New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எருமேலியை வளைத்து, கிறுத்துவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு குறிவைக்கின்றனரா கிறுத்துவர்கள்


Guru

Status: Offline
Posts: 17281
Date:
எருமேலியை வளைத்து, கிறுத்துவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு குறிவைக்கின்றனரா கிறுத்துவர்கள்
Permalink  
 


எருமேலியை வளைத்து, கிறுத்துவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு குறிவைக்கின்றனரா, சாத்தான் ராஜ்யத்தில் அதிர்வுகள் ஏற்படுகின்றன என்று சொல்வதேன்?

திசெம்பர் 12, 2015

எருமேலியை வளைத்து, கிறுத்துவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு குறிவைக்கின்றனரா, சாத்தான் ராஜ்யத்தில் அதிர்வுகள் ஏற்படுகின்றன என்று சொல்வதேன்?

Believers Church General Assembly Inaugurated by Dr Joseph Mar Thoma, Metropolitan

ஆர்ச்-பிஷப்பாக முடிசூட்டியதற்கு பணம் கொடுக்கப்பட்டதா?: கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ, பி.சி.ஜார்ஜ், “பிலிவர்ஸ் சர்ச் வேண்டுதல்மட்டும் பணத்தினால் உண்டாகியிருக்கிறதுயோகன்னன் பாரம்பரியமுறைக்கு விரோதமாக ஆர்ச்பிஷப் ஆகியிருக்கிறார்”, என்றார்[1]. அதாவது யோகன்னான் இவர்களுக்கெல்லாம் பணம் கொடுத்தார் என்ரு கூறுகிறார். இந்த பிஷப்புகள் எல்லோருமே பிறகு நீக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது[2]. புரொடெஸ்டென்ட் பிஷப் பென்டகோஸ்டல் பிஷப்பை ஆர்ச்-பிஷபாக்க முடியாது என்றெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது[3]. ஆனால், யோகன்னனின் செயல்களை யாரும் தடுக்க முடியவில்லை மற்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். கத்தோலிக்க கிருத்துவர்கள் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று அமைதியாக இருக்கலாம். ஆனால், இவையெல்லாம் ஏன் சகித்துக் கொள்ளப்படுகின்றன, மறைமுகமாக, அமைதியாக ஆதரிக்கப் படுகின்றன என்றால், இவையெல்லாம் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகின்றன என்பதால் தான் என்ற உண்மை வெளிப்படுகிறது. யோகன்னனின் கிருத்துவ தீவிரவாதம் அவரது புத்தகங்களில் வெளிப்படுகின்றன. “ஒவ்வொரு முறையும் ஒரு இந்து கிருத்துவனாக மதம் மாற்றப்படும் போது, சாத்தானின் ராஜ்யத்தில் அதிர்வுகள் ஏற்படுகின்றன,” என்று திருவாளர் ஹோகன்னன் கூறுகிறார்[4].

Land-Deed-Policy-BC-redacted - K P yohanan

ஹோகனனின் முறையீடுஅரசு நிலங்களைக் கையகப்படுத்தியதுமுதலியன: கே.பி. யோஹனன் இந்த நிலங்களை வாங்கியதை எதிர்த்து தொடுத்த வழக்கில், அவர் வாதியாக இருந்த வழக்கில் தீர்ப்பு 2013ல் வெளிவந்தது[5].

Kerala High Court – Gospel For Asia vs The State Of Kerala on 28 February, 2013

 IN THE HIGH COURT OF KERALA AT ERNAKULAM PRESENT:

THE HONOURABLE MR.JUSTICE THOTTATHIL B.RADHAKRISHNAN&THE HONOURABLE MR. JUSTICE A.V.RAMAKRISHNA PILLAI THURSDAY, THE 28TH DAY OF FEBRUARY 2013/9TH PHALGUNA 1934

WP(C).No. 7379 of 2012 (V)

கேரள நில பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் [Land Conservancy Act] ஹாரிஸன் மலையாளம் லிமிடெட் மற்றவர்களுக்கு விற்றதால், அந்நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. எம்.ஜி. ராஜமாணிக்கம் என்ற சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, இப்பிரச்சினை விசாரிக்கப்பட்டது. இதில் முறையீடு-மேல் முறையீடு என்றெல்லாம் இருந்தால் கூட, சட்டவிரோதமாக நிலபரிமாற்றம் நடந்துள்ளது மெய்ப்பிக்கப்பட்டது.

Government to take over three estates

 The Hindu, Updated: May 29, 2015 05:57 IST

The State government has issued orders to take over three estates that were earlier in the possession of Harrisons Malayalam Limited and sold to others. The order for taking over the estates has been issued by special officer M.G. Rajamanickam, who was appointed by the government for resuming the land possessed by the company, also from the transferees or those who occupied the land, under the provisions of the Land Conservancy Act. Orders have been issued to take over 2,700 acres owned by Travancore Rubber and Tea Company and 207 acres owned by Ria Estates and Resorts, both in Thenmala, and 2,263 acres of Cheruvally Estates at Erumeli, a Revenue Department officer said here.

மே 2015ல் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட் மற்றவர்களுக்கு விற்ற கீழ்கண்ட மூன்று எஸ்டேட்டுகளை அரசே எடுத்துக் கொள்வதாக அறிவித்தது[6].

 கம்பெனி / எஸ்டேட்டின் பெயர்இருக்கும் இடம்நிலப்பரப்பு ஏக்கரில்
1திருவாங்கூர் ரப்பர் அண்ட் டீ கம்பெனி, [Travancore Rubber and Tea Company in Thenmala]தென்மலா2,700 acres
2ரியா எஸ்டேட்ஸ் அன்ட் ரிஸார்ட்ஸ் [Ria Estates and Resorts in Thenmala]தென்மலா207 acres
3செருவல்லி எஸ்டேட்ஸ் [Cheruvally Estates at Erumeli]எருமேலி2,263 acres

BOH-Trust-Deed-P1 K P Yohanan

ஆகஸ்ட்.2015ல் ஹோகனன் நிலத்தை தலித்துகள் ஆக்கிரமிக்கவந்தனராம்: செருவல்லி எஸ்டேட்ஸ்-ல் இன்னும் பிரச்சினை இருப்பதாகத் தெரிகிறது. இது நம்புகின்றவர்களின் சர்ச்சுக்கு சொந்தமான இடமாம். அதே ஹோஹனன் தான் இதற்கும் சொந்தக்காரர். ஆகஸ்ட் 12ம் தேதி அன்று இந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள வந்த தகராறில் மாத்யூ கவுங்கல் என்பவர் வெட்டப்பட்டுள்ளார். 50 பேர் கைது செய்யப்பட்டனர்[7]. தலித் குழுக்கள் மேலும் தாக்குதலில் ஈடுபடலாம் என்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பொதுவாக சர்ச்சுகள் “தலித்துகளுக்கு” உதவும் என்றுதான் தம்பட்டம் அடித்துக் கொள்ளும். ஆனால், இங்கு தலித்துகள் தாக்குகின்றனர் என்றது வியப்பாக இருக்கிறது. ஒருவேளை ஹோகனன் டிரஸ்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வராதலால், இவ்வாறு திசைத் திருப்ப முயற்சிகள் மேற்கொள்கிறதா என்று தோன்றுகிறது.

பலவிதமான காரியங்களில் ஈடுபட்டதுஆனால்,சட்டவிரோதங்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்பது:

  1. ஒரு கம்பெனியின் நிலத்தை அடுத்த கம்பெனிக்கு விற்றது;
  1. மதநிறுவனம் நிலங்களை வாங்குவது;
  1. கோடிக்கணக்கில் பணம் பெறும் மதநிறுவனம், வியாபரத்தில் ஈடுபடுவது;
  1. போலி ஆவணங்களை வைத்து நிலங்களை விற்றது;
  1. அரசுக்கு சொந்தமான / புறம்போக்கு நிலங்களை விற்றது;
  1. அறிவிக்கப்பட்ட காரியங்களுக்கு பதிலாக, வேறு வேலைகளில் ஈடுபடுவது;
  1. ரப்பர் வாங்குவது, விற்பது, பைன் ஆப்பிள் சாகுபடி செய்வது:
  1. கோடிகளில் அந்நிய பணத்தை பெறுவது, ஆனால், கணக்கு சரியாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது.
  1. இந்துமதத்தை தூஷிப்பது, சாத்தான் மதம் என்பது;
  1. சுனாமி அழிவையும் மதமாற்றத்திற்கு உதவும் என்று பேசுவது.

இதெல்லாம் நிச்சயமாக மதத்தின் பெயரால், பொருளாதார குற்றங்கள், வரியேய்ப்பு போன்றவற்றிலும் ஈடுபடுவது தெரிகிறது. மேலும் சமகாலத்தில், இந்துமதத்தலைவர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வரும் நிலையில், கிருத்துவ மதத்தலைவர்கள் மட்டும், இத்தனை வழக்குகள் இருந்தும், சாதாரணமாக அரசு செயல்பட்டது, அரசியல் ஆதரவு உள்ளது மட்டுமன்றி, அது இந்து நலன்கன்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் புலனாகிறது. மறுபடியும், இந்திய செக்யூலரிஸம் என்றால், இந்து-விரோதம், இந்து-மறுப்பு, இந்து-எதிர்ப்பு என்ற நிலைகளில் தான் செயல்படுகின்றன, என்ற செய்தியைத்தான் தெரிவிப்பதாக உள்ளது.

பிஷப்புகள் - இவர்களுக்கு ஆர்ச்பிஷப் - யோகன்னன்

விகிபீடியா ஹோகனன் எல்லா வழக்குகளிலிருந்தும்விடுபட்டுவிட்டார் என்கிறது: ஹோகனினின் எதிரிகள் அந்நியபணத்தை நிலத்தை அபகரிக்க உபயோகித்தார் மற்றும் அறிவித்த காரியங்களுக்கு இல்லாமல், வேறு வேலைகளுக்கு உபயோகித்தார் என்று குற்றஞ்சாட்டினர். மேலும் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட் கம்பெனியிடமிருந்து “பிலிவர்ஸ் சர்ச்” [Believers Church] வாங்கிய நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும் அது விற்கமுடியாது என்றும் சொல்லப்பட்டது. இதனால், சட்டத்திற்குப் புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்ததாக “பிலிவர்ஸ் சர்ச்” மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட், நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை மோசடியாக தயாரித்தது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இருப்பினும், “பிலிவர்ஸ் சர்ச்” மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. இதனால், அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதே போல அரசுநிலத்தை அபகரித்துக் கொண்டது என்ற வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்நியசெலாவணி சட்டத்தின் கீழ், ஆவணங்களை போலியாக தயாரித்தது என்ற குற்றச்சாட்டிலிருந்தும் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட் விடுவிக்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

12-12-2015

[1] “Prayer and money makes Believers’ Church. Yohannan has become an archbishop by bypassing the traditional route,” said Kerala Congress(S) MLA P.C. George.

http://archive.indianexpress.com/news/an-archbishop-s-spiritual-factory/323561/2

[2] http://www.ucanews.com/story-archive/?post_name=/2004/02/12/protestant-church-dismisses-two-bishops-after-evangelists-ordination&post_id=23764

[3] http://www.ucanews.com/story-archive/?post_name=/2003/02/18/protestant-bishop-criticized-for-ordaining-pentecostal-archbishop&post_id=22052

[4] This Christian fundamentalist propaganda literature often describes Bharat as a “State of Devil”.  Dr K. P. Yohannan in his book Anant Prakash mein Jeevan Vyatheeth Karain writes: “Every time a Hindu is baptized and converted to Christianity, there is a great disturbance in the State of Devil” (p. 114). Hindu religious and community leaders have been termed as “devils” and “satanic” powers by the same author.

[5]  http://indiankanoon.org/doc/117264200/

[6]http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/government-to-take-over-three-estates/article7258500.ece

[7] There was an encroachment bid at the Cheruvally Estate, owned by Believers Church founder K P Yohannan. Mathew Kavungal (52), native of Erumeli and an employee of the estate was was hacked and three others sustained injuries. Almost 50 persons have been taken into custody. A large contingent of police has been deployed in the area to avoid any untoward incidents. As many as 300 persons from Kattappana and Idukki parts made a bid to encroach the estate Wednesday (August 11, 2015) morning. They stood in different parts of the estate with lethal weapons. Police were camping in the area as they received information that a bid would be made by dalit organisations.

http://kaumudiglobal.com/innerpage1.php?newsid=67569

எருமேலியை வளைத்து, கிருத்துவ நிறுவனங்கள் சதியில் ஈடுபடுகின்ற முறைகள் – ரப்பர் தோட்டங்களில் விளைவதென்ன, சபரிமலைக்கு எதிராக நடப்பதென்ன?

திசெம்பர் 12, 2015

எருமேலியை வளைத்து, கிருத்துவ நிறுவனங்கள் சதியில் ஈடுபடுகின்ற முறைகள் – ரப்பர் தோட்டங்களில் விளைவதென்ன, சபரிமலைக்கு எதிராக நடப்பதென்ன?

Gospel for Asia, Yohannan, posing as saffron sanyasi

கிருத்துவ நிறுவனம் ரப்பர் தோட்டத்தை வாங்கியது: 2005ல் “கோஸ்பல் பார் ஏசியா” [ஆசியாவுக்கு நற்செய்தி, அதாவது ஆசிய நாடுகளுக்கு பைபிளை போதிப்பது] என்ற கிருத்துவ நிறுவனம் [Gospel for Asia (GFA), இனி “ஜிஎப்ஏ” என்று குறிப்பிடப்படும்], ஹாரிஸன் மலையாளம் லிமிடெட் [the Harrisons Malayalam Limited (HML)] என்ற கம்பெனியிடமிருந்து, எருமேலியில் இருக்கும் 2,300 ஏக்கர் நிலபரப்புக் கொண்ட ரப்பர் எஸ்டேட்டை ரூ. 63 கோடிகளுக்கு வாங்கியது பல கேள்விகளை எழுப்பியதுஏனெனில், இக்கம்பெனி ரப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிற்நிறுவனமாகும். திருவல்லா, பஞ்சடியில் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் “கோஸ்பல் பார் ஏசியா”, ஒரு எவாஞ்சிலைசேஷன் நிறுவனம், அதாவது மதம் மாற்றும் கிருத்துவ அமைப்பு என்பது தெரிந்த விசயம் தான். ஆனால், ரப்பருக்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால், ஒன்றுமில்லை என்றுதான் தெரிகிறது.  ஆனால், 500 ஏக்கர் நிலத்தில், ஏழைகள் மற்றும் வனவாசிகளுக்காக வசதிகளை செய்து தருகிறோம் என்ற திட்டங்களை வைத்துக் கொண்டு, மத்திய அரசிடம் அனுமதி பெற திட்டமிட்டுள்ளதாக தெரிந்தது. உண்மையில், அரசு சார்பில் இக்கிருத்துவ நிறுவனம் இவ்வாறு சேவை செய்ய முன்வந்திருப்பதே, மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், அரசு செய்யாததை, இது எப்படி செய்ய முடியும் என்பதுதான். மேலும், இதை சாக்காக வைத்துக் கொண்டு அயல்நாடுகளிலிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு, ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று ஒட்டு மொத்தமாக, மதமாற்ற திட்டத்தில் ஈடுபட்டால் ஒன்றும் சொல்ல முடியாது.

Yohanan scanned for unaccounting of Rs 900 crores - The Telegraph

சுனாமி மதம் மாற்ற தகுந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்: “கடவுள் சுனாமி மூலம் மதம் மாற்ற தகுந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்” என்று தனது திருவாயால் மலர்ந்தருளியவர் இந்நிருவனத்தின் தலைவரான கே.பி. யோஹனன் [K. P. Yohannan]. இவர் மதம் மாற்றத்தில் வெளிப்படையாகவே ஈடுபட்டது, கடந்த சுனாமி உதவி திட்டங்களில் தெரிய வந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் செக்யூலரிஸம் என்ற போர்வையில், இவ்வாறு சிறுபான்மையினருக்கு சார்பாக இருப்பதினால், அவர்கள் சேவை போர்வையில் பலவேலைகளில் இறங்கியுள்ளார்கள். ஆனால், இது “கார்பரேட்” முறையில் மதமாற்றத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது போல தெரிகிறது. ஆகஸ்ட்.19, 2013 அன்று ஹோகனின் சகோதரர் மற்றும் காங்கிரஸ் கட்சி உள்ளூர் தலைவர் கே.பி.புண்ணோஸ் என்பவர் செல்லாத கரன்ஸி நோட்டுகளை வைத்து வியாபாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்[1]. 1990லிருந்து ரூ.1,040 கோடிகள் பணத்தை அயல்நாடுகளிலிருந்து பெற்றுள்ளார்[2]. ஆனால், 144 கோடிகள் தான் செலவழித்திருக்கிறார்[3]. அப்படியென்றால், சுமார் 900 கோடிகள் என்னவாயிற்று என்ற கேள்வி எழுகிறது. 900 கோடிகள் அப்படியே காற்றில் கரைந்து மறைந்து விட்டிருக்க முடியாது.

ஹோஹனன், செருவல்லி எஸ்டேட்ஸ், எருமேலி

ஹோகனனது திட்டம் சபரிமலை கோவில் மற்றும் பக்தர்களுக்குஎதிரானதா?: எருமேலியில் இருக்கும் நிலத்தை வாங்கியது, அங்கு சர்ச் கட்டிக் கொண்டது, மேலும் நிலத்தை வாங்கியது போன்ற செயல்கள் தான் பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த எருமேலி நிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது என்பதும் தெரிந்த விசயமே. அதனால், இவர்களது திட்டங்களில், ஐயப்ப பக்தர்களுக்கு இடைஞ்சல் செய்யும் வகையில், ஏதாவது முயற்சிகள் இருந்தாலும், அதனை தடுக்க முடியாது. மேலும் பதனம்திட்ட மாவட்டத்தில் உள்ள “லாஹா எஸ்டேட்டையும்” [“the Laha estate” in Pathanamthitta district] வாங்க திட்டமிட்டது தெரியவந்தது. பம்பா வழியாக சபரிமலைக்கு செல்லும் பாதை, இது வழியாகத்தான் இருக்கிறது. இதனால், “ஜிஎப்ஏ” இதனை வாங்கும் பட்சத்தில், அதற்கு சொந்தமாகி விடுகிறது. பிறகு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு, இவர்கள் எத்தகைய விதிமுறைகளை வைப்பார்கள் என்று தெரியவில்லை[4]. இந்நிலங்கள் எல்லாமே, சபரிமலைக்கு செல்லும் வழியில், அருகில் மற்றும் சுற்றியிருப்பதால், அத்தனை பணபலம் கொண்ட கிருத்துவ அமைப்பு ஏன் வாங்க வேண்டும் என்ற எண்ணம், ஒரு சாதாரண கேரள குடிமனுக்கு ஏற்பாட்டது இயல்பானதாகும். மேலும், கேரள இந்துக்களுக்கு 1949 முதல், கிருத்துவர்கள் சபரிமலை கோவிலுக்கு எதிராக செய்து வரும் நாசவேலைகளை நன்றாகவே அறிவர். சபரி மலையின் நீலி மலை அடிவாரத்தில் நிலக் கல்லில் உள்ள பம்பாநதிக் கரையில் இருந்துதான் கடைசி 6 மைல் பயணம் ஆரம்பிக்கிறது. அந்த இடத்தில் இடத்தை வளைத்துப் போட்டு ஒரு பிரமாண்ட சர்ச்சைக் கட்டியுள்ளனர்.

K P Yohanan with P J Kurien

ஹோகனனது அரசியல் செல்வாக்கு: “எங்களது நம்பிக்கையின் அறிப்பு” என்றதன் கீழ், கிருத்துவ மதத்தைப் பரப்புவதான் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது[5]. சுனாமி பெயரில் கூட நிதியை தவறான முறையில் உபயோகித்தது மற்றும் அந்நியபோக்குவரத்துகளில் முறைகேடுகளில்  தெரியவந்தது. இருப்பினும் தன்னுடைய அரசியல் செல்வாக்கினால் தான் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக் கொள்கிறார் என்று கூறப்பட்டது[6]. இவரது சகோதரர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். தான் ஏற்படுத்தியிருக்கும் நிறுவனங்களில் தனது மனைவி, மகன், மகள் என்றுதான் உள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, 2012ல் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட் தனது 13 எஸ்டேட்டுகளை புதியதாக உண்டாக்கிய ஹாரிஸன் பிளான்டேஷன் லிமிடெட் [Harmony Plantations Limited] என்ற கம்பெனிக்கு விற்க முயற்சித்தபோது, தடுக்கப்பட்டது[7].  இதெல்லாம், செய்கின்ற காரியங்கள் மிகவும் திட்டமிட்டு, ஜாக்கிரதையாக செய்வது தெரிகிறது.

K P Yohanan with Ommen Chandy CM

வழக்குகள் 2005 முதல் 2015 வரை நடந்துள்ளது: பி.ஆர். ஹரிகுமார் என்ற வழக்கறிஞர் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட் மேற்குறிப்பிட்ட நிலத்தை “ஜிஎப்ஏ”க்கு விற்றதை எதிர்த்து 2006ல் வழக்கு தொடர்ந்தார். அக்டோபர்.18, 2007 அன்று “ஜிஎப்ஏ” டிரஸ்ட் அந்த எஸ்டேட்டிலிருந்து ரப்பர் மரங்களை வெட்டக் கூடாது என்று கிராம அதிகாரி ஆணையிட்டார். ஆனால், ஏப்ரல்.10, 2008 அன்று கேரள நீதிமன்றம் ஏற்கெனவே வெட்டிய மரங்களுக்கு பணம் செல்லுத்து விட்டு எடுத்துச் செல்லலாம் என்று ஆணையிட்டது. மேலும் டிசம்பர்.11, 2008 அன்று, கிராம அதிகாரியின் ஆணை செல்லாது என்று கஞ்சிரப்பள்ளி தாசில்தார் ஆணையிட்டார். ஜூன்.19, 2009 அன்று இந்த ஆணையை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. இதனால், கஞ்சிரப்பள்ளி தாசில்தார் மே.29, 2010 அன்று அந்த டிரஸ்டை அவ்விடத்திலிருந்து ஏன் வெளியேற்றக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பினார். உடனே டிரஸ்ட் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு போட்டது. 2011ல் டிரஸ்ட் பைன் ஆப்பிள் சாகுபடி செய்ததைத் தடுக்க ஆணையிட்டது. நீதிமன்றம் இதை விசாரித்து நடவரிக்கை எடுக்குமாறு ஜூன்.30, 2011 மற்றும் பிப்ரவரி 28, 2013 அன்று ஆணையிட்டது[8].  இதெல்லாம் சட்டங்களிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு காலம் கடத்துவது, இழுத்தடிப்பது, திசைத்திருப்புவது முதலியவற்றை எடுத்துக் காட்டுகிறது. மேலும், வெவ்வேறான நிலைகளில் அவ்வாறு, ஒருவர் ஆணையை அடுத்தவர் மறுப்பது, மாற்றுவது முதலியவை, சட்டங்களூக்கு மீறிய தாக்கங்களுடன், சம்பந்தப்பட்டவர்கள் செயல்பட்டதும் தெரிகிறது.

Arch-bishop Yohannan - ordained byhimself

பாஸ்டர் ஹோகன்னான் பிஷப் ஆனது முறைப்படியில்லை எனும்கிருத்துவர்கள் (2013): ஜனவரி 2013ல் பெந்தேகோஸ்தே சபையான பிலிவர்ஸ் சர்ச் என்ற சபைகளின் பாஸ்டர்.கே.பி.யோகன்னான் (ஆத்மீக யாத்திரை ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரபலமனாவர்). மார்தோமா சபையிலும், CSI சபையிலும், Jacobite சபையிலும் உள்ள அங்கத்தினரில் நூற்றுக்கணக்கான நபர்களை பிரிந்து வரசெய்து அவர்களுக்கு முழுகி ஞானஸ்நானம்கொடுத்து தன் சபையில் சேர்த்துக்கொண்டார் அப்படிப்பட்ட மற்றும் அந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரை நமது CSIமாடரேட்டரும், அதே கிழக்கு கேரளா டையோசிஸ் பிஷப்புமான கே.ஜே.சாமுவேல் [Most Rev.K.J.SAMUEL] அவர்களும், Rt.Rev.கிளாக்ஸ்டன் (South Kerala டையோசிஸ்) அவர்களும், இப்போது நமது CSI மாடரேட்டராகவும், கன்னியாகுமரி டையோசிஸ்ஸின் பிஷப்பாகவும் இருக்கும் Most.Rev.தேவகடாட்சம் அவர்களும், CNI (Church of North India) வட இந்திய திருச்சபை பிஷப்மார் இரண்டு பேர்களும் [Bishops P.M. Dhotekar of Nagpur and Bancha Nidhi Nayak of Phulbani], ஆக ஒரு CSI மாடரேட்டர் இரண்டு CSI பிஷப்மார்கள், இரண்டு CNIபிஷப்மார்கள் ஆகியவர்கள் தங்கள் செங்கோல்களை பிடித்து குறிப்பிட்ட இந்த 5 பிஷப்புகளும், கே.பி.யோகன்னான் அவர்கள் மீது கைகளை வைத்து அவரை பிஷப்பாக CSI முறைப்படி அபிஷேகம் செய்தார்களே அது எந்த விதத்தில் நியாயமாகும்?, என்றுஜாமக்காரன் கேட்டாலும்[9]ஆறு பிஷப்புகளை ஏற்படுத்திதான்பிப்ரவரி.10, 2013 அன்று ஆர்ச்பிஷப்பாக மாறிவிட்டது,அதைவிடதமாசான விசயம் தான்[10].

© வேதபிரகாஷ்

12-12-2015

[1] http://www.ucanews.com/news/police-arrest-brother-of-asias-richest-evangelizer/69053

[2] http://archive.indianexpress.com/news/an-archbishop-s-spiritual-factory/323561/

[3] http://archive.tehelka.com/story_main39.asp?filename=Ne050708devil%27sworkingodname.asp

[4] http://indiafacts.org/gospel-for-asia-and-its-indian-connections/

[5] http://www.believerschurch.com/about/statement-of-faith/

[6] In the past, he was also caught in the vigilance net over the alleged misuse of tsunami funds, and other dubious foreign transactions. However, each time he either escaped or evaded the investigation,  apparently using the political or financial influence that he has managed to accumulate over years.

http://www.tehelka.com/2015/06/kerala-gospel-of-asia-believers-church-k-p-yohannan-govt-takes-over-land/?singlepage=1

[7] Earlier in 2012, when HML tried to transfer 13 estates to a Chennai-based newly-for med company Harmony Plantations Limited, the government had alerted the registrar of companies and SEBI and asked them not to authenticate the move.The then ACS (revenue) Nivedita P Haran had written to registrar of companies in Chennai and Kochi, chairmen of Sebi and BSE, rubber board, tea board, spices board, State Bank of India and HSBC in this regard. http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Special-cell-warned-government-about-Harrisons-Malayalam-Limiteds-fraud/articleshow/45358463.cms

[8] http://indiankanoon.org/doc/41704114/

[9] http://jamakaran.com/tam/2013/december/csi_kallarai.htm

[10] But Yohannan’s real tryst with controversy began after he set up Believers’ Church about eight years ago at Thiruvalla, the NRI town in Pathanamthitta district. It was then that this preacher decided he was cut for higher things in life. He voluntarily donned the garb of a bishop and hired the service of K.J. Samuel, a bishop of a sister church. In normal course, only a priest can become a bishop and his action stunned his community. Both the Church of South India and the Church of North India pulled up their bishops for conducting the installation ceremony, the nature of which had been unprecedented in Christian circles. But Yohannan wouldn’t stop at that. He later upgraded his post to that of an archbishop and appointed six other junior bishops.

http://archive.indianexpress.com/news/an-archbishops-spiritual-factory/323561/



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard