையின் மூலம் உருவாக்கப்பட்ட கான் ஸ்டைன்டைனின் முழுமையான மதத்துக்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவாகக் காண்கிறோம். திரித்துவம் இங்குத் தெரியப்படாததோடு மட்டுமல்லாமல், அது சாத்தியமற்றதும்கூடத்தான். பின்னால் வந்த ஒரே புனித ஆவிக்குப் பதிலாக இசாயாவிலிருந்து (ஓஐ, 2) ராபிஸ் நிர்ணயித்த “கடவுளின் ஏழு ஆவிகள்” தான் இங்கிருக்க நாம் காண்கிறோம். கிறிஸ்து கடவுளின் குமாரனாகவே இருக்கிறார்; ஆதியும் அந்தமுமாக ஆல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறார்; எந்த விதத்திலும் கடவுளாகவோ, கடவுளுக்குச் சமதையாகவோ இல்லை; மாறாக, “கடவுள் படைப்பின் ஆரம்பமாக” எனவே மேற்கூறப்பட்ட ஏழு ஆவிகளையும்போல், தொடக்கமும் முடிவுமற்று இருந்துவரும், எனினும் கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருந்துவரும் கடவுளின் ஒரு ஊற்றாகத்தான் இருக்கிறார்.

அத்தியாயம் ஓஏ, 3-ஆம் வசனத்திலே, சொர்க்கத்திலேயுள்ள தியாகிகள் கடவுளின் மகிமை பாராட்டி, “கடவுளின் ஊழியனான மோசஸின் பாட்டையும், ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும்” பாடுகிறார்கள். எனவே இங்கு கிறிஸ்து கடவுளுக்குக் கீழானவராக மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட விதத்தில், மோசஸோடு சமநிலையிலும் இருக்கிறார். கிறிஸ்து ஜெருசலேமில் சிலுவையில் அறையப்பட்டார் (XV, 8); எனினும் மீண்டும் உயிர்த்தெழுகிறார் (ஐ.5, 18); உலகத்தின் பாவங்களுக்காகத் தியாகம் செய்யப்பட்ட “ஆட்டுக் குட்டியானவர்” அவர்தான்; அவரது குருதியின் மூலம்தான் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் உள்ள விசுவாசிகள் கடவுளிடத்தே மீட்கப்பட்டார்கள். இங்குப் பழைய கிறிஸ்தவமானது ஒரு முழுமையான மதமாக வளர்வதற்கு உதவிய அடிப்படைக் கருத்தை நாம் காண்கிறோம். மனிதனின் செயல்களால் கோபங்கொண்ட கடவுளர்களைத் தியாகப் பலிகளின் மூலம் சாந்தி செய்துவிடலாம் என்ற கருத்தை அந்தக் காலத்தில் எல்லா ஸெமிட்டிக் மதங்களும் ஐரோப்பிய மதங்களும் கொண் டிருந்தன; கிறிஸ்தவத்தின் (பிலோனிக் பரம்பரையிட மிருந்து கடன் வாங்கிய) முதல் புரட்சிகரமான அடிப் படைக் கருத்தானது ஒரு இடையீட்டாளரின் ஒரு மாபெரும் விருப்பமான உயிர்த்தியாகத்தால் விசுவாசி களைப் பொறுத்தவரையிலும் - எல்லாக் காலத்தின் எல்லா மனிதர்களின் பாவங்களும் நிரந்தரமாக ரட்சிக்கப்படு கின்றன என்பதாகத்தான் இருந்தது.

இவ்வாறாக, மேலும் தியாகங்கள் செய்யவேண்டிய அவசியமும், அத்துடன் ஒரு பெருந்தொகையான மதச் சடங்குகளின் அடிப்படையும் நீக்கப்பட்டுப் போகிறது; ஆனால் ஏனைய மத நம்பிக் கைகளைக் கொண்ட மக்களோடு கூடிப் பழகுவதைத் தடுத்தோ அல்லது அதனைச் சிரமமாக்கியோ வந்த மதச் சடங்குகளிலிருந்து சுதந்திரம் பெறுவதே ஒரு முழுமையான மதத்தின் முதல் நிபந்தனையாக இருந்தது. இவ்வாறிருந்த போதிலும், தியாகப் பலிப் பழக்கமானது மக்களது வழக்கங்களிலே ஆழமாக வேரூன்றி நின்ற காரணத்தால் - சிலை வழிபாட்டு மதத்திடமிருந்து எவ்வளவோ விஷயங் களைக் கடன் வாங்கிக் கொண்ட - கத்தோலிக்கமானது குறைந்த பட்சம் கூட்டுப் பிரார்த்தனையில் அடையாள பூர்வமான தியாகப் பலியைப் புகுத்துவதன் மூலம், இந்த உண்மையைத் தன்னுள் ஏற்றுக்கொள்வது பொருத்த மானதாயிருக்கும் என்று கண்டறிந்தது. மற்றப்படி, ஆதிபாவத்தின் கோட்பாட்டைப் பற்றிய எந்தவொரு அடையாளமுமே நமது புத்தகத்தில் காணப்படவில்லை.

ஆனால், புத்தகம் முழுவதிலும் உள்ளது போலவே இந்தச் செய்திகளிலும் தென்படும் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தம்மையும் சரி, தமது சக விசுவாசிகளையும் சரி, யூதர்கள் என்ற பெயரைத் தவிர வேறு எந்தவொரு பெயராலும் குறிப்பிடவேண்டுமென இந்த நூலாசிரியருக்கு எங்கும் எப்போதும் தோன்றவே யில்லை. அவர் ஸ்மைர்னா, பிலடெல்பியா ஆகிய இடங் களிலுள்ள மதத்தவர்களைக் கண்டிக்கிறார்; அவர்களுக் கெதிராக, “அவர்கள் தம்மை யூதரென்று சொல்லிக் கொள்கிறார்கள்; அவர்கள் யூதராயிராமல், ஆனால் சாத்தானின் கூட்டத்தாராக இருக்கிறார்கள்” என்ற உண்மையைச் சுட்டிக்காட்டிச் சபிக்கிறார்; பெர் கமோஸிலுள்ளர்களைப்பற்றிப் பின்வருமாறு சொல்கிறார் : இஸ்ரவேலின் பிள்ளைகளின் முன்னால் ஒரு முட்டுக் கட்டையைப் போடவும், விக்கிரகங்களுக்குப் படைத்த பண்டங்களைத் தின்னவும், வரையறையற்ற புணர்ச்சி செய்யவும் பலாக்குக்குக் கற்றுக் கொடுத்த பலாமின் கோட்பாட்டை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். எனவே இது இங்கு கிறிஸ்தவர்களின் உணர்வு பூர்வமான விவகாரமாக இல்லாமல், தம்மை யூதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மக்களின் விவகாரமாக உள்ளது.

அவர்களது ஜூடாயிஸமானது முந்தைய கொள்கையின் புதியதொரு வளர்ச்சிக்கட்டம் என்றே கொண்டாலும் அந்தக் காரணத்துக்காகவே அது ஒரே ஒரு உண்மையான மதமாகவும் இருக்கிறது. எனவே, கடவுளின் அரியணையின் முன்னால் புனிதர்கள் தோன்றிய பொழுது, ஒவ்வொரு குலத்துக்கும், 12,000 வீதம் முதலில் 1,44,000 யூதர்கள் தான் வருகிறார்கள்; அவர்களுக்குப் பின்னர்தான் இந்தப் புதுப்பிக்கப்பட்ட ஜூடாயிஸத்துக்கு மதம் மாறிய எண்ணற்ற வரலாற்றிலே மிகவும் புரட்சி கரமான அம்சங்களில் ஒன்றாக வரவிருந்த ஒரு மதத்தின் வளர்ச்சியின் முற்றிலும் புதியதான ஒரு அம்சத்தையே தாம் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்ற விஷயத்தை கிறிஸ்தவ சகாப்தத்தின் 69-ஆம் வருஷத்திலிருந்த நமது ஆசிரியர் சிறிதும் தெரிந்துகொண்டிருக்கவில்லை.

எனவே தன்னைத் தானே இன்னும் தெரிந்து கொள்ளாத அந்தக் காலத்துக் கிறிஸ்தவமானது, பின்னர் வந்த கோட்பாடு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட நிக்கனே சபையின் முழுமையான மதத்திலிருந்து, விண்ணிலிருந்து பூமி வேறுபட்டிருப்பதுபோல், வேறுபட்டிருந்தது என்பதையே நாம் காண்கிறோம்; ஒன்றை மற்றொன்றிலே இனம் கண்டுகொள்ள முடியாது. இங்கோ பிற்காலக் கிறிஸ்தவத்தின் ஒழுக்க நியதிகளையோ, கோட்பாட்டையோ காணவில்லை; அதற்கு மாறாக உலகத்துக்கெதிராக

ஒருவர் போராடுவதையும், அந்தப் போராட்டம் ஒரு வெற்றி கரமான போராட்டமாகவே இருக்கும் என்பதையும் உணர்த்தும் ஒரு உணர்ச்சியைத்தான் காண்கிறோம்; இன்றைய கிறிஸ்தவர்களிடம் முற்றிலும் காணப்படாத ஒரு போராட்ட ஆர்வத்தையும், வெற்றியைப்பற்றிய உறுதியான உணர்ச்சியையும் காண்கிறோம்; இந்த ஆர்வ உணர்ச்சிகளெல்லாம் இந்தக் காலத்திலே, சமுதாயத்தின் மறுகோடியிலுள்ளவர்களிடம் மட்டுமே, சோஷிசலிஸ்டு களிடம் மட்டுமே காணப்படுகின்றன.

உண்மையில், ஒரு உலகத்துக்கெதிரான போராட்டம், அதன் ஆரம்பத்திலே மிகவும் உன்னதமான சக்தி வாய்ந்த தாக இருந்ததும், அதே சமயம் அது அதன் புதிய ஒழுங் கமைப்பாளர்களுக்கெதிராகவே இருந்ததும், பழைய கிறிஸ்தவர்களுக்கும் சோஷிசலிஸ்டுகளுக்கும் பொதுவான ஒரு அம்சம்தான். இந்த இரண்டு பெரும் இயக்கங்களும் தலைவர்களாலோ அல்லது தீர்க்கதரிசிகளாலோ உருவாக்கப்படவில்லை; இரண்டிலும் போதுமான அளவுக்குத் தீர்க்கதரிசிகள் இருந்தபோதிலும் - அவை வெகுமக்கள் இயக்கங்கள்தான். மேலும் வெகுமக்கள் இயக்கங்கள் ஆரம்பத்திலே குழப்பமடைவது இயல்பு தான்; வெகுமக்களின் சிந்தனையானது முதலிலே முரண் பாடுகளுக்கிடையே தெளிவின்மையாலும், ஒருமை யின்மையாலும் இயங்குவதாலும், ஆரம்பத்தில் அவற்றில் இன்னும் தீர்க்க தரிசிகளின் பங்கும் செயல்படுவதாலும் தான் இந்தக் குழப்பம் ஏற்படுகின்றது. பொதுவான வெளி எதிரியை எதிர்த்துப் போராடும் அதே உணர்ச்சி வேகத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், ஒன்றோடு எதிர்த்துப் போராடும் எண்ணற்ற உட்பிரிவுகளின் அமைப்பிலும் இந்தக் குழப்பத்தைக் காணமுடிகிறது. எங்கு ஒற்றுமை சாத்தியப்பாடில்லையோ, அங்கு நல்லெண்ணம் கொண்ட பெரிய மனிதர்கள் ஒற்றுமையை உபதேசித்து எவ்வளவுதான் அலட்டிக்கொண்ட போதிலும், பழைய கிறிஸ்தவத்திலும் அப்படித்தான் இருந்தது; சோஷிசலிஸ்ட் இயக்கத்திலும் அதே கதையாகத்தான் இருந்தது.

சர்வதேச அகிலம் மட்டும் ஒரு ஒருமையான கோட் பாட்டின் மூலம் ஒன்றுபட்டிருந்ததா, என்ன? உண்மை அதற்கு மாறானதுதான். 1848-ஆம் ஆண்டுக்கு முந்தி பிரெஞ்சு மரபு வழியைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்; அவர்களிடையேயும் மீண்டும் பல்வேறு பிரிவுகள் இருந்தன; வீட்லிங் பரம்பரையைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகள், புத்துயிரூட்டப் பெற்ற கம்யூனிஸ்ட் லீகைச் சேர்ந்தவர்கள், பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலே மிகுதியாகக் கொண்ட பிரௌதானிஸ்டுகள், பிளாங்க்விஸ்டுகள், ஜெர்மன் தொழிலாளர் கட்சி, இறுதியாக இத்தாலியிலும் ஸ்பெயினிலும் சிறிது காலத்துக்குக் கையோங்கி நின்ற பாக்குனிஸ்ட் அராஜக வாதிகள் முதலியோரை முக்கியமான குழுக்களாகச் சொல்லலாம்.

சர்வதேசிய அகிலம் நிறுவப்பட்ட காலத்திலிருந்து, அராஜகவாதிகளிடமிருந்து பிரிவது முற்றிலும் இறுதியாகி, எங்கெங்கிலும் பூர்த்தியாகும் வரையிலும், குறைந்தபட்சம் மிகவும் பொதுப்படையான பொருளாதாரக் கண்ணோட்டங்களிலேனும் ஒரு ஒற்றுமையை உறுதிப்படுத்துவது வரையிலும், கால் நூற்றாண்டுக்காலமே ஆகிவிட்டது. அதுவும் ரயில் வேக்கள், தந்தி, மாபெரும் எந்திரத் தொழில் நகரங்கள், பத்திரிகைகள், கட்டியமைக்கப் பெற்ற மக்கள் மகா சபைகள் - நமது போக்குவரத்துச் சாதனங்கள் இத்தனையும் இருந்தும் இவ்வளவு காலமாயிற்று.

பழைய கிறிஸ்தவர்கள் மத்தியிலும் எண்ணற்ற பிரிவுகளில் அதே பிரிவினைதான் இருந்தது; இந்தப் பிரிவினையே விவாதத்துக்குரிய சாதனமாகவும், அதன் பின்னர் ஒற்றுமையைக் கொண்டு வரவும் காரணமாயிற்று. இந்தப் புத்தகத்தைச் சந்தேகத்துக்கிடமின்றி, கிறிஸ்தவத்தின் மிகவும் பழையதொரு சான்றாக நாம் ஏற்கெனவே கண்டோம். வெளியிலுள்ள மாபெரும் பாபகரமான உலகத்தோடு இதன் ஆசிரியர் சமரசத்துக்கிடமற்ற விருப்பார்வத்துடன் போராடுகிறார். முதன்முதலில் ஈபிஸஸ்ஸிலும், பெர்கமோஸிலும் நிக்கோலாய்ட்டன்கள் இருந்தார்கள். தம்மையும் யூதர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும், ஆனால் சாத்தானின் கூட்டத்தார்கள் ஆனவர்களும் ஸ்யைர்னா, பிலடெல்பியா ஆகிய இடங்களிலே இருந்தார்கள் பொய்யான தீர்க்கதரிசி என்று சொல்லப்படும் பலாமின் ஆதரவாளர்கள் பெர்கமோஸில் இருந்தார்கள்; தம்மைப் புனிதர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும் ஆனால் அப்படியில்லாதவர்களும் எபிஸஸ்ஸில் இருந்தார்கள்.

இறுதியாக, ஒரு ஜெயிபெல் என்று வருணிக்கப்படும் ஒரு பொய்யான தீர்க்கதரிசினியின் ஆதரவாளர்கள் தையாட்டிராவில் இருந்தார்கள். இந்தப் பிரிவுகளைப் பற்றியெல்லாம் நமக்கு விவரங்கள் தரப் படவில்லை; பலாமைப் பின்பற்றியவர்களும் ஜெஸி பெல்லைப் பின்பற்றியவர்களும், நிலைகளுக்குப் படைத்த பண்டங்களைப் புசித்தார்களென்றும், வரைமுறையற்ற இந்த ஐந்து பிரிவுகளையும் பாலின் கிறிஸ்தவர்கள் என்று கருதிக் கொள்ளுமாறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன; எல்லாச் செய்திகளும் பொய்யான திருத் தொண்டர்களான பவுல், பலாம் எனச் சொல்லப்படு பவர்கள், “நிக்கோலாஸ்” ஆகியவர்களுக்கு எதிராகவே விடப்படுகின்றன. சிறிதும் உறுதியற்ற இந்த அளவுக்குள்ள வாதச் சான்றுகள் ரெனான் திருத்தொண்டர் பவுல் என்ற நூலில் தொகுக்கப் பெற்றுக் காணப்படுகின்றன. (பாரிஸ், 1869, பக்.303-05, 367-70)

இவையனைத்தும் திருத்தொண்டர் களின் சட்டங்களாலும், அதன் இன்றைய வடிவத்திலேனும், திருவெளிப்பாட்டுக்கு 60 ஆண்டுகளுக்குக் குறைவில்லாமற் பிந்திய காலத்ததான பவுலின் திருமுகங்கள் எனச் சொல்லப்படும் நூலாலும் அந்தச் செய்திகளை விளக்க முற்படுகின்றன; எனவே ஒப்பத்தக்க உண்மையான விவரங்கள் மிகவும் சந்தேகமாக இருப்பதோடு மட்டு மல்லாமல், முற்றிலும், முரண்பாடுகள் கொண்டதாகவும் உள்ளன. ஆனாலும், தீர்மானமான விஷயம் என்ன வென்றால், ஒரே ஒரு பிரிவுக்கு, ஐந்து வெவ்வேறு பெயர்களை வழங்குவதற்கும், எபிஸஸ்ஸுக்கு மட்டும் இரண்டு பெயர்களை (பொய்யான திருத்தொண்டர்கள், நிக்கோலாய்ட்டன்கள்)யும், பெர்கமோஸுக்கும்கூட இரண்டு (பலாமைட்டுகள், நிக்கோலாய்ட்டன்கள்) பெயர்களையும் வழங்கவேண்டுமென்றும், அவற்றைப் பற்றி ஒவ்வொரு முறை குறிப்பிடும்போதும் தெளிவாக இரண்டு வெவ்வேறு பிரிவுகள் என்று குறிப்பிட வேண்டுமென்றும் நூலாசிரியருக்குத் தோன்றியிருக்க முடியாது. அதே சமயத்தில், இன்று பவுலின் பிரிவு எனப் பெயரிட்டுவிடக்கூடிய, அம்சங்களும் இந்தப் பிரிவு களுக்கிடையே இருந்திருப்பதற்கான சாத்தியப்பாடு உண்டு என்பதையும் எவரும் மறுக்க இயலாது.

மிகுந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பிரிவுகளிலும் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் சிலைகளுக்குப் படைத்த பண்டத்தைப் புசித்தும் முறை யற்ற புணர்ச்சி செய்ததும்தான். இந்த இரண்டு விஷயங் களிலும் யூதர்கள் - பழையவர்களும் சரி, கிறிஸ்தவர்களும் சரி - மதம் மாற்றப்பட்ட புனிதமற்றவர்களோடு தொடர்ச்சியாகத் தகராறு பண்ணி வந்தார்கள். புனிதமற்றவர்களின் பலிப் படைப்புக்களிலே படைத்த மாமிசமானது விழா விருந்துகளிலே பரிமாறப்பட்டது. அந்த விருந்துகளிலே அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பது தகாத செயலாகக் கருதப்படக்கூடுமென்பது மட்டு மல்லாமல், அதனால் பேராபத்தும்கூட விளைந்துவிடக் கூடும்; மேலும் அந்த மாமிசம் பொதுச் சந்தைகளிலும் விற்கப்பட்டன; ஆனால் அங்கோ அது சட்டத்தின் முன்னிலையில் புனிதமான மாமிசம் தானா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது எப்போதும் சாத்தியமான காரியமும் அல்ல.

முறையற்ற புணர்ச்சி என்பதை, மணவாழ்க்கைக்குப் புறம்பான புணர்ச்சியுறவுகளை மட்டுமல்லாமல், யூதச் சட்டத்தினால் தடை செய்யப் பெற்ற உறவு நிலைகளுக்குள்ளே நிகழும் திருமணங் களையும் அல்லது ஒரு யூதநபருக்கும் ஒரு யூதரல்லாத நபருக்கும் நடக்கும் திருமணத்தையும்தான் குறிக்குமென யூதர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள்; திருத்தொண்டரின் சட்டங்களிலும் (XV 20, 29) இந்த வார்த்தை பொதுவாக இந்த அர்த்தத்தில்தான் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நமது யோவானோ வைதிக யூதர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த புணர்ச்சி உறவுகளைப் பற்றித் தமது சொந்தக் கருத்துக்களையே கொண்டிருக்கிறார்; அவர் (XIV, 4) விண்ணுலக யூதர்களான 1,44,000 பேர் களையும்பற்றிப் பின்வருமாறு சொல்கிறார்: “பெண்களால் தம்மைக் கறைப்படுத்திக் கொள்ளாதவர்கள் இவர்களே; ஏனெனில் அவர்கள் கற்பிழக்காதவர்கள்” மேலும் உண்மையில், நமது யோவானின் சொர்க்கத்திலே ஒருபெண்ணைக்கூடக் காணவில்லை. எனவே, புணர்ச்சி உறவுகளே பொதுவாக பாபகரமானவை என்று கருதப் படும்.

ஏனைய பழைய கிறிஸ்தவ நூல்களிலும் அடிக்கடி காணப்படும் போக்கைச் சேர்ந்தவராக அவர் இருக்கிறார். மேலும் அவர் ரோமாபுரியை மாபெரும் வேசையென்றும், அவளோடு பூமியிலுள்ள அரசர்களெல்லாம் முறையற்றுப் புணர்ச்சி செய்துள்ளார்களென்றும், அத்துடன் அவர் களெல்லாம் வரைமுறையற்ற புணர்ச்சியின் மதுவையுண்டு மதிமயங்கிப் போய்விட்டார்களென்றும், அவளது மதுரச்சுவைகளின் செழிப்பினால் பூமியிலுள்ள வியாபாரி களெல்லாம் செல்வத்தைப் பெருக்கியுள்ளார்களென்றும் கூறுகின்ற உண்மையையும் நாம் கருத்தில் கொண்டோ மானால், இந்தச் செய்திகளிலேயுள்ள விஷயத்தைக் குறுகிய அர்த்தத்தில், அதாவது இறையியலின் துதிபாடிகள் புதிய ஏற்பாட்டின் வேறு பகுதிகளில் ஒரு உறுதிப்பாட்டைப் பற்றிப்பிடிப்பதற்காக, இதன் மீது ஏற்றிச் சொல்லக்கூடும் பொருளில் அதனை நாம் ஏற்றுக்கொள்வது நமக்கு அசாத்தியமாகி விடுகிறது. உண்மை இதற்கு நேர்மாறானது தான். அந்தச் செய்திகளிலுள்ள இந்தப் பகுதிகளானவை மாபெரும் கிளர்ச்சி நடைபெறும் எல்லாக் காலங்களிலும் பொதுவாகக் காணக் கிடைக்கின்ற காட்சித் தோற்றத்தின், அதாவது எல்லாப் பிற தளைகளையும் போன்று புணர்ச்சி உறவுகளின் மரபுவழித் தளைகளும் உடைத்தெறியப் பட்டன என்ற உண்மையின், ஒரு வெளிப்படையான குறிப்புத்தான்.

கிறிஸ்தவத்தின் முதல் நூற்றாண்டுகளிலும் கூட சதையை வருத்திய துறவிகளுக்கு அருகிலேயே, ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே கிட்டத்தட்ட கட்டுப்பாடற்ற புணர்ச்சிக்கான கிறிஸ்தவ சுதந்திரத்தை விஸ்தரிக்கும் போக்கும் அடிக்கடி தென்படத்தான் செய்தது. நவீன சோஷலிஸ்ட் இயக்கத்திலும் இதே விஷயம் தோன்றத்தான் செய்தது. ஜெர்மன் மொழியிலே “சதையின் புனரமைப்பு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள, 30-40 ஆண்டுக் காலத்தின் ஸெயிண்ட் சைமனின் “சதையிலிருந்து புனர் வாழ்க்கை”யில், ஜெர்மனியில் அப்போதிருந்த “பக்திப் பள்ளி”யில்தான் எத்தகைய சொல்லொணாத பயங்கரம் உணரப்பட்டது? மேலும் எல்லாவற்றிலும் மிகவும் பயங்கரமாக இருந்தது. அப் போதைய பெயர் பெற்ற ஆளும் எஸ்டேட்டுகளைச் சேர்ந்தவர்கள் (எங்கள் நாட்டில் அப்போது வர்க்கங் களென்று எதுவும் இல்லை) தமது கிராமப்புற எஸ்டேட்டு களிலேயே பெரும்பாலும் தங்கி, தமது சதையைத் திரும்பத் திரும்பப் புனரமைப்புச் செய்துகொள்ளாமல், அவர்களுக்கு பெர்லினில் வாழவே முடியாது போயிற்று! அந்த நல்ல மனிதர்கள் மட்டும் சதைக்காக முற்றிலும் வேறு பட்ட விளையாட்டுக்களையெல்லாம் சிந்தித்து வந்த ஃபோரியரை மட்டும் தெரிந்திருக்க முடிந்திருந்தால்! உட்டோப்பியனிஸம் வந்த பின்பு, இந்த அதிக்கிரமங் களெல்லாம் இதைக் காட்டிலும் அறிவு பூர்வமான, யதார்த்தத்தில் மிகவும் தீவிரமான கருத்தோட்டத்துக்கு இடம் கொடுத்தன; மேலும் ஜெர்மனியானது ஹீனின் பக்திப் பள்ளியிலிருந்து உருவாகி வளர்ந்திருந்ததாலும், சோஷலிஸ்ட் இயக்கத்தின் கேந்திரமாக வளர்ச்சி பெற்றதாலும், இந்தப் பெயர் பெற்ற பக்தியுலகத்தின் மாய்மாலக் கோலத்தையெல்லாம் கண்டு அது எள்ளி நகையாடியது.

அந்தச் செய்திகளின் கோட்பாட்டு உள்ளடக்க மெல்லாம் இவ்வளவுதான். மீதமெல்லாம் எதிரியின் முகத்துக்கு நேராகத் தமது விசுவாசத்தைப் பெருமையோடும் துணிவோடும் சொல்வது, எதிரிக்கு எதிராக உள்ளும் புறமும் சலிக்காமல் போரிடுவது ஆகியவற்றில் விசுவாசிகள் ஆர்வத்தோடு இருக்கவேண்டுமெனப் புத்திமதி சொல்லும் பிரச்சாரத்தில்தான் அடங்கியுள்ளது - மேலும், இது எந்த அளவுக்குச் செல்கிறதோ அந்த அளவுக்கு, இவற்றையே சர்வதேசிய அகிலத்தின் தர்க்கரீதியான மனம் படைத்த உற்சாகிகளில் ஒருவராலும் எழுதியிருக்க முடியும் தான்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

3

இந்தச் செய்திகளெல்லாம், சின்ன ஆசியாவின் ஏழு திருச்சபைகளுக்கும், அவற்றின் மூலம் கிறிஸ்தவம் பிற்காலத்தில் எதிலிருந்து வளர்ச்சி பெற்றதோ, அந்த மீதியுள்ள சீர்திருத்தப்பட்ட 69-வது வருஷத்தின் ஜூடாயிஸத்துக்கும், யோவான் எனச் சொல்லப்படுபவர் விடுக்கும் செய்தியின் கருத்துக்குரிய ஒரு முன்னுரைதான். இத்துடன் நாம் ஆரம்ப காலத்தின் புனிதத்துக்கும் புனிதமான அந்தரங்கத்துள்ளும் புகுந்து விடுகிறோம்.

எத்தகைய மக்களிலிருந்து முதல் கிறிஸ்தவர்கள் தோன்றினார்கள்? இது முதன்மையாக ஒரு புரட்சி

கரமான அம்சம் ஆகும். “பாடுபடுபவர்கள், சுமைப் பட்டவர்கள்,” மக்களின் கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியவர்களிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அவர்கள் எல்லோரும் எப்படிப்பட்ட வராயிருந்தார்கள்? நகரங்களிலே வறுமைப்பட்டுப் போன சுதந்திர மனிதர்கள்; தென்பகுதி அடிமை அரசுகளிலுள்ள “கீழ்த்தரமான வெள்ளையர்”களைப் போலவும் ஐரோப் பியக் கடற்கரை நாடோடிகளையும், காலனித் துறை களிலும், சீனத் துறைமுகங்களிலுள்ள துணிச்சல் பேர் வழிகளையும் ஒத்த எல்லாவிதமான மனிதர்கள்; பின்னர் விடுதலை பெற்ற அடிமைகள்; எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையான அடிமைகள்; இத்தாலி, சிசிலி, ஆப்பிரிக்கா ஆகியவற்றின் பெரிய பண்ணைகளைச் சேர்ந்த அடிமைகள்; மாகாணங்களின் கிராம வட்டாரங்களில் கடன் பளுவால் மேலும் மேலும் அடிமைத்தனத்துக்கு ஆளான சிறு விவசாயிகள் ஆகியோரே அவர்கள் கூட்டமாக இருந்தது.

இத்தகைய எல்லாவிதமான நபர்களுக்கும் விடுதலைக்கான ஒரு பொதுவான பாதை முற்றிலும் இருக்கவில்லை. அவர்கள் எல்லோருக்குமே சொர்க்க வாழ்வு என்பது முன்னமேயே தொலைந்து போய்விட்டது. சீர்கெட்டுப் போன சுதந்திர மனிதர்களுக்கோ அந்தச் சொர்க்கம் தமது முன்னோர்களெல்லாம் சுதந்திர பிரஜைகளாக இருந்து வந்த முந்தைய நகரமாகவும் (போலிஸ்), அரசாகவும் இருந்தது; யுத்தக் கைதிகளான அடிமைகளுக்கோ அந்தச் சொர்க்கம் தமது அடிமைத்தனத்துக்கும், சிறைவாசத்துக்கும் முந்திய, சுதந்திர காலமாக இருந்தது. சிறு விவசாயிகளுக்கோ அழிக்கப்பட்டுப்போன யூதரல்லாத சமுதாய முறை யாகவும், சமூகக் கூட்டுச் சொத்துடைமையாகவும் இருந்தது. அவையனைத்தையும் வெற்றிப் பயணம் செய்த ரோமாபுரியின் இரும்புக்கரம் அடித்து நொறுக்கித் தரை மட்டமாக்கியது. பழைய கால மிகப் பெரும்பாலான சமூகங்களின் சமுதாய அமைப்பானது குலமும், உறவு முறையான குலங்களின் ஒற்றுமையும்தான்; அநாகரிக மக்களிடையே இந்தக் கூட்டமைப்பானது குடும்ப இணைப்புகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது; நகரங்களை அமைத்த கிரேக்கர்கள் இத்தாலியர்கள் ஆகியோரிடையே, நகரங்களிலிருந்த உறவு முறையான ஒன்று அல்லது மேற்பட்ட குலங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

பிலிப்பும் அலெக்ஸாண்டரும் ஹெலனிக் தீபகற்பத்துக்கு அரசியல் ஐக்கியத்தை வழங்கினார்கள்; எனினும் ஒரு கிரேக்க தேசத்தை உருவாக்கும் பாதையில் அது செல்லவில்லை. ரோமானிய உலக ஆதிக்கத்தின் வீழ்ச்சியின் மூலம்தான் தேசங்கள் உருவாவது சாத்திய மாயிற்று. இந்த ஆதிக்கமானது சின்னஞ்சிறிய கூட்ட மைப்புக்களனைத்துக்கும் ஒரேயடியாக முடிவு கட்டியது; ராணுவ வலிமை, ரோமானிய ஆட்சி துரைத்தனம், வரி வசூலிக்கும் நிர்வாகம் ஆகியவை இந்த மரபு வழியான உள் நிறுவன அமைப்பை முற்றிலும் சீர்குலைத்துவிட்டது. சுதந்திரத்தையும் தனித்த முறையான நிறுவனத்தையும் இழந்ததோடு மட்டுமல்லாமல் தோற்கடிக்கப்பட்டவர்கள், அவர்களது செல்வங்களையெல்லாம் ராணுவ அதிகாரி களும், சிவில் அதிகாரிகளும் பலவந்தக் கொள்ளை யடித்ததும், பின்னர் அவ்வாறு கொள்ளை கொண்ட தையே அந்த மக்களிடம் அநியாயமான வட்டி விகிதத்தில் அவர்களுக்குக் கடனாகக் கொடுத்து, அதன் மூலம் இன்னும் அவர்களிடமிருந்து பறித்ததும் சேர்ந்து கொண்டன. வரிக்கொடுமையும் பணத் தேவையும், இயற்கையான பொருளாதாரமே பிரதானமாக அல்லது அது மட்டுமோ இருந்துவந்த பிரதேசங்களில், அங்குள்ள விவசாயிகளையெல்லாம் அநியாய வட்டிக்காரர்களுக்கு மேலும் மேலும் ஆழமாக அடிமைப்பட வைத்தன; அதன் மூலம் செல்வ வளத்தில் மாபெரும் வேற்றுமைகளைத் தோற்றுவித்தன; பணக்காரர்களை மேலும் பணக்காரர் களாகவும், ஏழைகளை முற்றிலும் அனாதைகளாகவும் ஆக்கின.

பிரம்மாண்டமான ரோமானிய உலக அதிகாரத்தின் முன்பு நகரங்களோ, அல்லது தனித்திருக்கும் சிறு குலங்களோ ஏதேனும் எதிர்ப்புக் காட்டினால் அது பரிதாபகரமாகத்தான் முடிந்தது. அடிமைப்பட்டவர்கள் அடக்கப்பட்டவர்கள், வறுமைப்பட்டவர்கள் ஆகி யோருக்கு வழி என்ன? விமோசனம் எங்கே? இத்தகைய மக்கள் குருக்களின் நலன்கள் ஒன்றுக்கொன்று அன்னிய மானதாகவும், எதிர்ப்பானதாகவும்கூட இருந்தபோதிலும், இவர்கள் அத்தனை பேருக்கும் பொதுவான விமோசன மார்க்கம் எங்கே இருந்தது? மேலும், அவர்கள் எல் லோரையும் ஒரு பெரும் புரட்சிகரமான இயக்கம் தழுவ வேண்டுமென்றால், அந்த வழியைக் கண்டறிந்தே ஆக வேண்டும்.

இந்த விமோசன மார்க்கம் கண்டறியப்பட்டது. ஆனால் அது இந்த உலகத்தில் அல்ல. அங்கு நிலவிய நிலைமைகளின் சூழ்நிலையில் அது ஒரு மதச் சார்பான விமோசன மார்க்கமாக மட்டுமே இருக்க முடியும். பின்னர் ஒரு புதிய உலகம் (விண்ணுலகம்) வெளிக்காட்டப் பெற்றது. மரணத்துக்குப் பின்னர் ஆத்மா தொடர்ந்து வாழும் வாழ்க்கை, ரோமானிய உலகம் முழுவதிலும் படிப்படியாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கை விஷயமாக ஆகி விட்டது. பூமியில் வாழ்ந்த காலத்தில் செய்த செய்கை களுக்காக மடிந்துபோன ஆத்மாக்கள் தண்டனையையோ அல்லது ஒருவகைப் பிரதிபலனையோ அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தும் மேலும் மேலும் பொதுவான அங்கீகாரத்தைப் பெற்றது. பிரதிபலனைப் பொறுத்த வரையில் அதற்கான எதிர்கால மேன்மைகள் ஒன்றும் அவ்வளவு நன்றாக இருக்கவில்லைதான். தொல்பழங் காலத்தில் முன்னிலையான பொருள் முதல் வாதம் விண்ணுலக அரசிலுள்ள மிகவும் மேலாங்கியிருந்த வாழ்க்கையைக் காட்டிலும், பூமியிலுள்ள வாழ்க்கைக்குத் தான் எல்லையற்ற பெருமதிப்பை வழங்கியிருந்தது;

இறந்த பின்னும் வாழ்வதென்பது கிரேக்கர்களால் ஒரு துரதிருஷ்ட வசமாகவே கருதப்பட்டது. பின்னர் வந்த கிறிஸ்தவம் பிரதிபலனையும் தண்டனையையும் தீவிரமாக விண்ணுலகத்துக்குக் கொண்டு சென்றது; சொர்க்கத்தையும், நகரத்தையும் சிருஷ்டித்தது; பாடுபடுபவர்கள், சுமைப் பட்டவர்கள் ஆகியோரை இந்தத் துன்பப் படுகுழியி லிருந்து சாஸ்வதமான சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லக்கூடிய விமோசன மார்க்கம் கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் உண்மையில், விண்ணுலகத்தில் ஒரு தக்க பரிசு கிடைக்கும் என்ற எதிர்கால நம்பிக்கையின் மூலம் தான், அடக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு உற்சாகத்தை மூட்டி உத்வேகம் கொள்ளச் செய்யும் ஒரு புதிய முழுமையான மதத்தின் அடிப்படையான ஒழுக்கக் கொள்கைகளின் மூலம்தான், ஸ்டோயிக் பிலோனிக் உலகத் துறவும், துறவிகளும் தம்மை உயர்த்திக் கொள்ள முடியும்.

ஆனால், இந்த விண்ணுலகச் சொர்க்கமானது விசுவாசிகளுக்கு அவர்களது மரணத்தினால் மட்டும் திறக்கப்பட்டுவிடாது. நரகத்தின் சக்திகளை எதிர்த்து வைராக்கிய சித்தத்தோடு போராட்டங்கள் நடத்திய பின்னர்தான் புதிய ஜெருசலேமில் தனது தலைநகரைக் கொண்டுள்ள கடவுளின் அரசு வெற்றி கொள்ளத் தன் மூலம்தான் திறந்துவிட முடியும் என்பதை நாம் காணப் போகிறோம். ஆனால், பழைய கிறிஸ்தவர்கள் மனத் தோற்றத்தில் இந்தப் போராட்டங்களெல்லாம் உடனடி யாகவே முதன்மைபெற்றன. யோவான் தமது புத்தகத்தின் ஆரம்பத்திலேயே, “விரைவிலேயே வந்தாகவேண்டிய விஷயங்களைப்” பற்றி விவரிக்கிறார்; அதனைத் தொடர்ந்து உடனடியாகவே “இந்தத் தீர்க்கதரிசனத்தின் வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவனும் பாக்கியவான் ஆவான்... ஏனெனில் காலம் கையெட்டுத் தூரத்தில் இருக்கிறது” (ஐ,3) என்று அறிவிக்கிறார். பிலடெல்பியாவிலுள்ள திருச் சபைக்கு கிறிஸ்து பின்வரும் செய்தியை அனுப்புகிறார் : “கவனியுங்கள். நான் விரைவிலேயே வருகிறேன்”.

மேலும் கடைசி அத்தியாயத்தில் தேவதூதன் “விரைவில் நிகழ வேண்டிய விஷயங்களை” யோவானுக்குத் தான் காட்டிய தாகக் கூறி, அவருக்குப் பின்வருமாறு ஆணையிடுகிறார்: “இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரையிட்டு வைக்கவேண்டாம்; ஏனெனில் காலம் கையெட்டுத் தூரத்தில் இருக்கிறது”. மேலும் கிறிஸ்துவே இரண்டு முறை பின்வருமாறு கூறுகிறார் : “நான் விரைவிலேயே வருகிறேன்” (XXII, 12, 20). இந்தத் தொட ரானது இந்த வருகை எவ்வளவு விரைவாக எதிர்பார்க்கப் பட்டது என்பதை எடுத்துக்காட்டும்.

நூலாசிரியர் இப்போது நமக்குக் காட்டும் முன்கூறல் காட்சிகளெல்லாம், அதற்கு முந்திய முன்மாதிரியான நூல்களிலிருந்து கிட்டத்தட்ட அப்படியப்படியே காப்பியடித்தவையாகும்; பழைய ஏற்பாட்டின் புகழ் வாய்ந்த தீர்க்கதரிசிகளின் நூல்களிலிருந்தும், குறிப்பாக இஸெக்கியேலின் நூலிலிருந்தும் டானியேலின் புத்தகத்தின் பாணியைப் பின்பற்றிப் பிற்காலத்தில் எழுதப்பட்ட யூத ஞான தரிசன நூல்களிலிருந்தும், குறிப்பாகக் குறைந்த பட்சம் ஒருபாகமேனும் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த தான ஹெனாக்கின் புத்தகங்களிலிருந்தும் பற்பல பகுதிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சித்திரத்தையும், ஒவ் வொரு பயங்கர அறிகுறியையும், விசுவாசமிழந்த மனித வர்க்கத்தின்மீது அனுப்பப்பட்ட ஒவ்வொரு கொள்ளை நோயையும், ஒரே வார்த்தையில் சொன்னால், அவரது புத்தகத்தின் முழு விஷயங்களையும், யோவான் எங் கெங்கிருந்து பெற்றார் என்ற சின்னஞ்சிறிய விவரங்களை யெல்லாங்கூட, விமர்சனம் எடுத்துக் காட்டி விடுகிறது. எனவே இதன் மூலம் இந்த நூலாசிரியர் தமது மனத்தின் பெரும் வறட்சியை மட்டும் காட்டிக் கொள்ளாமல், அவர் வருணிக்கின்ற, அவர் அனுபவித்ததாகச் சொல்லும் பரவச நிலைகளையும் தரிசனக் காட்சிகளையும் அவர் கற்பனையில் கூட என்றுமே கண்டு அனுபவித்ததில்லை என்பதையும் நிரூபித்து விடுகிறார்.

இந்தத் தரிசனங்களின் வரிசையானது சுருக்கமாகப் பின்வருமாறு அமைந்துள்ளது; முதலில் யோவான் அரியணையின் மீதமர்ந்து கையிலே ஏழு முத்திரைகள் கொண்ட ஒரு புத்தகத்தை வைத்திருக்கும் கடவுளையும், அவருக்கு முன்னால், சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்துவிட்ட ஆட்டுக்குட்டி (கிறிஸ்து) அந்தப் புத்தகத்தின் முத்திரைகளைத் திறக்கும் தகுதியோடு இருப்பதையும் காண்கிறார். அந்த முத்திரைகளைத் திறந்தபோது எல்லாவிதமான அற்புதமான பயங்கர அறிகுறிகளும் பின்தொடர்ந்து நிகழ்கின்றன. ஐந்தாவது முத்திரையைத் திறந்தபொழுது, கடவுளின் பலிபீடத்தின் கீழே தெய்வ வசனத்தின் காரணமாகக் கொல்லப்பட்டவர் களான கிறிஸ்துவின் தியாகிகளின் ஆத்மாக்கள் தென் படுவதை யோவான் பார்க்கிறார்; அந்த ஆத்மாக்கள் உரத்த குரலில் பின்வருமாறு கூக்குரலெழுப்புகின்றன : “ஆண்டவரே! எவ்வளவு காலத்துக்குத்தான் நீர் எங்கள் குருதியைக் குறித்துப் பூமியின் மீது வசிப்பவர்களின் மீது நியாயத் தீர்ப்புச் செய்யாமலும், பழிவாங்காமலும் இருக்கப் போகிறீர்?” பின்னர் அவர்களுக்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப்படுகின்றன; மேலும் அவர்களைப் போல் இன்னும் பல தியாகிகள் கொல்லப்பட்டு முடிகின்ற வரையிலும் அவர்கள் சிறிது காலத்துக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கூறப்படுகிறது.

எனவே, “உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்; உங்களைச் சபிப்பவர்களையும் ஆசீர்வதியுங்கள்” என்றெல்லாம் சொல்லும் “அன்பு மதத்தை”ப் பற்றிய அருளுரையாக அது இருக்கவில்லை. இங்கோ கிறிஸ்தவர் களைத் தண்டித்தவர்களின் மீது கலப்படமற்ற, உறுதியான, நேர்மையான வஞ்சப்பழிதான் உபதேசிக்கப்படுகிறது. இந்தப் புத்தகம் முழுவதிலும் இப்படியேதான் இருக்கிறது. நெருக்கடி மிகவும் அருகில் நெருங்கவும், வானத்திலிருந்து கொடுமையான கொள்ளை நோய்களும் தண்டனைகளும் அதிகமாகப் பொழியவும், யோவான் முன்னைக் காட்டிலும் அதிக விருப்புணர்ச்சியோடு மனித வர்க்கம் தமது பாவங்களுக்குப் பிராயச்சித்தம் காணப்போவதில்லை யென்றும், கடவுளின் புதிய கசையடிகள் அவர்களை மேலும் தாக்கியடிக்க வேண்டுமென்றும், கிறிஸ்து அவர்களை இரும்புத்தடியினால் ஆட்சிசெய்யவேண்டு மென்றும், முழுவல்லமையுள்ள கடவுளின் உக்கிர கோபம் மது - ஆலையை மிதிக்க வேண்டுமென்றும், ஆனால், தேவ நிந்தனையாளர்கள் இன்னும் கல் நெஞ்சக்காரர்களாகவே இருப்பதாகவும் அறிவிக்கிறார். இது எந்தவிதமான மாய்மாலமும் இல்லாத இயல்பான உணர்ச்சி; ஒரு சண்டை நடந்துகொண்டிருக்கிறது; - a la Guerre comme a la Guerre - x - ஒரு யுத்தம் என்றால் அது யுத்தம்தான்.

ஏழாவது முத்திரை திறக்கப்பட்ட பொழுது, ஏழு எக்காளங்களைக் கொண்ட ஏழு தேவதூதர்கள் அங்கு வருகின்றார்கள்; ஒவ்வொரு தூதனும் ஒவ்வொரு முறை எக்காளத்தை ஊதும் மேலும் புதிய பயங்கரங்கள் நிகழ்கின்றன. ஏழாவது முழக்கத்துக்குப் பின்னால் மேலும் ஏழு தூதர்கள் அங்குத் தோன்றி, கடவுளின் ஏழு கோபக் கலசங்களைக் கொண்டு வந்து அவற்றைப் பூமியின் மீது கொட்டுகின்றார்கள். மீண்டும் ஏற்கெனவே, பல முறை வர்ணிக்கப்பட்டுள்ள அதே கொள்ளை நோய்களும் தண்டனைகளும் ஏற்படுகின்றன. பின்னர் பெரும் வேசையான பாபிலோன் என்ற பெண் சிவப்பான ஆடைகள் தரித்து திரளான தண்ணீரின் மீது அமர்ந்து, ஏசுவினுடைய தியாகிகள், ஞானிகள் ஆகியோரின் ரத்தத்தைக் குடித்து வெறி கொண்டு வருகிறாள்; அவளே பூமியின் அரசர்களெல்லாம் ஆள்கின்ற ஏழு மலைகளைக் கொண்ட மாநகரம் ஆவாள். அவள் ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் கொண்ட ஒரு மிருகத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

அந்த ஏழு தலைகளும் எழு மலைகளையும் ஏழு “அரசர்களை”யும் குறிக்கின்றன. அந்த அரசர்களுள் ஐவர் மாண்டுவிட்டார்கள்; ஒருவன் இருக்கின்றான்; இன்னொருவன் இன்னும் வந்து சேரவில்லை. அவனுக்குப் பின்னர் முதலில் குறிப்பிட்ட ஐவரில் ஒருவன் மீண்டும் வருகிறான். அவன் மரணக்காயம் பெற்றவன். எனினும் அந்தக் காயம் ஆற்றப்பட்டாகி விட்டது. அவன் உலகத்தை 42 மாதங்கள் அல்து 3ஙூ வருடங்கள் (ஏழு வருடங்கள் கொண்ட புனித வாரத்தில் பாதி வரையிலும் ஆளுவான்; விசுவாசிகளைத் தண்டித்துக் கொன்று, கடவுள்தன்மை இல்லாத ஆட்சியைக் கொண்டு வருவான். ஆனால் அதன் பின்னர் மாபெரும் இறுதிப் போராட்டம் வருகின்றது; பெரும் வேசையான பாபி லோனையும், அவளது ஆதரவாளர்கள் எல்லோரையும், அதாவது மனித வர்க்கத்தின் பிரதான பகுதியையே, அழித்தொழிப்பதன் மூலம் ஞானியர், தியாகிகள் ஆகியோரது வஞ்சம் தீர்க்கப்படுகிறது; சாத்தான் ஆழங்காண முடியாத பாதாளத்துக்குள் தள்ளப்பட்டு, அங்கு ஆயிரம் வருஷ காலம் அடைபட்டுக் கிடக்கிறான்; அந்தக் காலத்திலே உயிர்த்தெழுந்து வந்த தியாகிகளோடு கிறிஸ்து ஆட்சி புரிகிறார்; ஆனால் ஆயிரம் வருஷங்களும் கழிந்த பின்னால் சாத்தான் மீண்டும் விடுவிக்கப்படுகிறான்; பின்னர் ஆவிகளின் மற்றொரு பெரும் போராட்டம் வருகிறது; அந்தப் போராட்டத்தில் சாத்தான் இறுதியாகத் தோற்கடிக்கப்படுகிறான். அதன் பின் இரண்டாவது உயிர்த்தெழுதல் வருகின்றது; அதிலே இறந்தவர்களில் மற்றோரும் எழுந்து வந்து, கடவுளின் (கிறிஸ்துவின் அல்ல, இதனைக் குறித்துக் கொள்ளவும்) நியாயத்தீர்ப்பு சிம்மாசனத்தின் முன்னே தோன்றுகிறார்கள்; விசுவாசிகள் ஒரு புதிய சொர்க்கத்தில், ஒரு புதிய பூமியில், ஒரு புதிய ஜெருசலேமில் நிலையான வாழ்க்கை பெறப் புகுவார்கள்.

இந்த நினைவுக் குறிப்புகள் முழுவதும் முற்றிலும் கிறிஸ்துவத்துக்கு முந்திய யூதச் சரக்குகளைக் கொண்டே கட்டியமைக்கப் பெற்றிருப்பதால், இது கிட்டத்தட்ட யூதக்கருத்துக்களையே முழுக்கவும் வெளியிடுகின்றது. இந்த உலகத்தில் இஸ்ரவேலின் மக்களுக்கு எல்லாமே மோசமாகத் தொடங்கிவிட்ட காரணத்தால், அதாவது அஸிரியர்கள், பாபிலோனியர்கள் ஆகியவர்களுக்குக் கப்பம் செலுத்திய காலத்திலிருந்து, இஸ்ரவேல், ஜூடா ஆகிய இரண்டு அரசுகளின் அழிவிலிருந்து, ஸெலூஸிஸ்ஸின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது வரையிலும், அதாவது இசாயாவிலிருந்து டானியேல் வரையிலும் ஒவ்வொரு இருண்ட காலத்திலும் ஒரு ரட்சகரின் தீர்க்கதரிசனங்கள் இருந்துவரத்தான் செய்தன. டானியேலின் புத்தகத்தில் (ஒii, 1-3) மைக்கேலைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனம் கூட உள்ளது; அதாவது யூதர்களின் காவல் தேவதூதனான மைக்கேல் அவர்களைப் பெருந்துன்பங்களிலிருந்து காப்பாற்றுவதற்காகப் பூமிக்கு வருவார். இறந்தவர்களில் பலர் மீண்டும் உயிர்த்தெழு வார்கள்; ஒரு விதமான கடைசி நியாயத் தீர்ப்பு வழங்கப் படும்; மக்களுக்கு நியாயத்தைப் போதித்த ஆசிரியர்கள் நட்சத்திரங்களைப் போல் என்றென்றைக்கும் பிரகாசிப் பார்கள். சீக்கிரமே வரப்போகும் கிறிஸ்துவின் ஆட்சியின் மீது பெரும் அழுத்தம் கொடுப்பதும், விசுவாசிகளின் மகத்துவத்தை குறிப்பாக இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்த தியாகிகளின் மகத்துவத்தைக் குறிப்பிடுவதுதான் இதிலுள்ள ஒரே கிறிஸ்தவ அம்சம்.

christ_334இந்தத் தீர்க்கதரிசனங்களை - அந்தக் காலத்தின் சம்பவங்களை அவை குறிப்பிடுகின்ற அளவுக்கு - அவற்றை அர்த்தப்படுத்திய விஷயத்தில் நாம் ஜெர்மானிய விமர் சனத்துக்கு, குறிப்பாக எவால்டு, லூக்கி, ஃபெர்டினான்ட் பெனாரி ஆகியோருக்குக் கடமைப்பட்டுள்ளோம். இறையியல்வாதிகள் அல்லாதோருக்கும் ரெனானின் மூலம் இது கிட்டுமாறு செய்யப்பட்டுள்ளது. பாபிலோன் என்ற பெரும் வேசை, ஏழு மலைகளின் நகரமான ரோமாபுரியைத் தான் குறிப்பிடுகிறதென்பதை நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோம். அவர் அமர்ந்திருக்கும் மிருகத்தைப் பற்றி அத்தியாயம் XVIII, 9-11ல் நமக்குப் பின்வருமாறு சொல்லப் பட்டுள்ளது :

அந்த மிருகத்தின் “அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகளாகும்; அவை ஏழு அரசர்களாகும்; ஐந்து பேர் விழுந்து பட்டார்கள்; ஒருவன் இருக்கிறான்; மற்றொருவன் இன்னும் வந்து சேரவில்லை; அவன் வரும் சமயத்தில் அவன் சிறிது காலம் இருந்தே தீரவேண்டும். முன்னால் இருந்தது, இப்போது இராதது மான அந்த மிருகமே, அவர்களிலே எட்டாவதானவனும், ஏழிலிருந்து தோன்றியவனுமாவான்; அவனே நாச மடையப் போகிறவனாயுமிருக்கிறான்.

இதன்படி, அந்த மிருகமானது ஒருவர் பின் ஒருவராக ஏழு சீசர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ரோமானிய உலக ஆதிக்கமாகும்; அந்த சீசர்களிலே ஒருவனுக்கு மரணக் காயம் ஏற்பட்டதால் அவன் ஆளவில்லை; எனினும் அவன் குணமடைந்து திரும்பி வருவான். எட்டாவதானவனான அவனுக்குத் தெய்வ எதிர்ப்பும் தேவ நிந்தனையும் கொண்ட அரசு வழங்கப்படும். மேலும், அதற்கு (அவனுக்கு) “ஞானியர்களோடு யுத்தம்” பண்ணவும் அவர்களை வெல்லவும் அதிகாரம் வழங்கப்படும்..... ஆட்டுக் குட்டி யானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப் பட்டிராத பூமியின் குடிமக்களெல்லாம் அதனை வணங்குவார்கள்..... அது சிறியவர், பெரியவர், செல்வர்கள், தரித்திரர்கள், சுதந்திரர்கள், அடிமைகள் ஆகிய யாவரும் தங்கள் வலது கையிலாவது அல்லது தங்கள் நெற்றிகளிலாவது ஒரு முத்திரையையாவது அல்லது அந்த மிருகத்தின் பெயரை யாவது அல்லது அதன் பெயரின் எண்ணையாவது தரித்துக் கொள்கிறவனைத் தவிர வேறு யாரும் விற்கவோ வாங்கவோ முடியாதபடிக்குச் செய்யும். இங்கே தான் ஞானம் இருக்கிறது. புரிந்துகொள்ளும் புத்தியுள்ளவன் அந்த மிருகத்தின் எண்ணைக் கணக்கிட்டுப் பார்க்கட்டும். ஏனென்றால் அந்த எண் ஒரு மனிதனின் எண்ணாக இருக்கிறது. அந்த எண் அறுநூற்று அறுபத்தாறு.”

இங்கே குறிப்பிட்டுள்ள புறக்கணிப்பு கிறிஸ்தவர்கள் ரோமப் பேரரசிற்கெதிராகக் கையாண்ட நடவடிக் கைகளில் ஒன்றாக - எனவே அது சாத்தான் என்ற ஒரு வெளிப்படையான கண்டுபிடிப்பாக - இருப்பதை மட்டும் நாம் கவனித்துவிட்டு, முன்னே ஒருமுறை ஆண்டு வந்தவனும், ஆனால் மரணக்காயம்பட்டு நீக்கப்பட்டுப் போனவனும், ஆனால் அந்த வரிசையிலே கிறிஸ்து விரோதியாக மீண்டும் திரும்ப வரவிருப்பவனுமான அந்த ரோமானியப் பேரரசன் யார் என்ற கேள்விக்கு நாம் செல்வோம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அகஸ்டஸை முதல்வனாகக் கொண்டு நாம் கணக்கிட்டு வந்தால் 2. டைபீரியஸ் 3. காலிகுலா 4. கிளாடியஸ் 5. நீரோ 6. கால்பா எனக் காண்கிறோம். “ஐந்து பேர் விழுந்து விட்டார்கள்; ஒருவன் இருக்கிறான்.” எனவே நீரோ ஏற்கனவே விழுந்துவிட்டான்; கால்பா இருக்கிறான். கால்பா 6-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி முதல் 69-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரையில் ஆண்டு வந்தான். ஆனால் அவன் சிம்மாசனத்தில் ஏறியவுடனேயே, ரைன் பிரதேசத்துப் படைகள் விட்டெல்லியஸ்ஸின்கீழ் கலகம் செய்தார்கள்; அதே சமயம் ஏனைய தளபதிகளெல்லாம் பிற மாகாணங்களிலே ராணுவக் கலகங்களைத் தயார்ப் படுத்தினார்கள். ரோமாபுரியிலேயே மெய்க்காப்பாளர் படையினரும் கிளர்ந்தெழுந்து, கால்பாவைக் கொன்று, ஒத்தோவைச் சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்தார்கள்.

இதிலிருந்து நமது திருவெளிப்பாடு கால்பாவின் காலத்தில் எழுதப்பட்டது என்பதை நாம் காண்கிறோம். அநேகமாக அவனது ஆட்சியின் முடிவுக் காலத்தை ஒட்டியே இருக்கலாம் அல்லது மிகவும் பிந்திப் போனாலும், “ஏழாமவனான” ஒத்தோவின் மூன்று மாத ஆட்சிக் காலத்தில் (69-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலும்) இருக்கலாம். ஆனால் எட்டாமவன் யார்? முன்னால் இருந்தவனும் இப்போது இராதவனும் யார்? அதனை நாம் 666 என்ற எண் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

ஸெமிட்டியரின் மத்தியிலே - சால்டியர்கள், யூதர்கள் மத்தியிலே - அந்தக் காலத்தில் எழுத்துக்களின் இரட்டை யர்த்தத்தின் அடிப்படையிலமைந்த ஒருவிதமான மந்திர வித்தை இருந்தது. நமது சகாப்தத்துக்கு ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்னால், ஹீப்டு எழுத்துக்கள் எண் களைக் குறிக்கும் குறியீடுகளாகவும் உபயோகப்படுத்தப் பட்டன : a = 1, b = 2, g = 3, d = 4 முதலியன. கபாலாப் புதிர்களைக் கணிப்பவர்கள் ஒரு பெயரின் ஒவ்வொரு எழுத்துக்குமுள்ள எண் மதிப்பைக் கூட்டி, அந்த மொத்தத் தொகையிலிருந்து, அந்தப் பெயருடைய ஒருவனின் எதிர்காலத்தைத் தீர்க்க தரிசனமாகச் சொன்னார்கள்; உதாரணமாக சம எண் மதிப்புள்ள வார்த்தைகளை உருவாக்கியோ, வார்த்தைகளைக் கூட்டியோ சொன்னார்கள். இந்த எண்களின் பாஷையிலே ரகசியமான வார்த்தைகளும் அவை போல்வனவும் வெளியிடப் பெற்றன. இந்தக் கலைக்கு ஜெமெட்ரியா (Geometriah) என்ற கிரேக்கப் பெயர் (Geometry: வடிவியல் கணிதம்) வழங்கப்பட்டிருந்தது; இதனை ஒரு வியாபாரமாகவே சால்டியர்கள் பின் பற்றினார்கள்; எனவே டாஸிட்டாஸ் இவர்களைக் கணிதர்கள் என்று குறிப்பிட்டார்; இவர்கள் பின்னர் “அதிமோசமான ஒழுங்கீனங்கள்” என ஊகிக்கத் தக்க காரணங்களால், ரோமாபுரியிலிருந்து கிளாடியஸ்ஸின் காலத்திலும், பின்னர் விட்டெல்ஸியஸ்ஸின் காலத்திலும் வெளியேற்றப்பட்டார்கள்.

இந்தக் கணிதத்தின் மூலமாகத்தான் நமது 666 என்ற எண் தோன்றியது. இது முதல் ஐந்து சீசர்களில் ஒருவனது பெயரின் மறைபொருளாகும். ஆனால் 666 என்ற எண் ஒரு புறமிருக்க, இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், 616 என்ற இன்னொரு பாடபேதத்தையும் இரேனியஸ் தெரிந்திருந்தார்; எவ்வாறாயினும் இந்த எண்களின் புதிர் பரவலாக நன்கு தெரிந்திருந்த காலத்தில்தான் அது தோன்றியிருந்தது. எனவே இரண்டு எண்களுக்கும் விடை ஒத்துவந்தால், அதுவேதான் அதற்குச் சான்றாக அமையும்.

இந்த விடை பெர்லினைச் சேர்ந்த ஃபெர்டினாண்ட் பெனாரியால் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பெயர் நீரோ. அந்த எண் என்பதின் அடிப்படையில் அமைந்தது; அதாவது நீரோவின் கேஸர்; இது நீரோவின் கெய்ஸர் (சூநசடிn முநளைநச) என்ற கிரேக்க மொழிப்பெயரின் ஹீப்ரூ மொழி உச்சரிப்பாகும்; இது சக்கரவர்த்தி நீரோதான் என்பது தால்முகு, பல்மைரா சாசன எழுத்துக்களாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாசன எழுத்து சாம்ராஜ்யத்தின் கிழக்குப் பாதிப் பகுதியில் அச்சிடப் பெற்ற நீரோவின் காலத்து நாணயங்களிலும் காணப்பட்டது. எனவே - ன் (னன் - nun) = 50; ர் (ரெஷ் - resh) = 200; ஓ (வோ = vau) = 6; ன் (னன் - nun) = 50; க் (கெப் - kaph) = 100; ஸ் (ஸமேஷ் - Samech) = 60; ர் (ரெஷ் - resh) = 200. ஆக மொத்தம் 666. நாம் லத்தீன் மொழி உச்சரிப்பான Nero Caesar என்பதை அடிப்படையாகக் கொண்டால் இரண்டாவது ‘ன்’ மறைந்துவிடுகிறது; எனவே 666-50 = 616 என்ற இரேனியன் பாட பேதத்தை நாம் அடைந்து விடுகிறோம்.

உண்மையில், கால்பாவின் காலத்திலே ரோம சாம்ராஜ்யம் முழுவதும் திடீரென்று குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டது. ஸ்பானிய, கால்லிக் படைகளுக்குத் தலைமை தாங்கியவாறு, நீரோவைத் தூக்கியெறிவதற்காக, கால்யா தானே ரோமாபுரி மீது படையெடுத்துச் சென்றான்; நீரோவோ ஓடிப் போய், கால்பாவைக் கொல்லுமாறு ஒரு விடுதலை பெற்ற அடிமைக்கு உத்தரவிட்டான். ஆனால், ரோமாபுரியின் மெய்க்காப்பாளர் படையினர் மட்டு மல்லாமல், மாகாணங்களிலிருந்த பிரதம தளபதிகளும் கால்பாவுக்கு எதிராகச் சதி செய்தார்கள்; சிம்மாசனத்துக்கு உரிமை பாராட்டிப் பல புதிய நபர்கள் எங்கணும் தோன்றி, தமது படைகளோடு ரோமாபுரியை நோக்கிப் படை யெடுத்து வந்தார்கள். சாம்ராஜ்யமே உள்நாட்டுக் கலகத்துக்கு இரையாகி விடும்போல் தோன்றியது; அதன் சீரழிவும் நெருங்கிப் பயமுறுத்துவதாகத் தோன்றியது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நீரோ காயம்தான் பட்டிருப்ப தாகவும், கொல்லப்படவில்லையெனவும், அவன் பார்த் தியர்களிடம் ஓடிப் போய் விட்டதாகவும், இன்னொரு மிகவும் ரத்த பயங்கரமான ஆட்சியைத் தொடங்குவதற்காக, அவன் ஒரு ராணுவத்தோடு யூப்ரெட்டீஸின்மீது முன்னேறப் போவதாகவும் வதந்தி பரவியது. அதிலும் முக்கியமாகக் கீழை நாட்டிலே பரவியது. அக்கயாவும் குறிப்பாக ஆசியாவும் இத்தகைய செய்திகளைக் கேட்டு மிகவும் பயபீதி கொண்டன. மேலும், இந்தத் திருவெளிப் பாடு எழுதப்பட்டிருக்க வேண்டிய அதே காலத்தில், ஒரு பொய்யான நீரோவும் தோன்றினான்; அவன் பாட்மோஸுகும் சின்ன ஆசியாவுக்கும் அருகில், (இப்போது தெர்மியா என்று சொல்லப்படும்) ஏஜியன் கடலிலுள்ள கிட்னோஸ் என்ற தீவில்தான் கொல்லப்படும் வரையில் கணிசமான எண்ணிக்கை கொண்ட ஆதரவாளர்களோடு இருந்து வந்தான்; அதே சமயம் ஒத்தோ நாட்டை ஆண்டு வந்தான்.

கிறிஸ்தவர்களுக்கெதிராக முதற்பெரும் அடக்குமுறையைத் தொடங்கி வைத்த நீரோவைப் பற்றி, கிறிஸ்தவர்களின் மத்தியிலே, நீரோ கிறிஸ்துவின் விரோதியாகத் திரும்பவும் வருவான் என்றும், அவனது வருகையாலும், புதிய மதப் பிரிவின்மீது அவன் ஒரு ரத்த பயங்கரமான அடக்கு முறையைத் தீவிரமாக மேற்கொள்ள முயல்வதாலும், கிறிஸ்துவின் வருகைக்கும், நரகத்தின் சக்திகளுக்கெதிரான மாபெரும் வெற்றிப் போராட்டத்துக்கும், “சீக்கிரத் திலேயே” நிறுவப்படப் போகின்ற ஆயிரமாண்டுக் கால ராஜ்யத்துக்கும் அவை ஒரு முன்னுரையாகவும் அறிகுறி யாகவும் இருக்குமென்றும், ஒரு கருத்துப் பரவியிருந்த காரணத்தால், அந்த நம்பிக்கை மிக்க எதிர் நோக்கினால், எத்தனையோ தியாகிகள் இன்பகரமாகச் சாவை நோக்கிச் செல்லும் வண்ணம் உத்வேகம் பெற்றார்கள் என்ற உண்மையில் அதிசயிப்பதற்கு என்ன இருக்கிறது?

முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்த கிறிஸ்தவ இலக்கியமும், கிறிஸ்தவச் செல்வாக்கு மிகுந்த இலக்கியமும் 666 என்ற எண்ணின் ரகசியம் அந்தக் காலத்திலே பலருக்கும் தெரிந்தே இருந்தது என்பதைப் போதுமான அளவுக்குக் குறிப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளன. கிரேனியஸ் அதனைத் தெரிந்து கொள்ளவேயில்லை; என்றாலும் அவரும், மூன்றாம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் இருந்த வேறு பலரும் ஞான தரிசனத்தில் குறிப்பிடப்படும் மிருகம் நீரோ திரும்பவும் வருவதைத்தான் அர்த்தப் படுத்தியது என்பதைத் தெரிந்துதான் வைத்திருந்தார்கள். இந்தச் சுவடானது அப்போது மறைந்து போயிருந்தது; எனவே இப்போது நமக்குச் சுவையளிக்கும் இந்த நூல்

மதச் சார்பான எண்ணங்கொண்ட ஆரூடக்காரர்களால் வினோதார்த்தமாகவெல்லாம் அர்த்தப்படுத்தப்பட்டது; பழைய ஜோகன் ஆல்பிரெச்ட் பெங்கெல்லின் உதாரணத் தைப் பின்பற்றி, உலகத்தின் முடிவும் கடைசி நியாயத் தீர்ப்பும் 1836-ஆம் ஆண்டில் நிகழப் போகின்றன என்று எதிர் நோக்கிய முதியவர்களைச் சிறுவனாக விருந்த காலத்திலேயே நான் அறிந்திருந்தேன். அந்தத் தீர்க்க தரிசனம் நிறைவேறத்தான் செய்தது; அதுவும் அந்த வருஷத்திலேயே எவ்வாறாயினும் அந்த இறுதி நியாயத் தீர்ப்புக்குப் பலியானது பாபகரமான உலகமல்ல; மாறாக, திருவெளிப்பாட்டை வியாக்கியானம் செய்த அந்தப் பக்தி பூர்வமான வியாக்கியான கர்த்தாக்கள் தான். ஏனெனில் 1836-ஆம் ஆண்டில் எஃப். பெனாரி 666 என்ற எண்ணின் புதிருக்கான திறவுகோலைத் தந்துவிட்டார்; அதன்மூலம் அந்தப் புதிய ஜெமெட்ரியாவான எல்லாத் தீர்க்க தரிசன ஜாதகக் கணக்குகளுக்கும் ஒரு பயங்கரமான முடிவை உண்டாக்கினார்.

விசுவாசிகளுக்காகப் பத்திரப்படுத்தி வைக்கப் பட்டுள்ள விண்ணரசைப் பற்றி, நமது யோவான் ஒரு மேலோட்டமான வருணனையைத்தான் வழங்க முடியும். குறைந்தபட்சம் அந்தக் காலத்தின் கற்பிதங்களின்படி புதிய ஜெருசலேம் மிகவும் பெரிய அளவில்தான் நிர்மாணிக்கப் பட்டுள்ளது: 12,000 பர்லாங்குகள் அல்லது 2,227 சதுர கிலோமீட்டர் அளவுக்கு, அதாவது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அளவில் பாதிக்கும் மேலான பரப்பளவுக்கு, அது பரந்து இருக்கின்றது. அது தங்கத்தாலும், எல்லா விதமான அபூர்வ கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. அங்குச் சூரியனுக்குப் பதிலாகத் தாமே தமது மக்களுக்கு ஒளி செய்தவாறு கடவுள் தம் மக்களோடு வாழ்ந்து வருகிறார்; அங்கு மரணமோ, துன்பமோ இனியும் இல்லை; எந்தவிதமான வேதனையும் அங்கிராது. மேலும் ஒரு புனிதமான ஜீவப்பிரவாக நதி அந்த நகரத்தின் வழியாக ஓடிச் செல்கிறது; அதன் இரு கரைகளிலும் பன்னிரண்டு விதமான பழங்களைக் கொண்ட, மாதந்தோறும் பழங்களை நல்கும் ஜீவ தருக்கள் நிறைந்துள்ளன; அந்த மரத்தின் இலைகள் “தேசங்களின் புண்களையெல்லாம் ஆற்றப் பயன்படுகிறது.” (ஒருவகை மருந்துக் கஷாயம் போலும் என்று ரெனான் நினைக்கிறார் - கிறிஸ்து விரோதி (L Ante O Christ, பக்.542) இங்குதான் ஞானிகளெல்லாம் என்றென்றைக்கும் வாழ்வார்கள்.

நமக்குத் தெரியவந்த வரையில், 68-ஆம் ஆண்டு வாக்கில் கிறிஸ்தவத்தின் பிரதான பீடமாக விளங்கிய சின்ன ஆசியாவில் நிலவிய கிறிஸ்தவம் இப்படித்தான் இருந்தது. திரித்துவம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை; மாறாக, யூதர்களின் தேசியக் கடவுள் என்ற நிலையிலிருந்து வானத்துக்கும் பூமிக்குமான ஒரே ஒரு தனிப் பெருங் கடவுள் என்ற நிலைக்குப் பிந்திய ஜூடாயிஸத்தால் ஏற்றி வைக்கப்பட்ட பழைய, பிரிக்க முடியாத ஜெஹோவாதான் அங்குக் காட்சியளிக்கிறார்; அந்தத் தனிப் பெருங் கடவுள் எல்லாத் தேசங்களின் மீதும் ஆதிக்க உரிமை கொண்டாடிக் கொண்டும், மதம் திரும்பியவர்களுக்குக் கருணையை உறுதி கூறிக்கொண்டும், கல் நெஞ்சம் படைத்தவர்களை, பண்டைக் காலத்தின் ‘பணிவானவர்களை மன்னித்து, ஆணவக்காரரின் மீது போரைத் தொடு’ என்ற முது மொழியின் பிரகாரம் ஈவிரக்கமற்று அடித்து நொறுக்கிக் கொண்டும் அமர்ந்திருக்கிறார். எனவே இந்தக் கடவுள் என்ற மனிதர் நற்செய்திகள், திருமுகங்கள் ஆகியவற்றில் உள்ள பிந்திய காலத்து விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிறிஸ்துவாக இல்லை;

இவரே கடைசி நியாயத் தீர்ப்பின் மீது நீதி வழங்குவார். பிற்கால ஜூடாயிஸத்தில் நிலவி வந்த, பாரசீகத்தின் தெய்வீக ஊற்றுக் கோட்பாட்டின்படி, ஆட்டுக்குட்டியான கிறிஸ்து அந்தக் கடவுளிடமிருந்து சாஸ்வதமாகப் புறப்பட்டு வெளிச் செல்கிறார்; ஒரு கவிதையம்சம் நிறைந்த பகுதியைப் பற்றி - (இசாயா - ஓஐ, 2) தப்பர்த்தம் கொண்டதன் காரணமாகத் தமது வாழ் நிலைக்கு உள்ளான “கடவுளின் ஆவிகளும்” கிறிஸ் தவரைப் போலவே, எனினும் ஒரு தாழ்ந்த நிலையில் வெளிப்பட்டுச் செல்கின்றன. இவர்கள் எல்லோருமே கடவுளுக்குக் கீழ்ப்பட்டவர்கள்தான்; இவர்களே கடவுளும் அல்ல; கடவுளுக்குச் சமதையானவரும்கூட அல்ல. உலகத்தின் பாபங்களுக்குப் பிராயச்சித்தம் செய்வதற்காக, அந்த ஆட்டுக்குட்டி தன்னைத்தானே பலியாக்கிக் கொள்கிறது; அதன் காரணத்தால் அது கணிசமான அளவுக்கு வானுலகத்தில் மேலிடம் பெறுகிறது; ஏனெனில் இந்தத் தன்னிச்சையான மரணமானது அதன் இயல்பான தன்மையின் அத்தியாவசியத்தால் நிகழ்ந்த ஏதோ ஒன்றாகக் கொள்ளப்படாமல், ஒரு அசாதாரணமான சாதனை என்றே புத்தகம் முழுவதும் மெச்சிப் போற்றப்படுகிறது.

இயல்பாகவே, மூத்தோர்கள், தேவலோகவாசிகள், தேவ தூதர்கள், ஞானியர் ஆகியோரைக் கொண்ட ஒரு முழுமையான வானுலக நீதி சபை அங்குள்ளது. ஜெண்ட் -அவெஸ்டாவின் காலம்தொட்டே, ஒரு மதமாக மாறு வதற்காக, ஒரே கடவுட் கொள்கையானது பல கடவுட் கொள்கைக்கு எப்போதும் சலுகைகள் வழங்கிவர நேர்ந்திருக்கிறது. யூதர்களோடு, மறுப்பாளர்களின் உணர்ச்சிமயமான கடவுளர்களுக்குக் கீழிறங்குவது, தேசப் பிரஷ்டத்துக்குப் பின்னால், பாரசீக பாணியிலமைந்த வானுலக நீதி சபையானது மக்களின் வினோதார்த்தத்துக் கேற்றவாறு மதத்தை ஏதோ ஒரு விதத்தில் மாற்றியமைக்கும் வரையில், இடையறாது நீடித்தது; நிலையான, தனக் கிணையான, மாற்ற முடியாத யூதர்கள் கடவுளின் நிலையில், திரித்துவத்தின் மர்மமாக தன்னையே வேறாக்கிக் காட்டும் கடவுளைக் கிறிஸ்தவம் அமர்த்துகின்ற காலம் வரையிலும், கிறிஸ்தவம் பழைய கடவுளர்களின் வணக்கத்தை வேரறுத்து, ஞானியர்களை வணங்கச் சொல்வதைத் தவிர, வேறு எதையும் செய்ய முடியவில்லை; இவ்வாறாக, ஃபால்மெராயரின் கூற்றுப்படி, பெலப்போனிஸஸ், மெய்னா, ஆர்க்கேடியா முதலிய இடங்களில் இருந்து வந்த ஜூபிடர் வணக்கம் ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில்தான் மடிந்து மறைந்தது. (Geschichte der Halbinsel Morea. மோரிய தீபகற்பத்தின் கதை - ஐ பக்.227) நவீன முதலாளியக் காலகட்டமும், அதன் புராட்டெஸ்டாண்டிஸமும் தான் மீண்டும் இந்த ஞானியர் வணக்கத்தைத் தீர்த்துக்கட்டி,

ஒரு மட்டுக்கும் ஒரே கடவுட் கொள்கையைத் தீவிரமாக வேறுபடுத்திக் காட்டின.

இந்தப் புத்தகத்தில் ஆதிபாவத்தைப் பற்றியும், விசுவாசத்தால் நியாயப்படுத்துவது பற்றியும் குறிப்பே இல்லையென்று சொல்லலாம். இந்த ஆரம்பகாலப் போர்க்குணம் மிக்க சமூகங்களின் விசுவாசமானது பின்னர் வந்த வெற்றிகரமான திருச்சபையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்; ஆட்டுக்குட்டியின் தியாகத்துக்கு அருகருகிலேயே, கிறிஸ்து உடனடியாகத் திரும்ப வரவிருப்பதும், சீக்கிரமே புலரப் போகின்ற ஆயிரமாண்டுக்கால அரசும் அதன் சாராம்சமான உள்ளடக்கமாக அமைகின்றன; சுறுசுறுப்பான பிரசாரம், உள்ளும் புறமுமுள்ள எதிரியை எதிர்த்துச் சளைக்காது போரிடுதல், மறுப்பாளர்களின் நீதியரசர்கள் முன்னால் புரட்சிகரமான கருத்து நிலையைப் பெருமிதத்தோடு ஒப்புக்கொள்வது, தியாகப் பலியாவது, வெற்றியிலே நம்பிக்கை கொள்வது ஆகியவற்றின் மூலமே இந்த விசுவாசம் உயிர் வாழ்கிறது.

ஒரு யூதர் என்ற நிலைக்கு மேலும் தாம் வேறு ஏதோ ஒருவராகவும் இருக்கிறார் என்பதை இந்த நூலாசிரியர் தெரிந்துகொள்ளவில்லை என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதன்படி இந்தப் புத்தகம் முழு வதிலும், ஞானஸ்நானம் பற்றி எந்தப் பேச்சும் இல்லை; அநேகப் பல்வேறு சான்றுகளின் மூலம் ஞானஸ்நான மானது கிறிஸ்தவத்தின் இரண்டாவது காலகட்டத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அந்த 1,44,000 விசுவாசிகளான யூதர்களும் “முத்திரையிடப் பட்டவர்கள்”; ஞானஸ்நானம் பெற்றவர்களல்ல. வானுலகத்திலுள்ள ஞானியர்களையும், பூமியின் மீதுள்ள விசுவாசிகளையும்பற்றிக் குறிப்பிடும்போது, அவர்கள் தமது பாவங்களையெல்லாம் கழுவி விட்டார்களென்றும், ஆட்டுக்குட்டியின் ரத்தத்திலே தமது அங்கிகளைத் தோய்த்துத் துவைத்து அவற்றை வெண்மையாக்கி விட்டார்களென்றும்தான் சொல்லப்படுகிறது; அங்கு ஞானஸ்நானத் தண்ணீரைப் பற்றிய பேச்சே இல்லை. கிறிஸ்து விரோதியின் வருகைக்கு முன்னால், ஓஐவது அத்தியாயத்தில் வருகின்ற இரண்டு தீர்க்கதரிசிகளும் ஞானஸ்நானம் செய்விக்கவில்லை; அத்தியாயம் ஓஐஓ, 10- இல் காணப்படுகின்றபடி, ஏசுவின் சாட்சியமானது ஞானஸ்நானமாக இல்லை; தீர்க்கதரிசனத்தின் ஆவியாகத் தான் இருக்கிறது. ஞானஸ்நானம் அப்போதே தீவிரமாக இருந்திருந்தால், இந்த இடங்களிbல்லாம் அதனைப் பற்றி இயல்பாகவே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்; எனவே இந்த நூலாசிரியர் அதனைத் தெரிந்துகொண்டிருக்க வில்லையென்றும், கிறிஸ்தவர்கள் யூதர்களிடமிருந்து இறுதியாகப் பிரிந்து சென்ற பொழுதுதான். அது முதன்முதல் தோன்றியதென்றும் நாம் கிட்டத்தட்ட சர்வ நிச்சயமாக முடிவு கட்டிவிடலாம்.

இரண்டாவது வேத நியமமான யூக்காரிஸ்ட்டைப் பற்றியும் நமது ஆசிரியர் எதுவும் தெரிந்து கொண்டிருக்க வில்லை. லூதரன் வாசகத்திலே கிறிஸ்து விசுவாசத்தில் இன்னும் உறுதி கொண்டுள்ள எல்லாத் தியாட்டிரர் களுக்கும் அவர்களோடு இரவுணவு உண்ண வருவதாக உறுதி கூறுகின்றாரென்றால், இது தவறான எண்ணத்தை உண்டாக்கி விடுகிறது. கிரேக்க வாசகத்திலே deipheso என்று, -அதாவது (அவரோடு) நான் இரவுச் சாப்பாடு சாப்பிடுவேன் என்றிருக்கிறது. ஆங்கில விவிலியநூல் இதனைச் சரிவர மொழிபெயர்க்கிறது :

I shall sup with him - நான் அவரோடு இரவுச் சாப்பாடு சாப்பிடுவேன். இங்கு ஒரு வெறும் ஞாபகார்த்த விருந்தாகக் கூட, யூக்காரிஸ்ட்டைப் பற்றிய பிரச்சினை இல்லை.

மிகவும் மூலாதாரமான இந்த நூலின் காலம் 68 அல்லது 69-ஆம் ஆண்டு எனச் சான்று பூர்வமாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த நூல்தான் எல்லாக் கிறிஸ்தவ இலக்கியத்துக்கும் ஆகப் பழமையான புத்தகம் என்பதில் சந்தேகமே இருக்கமுடியாது. இத்தகையதொரு அநாகரிக மான மொழியில், ஹீப்ரூ மொழிச்சொல் வக்கணைகள் நிறைந்து, சாத்தியப்பாடற்ற வாக்கிய அமைப்புகளும், இலக்கண வழுக்களும் நிரம்பியதாக வேறு எதுவும் எழுதப்படவில்லை. உதாரணமாக அத்தியாயம் ஐ, வசனம் 4-இல் பின்வருமாறு அப்படியே சொல்லப்படுகிறது : “உங்களுக்கு அருள் கிட்டுவதாக... இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவரிடமிருந்து...” இதன் மூலம் ஆதாயம் பெறக்கூடிய இறையியலைத் தொழிலாகக் கொண்ட இறையியல்வாதிகளும், ஏனைய வரலாற்றா சிரியர்களும்தான், இப்போது கிடைக்காது மறைந்து விட்ட நூல்களின் பிந்திய காலத் தழுவல்கள்தான் நற்செய்திகள், திருத்தொண்டர்களின் சட்டங்கள் ஆகியவை என்பதையும், அவற்றின் நொய்மையான வரலாற்று அம்சம்கூட இப்போது கட்டுக்கதைகளின் குழப்பக் குவியலிடையே இனம்காண முடியாது போய் விட்டது என்பதையும், புரூனோ பாயரால் “அத்தாட்சி” பூர்வமானவை என்று கருதப்பட்ட சில நிரூபணங்களும் கூட, பிந்திய காலத்து நூல்களாகவோ அல்லது இனந் தெரியாத ஆசிரியர்களின் பழைய நூல்களில் இடைச் செருகலும், புதிய பகுதிகளும் சேர்த்தமைத்த தழுவல் களாகவோ தான் இருக்க முடியும் என்பதையும், இப்போது மறுக்கிறார்கள்.

ஒரு நூலின் காலத்தை மாதக் கணக்கில் கூடத் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஒரு நூலை நாம் இப்போது கைவசம் கொண்டிருப்பதாலும், அந்த நூல் கிறிஸ்தவத்தை அதன் வளர்ச்சி பெறாத வடிவத்திலே நமக்கு வழங்குவதாலும், இது மிகவும் முக்கியமானதொரு விஷயமாகிறது. டாஸிட்டாஸின் இன்னும் நிலையற்ற தாகவுள்ள ஜெர்மானியர்களின் தொன்மக் கதைகள், கிறிஸ்தவம் மற்றும் பூர்வ காலத்து அம்சங்களின் செல்வாக்குக்குட்பட்ட எட்டாவின் கடவுளர்களின் வளர்ச்சி பெற்ற உபதேசத்தோடு உறவு கொண்டுள்ளதைப் போலவே, இந்த வடிவமும் தனது முற்றிலும் உருவான கோட்பாட்டோடும், தொன்மக் கதைகளோடும் கூடிய நாலாம் நூற்றாண்டின் அரசாங்க மதத்தோடு, அதே மாதிரியான உறவு நிலையில் நிற்கிறது. சர்வ வியாபகமான மதத்தின் உட்சாரம் அங்குள்ளது; எனினும் அது எண்ணற்ற, பின் விளைந்த மதப்பிரிவுகளில் யதார்த்தங் களாக மாறிய, வளர்ச்சியின் ஆயிரக்கணக்கான சாத்தியப் பாடுகளையும் எந்த விதமான பாரபட்சமுமின்றித் தன்னுள் இணைத்துக் கொள்கிறது. மேலும், கிறிஸ்தவம் வாழ் நிலைக்கு வந்துகொண்டிருந்த காலத்ததுவான இந்த மிகப் பழமையான நூல் நமக்கு அதிமுக்கியமான மதிப்புள்ளதாக இருப்பதற்கான காரணம் எதுவென்றால், அலெக்ஸாண்டிரியாவின் பலத்த செல்வாக்குக்குட்பட்ட ஜூடாயிஸமானது கிறிஸ்தவத்துக்கு எதனை வழங்கியது என்பதை இந்த நூல் எவ்விதமான கலப்படமும் இல்லாமல் நமக்கு அப்படியே காட்டுவதுதான்.

பின்னர் வருபவை அனைத்தும் மேலைநாட்டு, கிரேக்க ரோமானியச் சேர்க்கைகள் கொண்டவைதாம். இந்த சமரச சக்தியான ஒரே கடவுட் கொள்கை கொண்ட யூத மதத்தின் மூலம்தான் பிந்திய காலத்துக் கிரேக்கக் கொச்சைத் தத்துவத்தின் பண்பட்ட ஒரே கடவுட் கொள்கையானது, மக்களைப் பற்றிப் பிடிக்கக்கூடிய ஒரே சாதகமான அதன் மத வடிவத்தை எடுத்துத் தன்னைத் தானே போர்த்திக் கொண்டது. ஆனால், இந்த சமரச சக்தியை ஒருமுறை கண்டறிந்துவிட்டால், பின்னர் அது கிரேக்க - ரோமானிய உலகத்தில் மட்டுமே ஒரு முழுமையான மதமாக ஆக முடியும்; அதுவும் உலகம் சாதித்து எய்தியுள்ள சிந்தனைப் பொருளோடு கலந்தும், அதிலேயே மேலும் வளர்ந்தும் தான் மாறமுடியும்.

இக்கட்டுரை ஜெர்மன் மொழியில் எழுதப் பெற்று Die Zeue Zeit, Vol 1, 1894-95, PP. 4- 12 and 36-43-இல் இடம்பெற்றது. ஜெர்மன் வழி ஆங்கிலத்திலும் ஆங்கிலம் வழி தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

* இதற்கு மாறாக, விந்தையான முறையில் முகம்மதிய உலகத்தில், குறிப்பாக ஆப்பிரிக்காவில் எழுந்த மத எழுச்சிகள் இருந்தன. இஸ்லாம் கீழை நாட்டாருக்கு, முக்கியமாக அராபியர்களுக்கு ஏற்றதாயிருந்த மதமாகும்; ஒருபுறத்திலே வியாபாரத்திலும் தொழிலிலும் ஈடுபட்டிருந்த நகரத்துவாசி களுக்கும், இன்னொரு புறத்தில் நாடோடிகளான பெடோ யின்களுக்கும் அது ஏற்றதாயிருந்தது. எவ்வாறென்றால், இடையிடையே ஏற்படக்கூடிய மோதலில் இவ்வியல்பு அடங்கியுள்ளது. நகரத்து மக்கள் செல்வமும் செழிப்பும் பெறுகிறார்கள்; “சட்டத்தை” மதித்து நடப்பதில் தளர்ச்சி காட்டுகிறார்கள். ஏழைகளாயிருப்பதால் கண்டிப்பான ஒழுக்க விதிகளுக்குக் கட்டுப்பட்ட பெடோயின்கள் இந்தச் செல்வங்களையும் இன்பங்களையும் பொறாமையோடும், பொருளாசையோடும் பார்த்துப் பொருமுகிறார்கள்.

பின்னர் பாவிகளைப் புனிதப் படுத்துவதற்கும், உண்மையான விசுவாசத்தையும், சடங்குகளின் நியமங்களையும் மீட் பதற்கும், காணிக்கையாக அந்தத் துரோகிகளின் செல்வங் களையெல்லாம் பறிப்பதற்கும் அவர்கள் ஒரு தீர்க்க தரிசியின்கீழ், ஒரு முகமதுவின் கீழ் ஒன்றுபடுகின்றார்கள். நூறு ஆண்டுகளில் அந்தத் துரோகிகள் இருந்த அதே நிலைக்கே அவர்களும் இயல்பாகவே வந்துவிடுகிறார்கள். விசுவாசத்தின் புதியதொரு சுத்திகரிப்பு தேவைப்படுகிறது; புதியதொரு முகமது தோன்றுகிறார்; ஆரம்பத்திலிருந்து அதே கதை திரும்பவும் தொடங்குகின்றது. ஸ்பெயின்மீது வெற்றிப் படையெடுப்புகள் நடத்திய ஆப்பிரிக்க ஆல் மோராவிடுகள், ஆல்மொஹாடுகள் - ஆகியோரிலிருந்து, ஆங்கிலேயரை வெற்றிகரமாகத் தோற்கடித்த கார்ட்டோமின் கடைசி முகமது வரை இதுதான் நடந்தது.

பாரசீகத்திலும் ஏனைய முகம்மதிய நாடுகளிலும் நடந்த எழுச்சிகளில் இதேபோலத்தான் அல்லது இதே வழியில்தான் அது நிகழ்ந்தது. இந்த இயக்கங்களெல்லாம் மதப் போர்வையைப் போர்த்தியிருந்தன; ஆனாலும் அவற்றின் சாரம் பொரு ளாதாரக் காரணிகளில்தான் இருந்தது; மேலும், அவர்கள் வெற்றி பெறுகின்ற பொழுதிலும்கூட, அவர்கள் பழைய பொருளாதார நிலைமைகளின் மீது கை வைக்காமல் அவற்றை நிலைக்க அனுமதிக்கிறார்கள். எனவே பழைய நிலைமை மாறாதிருக்கின்றது; அதனால் மோதல்களும் இடையிடையே தோன்றுகின்றன. இதற்கு மாறாக, கிறிஸ்தவம் மேலை நாட்டின் வெகுமக்கள் எழுச்சிகளில் வேடம் பூண்டு காலங்கடந்து போய்க்கொண்டிருக்கும் ஒரு பொருளாதார ஒழுங்கமைவின் மீது தாக்குதல்களைத் தொடுப்பதற்கான ஒரு கொடியாகவும், முகமூடியாகவுமே உள்ளது. இறுதியாக அந்தப் பொருளாதார ஒழுங்கமைவு தூக்கியெறியப் படுகிறது; புதியதொன்று தோன்றுகிறது; உலகம் முன்னேறுகிறது. (ஏங்கெல்ஸின் குறிப்பு).



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard