New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள்


Guru

Status: Offline
Posts: 17287
Date:
நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள்
Permalink  
 


யூத செப்பேடு நகல்களை மோடி, நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (1)

ஜூலை 9, 2017

யூத செப்பேடு நகல்களை மோடி, நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (1)

PM Modis gifted Israeli PM 2 sets of copper plates believed to have been inscribed in 9-10th century

04-07-2017 [செவ்வாய் கிழமை இரவுபெஞ்சமின்நெதன்யாகுவுக்குமோடி கொடுத்த மாதிரிசெப்பேடுகள்நினைவுபரிசு: மோடி மூன்று நாட்கள் [4 முதல் 6 வரை] அரசு முறை பயணமாக மோடி 03-07-2017 [திங்கட்கிழமை] சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விமான நிலையத்துக்கு நேரில் வந்து உற்சாக வரவேற்பு அளித்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்து, இத்தகைய மரியாதை மோடிக்குக் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி இந்தியா சார்பாக கேரளாவிலிருந்து கொண்டு வந்த இரு நினைவுப் பரிசுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 04-07-2017 [செவ்வாய் கிழமை இரவு] வழங்கினார். இந்தியாவிலுள்ள நீண்ட யூத வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பரிசு குறித்து பிரதமர் அலுவக ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர் தகடுகள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இவை 9-ஆம் மற்றும் 10-ஆம் நூற்றாண்டை சார்ந்தவை[1], என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டாலும், “9-10ம் நூற்றாண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது”, என்றுதான் டுவிட்டரில் சொல்லப்பட்டுள்ளது[2].

PM Modis gifted Israeli PM - second set of copper plates believed to have been inscribed in 9-10th century

மாதிரிசெப்பேடு– முதல் தகடின் விவரங்கள்: இதில் முதல் காப்பர் தகடு யூதர்களின் தலைவரான ஜோசப் ராபனுக்கு, அப்போதைய ஆட்சியில் இருந்த இந்து அரசர் சேரமான் பெருமாளால் [பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்] வழங்கப்பட்டது[3]. பின்னாளில் ஷிங்க்ளியின் இளவரசனாக ஜோசப் ராபன் முடிசூட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டாலும், “யூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது”, என்றுதான் உள்ளது[4]. ஷிங்க்ளிக்கு சரிநிகரான யூதர்களின் விருப்பமான மற்றும் கலாச்சார ஸ்தலமாக ரங்கனூர் விளங்கியது. இந்த காப்பர் தகடுகள் கொச்சியின் மட்டான்சேரியில் உள்ள பாரதேசி சினகோக் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது[5]. பின்னர், காலப்போக்கில் அங்கிருந்த யூத மக்கள் கொச்சினுக்கும் மலபார் உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பிறபகுதிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். வழிவழியாக இந்த இடப்பெயர்வு நடந்துள்ளது[6]. ஷிங்க்லி பகுதியும், கிராங்கனூர் பகுதியும் யூதர்களின் இரண்டாவது ஜெருசலேம் என்று இப்போதும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, உள்ளூர் யூதர்கள் ஒருதடவை ஒரு கைப்பிடி மண்ணை சவப்பெட்டியில் போட்டு, ஷிங்ளி / கிராங்கனூரை “இரண்டாவது ஜெருஸலேம்” என்று சொன்னதாக உள்ளது[7]. இந்தப் பகுதி இப்போதுள்ள திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[8].

Benjamin Netanyahu-Modi - Jews copper plate

மாதிரிசெப்பேடு– இரண்டாம் தகட்டின் விவரங்கள்: இரண்டாவது தகடு, இந்தியாவுடனான யூதர்களின் வர்த்தகம் குறித்து விளக்குகிறது. அதுமட்டுமின்றி கொல்லம் மற்றும் மேற்கு ஆசியாவுடனான இந்திய வர்த்தகத்தையும் விளக்குகிறது. மேற்கு ஆசிய வர்த்தகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சோராஸ்டிரியன்களுடன் யூதர்களும் வர்த்தகம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[9].  இந்தியா மற்றும் இந்தியாவுடனான கடல் கடந்த வாணிகம் எனும் போது, அது இருவழி வியாபாரம் என்பதை கவனிக்க வேண்டும். முதலில், இடைக்காலம் வரை, இந்தியா தான் கடல் வாணிகத்தில் கோலோச்சி வந்தது. பிறகு, அரேபியர்கள், வளைகுடா மார்க்கத்தை அடைத்து, வரிகேட்டு, கடற்கொள்ளை அடித்து, வணிகர்களைக் கொடுமைப் படுத்திய நிலைகளில், இந்தியாவுடன் நேரிடையான வாணிகத்தில் ஈடுபடத்தான், இந்த்யாவிற்ற்கு கடல்வழி தேடப்பட்டது. அவ்வாறுகண்டுபிடித்தப் பிறகு, ஐரோப்பியர்கள் ஆதிக்கம் வளர ஆரம்பித்தது. இதனால், இந்திய வணிகம் தென்கிழக்காசிய நாடுகளுடன் சுருங்கியது. கிளாடியஸ் பச்சனன் என்பவர், இந்த செப்பேடுகளைப் பற்றி 1806ல் ஆய்ந்தபோது, தனக்கு மூலப்பட்டயங்கள் / செப்பேடுகள் கிடைக்கவில்லை என்றும், மாதிரிகள் தான் கிடைத்தன, அவற்றை மலங்காரா சர்ச் பிஷப்பிடம் கொடுத்தார் என்று 1806 / 1811ல் குறிப்பிட்டுள்ளார். ஆக, 19ம் நூற்றாண்டிலேயே, பச்சனன் பார்த்தது, மாதிரி தான். பிறகு, அம்மாதிரியிலிருந்து பல மாதிரிகள் தயாரிக்கப் பட்டதாகவும், அவை படித்தறிவதற்காக, பல ஐரோப்பிய அறிஞர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் எழுதியுள்ளார்[10].

Modi met Benjamin Netanyahu

கேரளாவின் திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன்சர்ச்சிலிருந்து இந்த தகடுகள் 2017ல் கொண்டு வரப்பட்டுள்ளன: இந்த தகடுகள் கேரளாவின் திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன் தேவாலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தத் தகடுகளுடன் கேரளாவிலுள்ள யூத சமூகத்தைச் சேர்ந்த பழமையான தோரா சுருளையும் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தார். தென்னிந்தியாவின் கலையை பிரதிபலிக்கும் தங்கத்தால் பூசப்பட்ட உலோக கிரீடம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுதும், “கேரளாவின் திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன்சர்ச்சிலிருந்து இந்த தகடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன”, என்றுள்ளதால், இப்பொழுதும் – 2017ல், அதே போல இன்னொரு மாதிரி, போலி தயாரிக்கப்பட்டது என்பது உண்மையாகிறது. ஆக, –

  1. 1811ம் ஆண்டிற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட போலி-மாதிரி செப்பேடுகள்,
  2. 1811 முதல் 2016 வரை தயாரிக்கப் பட்ட போலி-மாதிரி செப்பேடுகள்,
  3. 2017ல் தயாரிக்கப்பட்ட போலி-மாதிரி செப்பேடுகள்.

என்று பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. மற்றும், அத்தகைய ஆட்களை, தாமிர பட்ட்யங்கள், செப்பேடுகள் தயாரிக்கும் தொழிற்நுட்பமும் அவர்களிடம் இருக்கிறது, இருந்து வருகிறது என்றும் தெரிகிறது.

PM Modis gifted Israeli PM - scroll

மோடிநேதன்யாகு பரஸ்பர பரிசுகள் பகிர்வு: இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு பிரிவாக இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் புகைப்படத்தை  பரிசாக அளித்தார்[11]. அதாவது, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய வீரர்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டுள்ளனர்[12]. பெஞ்சமின் நேதன்யாகு தனது இல்லத்தில் பிரதமர் மோடிக்கு அளித்த தனிப்பட்ட விருந்தின் போது இந்த புகைப்படத்தை பரிசாக அளித்தார்[13]. பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்திலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது[14].  இப்பொழுதைய அனைத்துலக தீவிரவாத எதிர்ப்பு என்று கோணத்தில் மட்டும் தான், இந்த இந்திய-இஸ்ரேல் தொடர்புகளை காணமுடியும். விவசாய-யுக்திகள், பொருளாதார பரஸ்பர உதவிகள் முதலீடுகள் பிறகு வருகின்றன. இவற்றை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்ப்பார்கள் மற்றும் இந்திய-இந்து விரோதிகளும் சேர்ந்து கொண்டு, வலுமையான பிரச்சாரத்தை முடுக்கி விடுவார்கள் என்பதையும் கவனித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

09-07-2017

Modi presented to Benjamin Netanyahu - Metal crown covered in gold sheets from South India

[1] தி.இந்து.தமிழ், இஸ்ரேல் பிரதமருக்கு மோடி அளித்த நினைவுப்பரிசு, பிடிஐ, Published: July 5, 2017 15:35 ISTUpdated: July 5, 2017 15:52 IST.

[2] They comprise two different sets of copper plates that are believed to have been inscribed in 9-10th Century, the PMO tweeted.

The Hindu, Narendra Modi gifts replicas of relics from Kerala to Netanyahu, JERUSALEM,JULY 05, 2017 10:00 IST; UPDATED: JULY 07, 2017 20:33 IST.

[3]http://tamil.thehindu.com/world/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/article9750122.ece

[4] According to traditional Jewish accounts, Joseph Rabban was later crowned as the Prince of Shingli, a place in or equated with Cranganore.

[5] மாலைமலர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்குநினைவு பரிசு வழங்கினார் பிரதமர் மோடி, பதிவு: ஜூலை 05, 2017 06:03

[6] தமிழ்.ஒன்.இந்தியா, மோடி அளித்த கேரள பரிசு.. மனம் நெகிழ்ந்துபோன இஸ்ரேல் பிரதமர்!, Posted By: Devarajan, Published: Wednesday, July 5, 2017, 13:48 [IST].

[7] Local Jews once placed in each coffin a handful of earth from Shingli/Cranganore that was remembered as a holy place and a “second Jerusalem.”

http://www.thehindu.com/news/national/narendra-modi-gifts-two-sets-of-relics-from-kerala-to-netanyahu/article19214296.ece

[8] http://tamil.oneindia.com/news/international/pm-narendra-modi-gifts-two-sets-relics-from-kerala-israel-pm-benjamin-netanyahu-288538.html

[9]http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/05060301/1094596/PM-Modi-gifts-two-sets-of-relics-from-Kerala-to-Netanyahu.vpf

[10] Cladius Buchanan recorded as follows: “But there are other ancient documents in Malabar, not less interesting than the Syrian Manuscripts. The old Portuguese historians relate, that soon after the arrival of their countrymen in India, about 300 years ago, the Syrian Bishop of Angamalee (the place where I now am) deposited in the Fort of Cochin, for safe custody, certain tablets of brass, on which were engraved rights of nobility, and other privileges granted by a Prince of a former age ; and that while these Tablets were under the charge of the Portuguese, they had been unaccountably lost, and were never after heard of. Adrian Moens, a Governor of Cochin, in 1770, who published some account of the Jews of Malabar, informs us that he used every means in his power, for many years, to obtain a sight of the famed Christian Plates ; and was at length satisfied that they were irrecoverably lost, or rather, he adds, that they never existed. The Learned in general, and the Antiquarian in particular, will be glad to hear jthat these ancient Tablets have been recovered within this last month by the exertions of Lieutenant- (Colonel Macauley, the British Resident in Travan-core, and are now officially deposited with that Officer. ‘ The Christian Tablets are six in number. They are composed of a mixed metal. The engraving on the largest plate is thirteen inches long, by about four broad. They are closely written, four of them on both sides of the plate, making in all eleven pages. On the plate reputed to be the oldest, there is writing perspicuously engraved in nail-headed or triangular- headed letters, resembling the Persepolitan or Babylonish. On the same plate there is writing in another character, which is supposed to have no affinity with any existing character in Hindoo* tan. The grant on this plate appears to be witnessed by four Jews of rank, whose names are distinctly engraved in an old Hebrew character, resembling the alphabet called the Palmyrene: and to each name is prefixed the title of ‘ Alagen,’ or Chief, as the Jews translated it. — It may be doubted, whether there exist in the world many documents of so great length, which are of equal antiquity, and in such faultless preservation, as the Christian Tablets of Malabar. — The Jews of Cochin indeed contest the palm of antiquity: for they also produce two Tablets, containing privileges granted at a remote period; of which they presented to me a Hebrew translation. As no person can be found in this country who is able to translate the Christian Tablets, I have directed an engraver at Cochin to execute a copper-plate facsimile of the whole, for the purpose of transmitting copies to the learned Societies in Asia and Europe. The Christian and Jewish plates together make fourteen pages. A copy was sent in the first instance to the Pundits of the Shanscrit College at Trichiar, by direction of the Rajah of Cochin ; but they could not read the character.* — From this place I proceed to Cande-nad, to visit the Bishop once more before I return to Bengal.’

Claudius Buchanan, Two Discourses preached before the University of Cambridge, on the commencement of Subday July 1, 1810 and a sermon before the Society of Missions to Africa and the East; at their tenth anniversary. June 12, 1810. To which added Christian Researches in Asia, T. Cadell and W. Davies, in the Strand; and J. Deighton, Cambridge, London, 1811, pp.121-122.

In footnote, he recorded, “Most of the Manuscripts which I collected among the Syrian Christians, I have presented to the University of Cambridge; and (they are now deposited in the Public Library of that University, together with the copper-plate fac-similes of the Christian and Jewish Tablets.” (Ibid. P.122). Thus, it is evident that there were no originals of the said copper plates and thus, the available / claimed copper plates have no historical value.

[11] தினத்தந்தி, இந்திய வீரர்கள் இடம் பெற்ற புகைப்படத்தைபிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார் நேதன்யாகு, ஜூலை 05, 2017, 09:38 PM

[12]http://www.dailythanthi.com/News/TopNews/2017/07/05213841/Netanyahu-gifts-Indian-soldiers-photo-to-Modi.vpf

[13] விகடன், இஸ்ரேலில் மோடிக்கு நினைவுப் பரிசு!, Posted Date : 01:50 (06/07/2017); Last updated : 10:28 (06/07/2017)

[14] http://www.vikatan.com/news/world/94506-modi-receives-a-memorial-prize-from-benjamin-netanyahu.html



__________________


Guru

Status: Offline
Posts: 17287
Date:
RE: நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள்
Permalink  
 


போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

ஜூலை 9, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

 PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

மோடியின் பரிசளித்தல்நட்புறவு யுக்தி: நிச்சயமாக மற்ற பிரதம மந்திரிகளை விட மோடி வித்தியாசமாக, சாதுர்யமாக, நட்புறவுகளை வளர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார். அனைத்துலக தலைவர்களும் அவரை, மிக்க அக்கரையுடன், ஜாக்கிரதையுடன், கவனத்துடன் அணுகி வருகின்றனர். பரிசுகள், நினைவு-பரிசுகள் கொடுப்பதிலும் மோடி மிகவும் அக்கரையுடனும், கவனத்துடனும், சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார்[1].  இவற்றை கீழ் காணும் உதாரணங்களிலிருந்து அறியலாம்[2]:

  1. 2014ல் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு ஷாலை பரிசாக அனுப்பி வைத்தார்.
  2. நவாஸ் செரிப்பின் பேத்தியின் திருமணத்திற்கு ரோஸ் கலர் டர்பனை அனுப்பி வைத்தார்.
  3. இரான் தலைவர் சையத் அலி காமெனேயை சந்தித்த போது, 7ம் நூற்றாண்டு கூஃபி லிபியில் எழுதப்பட்ட குரானின் கையெழுத்துப் பிரதியை பரிசாகக் கொடுத்தார்.
  4. உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவை சந்தித்தபோது, அமிர் குர்சுவின் சித்திரத்தின் நகலை பரிசாகக் கொடுத்தார்.
  5. 2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்[3].
  6. டொனால்டு டிரம்பை சந்தித்தபோது, வெள்ளி வளையல் மற்றும் ஷாலைப் பரிசாகக் கொடுத்தார்.

Modi twitter on Cheraman mosque 2016

இதில் உள்ள அனைத்துலக அரசியல், நட்புறவு, வியாபாரம் முதலியவை ஒருபக்கம் இருந்தாலும், கேரளா சம்பந்தப்பட்ட “நினைவு பரிசுகள்” திடுக்கிட வைக்கின்றன.  2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தது, விசித்திரமாக இருந்தது. இப்பொழுது, இஸ்ரேல் விசயத்தில் இவ்வாறு உள்ளது. இனி யூத செப்பேடுகளின் பின்னணியைப் பார்ப்போம்.

Marthoma cyrch, thiruvalla- copper plates-1

இதன் சரித்திரப் பின்னணிஉண்மைகள்: கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையிலும், சரித்திர ஆதாரத்துடன் கூடிய சரித்திரம் இடைக்காலத்திலிருந்து தான் தெரியவருகிறது. அதிலும், பெரும்பாலான விவரங்கள் போர்ச்சுகீசியர் போன்றவர் தங்களது “ஊர் சுற்றி” பார்த்தது-கேட்டது போன்றவற்றை எழுதி வைத்துள்ளவற்றை வைத்துதான் “சரித்திரம்” என்று எழுதி வைத்துள்ளனர். மற்றபடி, புராணங்கள், “கேரளோ உத்பத்தி” [17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்] போன்ற நூல்கள் மூலமாகத்தான், இடைக்காலத்திற்கு முன்பான “சரித்திரத்தை” அறிய வேண்டியுள்ளது. கேரள கிருத்துவ மற்றும் முகமதியர்களின் ஆதிக்கத்தினால், உள்ள ஆதாரங்கள் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, புதியதாக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வைத்து, கட்டுக்கதைகளை உருவாக்கில் போலி சரித்திரத்தை எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கேரள கிருத்துவ மற்றும் முகமதிய செல்வந்தர்கள், அயநாட்டு சக்திகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வருகிறது. சமீபத்தைய “பட்டினம்” அகழ்வாய்வுகள் அத்தகைய மோசடிகள் பல வெளிக்காட்டியுள்ளன. இருப்பினும் கேரள சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள் முதலியோர் இம்மோசடிகளைப் பற்றி, அதிகமாக பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.

Marthoma cyrch, thiruvalla- copper plates-2

இப்பொ ழுது, இவ்விகாரத்தில் கூட,

  1. 9-10ம் நூற்றாண்டுகளில் இச்சேப்பேடுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  2. “இந்து அரசர்” பெயர் குறிப்பிடப்படவில்லை.
  3. ஆனால் அந்த அரசர் சேரமான் பெருமாள் என்று முதலில் அடையாளம் காணப்பட்டது. பிறகு, அத்தகைய அரசனே இருந்ததில்லை என்றும் கேரள சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டினர்[4].
  4. பிறகு, அந்த அரசர், பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்.
  5. ஜோசப் ரப்பன் கதையும் அத்தகைய நம்பிக்கைக் கதையே, அதாவது, சரித்திர ஆதாரம் இல்லை.How Ceraman myth is promoted in Kerala by the vested groups
  6. யூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது என்றுதான், இப்பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  7. ஆகவே, ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுதான், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி, பின்னர், காலத்தை பின்னோக்கித் தள்ள, உள்ளூர் ஆதாரங்கள், கட்டுக்கதைகள் முதலியவற்றுடன் இணைத்து மோசடி செய்து வருகின்றனர்.
  8. சேரமான் பெருமாள் விசயத்தில், முகமதியர்களின் மோசடிகள் அவ்வாறுதான் வெளிப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.
  9. சேரமான் கட்டுக்கதைகளுக்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. மேலும் அக்கதைகளை, இன்றைய ஆசார முகமதியம், வஹாபி அடிப்படைவாத இஸ்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கேவலமாம கட்டுக்கதைகளில், இஸ்லாம் “நான்காவது வேதம்” என்று குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது!
  10. ஆக, கேரளாவில், இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லோருமே சேரமான் பெருமாள், ஒரு இந்து ராஜா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மோசடிகளை செய்து வருவதை கவனிக்கலாம்.

How Ceraman myth is promoted

சேரமான் பெருமாள் கட்டுக்கதைகள்: கேரளக் கட்டுக்கதைகளில், அடிக்கடி தோன்றும் ஒரு புனையப்பட்ட பாத்திரம் சேரமான் பெருமாள் தான். கேரளோத்பத்தியில் 25 சேரமான் பெருமாள்கள் மற்ற கதைகளில் 12 சேரமான் பெருமாள்கள் என்று விவரிக்கப் பட்டுள்ளதால், அப்பாத்திரம், ஒரு சுத்தமான கற்பனை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆளும் தெரியாது, அவனது காலமும் தெரியாது, என்ற நிலையில் சரித்திர ரீதியில் யாரும் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த போலி-கற்பனை பாத்திரத்தை வைத்து, கிருத்துவர்-முஸ்லிம்கள் மாற்றி-மாற்றி கதைகளை தயாரித்து வருகின்றனர். முஸ்லிம்களின் கட்டுக்கதைகளின் படி, சேரமான் பெருமாள், கொடுங்கலூரின் ராஜா. அவன் கனவில், சந்திரன் இரண்டாகப் பிரிவது போலவும், அதில் ஒரு பாதி பூமியின் மீது விழுவது போலவும் ஒரு காட்சி கண்டானாம். இது மொஹம்மது கண்ட காட்சி என்பது முகமதியருக்கு நன்றாகவே தெரியும்[5]. அப்பொழுது, அரேபிய தீர்த்த யாத்திரிகர்கள், கொடுங்கலூர் வழியாக, ஆதாம் மலையுச்சிற்கு சென்று கொண்டிருந்தனராம். ராஜாவின் விசித்திரக் கனவை அறிந்த அவர்கள், அது அவனை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீக அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனராம். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் மெக்காவுக்குச் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக் கொண்டானாம்[6]. மொஹம்மதுவை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானாம். ஹத்ரமாவ்த் [Hadramawt] என்ற இடத்திற்கு சென்று, சுன்னத் செய்து கொண்டு, துலுக்கன் ஆகி, அங்கேயே தங்கிவிட்டானாம். மாலிக் பின் தீனார் [Malik ibn Dinar] என்பவனின் சகோதரியை மணந்து கொண்டானாம். அங்கு மதத்தைப் பரப்பி, கேரளாவுக்குத் திரும்ப விழைந்தானாம்[7]. அப்பொழுது, இறந்து விட்டதால், அவன் சிஹிர் [Shihr] என்ற ஹத்ரமாவ்த்தில் இருந்த துறைமுகம் அருகில் அல்லது அதற்கு பக்கத்தில் இருந்த ஜஃபர் [Zafar] என்ற இடத்தில் புதைக்கப் பட்டான் என்றும் கதைகள் சொல்கின்றன. அவன் இறப்பதற்கு முன்னர் தலைமையில் மிஷனரிகளை மலபாருக்கு, இஸ்லாமாகிய நான்காவது வேதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தானாம்[8].

© வேதபிரகாஷ்

09-07-2017

A chola painting 11th cent. depicting the ascension of Cheraman Perumal and Sundarar to kailisa

[1] Firstpost, PM’s flair gift diplomacy shows he’s a thoughtful guest, July.5, 2017. 17.00 IST.

[2] http://www.firstpost.com/india/narendra-modi-in-israel-pms-flair-gift-diplomacy-shows-hes-a-thoughtful-host-a-gracious-gu

[3] http://www.narendramodi.in/pm-modi-presents-king-salman-bin-abdulaziz-al-saud-a-gold-plated-replica-of-the-cheraman-juma-masjid-in-kerala-439914

[4] According to Sreedhara Menon, “The Cheraman legend is not corroborated by any contemporary record or evidence. None of the early or medieval travelers who visited Kerala has referred to it in their records. Thus Sulaiman, Al Biruni, Benjamin of Tuleda, Al Kazwini, Marco Polo, Friar Odoric, Friar Jordanus, Ibn Babuta, Abdur Razzak, Nicolo-Conti – none of these travelers speaks of the story of the Cheraman’s alleged conversion to Islam”.

[5] இத்தகைய கட்டுக்கதைகளை இன்றும் நம்புவார்களா- இன்றைய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

[6] கப்பற்துறையில் இந்தியா சிறந்து விளங்கியபோது, ஒரு கேரள மன்னன், அரேபியரிடத்தில், இவ்வாறு கேட்பதாக குறிப்பிடுவதே கேவலமானது, அபத்தமானது.

[7]  இதுவரை, சித்தர் ராமதேவர் / யாக்கோபு கட்டுக்கதை போலவே உள்ளது. ராமதேவர், சதுரகிரிக்கு [இந்தியாவுக்கு] திரும்ப வந்து விடுகிறார்.

[8]  R. E. Miller, Mappila Muslims of Kerala, Orient Longman, 1976, Madras,op. cit., pp. 46-9.



__________________


Guru

Status: Offline
Posts: 17287
Date:
Permalink  
 

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (3)

ஜூலை 10, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (3)

Modi present to Isreal PM - copper plates 06-07-2017

மோடிபோப்பை சந்தித்தால்“தாமஸின் எலும்புத் துண்டு” மாதிரிகொடுப்பாரா?:  மோடியின் பரிசு-நட்புறவு பற்றிய விவகாரத்தில் சேரமான் பெருமாள், தாமஸ் போன்ற கட்டுக்கதைகள் பின்னணியில் இருப்பதுதான், சரித்திரம் தெரிந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பரிசு என்றால், சால்வை, குர்தா, போன்றவற்றைக் கொடுத்தது மாதிரி கொடுத்திருக்கலாம், ஆனால், இத்தகைய போலிகளை கொடுப்பதுதான் திகைப்பாக இருக்கிறது. நாளைக்கு, ஒருவேளை, போப்பை சந்தித்தால், “தாமஸின் எலும்புத் துண்டு” மாதிரி கொடுத்து, “தூது-நட்பு” பேசி, இரு நாட்டுறவுகளைப் போற்றுவாரா? ஆக, சரித்திரத்திற்குப் புறம்பான இவ்விசயங்கள் எப்படி நடக்கின்றன என்பது புதிராக உள்ளன. மோடியின் டுவிட்டர், அரசாங்கப்  பூர்வமான இணைதள பதிவுகள், புகைப்படங்கள் வெளியிடுவன எல்லாமே மறுக்க முடியாதவை. நாளைக்கு, கிருத்துவர்கள், முஸ்லிம்கள் தங்களது கட்டுக்கதை பரப்புப் புத்தகங்களில், பிரச்சாரங்களில் இவற்றை நிச்சயமாக சேர்த்துக் கொள்வர். மோடியே ஒப்புக் கொண்டு விட்டார் என்றும் எழுதப் போகிறார்கள். அதனால், தான், மிக கவலையுடன், இந்த பதிவுகள் என்னால் செய்யப்படுகின்றன. இனி, அந்த சேரமான் கட்டுக்கதை எப்படி உருவானது என்பதனை தொடர்ந்து பார்ப்போம்.

Later-dated mohammedan Mss claim such legends

900 CE முதல் 1800 CE வரை ஒரே கட்டுக்கதையை மாற்றிமாற்றிஎழுதப்பட்டதாம்: டுயார்தே பார்போசா [Duarte Barbosa] என்ற போர்ச்சுகீசியர், முதன் முதலில் 1510 CEல் இக்கட்டுக்கதையைக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. “எனக்கு 600 வருடங்களுக்கு முன்னால் சேரமான் பெருமாள் வாழ்ந்தான்…….” என்றாதால், அவனது காலம் c.900 CEஎன்று புனைய ஆரம்பித்தனர். இதே போன்ற இன்னொரு கட்டுக்கதையை ஷேக் ஜைமுத்தீன் [Sheikh Zeinuddin] என்பவர் 1700-1800 CE வாக்கில் எழுதி வைத்ததாக சொல்லப்படுகிறது. 1610 CEல் ஜோயாஸ் டி பரோஸ் [Joas deBarros] என்ற இன்னொரு போர்ச்சுகீசியர், இன்னொருவிதமாக, இக்கதையை அறிந்து எழுத் வைத்தாராம். இப்படி, கட்டுக்கதையே மாற்றி-மாற்றி எழுதப் பட்டதால் தான்,

  1. நிலவை கனவில் பார்த்தான், நேரில் பார்த்தான், உப்பரியிலிருந்து பார்த்தான்.
  2. கனவில் கண்டான்.
  3. நிலவு இரண்டாக உடைந்தது, பிளந்தது.
  4. ஒரு பகுதி, பூமியில் விழுந்தது, மலபாரில் விழுந்தது.
  5. அதைப் பற்றி ஜோசியர்களிடம் விசாரித்தான், அரேபியர்களிடம் விசாரித்தான்.
  6. இந்து ராஜா மொஹம்மதைக் காணச் சென்றான்.
  7. மொஹம்மதுவைப் பார்த்தான், பார்க்கவில்லை.
  8. சுன்னத் செய்து கொண்டான், செய்து கொள்ளவில்லை.
  9. இந்தியாவுக்கு திரும்ப வந்தான், வரவில்லை;
  10. நோய்வாய்ப்பட்டு இறந்தான்; கல்லறை அரேபியாவில் உள்ளது, இந்தியாவில் உள்ளது, காணப்படவில்லை.

Cheraman witnessed moon split like mohammed

சரித்திர மற்றும் கால முரண்பாடுகள்: முன்னரே குறிப்பிட்டது, 17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல் என்பதாகும். ஒருவேளை தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போல, ஐரோப்பியர்களால், உள்ளூர் பண்டிதர்களை வைத்து உருவாக்கப்பட்ட நூலாக இருக்கலாம். கேரளோத்பத்தியின் படி, அனகுன்டியைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயர், சேரமான் பெருமாளை மெக்காவுக்கு செல்லுமாறு பணித்ததாகவும், அங்கு அவர் மதம் மாறியதாக சொல்கிறது. சேரமான் பெருமாள் 355CEல் வந்து, 428ல் மெக்காவுக்குச் சென்றதாகவுள்ளது. ஆனால், மொஹம்மது 622 CEவாக்கில் தான் இருந்தார், பிறகு இஸ்லாம் தோன்றியது. கிருஷ்ணதேவராயர் 1509 CEல் தான் அனலுன்டியின் அரசராகிறார். ஆகவே, உள்ளூர்வாசி, இவ்வளவு தப்பும்-தவறாக எழுதியிருக்க மாட்டான். கிருஷ்ணதேவராயர், அரேபியர்களிடமிருந்து குதிரைகள் வாங்கினார் மற்றும் தனது ராணுவத்தில் முகமதிய தளபது, வீரர்களை வைத்திருந்தார் என்பதினார், அவரது பெயரைச் சேர்த்து எழுதியிருக்கலாம். மேலும் கேரளாவில் முதலில் இருந்தது, இந்து மதமா, ஜைனமா, பௌத்தமா என்ற குழப்பங்களும் ஐரோப்பிய-கிருத்துவ எழுத்தாளர்களிடம் இருந்தன. பச்சனன், அரேபியாவில் ஜைனம் இருந்தது என்றார்.

Ore Nadu - wrapper June 2017- spreading myth- tomb in Arabia

முகமதியர் சேரமான் கட்டுக்கதையினை முன்னால் தள்ளமுயற்சித்தது: பிரான்சிஸ் டே என்பவரும், பெருமாள் கொச்சினின் ஆளுனராக 36 வருடங்கள் இருந்ததாகவும், ஓய்வு பெற்றப் பிறகு, அங்கிருந்த மஹாஜெயின்கள், அவரை 378ல் மெக்காவுக்குச் செல்லுமாறு பணித்தனர். மெக்காவில் ஜைனமதம் நன்றாக நிறுவப்பட்டிருந்ததாகவும், அங்கிருப்பவர்கள் இந்தியாவிடன் நன்றாக வியாபாரம் செய்து கொண்டிருந்ததாகவும் தெரிந்தது. பிறகு தான், அது முகம்தியர் வசமானது[1]. ஆனால் லோகன் 825ல் பெருமாள் மெக்காவுக்குச் சென்று முகமதியர் ஆனார் என்று எடுத்துக் காட்ட முயன்றார். உண்மையில் பெருமாள் மற்றும் ஜமோரின் கதைகளை எழுதும் போது, முகமதியர்களின் மனங்களில் குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில், பிற்காலத்தில் ஜமோரின் மன்னர்களில் ஒருவன், குரானை ஏற்றுக் கொண்டு, c.825 CE வாக்கில், மெக்காவுக்குச் சென்றதாக, ஒரு கதை இருந்தததை வைத்து குழப்பினர் அல்லது குழப்பப் பார்க்கின்றனர். ஏனெனில் உள்ள ஒரு மசூதி சமாதியில் உள்ள 9ம் நூற்றாண்டு தேதி இத்துடன் ஒத்துப் போகிறது. இதனால், அப்துர் ரஹ்மான் சமீரின் கதையினை ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனெனில், அதில் தகவல்கள், தேதிகள் மற்றும் பெயர்கள் எல்லாமே முன்னுக்கு முரணாக உள்ளன[2]..

பற்பல தேதிகளை, சேரமான் பெருமாளுக்குக் கொடுத்தனர்:

ஐரோப்பியகிருத்துவஎழுத்தாளர்கள்கொடுத்த தேதிகுறிப்பு[3]
மோயின்ஸ்426 CEMoens gives A. D. 426;
கிளாடியஸ் பச்சனன்490 CEDr .C. Buchman 490;
பிஷப் மிடில்டன்508 CEBishop Middleton 508;
லாஸன்750 CEMr, Lawson 750;
பாதிரி டி. ஒயிட்ஹவுஸ்825 CEthe Rev. T. Whitehouse 825;
பவோலி10ம் நூற்றாண்டு CEPaoli, the tenth century ;
யூதர்கள்379 CEand the Jews themselves, A. D. 379,
பாதிரி டி. ஒயிட்ஹவுஸ்416 CEmaking a trifling difference of 416 years, between the date given by them and that by Mr. Whitehouse

இந்த கால முரண்பாடும், கட்டுக்கதையின் போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது[4]. சுந்தரரர் மற்றும் சேரமான் பெருமாள், தண்டிவர்மனின் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் [795-845 CE]. ஆகவே, அக்காலத்தில் சென்றது என்பது பொய்யாகிறது.

Early spread of Islam 632-750 CE

10ம் நூற்றாண்டிற்கு பின்னர் தான்இஸ்லாம் மற்றும் முகமதியன்இந்தியாவில் அறியப்பட்டிருக்க வாய்ப்புள்ளது: முகமதிய மதத்தைத் தோற்றுவித்த, மொஹம்மதுவின் காலம் 6-7 நூற்றாண்டுகள் [c. 570 CE – 8 June 632 CE) ஆகும். ஆகவே, மதம் என்ற ஒன்று முழுமையாக உருவாகி, மெக்கா-மெதினா ஸ்தலங்களை புனித இடங்களாகக் கொண்டு, குரான் தொகுக்கப்பட்டு, புழக்கத்தில் வந்து, அம்மதம் பரவி, இந்தியாவிற்குள் நுழைய நிச்சயமாக 300 ஆண்டுகள் ஆகியிருக்கும். 610-632 வரை குரான் வெளிப்படுத்தப் பட்டுக் கொண்டிருந்து, மூன்றாம் காலிப் காலத்தில் [644-656] தொகுக்கப் பட்டதாலும், ஹதீஸ் போன்றவை 9-10 நூற்றாண்டுகள் வரை தொகுக்கப்பட்டு வந்ததாலும்,  எல்லாம் நிறைந்த இஸ்லாம் என்ற நிலை உருவாக 300 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆகவே, அதுவரை, இந்தியாவில், அரேபியா, துருக்கி முதலிய இடங்களிலிருந்து வணிகம் நிமித்தம் வந்திருக்கலாம், ஆனால், அவர்கள் முகமதியர் கிடையாது. ஆரம்பத்தில் “காலிபைட்” பதவிக்கு சண்டை ஏற்பட்டு, சுன்னி-ஷியா பிரிவுகள், போர்கள் முதலியவை ஏற்பட்டு, பிறகுதான், ஒரு நிறுவனப்படுத்தப் பட்ட மதம் நிலையை அடைந்தது. ஆகவே, இவையெல்லாம் ஆதாரமில்லாத கட்டுக்கதைகள் தாம்.

 

© வேதபிரகாஷ்

09-07-2017

Early spread of Islam 632-750 CE-1500 by trade

[1] Some believe that the last Perumal was permitted to be Governor for thirty-six years, at the end of which he retired, and was induced by the Majains, commonly known as Jains, A.D. 378, to proceed to Mecca, at which plce many of that faith were established, carrying on a trade with India, which in subsquent centuries fell into Moorish hands.

 Francis Day, The Land of the Permauls or Cochin, its past and its present, The Adelph Press, Vepery, Madras, 1863, p.44.

[2] Mr. Logan tries to prove that the Perumal became a convert to Mahommedanism and went on a pilgrimage to Mecca in about 825 A. D. The story of Cheraman Perumal having become a Mohammedan to indicate a confusion in the minds of the writers between Cheranam  Perumal and one of the Zamorins who did accept the Koran and leave his country for Arabia in the first quarter of the 9th century, which well tallies with the beginning of the Malabar era. As the inscription on the tomb-stone of supposod apostate, on which the Perumal’s conversion and pilgrimage to Mecca is based, is Abdar Rahman Samiri, it cannot be connected with Cherman  Perumal except by a strange perversion of facts, dates and names.

Report by M. Sankara Menon, Census of India, 1901, Vol.XX, Cochin, Part-I, Cochin Government Press, Ernakulam, 1903, pp.xv-xvi.

[3] Dr. Francis Day has summed up in tho following paragraph the results of the investigation till 1863, as regards the date of thePeruraars abdication. “The shade of Cheraman Perumal is invoked eveu hundreds of years after he had paid the debt of nature, A. D. 378. For this event various authors have indulged in dates of their own, without advancing any argument whatever, tending to prove them correct; for instance, Moens gives A. D. 426; Dr .C. Buchman 490; Bishop Middleton 508; Mr, Lawson 750; the Rev. T. Whitehouse 825; Paoli, the tenth century ; and the Jews themselves, A. D. 379, making a trifling difference of 416 years, between the date given by them and that by Mr. Whitehouse.”

Report by M. Sankara Menon, Census of India, 1901, Vol.XX, Cochin, Part-I, Cochin Government Press, Ernakulam, 1903, p.xv.

[4] Though in prose, it claims to be an abridgement of the bigger Keralanaiakcm written by Thunjaththu Ezhuththachchan As it refers to the Ariyittmazhha of a Zamorm in 1627, it could not have made its appearance earlier Part I is pure myth and legends The chronology of Part II is not satisfactory, and it is inconsistent with what we know of Kerala from other more reliable sources Thus, Cheraman Perumal is said to have been sent by Krishnadeva Raya of Anagundi, and after going to Mecca and converted by uhammad, he is described as dying of fever on his way back According to the Keralolpaththi he arrived in Kerala in 355 and went to Mecca in 428 But Muhammad founded Islam in 622 and and Krishnadeva Raya became king of Anagundi m 1509 Apart from this anachronism there ts also a glaring inconsistentcy.

V. Krishna Ayyar, A Shory History of Kerala, Pai & Co., Ernakulam, 1966, pp.188-189.



__________________


Guru

Status: Offline
Posts: 17287
Date:
Permalink  
 

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)

ஜூலை 10, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)

Adrian Moens, a Governor of Cochin, in 1770

1770ல் இல்லாத செப்பேடுகள் 1881ல் எப்படி வந்தன?: மோடி நெதன்யாகுவிற்கு யூத தாமிர பட்டயங்களின் நகல் / மாதிரி கொடுத்ததால் தான்[1], இப்பிரச்சினைகள் வெளி வந்து, விவாதிக்கப் படுகின்றன[2]. அட்ரியன் மொயீன்ஸ் என்ற கொச்சின் கவர்னர் மற்றும் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் டைரக்டர் 1770ல் மலபார் யூதர்களைப் பற்றி எழுதும் போது, அத்தகைய செப்பேடுகள் இருந்ததாக சொல்லப்பட்டதால், அதை பார்க்க ஆசைக்கொண்டதாகவும், ஆனால், பிறகு, அவை கிடைக்க முடியாத அளவுக்கு காணாமல் போய் விட்டதாக அல்லது அத்தகைய செப்பேடுகளே இல்லை என்று தெரியவந்ததாகக் குறிப்பிட்டார் என்றும், பச்சனன் 1811ல் குறிப்பிட்டார்[3]. கவர்னருக்கே காட்டப்படவில்லை எனும்போது, அவை இல்லை என்பது தான் உண்மையாகிறது. ஆகவே, பச்சனன் ஆராய்ச்சியின் படி, 1770ம் ஆண்டு, கொச்சின் கவர்னரால் இல்லை என்று நிரூபிக்கப் பட்டது. பச்சனன் பார்த்தவை போலி என்று அவரே ஒப்புக் கொண்டார். எனவே, இந்த தாமிர பட்டயங்கள் மற்றும் செப்பேடுகளைப் பற்றி மறுபடி-மறுபடி பேசுவது, எழுதுவது, விவாதிப்பதும் போலித்தனமாகும், சரித்திர மோசடி ஆகும்.

Vedaprakash reply dated 02-08-2008 to nasrani.net

கிருத்துவப் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது(நஸ்ரனி.நெட் உரையாடல்): பலமுறை குறிப்பிட்டது போல, செக்யூலரிஸ பாரதத்தில், அவரவர் மதநம்பிக்கை, அவரவருக்கு உயர்ந்தது தான், ஆனால், அதற்காக அடுத்த நம்பிக்கையாளரை கேலிபேச, அவதூறு பேச, மோசடிகள் செய்து ஏமாற்ற எந்த உரிமையும் கிடையாது. ஆனால், நஸ்ரனி.நெட் என்ற இணைதளத்தில், சிரியன் கிருத்துவர்கள் தங்களது தொன்மையினை நிலைநாட்டிக் கொள்ள இன்றும் பிரச்சாரம், மோசடி முதலியவற்றில் ஈடுபட்டுள்ளனர். அதில் தாக்கப்படுவது, இந்து மதம் தான். அங்குதான் பிரச்சினை வருகிறது. எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும், ஏற்றுக் கொள்ளாமல், உண்மையினை எடுத்துக் காட்டுபவர்கள் அக்கூட்டம் வசைபாடி வருகிறது. இருப்பினும், அக்கூட்டத்தில் இருக்கும் சிலர் உண்மையினை கிரகிக்க வேண்டியுள்ளது. என்னுடைய பதிலை இங்கே காணலாம்[4]. இங்கு நானும், தேவபிரியா என்பவரும் பல உண்மைகள், ஆதாரங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டினாலும், அவர்களது குறிக்கோள் பொய்களை பரப்ப வேண்டும் என்ற ரீதியில் தீர்மானமாக உள்ளார்கள். நான் ஆர்ச்பிஷப் அருளப்பா வழக்கு, செப்பேடு-ஆவணங்கள் தயாரிப்பு முதலிய மோசடிகளை ரஎடுத்துக் காட்டினாலும், அவர்கள் வெட்கப்படுவதாக இல்லை. பாரம்பரியம் உள்ளது, அதனை மறுக்க முடியாது என்று அவர்கள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

S N Sadasivan - copper age was not there in Kerala till 8th cent CE

செப்பேடுகளுக்கும் யூதர்களுக்கும் சம்பந்தமே இல்லை: எஸ்.என். சதாசிவம் என்பவர் இந்த செப்பேடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, தாமிரத்தின் தரம் மற்றும் உற்பத்தித் திறமைகள் முதலியவற்றைப் பார்க்கும்பொழுது, அவற்றை, யூதர்களுடன் தொடர்பு படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. ஏனெனில், கேரளாவில் “தாமிர காலம்” இருக்கவில்லை மற்றும் தாமிரத்தை எட்டாம் நூற்றாண்டு வரை அரசு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. மேலும், அவற்றில் காணப்படும் விவரங்களின் படி பார்த்தால், இறையன் சாத்தன், மூகன் சாத்தன் போன்ற பெயர்களைக் கவனித்தால், அப்பொழுது பௌத்தம் இருந்துள்ளது என்று தெரிகிறது. ஆகையால், முதன் முதலாக கிராங்கனூரில், யூதர்கள் வந்து தங்கிய காலம் 13ம் நூற்றாண்டில் இருந்திருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில், அப்பொழுது தான், அது அனைத்துலக ரீதியில் துறைமுகமாகியது. அதிலும், யூத குறிப்புகளை வைத்துப் பார்த்தால், அப்பொழுது, அங்கு கிருத்துவர்கள் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை. [5].

Copper plates nnthing to do wth the Hews or Christians- S N SAdasivan

யூதர்கள் 16ம் நூற்றாண்டில் வந்திருக்கக் கூடும்: எஸ்.என். சதாசிவம் என்பவர் இந்த செப்பேடுகளைப் பற்றி தொடர்ந்து குறிப்பிடும்போது, 1514ல் ஸ்பெயெனிலிருந்து யூதர்கள் வெயேற்றப்பட்டபோது, யூதர்கள் வந்திருக்கக் கூடும். இரண்டாவது செப்பேட்டில் காணப்படும் “அஞ்சுவண்ணம்”, “மணிகிராமம்” முதலிய வார்த்தைகளும், தனித்தனியாக செயல்பட்டு வந்த வணிகக்குழுமங்கள் ஆகும் என்று ஹெர்மான் கன்டெர்ட் [Herman Gundert] கூறுகிறார். ரெட்கார் தர்ஸ்டென் [Edgar Thruston], இந்த செப்பேடுகளுக்கும் வணிகக்குழுமங்களுக்கும் சம்பந்தமே இல்லை, கிருத்துவர்களுக்கோ சுத்தமாக சம்பந்த இல்லை என்றார். “இரவிகொற்றன் / இரவிகூர்தன்” என்பதும் என்பவனும் நிச்சயமாக கிருத்துவன் இல்லை. ஏ.சி.பெர்னல் [A. C. Burnell] இவற்றை ஆராய்ந்து கூறும்போது, இவற்றில் சிரியன்கள் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை, தேவையில்லாத மதம் மாற்றும் முயற்சிகள் இவற்றின் மூலம் மேற்கொள்ளப் படுவதால், இந்தியர்களிடையே வெறுப்பை வளர்த்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், என்று, எச்சரித்தார். தழக்காடு செப்பேடு விசயமும், இதேபோலத்தான் உள்ளது.  ஏனெனில், சாத்தன் வடுகன் மற்றும் இரவி சாத்தன், பௌத்த மதத்தினைக் குறிப்பதாகும்[6].

Cladius Buchanan and copper plates

தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள் ஊக்குவிப்பது வளர்ப்பது ஏன்?: சதாசிவன் போன்றோர் வாதங்களில் ஜாதியவாதம், முதலிய கொள்கைகளும் இருப்பதை காணலாம். அதாவது, பௌத்தத்தில் ஜாதிப்பிரிவுகள் இல்லை என்று அவர் வாதிப்பதைக் கவனிக்கலாம். ஆனால், யூதர்கள் என்று வரும் போது, “கருப்பு யூதர்கள்” [Black Jews] மற்றும் “வெள்ளை யூதர்கள்” [White Jews] என்று குறிப்பிட்டு வாதிப்பதை கவனிக்க வேண்டும். அதாவது, அவர்களைப் பொறுத்த வரையில் நிறவேறுபாடு அடிப்படையில் உள்ள பிரிவினையையை கவனிக்க வேண்டும். கிருத்துவர்களும் எழவர், கீழ்ஜாதி போன்ற வாதங்களை வைப்பதை காணலாம். முகமதியர்களைப் பொறுத்த வரையில், “மாப்ளாஸ்” அல்லது “மாப்பிள்ளை” முகமதியர் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களிடமும் ஜாதிவேறுபாடு இருக்கிறது. அதை மறைக்க, எல்லோரும், இந்துமதத்தில் இருக்கும் வர்ணமுறைதான், தங்களை பாதிப்பதாக குறைகூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கிருத்துவ-முகமதிய நிறவேறுபாடு, இறையியல் பகுப்பு முதலியவற்றின் அடிப்படையில் உள்ள பிரிவுகள், இந்திய ஜாதியத்தை விட இறுக்கமானது, மாற்றமுடியாதது. அந்நிலையில், மதமாற்றத்திற்கு, இக்கட்டுக்கதைகள் உதவுகின்றன என்றும் மேன்மேலும், மோசடிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

the-constitution-scheduled-castes-order-1950

தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள், மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு முதலியவற்றை மெத்தப் படித்த கேரளத்தவர் எதிர்க்காதது ஏன்?: தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஆர்ச் பிஷப் அருளப்பா – கணேஷ் ஐயர் வழக்கு, கிருத்துவர்களின் மோசடிகளை முழுவதுமாக வெளிப்படுத்தின.  சூசை வழக்கு, எப்படி தலித் போர்வையில் இந்து எஸ்சிக்களை ஏமாற்ற நினைத்தது தடுக்கப்பட்டது என்பதை அறியலாம். ஆனால், கேரளத்தில் நடந்து வரும் தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள மோசடிகளை வெளிப்படுத்தப் பட்டுள்ளதா என்று தெரியவில்லை. எம்.ஜி.எஸ். நாராயணன் போன்றோர், சில விசயங்களைத் தான் வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில், அவரும் சமீபகாலம் வரை ஒரு மார்க்சிஸ்ட் சரித்திராசிரியராக இருந்து கொஞ்சம் மாறியுள்ளார். “பட்டனம்” மோசடியில் கூட, பி.ஜே.கொரியன் போன்றோரின் அள்வுக்கு அதிகமான செயல்பாடுகளினால் மாட்டிக் கொண்டனர். ஏனெனில், அரசியல் மற்றும் பணபலங்களினால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தான் இன்றும் இருந்து வருகின்றனர். கேரளாவில் படிப்பறிவு அதிகம் என்று சொல்லிக் கொண்டாலும், இத்தகைய மோசடிகளில் வெட்கம் இல்லாமல் ஈடுபடுவது, பரஸ்பர முறையில், ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்வது என்று தான் நடந்து வருகிறது. ஆக, இப்பொழுது மோடி இத்தகைய பரிசுகளை அளித்துள்ளது மூலம், அவர்களது மோசடி ஆராய்ச்சிகளுக்கு ஊக்குவிப்பு அதிகமாகும் என்று தெரிகிறது. முன்னர், ராஜேந்திர பிரசாதே ஒப்புக் கொண்டார் என்று எழுதியது போல, மோடியே ஒப்புக் கொண்டார் என்று இனிமேல் எழுத ஆரம்பித்து விடுவர். இதை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பார்களா அல்லது மோடியே செய்து விட்டார் என்பதால் ஆதரிப்பார்களா என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

10-07-2017

kerala-historians-at-loggerheads-the-hindu-3

[1] The Hindu, Narendra Modi gifts replicas of relics from Kerala to Netanyahu, JERUSALEM,JULY 05, 2017 10:00 IST; UPDATED: JULY 07, 2017 20:33 IST.

[2] http://www.thehindu.com/news/national/narendra-modi-gifts-two-sets-of-relics-from-kerala-to-netanyahu/article19214296.ece

[3] Adrian Moens, a Governor of Cochin, in 1770, who published some account of the Jews of Malabar, informs us that he used every means in his power, for many years, to obtain a sight of the famed Christian Plates; and was at length satisfied that they were irrecoverably lost, or rather, he adds, that they never existed. மேலே பார்க்கவும்.

[4] http://www.nasrani.net/2007/02/16/the-plates-and-the-privileges/

[5] It cannot be corrpoborated that the grant of the copper plate was in 379 AD either by the quality of its copper or by its manufacturing standards. Kerala never had  an age of copper nor the metal was taken for any official use till the eigth century.

N. Sadasivan, A Social History of India, A.P.H. punlishing Corporation, New Delhi, 2000, p.712.

[6] S. N. Sadasivan, A Social History of India, A.P.H. punlishing Corporation, New Delhi, 2000, p.422.



__________________


Guru

Status: Offline
Posts: 17287
Date:
Permalink  
 

 ஆசிரியர்க்கு,

19 ஜூலை இதழின் தலையங்கம் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தின் அனூகூலம் பற்றியது, அதில் நீங்கள் "யூதர்களை மார்பில் அணைத்த பாரதம்" என ஒரு பகுதியும் எழுதியுள்ளீர்கள். அதில் பல தவறான விவரங்கள் உள்ளதால் இக்கடிதம். 

திரு.மோடி அயல் நாட்டுப் பயணங்களில் தலைவர்களுக்கு தரும் பரிசுகளை வித்தியாசமாக மாற்றி உள்ளார். அதில் மேலுள்ள இஸ்ரேல் பயணத்தில் யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர் தகடு பிரதிகள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இவை 9-ஆம் மற்றும் 10-ஆம்   நூற்றாண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது" என பிரதமரி டுவிட்டரில் சொல்லப்பட்டுள்ளது.

2016ல் சவுதி அரேபிய அரசருக்கு, கொடுங்கல்லூரில் உள்ள சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்.

கிறிஸ்துவர்கள் இந்தியாவில் 2000 ஆண்டுகளாய் உள்ளோம் என ஒரு கட்டுக் கதையின் அங்கமே கொடுங்கல்லூர்  சேரமான் மசூதியும், யூத செப்பேடுகளும்.

யூதர்கள் இந்தியாவில் ஓரளவு கூட்டமாக் வந்து வாழ்ந்தனர் எனில் அது 16ம் நூற்றாண்டு - அதற்குப் பின் தான் என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஆதரங்களோடு சொல்வது. ஆனால் 19ம் நூற்றாண்டில் செட்.தாமஸ் வருகை பற்றி பழங்காலப் பாடல் என ரம்பன் பாட்டு என ஒன்று வரையப் பட்டதில் தாமஸ் கொடுங்கல்லூரில் வந்து இறங்கி கேரளத்தில் 7 சர்ச் அமைத்து கடைசியில் மைலாப்பூரில் இறந்தார் என கதை. 

தாமஸ் கதை பெருமளவில் பரப்ப அகழ்வாயுவு செய்தால் ஆதாரம் கிடைக்கும் என சர்ச்சுகள் விருமப 1946ல் முதலில் செய்த போதும் பின் 1968ல் அப்பகுதி முழுதுமாய் தொல்லியல் துறை-ASI ஆய்வுகள் செய்தது.

கேரளாவின் கொடுங்கல்லுரில் முதலில் 1946ல்  இந்தியத் தொல்பொருள் துறையின் மார்ட்டிமர் வீலரின் சீடர்  திரு. அனுஜான் அச்சன் ஆய்வு செய்தார். கொடுங்கல்லுரின் தொன்மை 14ம் நூற்றாண்டிற்கு முன்பு செல்லவில்லை என்றார்.

இந்தியத்  அகழ்வாய்வுகள் துறை 1969ல் கொடுங்கல்லூர் மற்றும் அதை சுற்றி உள்ள பல பகுதியிலும்  அகழாய்வு செய்தனர். அனைத்து இடத்திலும் கிடைத்த பொருட்கள் 9ம் நூற்றாண்ட்டிற்கு பிற்பட்டவையே, அதற்கு கீழே கன்னி மண், மனிதன் குடியேற்றத்திற்கு முந்தையது என நிருபணமானது.

//Opinion seems to be Unanimously insupporting the Hypothesis that the whole or Greater part of the western section of the Kerala coast was once under waters and that the formation of the Land was due to some process of nature either gradual or Sudden.//  Page-12; History of Christianity in India, Vol. I, by Fr. A. Mathias Mundadan

Devapriyaji http://pagadhu.blogspot.in/2015/09/blog-post.html

 

 

 

கொடுங்கல்லூர் அகழ்வாய்வுகள் -இந்தியத் தொல்பொருள் துறை

கேரளாவின் கொடுங்கல்லுரில் முதலில் 1946ல்

PAGADHU.BLOGSPOT.IN

 

Devapriyaji http://pagadhu.blogspot.in/2015/09/9.html

 

 

 

கொடுங்கல்லூர் 9ம் நூற்றாண்டு வரை கடலுக்கு அடியில் இருந்தது.

கேரளாவின் கடலோரம் கொடுங்கல்லூரில்

PAGADHU.BLOGSPOT.COM

கடலுக்கு அடியில் சேர நாட்டு மக்களை தாமஸ் மதம் மாற்றினார், மசூதி கட்டினார் என்பதன் அபத்தம் தெளிவாய் உணரலாம். மசூதி கதை பொய் எனப் பார்த்தோம், இப்போது செப்பேடுகள் பற்றி கிறிஸ்துவ ஆங்கிலேயர் எழுதி வைத்தவை.

 செயின்ட்.தாமஸ் பற்றிய கதைகளின் ஆரம்பம் மூன்றாம் நூற்றாண்டின் "தோமோவின் நடவடிக்கைகள்" எனும் நூல், இதில் சொல்லப்பட்டது தாமஸ் பாலைவன நாட்டின் ராணி-இளவரசர்கள் மீது சூனியம் வைத்தார் என்பதால் மரண தண்டனை தரப்பட்டு வீரர்களால் கொல்லப் பட்டார். சில ஆண்டு பின் தாமஸ் கல்லறை தோண்டிய போது காலி, அதன் உள்ளே இருந்த உடலை கிழை நாட்டிற்கு எடுத்து சென்றுவிட்டனர் எனவும் தான் உள்ளது.

The Ninth Act: of the Wife of Charisius.
87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country, For We Live In The Desert;

 

ஒரு ஆதாரம் உருவாக்கும்போது தொலைந்தது கிடைத்தது என உருவாக்குவது - பைபிள் பழைய ஏற்பாட்டு கதைகளிலேயே உள்ளவை - இஸ்ரேலின் தொல்லியல் துறை இயக்குனரும், டெலவிவ் பல்கலை கழக தொல்லியல் துறை தலைவராயும் இருந்த இஸ்ரேல் பின்கல்ஸ்டெயின் தன் நூல் "பைபிள் அனெர்துடு"படி பொமு 8ம் நூற்றாண்டில் 400க்கும் மேற்பட்ட பல்வேறு சிறு கிராமங்களில் வாழ்ந்த கானானிய (அரேபி) கூட்டமே - இவர்கள் நாடோடிகளாய் - ஆடு மாடு மேய்ப்போராய் வாழ்ந்தவர்களே, கிரேக்க - ரோமன் ஆட்சியின் கீழ் தான் நாகரீகம் பெற்றனர். ஆனால் மோசே எழுதிய ஒரு ஏடு தீடீர் எனக் கிடைத்தது எனக் கதை

 

சட்டங்களின் புத்தகம் ஆலயத்தில் கண்டெடுக்கப்படல்

//2 இராஜாக்கள் 22: செயலாளராகிய சாப்பானிடம் தலைமை ஆசாரியர் இல்க்கியா, “கர்த்தருடைய ஆலயத்தில் சட்டங்களின் புத்தகத்தை கண்டெடுத்தேன்!என்று கூறினான். அவன் சாப்பானிடம் அதனைக் கொடுத்தான். சாப்பான் அதனை வாசித்தான்.

செயலாளராகிய சாப்பான் அரசனான யோசியாவிடம் வந்து, “உங்கள் வேலைக்காரர்கள் ஆலயத்திலுள்ள பணத்தையெல்லாம் சேகரித்துவிட்டார்கள். அதனை அவர்கள் வேலையைக் கண்காணிப்பவர்களிடம் கொடுத்துவிட்டார்கள்என்றான். 10 பிறகு சாப்பான் அரசனிடம், “ஆசாரியனான இல்க்கியா என்னிடம் இந்த புத்தகத்தைக் கொடுத்தான்என்று கூறி அரசனுக்கு அதனை வாசித்துக்காட்டினான்.

11 அச் சட்ட புத்தகத்திலுள்ள வார்த்தைகளைக் கேட்டதும் (துக்கத்தின் மிகுதியால்) அரசன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். //

பைபிள் கதைகள்படி நித்தமும் சட்டங்கள் கடவுள் எனும் நம்பிக்கையோடு படிக்க வேண்டியவை, அப்புறம் என்ன தீடீர் கிடைப்பு- சட்டை கிழியல்- இல்லாத நூல் உருவாக்கப்பட்டதே என பைபிளியல் ஆய்வாளளர் கூறுகின்றனர்.

மேலும் இந்தச் சம்பவம் ஜோசியா ராஜா காலத்தில் நிகழ்ந்தது எனச் செய்யப்பட்ட கதை எழுதும்போது பழைமியாக உள்ளது எனத் தொன்மமாக்கினர்.

நெகேமியா 8: ஆண்டின் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்கள் ஒன்றாயிருந்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டு தண்ணீர் வாசலுக்கு முன்னால் திறந்தவெளியில் அனைவரும் கூடினார்கள். அந்த ஜனங்கள் அனைவரும் எஸ்றா எனும் வேதபாரகனிடம் மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டார்கள். அதுதான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்ட சட்டப் புத்தகம். எனவே, ஆசாரியனானஎஸ்றா அங்கே கூடியுள்ள ஜனங்களின் முன், சட்டப் புத்தகத்தைக் கொண்டுவந்தான். இதுவே அம்மாதத்தின் முதல் நாளாகும். இது அந்த ஆண்டின் ஏழாவது மாதமாகும். அக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கவனித்துக்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தனர். எஸ்றா அதிகாலையிலிருந்து மதியம்வரை சட்டப் புத்தகத்திலிருந்து உரத்த குரலில் வாசித்தான். அவன் ஆண்களும் பெண்களுமாய் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தவர்களிடம் வாசித்தான். அனைத்து ஜனங்களும் கவனமாகக் கேட்டனர். சட்டப் புத்தகத்தில் கவனம் வைத்தனர்.

எஸ்றா  சட்டப்புத்தகத்தை உரத்த குரலில் ஆண்களும் பெண்களுமாய் கவனித்து புரிந்துகொள்ள வாசித்தான்.  அதாவது எஸ்ரா காலத்தில் சட்டங்கள் உருவானது என்பது தெளிவாக்கும்.  

இன்னொரு கதை

2 மக்கபேயர் 2:13 .. நெகேமியா ஒரு நூல்நிலையம் நிறுவி மன்னர்கள், இறைவாக்கினர்கள்பற்றிய நூல்களையும் தாவீது எழுதியவற்றையும் நேர்ச்சைப் படையல்கள் தொடர்பான மன்னர்களின் மடல்களையும் அதில் சேகரித்து வைத்தார். 14அதுபோன்று யூதாவும் எங்களிடையே ஏற்பட்ட போரினால் சிதறிப்போன நூல்களையெல்லாம் சேகரித்து வைத்தார். அவை இன்றும் எங்களிடம் உள்ளன. 15உங்களுக்குத் தேவைப்படுமாயின், அவற்றை எடுத்துச்செல்ல ஆளனுப்புங்கள்.16நாங்கள் கோவில் தூய்மைப்பாட்டு விழாவைக் கொண்டாட விருப்பதால் நீங்களும் அவ்விழாவைக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளவே உங்களுக்கு எழுதுகிறோம்.

 

மக்கபேயர் கதைகள் என்பது பொமு 160 வாக்கில் நடந்த சம்பவங்களை எழுதியதே.

தொல்லியல் ஆய்வுகள்படி இஸ்ரேல் - யூதேயா மிகச் சிறு கிராமங்கள் ஓர்- இரு ஊர்கள் கொண்ட நாடுகள்  கொண்ட ஆடு-மாடு மேய்க்கும் நாகரீகமற்ற கூட்டம் -அசீரியர்/எகிப்து/பாபிலோனின் கீழ் அடிமைப் பட்டு வாழ்ந்தனர். சுதந்தர இஸ்ரேல் என பழைய ஏற்பாடு காலத்தில் இருந்ததே இல்லை என தொல்லியல் அகழ்வாயுகள் நிருபித்து விட்டன. அலெக்சாண்டர் காலம் பின் கிரேக்கர்களாலும் ரோமன் ஆட்சியாலும் தான் நாகரீகம் பெற்றனர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard