New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புலாலுண்ணாமையைப் பற்றிய சில கேள்விகளும் பதிலளும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
புலாலுண்ணாமையைப் பற்றிய சில கேள்விகளும் பதிலளும்
Permalink  
 


புலாலுண்ணாமையைப் பற்றிய சில கேள்விகளும் பதிலளும்

சிவமயம்

புலால் உணவைத் தடுக்கும் ஒரே சமயம் சைவம் மட்டுமே…இஸ்லாத்தும் கிருத்தவமும் புலாலுண்ணலைத் தடுக்கவில்லை…புலாலுணவை ஏன் சைவம் தடுக்கிறது ?? அதன் காரணத்தை இனி பார்ப்போம்…

புலால் உணவு கொலையால் கிடைத்த உணவு,ஆகையினால்,புலாலுண்ணல் பாவத்தின் காரியம்…ஆகையால் தான் சைவ சமயம் அதனைத் தடுக்கிறது..புலாலுண்பவன், தான் புலாலை சாப்பிட்டப் பின்பும்,மீண்டும் புலாலை விரும்புவதால், இவனது இந்த விருப்பம் ஒரு உயிர் கொல்லப்படுவதற்குக் காரணமாகிறது..ஆக,புலாலுண்ணல், எல்லா விதத்திலும் கொலையுடன் தொடர்புள்ள செயலாகவே இருக்கிறது…ஆதலால்,புலாலுண்பவன் நிச்சயம் உயிர்கள் மீது கருணையுள்ளவனாக இருக்க முடியாது..

சிலர் இவ்வாறு கேள்வி கேட்கின்றனர் :

“நாங்கள் ஒரு உயிரைக் கொல்லவில்லையே,ஏற்கனவே ஒருத்தர் கொன்று வைத்த மாமிசத்தைத் தான் வாங்கிப் புசிக்கிறோம்…ஆதலால்,எங்களுக்கு எவ்வாறு பாவம் வந்து சேரும் ?? “

இந்தக் கேள்வியை படித்தால்,அறிவுப்பூர்வமானதாக இருக்கும்,ஆனால், உற்று நோக்கினால்,அவ்வாறிருக்காது..இந்த உலகில், நாம் ஒர் பொருளை விரும்புவதால் தான் அந்தப் பொருளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதால்,விற்பனைக்கு வருகிறது…ஒரு ஐம்பது,நூறு வருஷத்துக்கு முன்பு இருந்த பொருட்கள் இன்று விற்பனையில் இல்லை..இன்னும் சொல்லப் போனால், இன்று நாம் உபயோகிக்கும் சில தொலைபேசி மாடல்கள் கூட,அடுத்த ஆண்டு விற்பனையில் இருக்காது…ஆக,ஒரு பொருள் விற்கப்படுவதற்கு மூலக் காரணம், மக்களின் வரவேற்பு தான்…அதே போல்,மாமிசம் உண்பவர் இந்த உலகில் உள்ளதால் தான் மாமிசம் விற்பவரும் இருக்கிறார்….புலாலுணவை எல்லோரும் கைவிட்டால்,புலால் விற்பவர் எவரும் இருக்க மாட்டார்…ஆக,புலாலுணவு விரும்பிகள் இருக்கின்றனர் என்பதால் தான் மாமிசம் விற்கும் தொழிலை பலர் செய்கின்றனர்…இந்த மாமிசத்தை விற்பவருக்கு எப்படி மாமிசம் கிடைக்கும் ?? நிச்சயமாக,ஆடு,மாடு,கோழி பொன்ற விலங்குகளைக் கொன்றால் தான் மாமிசம் கிடைக்கும்….ஆகையினால், அந்த விலங்குகளை கொலை செய்பவரைவிட புலால் உண்பதே அதிக பாவமாம்…எப்படி ??புலால் உண்பவர்,தம் பொருட்டு, வேறொருத்தரை கொலை செய்யும் தொழிலில் ஈடுபடுத்துகிறார் அல்லவா ?? அந்த மாமிச விற்பனையாளர் அந்தப் பாவகரமான தொழிலை செய்வதற்கு காரணமாக இருக்கிறார்கள் இந்த புலாலுணவு விரும்பிகள்…

சில,முஸ்லிம்களும் கிருத்தவர்களும் நம்மிடம் இவ்வாறு கேள்வி கேட்கின்றனர் :

“விலங்குகளைக் கொன்று அதன் மாமிசத்தைப் புசிப்பது பாவம் என்று சொல்லும் நீங்கள்,மரம் போன்றவற்றைக் கொன்று சாப்பிடுகிறீர்களே,அது பாவமில்லையா ?? “

இந்தக் கேள்வியை,மாற்று மதஸ்தர்கள்,நம்மவரிடம் அடிக்கடி கேட்கும் கேள்வியாகும்…முஸ்லிம்,கிருத்துவர் போன்றோர் தாம் செய்யும் குற்றத்தை மறைக்க,இவ்வாறான கேள்வியைக் கேட்டு நம்மவர் வாயை அடைக்கப் பார்ப்பார்கள்…ஆனால்,இந்தக் கேள்விக்கு நம்மிடம் பதில் உண்டு..தாவரங்களைக் கொன்று புசிப்பதால் வரும் பாவம் மிகவும் சிறியதாகும்…ஏனெனில், எழுவகை பிறப்புக்களில் தாழ்ந்த பருவத்தை உடையவை ஆதலால்…எழுவகை பிறப்பு என்றால் தேவர்,மனிதர்,விலங்கு,பறவை,ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்….ஆக,மரம் முதலியவைகளைக் கொன்று புசித்தல்,மிகவும் சிறிய பாவமே ஆகும்…இந்தப் பாவத்தை எவ்வாறு போக்குவது ??கடவுள்,ஆச்சாரியர்,அதிதி போன்றோருக்கு அவ்வுணவைப் படைத்தப் பின்,தான் உணவை புசித்தால்,அப்பாவம் நீங்கும்….கடவுளுக்கு உணவை படைப்பது என்பது தான் சிவபூசையில் நைவேத்தியம் படைத்தல்..சைவர்கள்,சிவபூசை செய்யாமல்,உணவை சாப்பிடக் கூடாது என்பது இதனால் தான் :

அலரினைசூட்  டாதமலன்  றாளினருந்  தன்ன

மலமாம் பிணமுமா மாசு  ( சைவ சமய நெறி 3:251 )

பொருள் : சிவபெருமான் பாதத்திலே பூவை சூட்டாமல் புசிக்கும் அன்னம்,மலமுமாம் பிணமுமாம் பெரும் பாவமுமாம்

சிவபூசை செய்யாமல் சாப்பிடும் அன்னம் அசுத்தமானது மற்றும் பாவத்துக்குரியது என்று நம் சிவாகமங்கள் கூறுவது ஏனென்றால், தாவரங்களைக் கொன்ற பாவம்,சிவபூசையில் இறைவனுக்கு நைவேத்தியமாக சமர்பிப்பதன் மூலம் தீரும் என்பதை உணர்த்தவே…

புலாலுணவை தவிர்ப்பதால் கிடைக்கும் பலனை, சிவதருமோத்தர ஆகமம் இவ்வாறு கூறுகிறது :

Ethical-Basis-of-Saivaism-505

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு :

“What merit a man does attain by severe penance on the summits of mountains, and also by Asvamedha, that merit he attains without any the least labour and difficulty by simply abstaining from drink and flesh-diet”

இதன் தமிழ் மொழுபெயர்ப்பு :

“கடும் தவம் இயற்றுவதாலும் அஸ்வமேத யாகம் செய்வதாலும் கிடைக்கும் பலனை,புலாலுண்ணலையும் கள்ளுண்ணலையும் தவிர்ப்பதால்,சிரமமின்றி பெற்றுவிடலாம் “

ஆக,பெருந்தவங்கள் மற்றும் அஸ்வமேதம் போன்ற பெரும் யாகங்கள் செய்த பலனை,புலாலை தவிர்ப்பதன் மூலம் நாம் மிகவும் சுலபமாக பெற்றுவிடலாம்…இந்த சுலபமான வழியை பின்பற்றாமல், நாக்கு ருசிக்காக புலாலுணவு உண்ணும் மூடர்களை என்னவென்று கூறலாம் ??

வேதம் இவ்வாறு கூறுகிறது :

“புலால் உண்ணாமல் தூய்மையாக இருந்து பிற உணவுகளை உண்பவர்கள் வளம்பெற வாழ்வார்கள் ” (ரிக் வேதம் 1-162-12)

புலாலுண்பவர்கள் நரகில் எவ்வாறு தண்டிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கூறுவதைப் பாருங்கள் :

“கொலை செய்தவரும்,புலாலை விற்றவரும்,புலாலை விலைக்கு வாங்கினவரும்,புலாலை புசித்தவரும்,புலால் புசியாதவரைப் புசிபித்தவரும்,சிலர் சொல்லுக்கு அஞ்சிப் புலாலைப் புசித்தவருமாகிய எல்லோரும் பாவிகளேயாவர். அப்பாவிகளை நரகத்திலே இயமதூதர்கள் அக்கினி சுவாலிக்கும் முள்ளிலவமரத்திலே குப்புறப்போட்டு, இருப்பு முளைகளை நெருங்கக் கடாவிய தண்டத்தினாலே முதுகில் அடிப்பார்கள் ; அதுவன்றிக் குடாரியினாலே கொத்தி,ஈர்வாளினால் அறுப்பார்கள்; இரும்பு முதலிய உலோகங்களை உருக்கி,அவர்கள் வாயிலே வார்ப்பார்கள். ” (ஆதாரம் :  நான்காம் பாலப் பாடம்)

ஆகையினால்,புலாலுணவு சாப்பிடுவதன் மூலம்,கொலை முதலான பாவத்துக்கு நாம் ஆளாகிறோம் என்பதால், தூய வேதமும் சிவாகமமும் புலாலுணவை உண்ணக் கூடாது என்று தடுக்கிறது..குரான் பைபிள் போன்றவையோ,மனிதர்களால் தங்கள் சுய நலத்துக்கு எழுதப்பட்ட நூல்கள் ஆதலால், நாக்கு ருசிக்கு தேவையாக புலாலுணவு போன்றவற்றை அனுமதிக்கின்றன…இறைவன் கருணையுள்ளவன் என்று இந்த மதங்கள் கூறிக்கொண்டு அதே இறைவன் விலங்கை கொன்று உண்ணலாம் என்று கூறியிருக்கிறான் என்று சொல்வது எப்பேற்பட்ட முரண் ?? இவர்கள் தெய்வம் எங்ங்னம் கருணையுள்ளவனாவான் ?? அறிவுடையோர் சிந்திக்க…

உதவிய நூல்கள் :

1.நான்காம் பாலப் பாடம் (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்)

2.Studies in Saiva Siddhanta (J.M.Nallaswami Pillai )

3.சைவ வினா விடை இரண்டாம் புத்தகம்  (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard