New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சபரிமலை மீது, பக்தர்கள் மீது ஏன் தாக்குதல்கள்


Guru

Status: Offline
Posts: 17550
Date:
சபரிமலை மீது, பக்தர்கள் மீது ஏன் தாக்குதல்கள்
Permalink  
 


சபரிமலை மீது, பக்தர்கள் மீது ஏன் தாக்குதல்கள் நடக்கின்றன – ஐயப்ப பக்தர்களை தொந்தரவு செய்வது, மிரட்டுவது, சாகடிப்பது ஏன்?

திசெம்பர் 10, 2015

சபரிமலை மீதுபக்தர்கள் மீது ஏன் தாக்குதல்கள் நடக்கின்றன ஐயப்ப பக்தர்களை தொந்தரவு செய்வதுமிரட்டுவதுசாகடிப்பது ஏன்?

allat-can-be-identified-with-asherah-elat-in-canaan-and-possibly-with-the

எருமேலி பெண்தெய்வத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால்,முஸ்லிம்களும் அத்தகைய கதையை வளர்க்கவிரும்புகிறார்களா?: எருமேலிக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. வாவர் எருமேலியில் கொல்லப்பட்டான் என்ற கதையைத் தவிர, வெறெந்த விசயமும் இல்லை. இதுவும் கட்டுக்கதையில், சமீபத்தில் உருவாக்கப்பட்ட மாயை. மொஹம்மது நபி, “வீனஸ்” என்ற கிரகத்தை வழிபட்டு வந்தார் என்ற கதைகள் இஸ்லாத்தில் உள்ளன[1]. காபாவில் உள்ள கல் கூட, வீனஸின் வால், ஒரு பகுதி என்று கருதப்பட்டு, முன்னிருந்த வழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது[2]. இதனால், வாவரை இப்பகுதியுடன் சம்பந்தப்படுத்தி, வாவர், வாவ்-விண்டவர் = வாவு – விண்டவர் = சந்திரனைப் பிளந்தவர் என்ற பொருள் படும் எனப்படுகிறது, என்ற விகிபிடியாவின் விளக்கத்தையும்[3] சேர்த்து, புதிய புராணத்தை உருவாக்க முடியாது.  ஹுபல் [Hubal] என்ற சந்திர தேவதையை அரேபியர் வணங்கி வந்ததால், அதனை இங்கு கொண்டுவர முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு அல்லாவின் புத்திரிகளான, அல்-லத், அல்-மனத், அல்-உஜ்ஜா முதலியவை பாடுபடுத்த ஆரம்பித்து விடும். பிறகு எதற்காக, வாவர் பெயரை வைத்துக் கொண்டு எருமேலியில் தொடர்ந்து அநாசார வேலைகளை செய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் “ஷிர்க்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஆர்பாட்டம் செய்கிறார்களே, பிறகு, அங்கெப்படி, இத்தகைய வேலைகளை ஒப்புக்கொண்டு ஆதரித்து வருகிறார்கள்?

Erumeli Mary bleeding myth created 2008

எருமேலியை கிருத்துவர்கள் கொண்டாடும் திட்டங்கள்: எருமேலி அருகில் ஒரு இடத்தில், மேரி காணப்பட்டாள் என்று திடீரென்று கிருத்துவர்கள் 2008 வாக்கில் புரளியைக் கிளப்பினார்கள். பிப்ரவரி.13, 2008 அன்று எருமேலி அருகில் மஞ்சளருவி என்ற இடத்தில் மேரியைப் பார்த்ததாக             சிலர் சொல்லிக் கொண்டனர். சலோமி மற்றும் அவரது கணவர் சோஜன் கிருத்துவ தம்பதியர் வீட்டில் இருக்கும் மேரியின் படத்திலிருந்து ரத்தம் மற்றும் தேன் வழிகிறது என்று இன்னொரு புரளியையும் பரப்பி விட்டனர்[4]. பிறகு மேரி காணப்பட்ட இடத்திற்கு ரோஸா மிஸ்டிக் மவுண்ட் [Rosa Mystique Mount] என்ற பெயரையும் வைத்து பிரச்சாரம் செய்தனர். இதனை உலக அளவில் பிரபலம் செய்து ஆர்பாட்டம் செய்தனர். ஆனால், இதெல்லாம் பார்த்தது என்பது ஒரு சிலர் சொல்வது மீது ஆதாரமாக உள்ளதே தவிர, வேறெந்த ஆதாரமும் இல்லை. கிருத்துவத்தில், இத்தகைய புரளிகளை அடிக்கடி கிளப்புவார்கள் என்பதால், அது அத்துடன் அடங்கி விட்டது. இருப்பினும், ஒரு பெண் தெய்வம் அந்த இடத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதை அறிந்து தான், மாற்று மதத்தினர், இத்தகைய பிரச்சார மற்றும் ஆக்கிரமிப்பு வேலைகளை செய்து வருகின்றனர் என்று தெரிகிறது. முன்பு 1983ல் சபரிமலைக்கு அருகில் நிலாக்கல் என்ற இடத்தில், சிலுவை வைத்து, அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்றனர்.

ancient-sabrimala-photo-1942

சபரிமலை கோவில் தீவைப்பால் பாதிக்கப்பட்டது,தீக்கிறையானது: சபரிமலை வழிபாடு, யாத்திரை ஆண்டாண்டுக்கு அதிகமாகி வந்தது, 1950களிலேயே உணரப்பட்டது. ஆனால், அப்பொழுது, பக்தர்களின் கூட்டத்தினால், சமூக விரோதிகளுக்குத்தான் பிரச்சினை ஏற்பட்டது. குறிப்பாக ரப்பர் தோட்டங்களை வைத்து, தொழிற்சாலைகளை நடத்தும் தொழிலதிபர்கள்[5], வியாபாரிகளுக்கு பக்தர்களது போக்குவரத்து பெருத்த இடைஞ்சலாக பாவித்தனர். அவர்களில் பெரும்பாலோர் கிருத்துவ பணமுதலைகள், அவர்கள். காட்டில் மரங்களை வெட்டி, கஞ்சா பயிரை வளர்த்து, அட்டகாசம் செய்தும் வந்தன. 1949லிருந்தே, கிருத்துவர்கள் சபரிமலைக் கோவிலைத் தாக்க திட்டமிட்டு வந்துள்ளனர். 1950ல் கோவிலுக்கு நெருப்பு வைத்து, பக்தர்களை பயமுருத்த முயன்றனர்[6]. ஐயப்ப பக்தர்கள் அங்கு வந்து செல்வதால், அவர்களது சட்டவிரோத செயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது, வருமானமும் குறைந்தது. இதனால், அவ்வழியாக செல்லும் பகதர்களை மிரட்டவும், கோவிலைத் தாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர். 1950 முதல் 1955 வரை மூன்று முறை கோவிலுக்கு தீ வைத்தனர். பக்தர்களையும் தாக்கினர். ஆனால், அவற்றைப் பற்றிய செய்திகள் கூட இப்பொழுது மறைக்கப்படுகின்றன. கேரளாவில் மெத்தப் படித்தவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர் எனும்போது, உண்மைகளை மறைக்க அவர்களும் துணைபோவது போலிருக்கிறது. ஏதோ விபத்து நடந்தது போல குறிப்பிடுகின்றன அல்லது தீவிபத்து ஏற்பட்டது, கோவில் மறுபடியும் கட்டப்பட்டது என்று தான் உள்ளது.

Sabarimala sannidhanam before 1950-another view

சபரிமலைத் தாக்கி வரும் கிருத்துவர்கள்[7]: 1952, 1999 மற்றும் 2011 ஆண்டுகளில் நடந்த நெரிசல்கள் மற்றும் இறப்புகளுக்கும் பின்னால், இவர்களது சதி இருப்பது யூகிக்கப்பட்டது. ஆனால், அரசியல்வாதிகள் தமது அதிகாரங்களினால் அவற்றை அமுக்கின. கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டு, அவை பரிந்துரைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவை அமூல் படுத்தப்படவில்லை. கோடிக் கணக்கில் பணம் வந்தாலும், தாசம் போர்டின் கான்ட்ராக்டர்கள் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் கையாட்களாக இருப்பதனால், வசதிகளை செய்து கொடுக்கும் சாக்கில் கொள்ளையடுத்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசுகள், கிருத்துவர்களுக்கு சாதகமாக வேலை செய்து கொண்டிருப்பதால், பக்தர்களுக்கு இடையுறுகள் ஏற்பட்டு வருகின்றன. 1983ல் மஹாதேவர் என்கின்ற சிவன் கோவில் வளாகத்தில் சபரிமலைக்கு அருகில் நிலாக்கல் என்ற இடத்தில், சிலுவை வைத்து அந்த இடத்தில் சர்ச்சைக் கட்ட முயன்றனர். ஆனால், அது ஒரு பெரிய விசயமாகியதால், கிருத்துவர்கள், சர்ச் கட்டும் வேலையை விட்டுவிட்டனர்[8]. உண்மையில் தாமஸ் கட்டுக்கதை வளர்க்க வேண்டும் என்ற திட்டம் தான், இதன் பின்னணியில் உள்ளது. நிலாக்கலை அடுத்து, எருமேலியின் மீதும் அவர்களது கண்கள் உள்ளன என்று தெரிகிறது.

Sabarimala sannidhanam before 1950

எருமேலிஎறுமை வேலிமஹிஷம்மஹிஷ அரக்கிமஹிஷாசுரமர்த்தனி: எருமேலி = எருமை வேலி, அதாவது எறுமைகளால் ஆன வேலி, அதாவது எறுமைகளின் உதவியால் கட்டப்பட்ட வேலி என்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், “மஹிஷி” என்ற எறுமை வடிவத்தில் இருந்த அரக்கியைக் கொன்றதால், ஒருவேளை, அதன் எலும்புகளை வைத்து கட்டப்பட்ட வேலியாக இருக்கலாம். அதாவது அந்த மஹிஷி இறந்த இடத்தைக் குறிக்க எலும்புகளால் வலையம் போன்று வைத்து, நாளடைவில் எருமேலி என்ற பெயரைப் பெற்றிருக்கலாம். என்பது ஐயப்பன் கோவிலுக்குப் போகும் வழியில் உள்ளது. இங்கு, “பேட்டைத் துள்ளல்” என்ற நடனம் ஐயப்பன் பக்தர்களால், ஒரு சடங்கு போல மேற்கொள்ளப்படுகிறது. இது “மஹிஷி” என்ற அரக்கியைக் கொன்றதற்கான, வெற்றி நடனமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அரக்கியை வதம் செய்வதற்காகத்தான், விஷ்ணு மற்றும் சிவன், ஐயப்பனாக அவதாரம் எடுத்ததாகவும் ஐயப்பன் புராணம் கூறுகிறது. கருப்பு வேஷ்டி, உடல் முழுவதும் வண்ணங்கள் பூசிக்கொள்ளுதல், பூக்கள், இலைகள் முதலியவற்றை கிளைகளோடு சூடிக்கொள்ளுதல், வில்-அம்புகளோடு, “ஐயப்ப தின் தகத்தோம், ஸ்வாமி தின் தகத்தோம்” என்று கூவிக்கொண்டே ஆடுவது, ஏதோ மலைச்சாதியினர் ஆடுகின்ற ஆட்டத்தை நினைவுகூர வைக்கிறது. எருமேலியை கிருத்துவர்களும் விடுவதாக இல்லை. அங்கிருக்கும் மேரி சிலையிலிருந்து பால் வடிந்தது, தேன் வடிந்தது என்றேல்லாம் கதைவிட்டனர்[9]. ஆக, ஒரு பாரம்பரிய புண்ணியஸ்தலத்தை எவ்வாறு முஸ்லிம்கள், கிருத்துவர்கள் ஆக்கிரமித்துக் கொள்ள திட்டம் போட்டு வேலை செய்கின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும். கர்நாடகத்தில் “மஹிஷாசுரமர்த்தினி” கதை வேறுவிதமாக உள்ளது.

© வேதபிரகாஷ்

10-12-2015

[1] Farrington, Oliver C. “The worship and folk-lore of meteorites.” The Journal of American Folklore 13.50 (1900): 199-208.

[2] King, David A. “Faces of the Kaaba.” The Sciences 22.5 (1982): 16-20.

[3] Vavar (pronounced Vaa-var= “vav-vindavar”) meaning vavu = “moon” vindavar= “who splits”, also known asVavaraswamihttps://en.wikipedia.org/wiki/Vavar

[4] http://www.fpchurch.org.uk/wp-content/uploads/2014/07/SYNOD-REPORTS-2010.pdf

[5] ரப்பர் மற்றும் டயர்-டியூப் மற்ற பொருட்கள் உற்பத்தியில், வரியேப்பு அதிகம் நடக்கின்றது, என்பது அரசுக்கே தெரிந்த விசயமாக இருந்தது. இதனால் 1980கள் வரை, நேரிடை கண்காணிப்பில் இருந்து வந்தன. ஆனால், பிறகு, அரசியல் சம்பந்தங்களினால் விடுபட்டு, சுதந்திரமாக ஏய்க்க ஆரம்பித்தன. அவ்வாறான, வரியேப்பு பணம் தான் கருப்புப் பணத்திற்கு மூலமாகிறது. அதை வைத்துக் கொண்டுதான் மற்ற சட்டவிரோத, தேசவிரோத செயல்களும் நடக்கின்றன என்பதனை கவனிக்க வேண்டும்.

[6] The temple was burned a few times. In the last century, damage was caused to the temple due to fire in 1902 and 1950. A fire broke-out in January 1902, (ME 1079 Dhanu 30th) causing damage to the temple. Reconstruction of temple was completed by 25th March 1910 (ME 1085 Meenam 12). There was another major fire in 1950 causing damage to temple and deity. The reconstruction was completed and the new deity was made by the Thanthri, Kandararu Shankararu of Thazhaman illam on 18th May 1951 (ME, 1126 Edavam 4th).

http://www.sabarimalaaccomodation.com/?page_id=1226#

[7]http://organiser.org/archives/historic/dynamic/modules4338.html?name=Content&pa=showpage&pid=143&page=35

[8] http://indiatoday.intoday.in/story/nilakkal-in-kerala-set-for-a-hindu-christian-confrontation/1/371657.html

[9] http://www.fpchurch.org.uk/wp-content/uploads/2014/07/SYNOD-REPORTS-2010.pdf



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard