New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொண்டி - வஞ்சி - கொடுமணல்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தொண்டி - வஞ்சி - கொடுமணல்
Permalink  
 


 தொண்டி (சேரர் துறைமுகம்)

பொருளடக்கம்

பெரிபிளசின் குறிப்புகள்[தொகு]

இந்தியாவுக்கு வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளசு சேர மன்னர்களின் தொண்டி பற்றிக் குறிப்பிடுகிறார்.[1] இவர் கி.பி. 40-50 கால இடைவெளியில் இந்தியாவில் இருந்தார். தொண்டியை இவர் ‘திண்டிஸ்’ எனக் குறிப்பிடுகிறார். முசிறி (முசிறிஸ்) போலவே கடல் சார்ந்த வெளியில் சேரநாட்டில் இருந்த ஊர். அரேபியாவிலிருந்தும்கிரேக்கத்திலிருந்தும் சரக்குக் கப்பல்கள் அங்கு வந்தன. தொண்டி ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. தொண்டிக்கும் முசிறிக்கும் இடைவெளி 500 கண்ணிய தூரம். [2] தொண்டியிலிருந்து ஆற்றின் வழியே 20 கண்ணிய தூரம் நாட்டுக்குள் செல்லலாம். முசிறியிலிருந்து 500 கண்ணிய தூரத்தில் நெல்சிந்தா ஊர் உள்ளது. இது பாண்டிய நாட்டு ஊர். நெல்லினூரும் கடலிலிருந்து 120 கண்ணியம் தொலைவில் உள்ளது.

தொண்டியின் அழகு[தொகு]

தொண்டியில் நெல்வயல் மிகுதி. [3] தொண்டியில் விளைந்த வெண்ணெல் அக்காலத்தில் பெரிதும் மதிக்கப்பட்டது. [4] தொண்டியில் வாழ்ந்த மகளிர் அவல் இடிக்கும் உலக்கையை வரப்பில் சார்த்திவிட்டு வண்டல் விளையாடி மகிழ்வார்களாம். [5]

அம்மூவனார் காட்டும் தொண்டி[தொகு]

ஐங்குறுநூறு சங்கநூல் தொகுப்பில் அம்மூவனாரின் நெய்தல் திணைப் பாடல்கள் 100 உள்ளன. அவற்றில் 'தொண்டிப் பத்து' எனத் தலைப்பிடப்பட்டுள்ள பாடல்கள் 10. அவை தொண்டியின் அழகைத் தலைவியின் அழகோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.

  • தலைவியின் தோள் போல் இன்பம் தரும் ஊர் தொண்டி. [6]
  • தொண்டி ஒரு கடல்நீர்த் துறை [7] நெய்தல் பூ மணக்கும் ஊர் [8] முண்டகம் மணக்கும் [9] அழகால் வருத்தும் அணங்குகள் நடமாட்டம் உள்ள ஊர் [10]மகளிரின் பண்பும் பயனும் கொண்ட ஊர் [11]
  • நண்டு தாக்கி இறால்மீன் பிறழும் [12]
  • செங்குட்டுவன் ஊர். [13]
  • தொண்டியில் வாய்ந்த பரதவர் கடலில் பிடித்துவந்த சுறாமீனை தொண்டிப் பாக்கத்துக்குக் கொண்டுவந்து அவ்வூர் மக்களுக்குப் பகிர்ந்து தருவார்களாம். [14]

தொண்டி அரசர்கள்[தொகு]

  • தொண்டி, வஞ்சிச் சேரன் குட்டுவனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.[15]
  • வஞ்சிச் சேரன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியத்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தொண்டிக்குக் கொண்டுவந்து அவ்வூர் மக்களுக்குப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்தான். [16]
  • தொண்டியைக் கருவூர்ச் சேரன் இளஞ்சேரல் இரும்பொறை தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்தான். [17]
  • கருவூர் அரசன் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொண்டியைப் போரிட்டு வென்றான். [18]
  • கருவூர்ச் சேரன் பொறையன் ஆட்சிக் காலத்தில் தொண்டி அரசியல் போராட்டம் இல்லாமல் அவனது ஆளுகையின் கீழ் அமைதியாக இருந்தது. [19] [20][21] அதனால் பொறையன் தன் பகைவனான மூவனோடு போரிட்டு அவனது பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து தன் இரண்டாவது தலைநகர் தொண்டியின் கோட்டைக் கதவில் வெற்றிச் சின்னமாகப் பதித்துக்கொண்டான். [22]

அடிக்குறிப்பு[தொகு]

  1. Jump up 54. Tyndis is of the Kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris, of the same Kingdom, abounds in ships sent there with cargoes from Arabia, and by the Greeks; it is located on a river, distant from Tyndis by river and sea five hundred stadia, and up the river from the shore twenty stadia. Nelcynda is distant from Muziris by river and sea about five hundred stadia, and is of another Kingdom, the Pandian. This place also is situated on a river, about one hundred and twenty stadia from the sea. The Voyage around the Erythraean Sea
  2. Jump up ஸ்டேடியம் கண்ணுக்கெட்டிய தூரம்.
  3. Jump up உழவர் நெல் அறுக்கும்போது அறுபட்ட செய்தல் பூ பூப்பது போன்று தலைவியின் கண் பூக்குமாம்.

    கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி,
    நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,
    பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
    நீர் அலைத் தோற்றம் போல,
    ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே. (நற்றிணை 195)

  4. Jump up

    திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
    பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
    முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
    எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி (குறுந்தொகை 210)

  5. Jump up

    பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை
    ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி,
    ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
    தொண்டி அன்ன என் நலம் (குறுந்தொகை 238)

  6. Jump up ஐங்குறுநூறு 171, 180
  7. Jump up வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி (ஐங்குறுமூறு 172)
  8. Jump up தொண்டித் தண் நறு நெய்தல் நாறும் (குறுந்தொகை 173)
  9. Jump up ஐங்குறுநூறு 177
  10. Jump up அணங்குடைப் பனித் துறைத் தொண்டி (ஐங்குறுநூறு 174)
  11. Jump up தொண்டி அன்ன நின் பண்பு (ஐங்குறுநூறு 175), பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித் தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி,(ஐங்குறுநூறு 176)
  12. Jump up அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும் (ஐங்குறுநூறு 179)
  13. Jump up ஐங்குறுநூறு 178
  14. Jump up அம்மூவனார் அகம் 10
  15. Jump up

    வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன்
    தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, (அகம் 290)

  16. Jump up தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து கொடுப்பித்து (பதிற்றுப்பத்து – பதிகம் 6)
  17. Jump up வளைகடல் விழவின் தொண்டியோர் பொருநன் (பதிற்றுப்பத்து 87)
  18. Jump up

    குலை இறைஞ்சிய கோள் தாழை
    அகல் வயல், மலை வேலி,
    நிலவு மணல் வியன் கானல்,
    தெண் கழிமிசைத் தீப் பூவின்,
    தண் தொண்டியோர் அடு பொருந! (புறநானூறு 17)

  19. Jump up திண் தேர்ப் பொறையன் தொண்டி (அகம் 60)
  20. Jump up

    குண கடல் திரையது பறை தபு நாரை
    திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
    அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச்
    சேயள் அரியோட் படர்தி; (குறுந்தொகை 128)

  21. Jump up

    கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
    திண் தேர்ப் பொறையன் தொண்டி நற்றிணை 8

  22. Jump up

    மூவன்
    முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,
    கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
    தெறல் அருந் தானைப் பொறையன், நற்றிணை 18



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தொண்டியில் மீண்டும் துறைமுகம் அமையுமா?

திருவாடானை, டிச.30:  திருவாடானை தாலுகா தொண்டியில் மீண்டும் துறைமுகம் அமையுமா என்பதை அறிய பொதுமக்கள் ஆவலுடன் உள்ளனர்.   ராமநாதரபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியில் சங்க இலக்கிய காலம், கோவலன் க

திருவாடானை, டிச.30:  திருவாடானை தாலுகா தொண்டியில் மீண்டும் துறைமுகம் அமையுமா என்பதை அறிய பொதுமக்கள் ஆவலுடன் உள்ளனர்.

  ராமநாதரபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியில் சங்க இலக்கிய காலம், கோவலன் கண்ணகி வரலாற்றுக் காலத்தில் இந்த துறைமுகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

 ஒரு காலத்தில் மிகப்பெரிய வர்த்தகத் துறைமுகமாக விளங்கிய தொண்டி துறைமுகம் திருவாடானை தாலுகாவின் கடலோர நகரமாக விளங்கியுள்ளது. இலக்கியத்தில் சிறப்பு பெற்ற தொண்டி துறைமுகம் ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்துள்ளது.

 பர்மா, இலங்கை தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து,  தேவகோட்டை,காரைக்குடி, நாட்டரசன்கோட்டை, செட்டிநாடு, பள்ளத்தூர் போன்ற ஊர்களுக்கு கப்பல் மூலம் தேக்கு மரங்கள் கொண்டு வந்ததற்கு இன்றும் சான்றுகள் உள்ளன.

  துறைமுகம் நாளடைவில் இயற்கை சீற்றங்களால் உருமாறி சாதாரண கடற்கரையாக மாறிவிட்டது (படம்). ஆனாலும் சுற்றுலாப் பயணிகள்  இக்கடற்கறைக்கு வந்து செல்கின்றனர்.

 கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் மீண்டும் சிறுமீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்திருந்தது அதனையொட்டி தொண்டியில் துறைமுகம் அமைக்க முறிசிலான்தோப்பு அருகே இஸ்லாம் அமைப்புக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலத்தை அரசுக்குக் கொடுத்துள்ளனர்.  

  சேது சமுத்திரத் திடடம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.  எனவே தொண்டியில் மீண்டும் துறைமுகம் அமையுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.  இந்தத் துறைமுகம் அமைக்கப்படுமானால் இப்பகுதியில் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

இதனையொட்டி சிறுதொழிற் கூடங்கள் உருவாகும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.  வர்த்தகம் பெருகும் நிலையில் வளரும் கடற்கரை நகரமாகும் சூழ்நிலை இருந்தது.

 சிவகங்கையில் கடந்த சில நாள்களுக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சேது சமுத்திரத் திட்டத்தின் துணைத் திட்டமான மூக்கையூர் துறைமுகத் திட்டம் செயல்படுத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லை.

  எனவே 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாகக் கூறினார். இந்நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தின் துணைத் திட்டமான தொண்டி துறைமுகத்துக்óகு 100 கோடி ருபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 தற்போது சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொய்வு விழுந்த நிலையில் தொண்டி துறைமுகத்திற்கு எந்தவித உத்தரவும் அரசு பிறப்பிக்கவில்லை. பணிகளும் நடைபெறவில்லை.  எனவே இப்பகுதி மக்கள் தொண்டியில் மீண்டும் துறைமுகம் அமைக்க வலியுறுத்தி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொடுமணல் தொல்லியற் களம்

 

கொடுமணல்[தொகு]

தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம்,சென்னிமலை யிலிருந்து மேற்கே சுமார் 15 கிமீ தூரத்திலும்,திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி யிலிருந்து சுமார் 9 கிமீ தூரத்திலும்,காவிரி ஆற்றில் கலக்கும்நொய்யல் ஆற்றின் வட கரையில், இன்றைய கொடுமணல் அமைந்துள்ளது.[1] இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்ச்சிறப்பு[தொகு]

இவ்வூர் இரும்புக் காலம் (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), சங்க காலம்(Sangam Age) என வழங்கப்படும் காலக்கட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும். கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில நூற்றாண்டுகளில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில்காணப்படுகின்றன.

கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி புதைகுழிகள் அடங்கிய அடக்கக் களமாகக் காணப்படுகின்றது. இதனை அண்டிச் சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் குடியிருப்புப் பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.[1]

இக்களம் 1961 ஆம் ஆண்டில் புலவர் செ.இராசு, செல்வி முத்தையா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகளில் தொல்லியல் துறையினரால் இங்கே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில், பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய 300 க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள்,முதுமக்கள் தாழி கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல வகைகளிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன.

தொன்மையான தொழில் நகரம்[தொகு]

கொடுமணல் சங்க இலக்கியத்தில் "கொடுமணம்" என்னும் பெயர் பெற்றிருந்தது. அங்கு, திறமை மிக்க கைவினைக் கலைஞர் இரும்பை சக்திவாய்ந்த வெப்ப உலைகளில் இட்டு, உருக்கி எஃகாக மாற்றினர். அந்த உலோகம் பல இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.[2][3]

அதுபோலவே, கொடுமணலில் நடந்த அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாசி மணிகளும், கருமாணிக்கம், நீல மணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக் கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக் கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.

சேர நாட்டைச் சார்ந்த இந்த தொழில் நகரம் சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தோடு வியாபாரச் சாலைத் தொடர்புகொண்டிருந்தது.

வெளிநாட்டு வணிகத் தொடர்பு[தொகு]

கொடுமணலில் உருவாக்கப்பட்ட உருக்கு, எஃகு மற்றும் பலவகை பாசி மணிகள் எகிப்து, உரோமை போன்ற வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. கொடுமணலுக்கும், மேற்குக் கடற்கரையில் முசிறி துறைமுகத்திற்கும் (இன்று கேரளத்தில் "பட்டணம்" என்று அழைக்கப்படும் நகர்) இடையே வணிக வழித் தொடர்பு இருந்தது. ஏற்றுமதிப் பொருள்கள் முசிறிக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.[4][5]

அகழ்வாய்வில் கிடைத்த பிற சான்றுகள்[தொகு]

கொடுமணலில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின்போது, இரும்பால் ஆன ஈட்டி முனைகள், வாள்கள்இரும்பு உருக்காலைசிப்பிகிளிஞ்சில் அழகொப்பனை வளையல்கள், தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்கள் போன்றவை பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன.[6][7]

உரோமைப் பேரரசில் புழங்கிய பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள் பலவும் கிடைத்தன. மேலும், செப்பால் ஆன சிங்கச் சிலை மற்றும் இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு கொடுமணல் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தே தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய நகரமாக அறியப்பட்டுள்ளது.[8][9]

கிமு 500க்கு முற்பட்ட தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையின் சிதிலங்களையும் பல ஆபரணங்களையும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [10]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வஞ்சி (ஊர்)வஞ்சி என்னும் மாநகரம் மணிமேகலை – வஞ்சிமாநகர் புக்க காதை சேரநாட்டின் தலைநகர். [1] குடநாட்டின் தலைநகர் வஞ்சி. [2] தற்காலக் கரூரையும்சங்ககாலத்தில் வஞ்சி என்றும், வஞ்சிமுற்றம் என்றும் வழங்கினர்.

பாட்டு - வஞ்சி என்பது பாணர் பாடும் பண் வகைகளில் ஒன்று [3] [4] [5]
மரம் - வஞ்சி என்பது ஒரு வகை மரம் [6] [7] [8]
மலர் - வஞ்சி என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. [9] வஞ்சிமாநகரம் பூவா வஞ்சி எனப் போற்றப்பட்டது. [10]

குடபுலச் சேரர் தலைநகரம்[தொகு]

வஞ்சி, உறந்தை, மதுரை ஆகிய மூன்றும் சேர, சோழ, பாண்டியரின் தலைநகராக விளங்கியதை இணைத்துப் பார்க்கும் பாடல்கள் உள்ளன. [11] [12]இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோரின் [13] [14] [15] தலைநகரம்.திருவாங்கூர் நாட்டை வஞ்சிபூமி என்றனர். 'வஞ்சி பூமி' எனத் தொடங்குப் பாடல் திருவாங்கூர் நாட்டின் தேசிய கீதமாக விளங்கியது. [16] [17] சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வஞ்சி நகர் வாடும்படி போரிட்டான். [18]

கருவூர்ச் சேரர் தலைநகரம்[தொகு]

கொங்குநாட்டுக் கருவூர் சேரநாட்டு வஞ்சியின் முற்றமாக விளங்கிற்று. [19] புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் இந்த ஊர் வஞ்சி எனப் பெயர்பெற்றது. [20] வஞ்சியில் உள்ளிவிழா சிறப்பாக நடைபெறும். [21] இளஞ்சேரல் இரும்பொறை [22] , கோதை [23] ஆகிய சேர வேந்தர்களின் தலைநகரமாக வஞ்சி விளங்கியது. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ, புகழூர்த் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவன். இவனது ஆட்சிக்காலத்தில் பொருநை ஆறு பாயும் கொங்குநாட்டுக் கருவூரும் வஞ்சி என்னும் பெயரால் வழங்கப்பட்டது. [24]

அடிக்குறிப்பு[தொகு]

  1. Jump up சேரமான் பெருமாள் நாயனார் காலத்தில் இந்த ஊர் 'அஞ்சைக்களம்' என வழங்கப்பட்டது.
  2. Jump up வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் கொண்டனை, பெரும! குட புலத்து அதரி; (புறநானூறு 373)
  3. Jump up பாடினி பாடும் வஞ்சி - புறம் 15-24
  4. Jump up புறம் 378-9
  5. Jump up புறம் 33-10
  6. Jump up வஞ்சிக்கோடு புறம் 384
  7. Jump up வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐ 50
  8. Jump up அகம் 226
  9. Jump up குறிஞ்சிப்பாட்டு 89
  10. Jump up பூவா வஞ்சி - புறம் 32-2
  11. Jump up வஞ்சிமாநகரும், கோழி எனப்படும் உறையூரும் போலச் சேவல் கூவும் ஒலி கேட்டு மதுரை மக்கள் எழுவதில்லையாம். சான்மறையாளர் வேதம் ஓதும் ஒலி கேட்டு எழுவார்களாம். பரிபாடல் திரட்டு 8-10
  12. Jump up குடபுலம் காவலர் மருமானும், வடபுல இமயத்து வணங்கு வில் பொறித்தோனுமாகிய குட்டுவனின் தலைநகர் வருபுனல் வாயில் வஞ்சி - சிறுபாணாற்றுப்படை 50
  13. Jump up ஆரியர் அலரத் தாக்கி பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி அன்ன (தலைவி நலம்) - பரணர் பாட்டு - அகம் 396
  14. Jump up சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்
  15. Jump up மணிமேகலை வஞ்சிமாநகர் புக்க காதை
  16. Jump up வஞ்சி பூமி
  17. Jump up திருவாங்கூர்
  18. Jump up பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய ஏம வில் பொறி மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டியவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் – மாறோக்கத்து நப்பசலையார் பாடல் - புறம் 39-17
  19. Jump up சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை எறிந்து கைப்பற்றினான். இதனை வஞ்சிமுற்றம் வயக்களனாக வென்றான் எனக் காவூர் கிழார் குறிப்பிடுகிறார் - வஞ்சிமுற்றம் புறம் 373
  20. Jump up புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல் என் பொருநை - புறம் 387
  21. Jump up குடையொடு கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு, உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே - நற்றிணை – சான்றோர் எனத்தொடங்கும் பிற்சேர்க்கை 8
  22. Jump up இளஞ்சேரல் இரும்பொறை பொத்தி ஆண்ட பெருஞ்சோழனையும், வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனையும் வென்று பெற்ற செல்வத்தைத் தன் வஞ்சி மூதூருக்குக் கொண்டுவந்து பிறருக்கு வழங்கினான். பதிற்றுப்பத்து பதிகம் 9
  23. Jump up கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி - அகம் 263
  24. Jump up சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பாடிய பாடல் குறிப்பிடுவது - தண்பொருநைப் புனல் பாயும் விண் பொருபுகழ் விறல்வஞ்சி - புறம் 11


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வஞ்சி மாநகர்

First Published : 30 April 2012 12:52 AM IST

வஞ்சி மாநகர் - ரா. இராகவையங்கார்; பக்.144; ரூ. 80; செல்லப்பா பதிப்பகம், மதுரை -1; )0452-2345971

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவரான சேரர்களின் தலைநகர் வஞ்சி மாநகர். ஆனால் தமிழ்மொழிப் புலவர்களிடையேயும், சான்றோர்களிடையேயும் வஞ்சி மாநகர் என்பது கொங்கு நாட்டுக் கருவூரா அல்லது மேல் கடற்கரையில் அமைந்துள்ள கொடுங்காளூரா என காலங்காலமாக விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த ஐயப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக இந் நூல் படைக்கப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, நற்றிணை, புறநானூறு, களவழி நாற்பது என பல்வேறு பைந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து வஞ்சி மாநகர் என்பது கொங்கு மண்டலத்துக் கருவூரே என்ற தன் கருத்துக்கு வலுசேர்க்கிறார் நூலாசிரியர்.

1917-ல் படைக்கப்பட்டு ஏறக்குறைய நூறாண்டை நெருங்கிக் கொண்டிருந்தாலும் இந் நூலின் நடை இன்றும் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும்வகையில் இருப்பது சிறப்பு. தமிழ் இலக்கியப் பாக்கள் நிறைந்த விறுவிறுப்பானதொரு வரலாற்றுப் புதினத்தைப் படித்ததுபோன்ற உணர்வைத் தருகிறது இந்நூல்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வஞ்சி, முசிறி இருப்பிடம்

%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88.jpg
கல்வெட்டுத் துறை காட்டியுள்ள
இந்தப் படத்தில் மாகோதை என்னும் அரசன் பெயர்
ஊரின் பெயராகக் காட்டியுள்ளது
திருத்திக்கொள்ளப்படவேண்டும்
சங்ககாலத்தில் மேலைக்கடல் சார்ந்த நாடுகளை ஆண்ட சேரர்களின் தலைநகரம் வஞ்சி. (சிலப்பதிகாரம் – வஞ்சிக்காண்டம்துறைமுகம் முசிறிதொண்டிபந்தர் ஆகியவை.
  • 13 ஆம் நூற்றாண்டுப் பெரியபுராணம் வஞ்சியைத் திருவஞ்சைக்களம் (38 கழறிற்றறிவார் நாயனார் புராணம் 47) என்றும்கொடுங்களூர் (இக்கால வழக்கு கொடுங்களூர்என்றும் (1) குறிப்பிடுகிறது.
  • இதில் இருந்த மதில்சோலை முதலானவை 4, 10, 47 எண் கொண்ட பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இதன் அரசன் பெருமாக்கோதை (1) கழறிற்று-அறிவார் (16), பொறையன் (10), உதியர் வேந்தன் (28),சேரர் குலப்பெருமாள் (72) என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான்.
  • கொடுங்களூரில் உள்ள பகவதியம்மன் கோயில் சங்க காலக் கண்ணகி கோயிலாகும்.
  • எர்ணாகுளம் பரவூரை அடுத்த பட்டணம் என்னும் பகுதியில்பெரியாற்றின் கழிமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு ஒற்றை மரத்தைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள படகின் அடிப்பகுதிஆம்ரோ வகை மதுச்சாடிசங்க காலச் சேரர் காசுகள்உறைகிணறு முதலானவற்றைக் கண்டுபிடித்துள்ளது
  • முனைவர்  பி.ஜே.செரியன்வீ.செல்வகுமார் ஆகியோர் இவற்றிற்கு விளக்கங்கள் தந்துள்ளனர்.
  • நிலத்தொல்லியல் அறிஞர் (Geo Archaeologist)  கே.பி. ஷாஜன்  (K.P. Shajan) என்பவரால் இப்பகுதி அடையாளம் காணப்பட்டு1990-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து  தொல்லியல் ஆய்வாளர்களும்,வரலாற்று அறிஞர்களும் இப்பகுதியை ஆய்வு செய்யத்தொடங்கினர்.
  • பாரம்பரியக்கல்வி மையம் (Centre for Heritage Studies)  என்ற அமைப்பினர் 2004-இல் சோதனை அகழாய்வினை நடத்திமேற்பரப்பு ஆய்வில் கிடைத்த பொருள்களைக்கொண்டு “ முசிறி “ பற்றிய கருத்துத்தெளிவை வெளிப்படுத்தினர். கேரள வரலாற்று ஆய்வுக்கழகம் (Kerala Council of Historical Research)  அமைப்பினர் 2007-இல் பன்னாட்டு அமைப்பினரோடு இணைந்து அகழாய்வினைத்தொடங்கினர். முதன்முதலாகப் பன்னாட்டு அமைப்பினர் இணைந்து நடத்தும் அகழாய்வு இதுவேயாகும்.
  • மலபார் கடற்கரைப்பிரதேசத்தில் இந்தோ-ரோமன் வணிகம் நடைபெற்ற காலம் கி.மு. 100  கி.பி. 400 ஆகும்.  கேரளத்தோடு ரோமானியர்வட ஆப்பிரிக்காவினர்மேற்கு ஆசியாவினர் ஆகியோர் கொண்ட தொடர்பினை வெளிப்படுத்திய முதல் வாழ்விடப்பகுதி பட்டணமாகும்.
  • கேரளத்தின் முதல் பெருங்கற்கால வாழ்விடம் பட்டணம் என்று கருதப்படுகிறது. முதன் முதலாக முற்காலச்சேரரின் நாணயம் கிடைத்துள்ளது பட்டணத்தின் இன்னொரு சிறப்பாகும்.
  • 2011-இல் முசிறி பாரம்பரியத் திட்டம் (Muziris Heritage Project) என்னும் திட்டத்தின் கீழ் கேரள வரலாற்று ஆய்வுக்கழகம் வரலாற்று ஆய்வினைத்தொடங்கியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,ரோம் பல்கலைக்கழகம்பர்ஹாம் பல்கலைக்கழகம்பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற அயல் நாட்டு அமைப்புகளும் மற்றும் இந்தியத்தொல்லியல் ஆய்வுக்கழகமும் (Archaeological Society of India) இவ்வாய்வில் பங்குபெற்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வனைக் குறிக்கும் சொற்கும் வேறுபாடின்மையும், சாத்தன் என்னும் தெய்வத்தைக் குறிக்கும் சொல் வேறுபட்டிருப்பதும், கண்டு உண்மை தெளிக.

"குல்லைக் கண்ணி வடுகர் முனையது 
 பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் 
 மொழிபெயர் தேஎத்த ராயினும் 
 வழிபடல் சூழந்திசின் அவருடை நாட்டே." 
(குறுந். 11)

என்னும் குறுந்தொகைச் செய்யுள், வடுகநாட்டிற்கும்,

"நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண் 
 தங்கலர் வாழி தோழி 
 ............................................ 
 மாகெழு தானை வம்ப மோரியர் 
 புனைதேர் நேமி யுருளிய குறைத்த 
 இலங்குவெள் ளருவிய அறைவா யும்பர் 

 மாசில் வெண்கோட் டண்ணல் யானை 
 வாயுள் தப்பிய அருங்கேழ் வயப்புலி 
 மாநிலம் நெளியக் குத்திப் புகலொடு 
 காப்பில வைகும் தேக்கமல் சோலை 
 நிரம்பா நீளிடைப் போகி 
 அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே" 
(அகம். 25)

என்னும் நெடுந்தொகைச் செய்யுள், விந்திய மலைக்கப்பாற்பட்ட வடநாட்டிற்கும், வணிகச் சாத்துக்கள் போய்வந்தமையைக் குறிப் பாய்த் தெரிவித்தல் காண்க.

நீர்வாணிகம்

"உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் 
 புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ" 
(அகம். 255:1-2)

என்பதால், கடலைப் பிளந்து செல்லும் மாபெருங் கப்பல்கள் தமிழகத்திற் செய்யப்பட்டமை அறியப்படும்.

   கப்பல்கள் தங்கும் துறைமுகத்தைச் சேர்ப்பு, கொண்கு என்பது இலக்கிய வழக்கு.

   கீழ் கடற்கரையில் கொற்கை, தொண்டி, புகார் (காவிரிப்பூம் பட்டினம்) என்னும் துறைநகர்களும், மேல் கடற்கரையில் வஞ்சி, முசிறி, தொண்டி என்னும் துறைநகர்களும் இருந்தன. இடைகழகக் காலத்தில் பாண்டியர் துறைநகர் குமரியாற்றின் கயவாயில் (estuary) அமைந்திருந்தது. அதன் தமிழ்ப் பெயர் (அலைவாயில்?) மறைந்து, அதன் மொழிபெயர்ப்பான கபாடபுரம் என்னும் வடசொல்லே இன்று இலக்கிய வழக்கிலிருக்கின்றது. வனைக் குறிக்கும் சொற்கும் வேறுபாடின்மையும், சாத்தன் என்னும் தெய்வத்தைக் குறிக்கும் சொல் வேறுபட்டிருப்பதும், கண்டு உண்மை தெளிக.

"குல்லைக் கண்ணி வடுகர் முனையது 
 பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் 
 மொழிபெயர் தேஎத்த ராயினும் 
 வழிபடல் சூழந்திசின் அவருடை நாட்டே." 
(குறுந். 11)

என்னும் குறுந்தொகைச் செய்யுள், வடுகநாட்டிற்கும்,

"நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண் 
 தங்கலர் வாழி தோழி 
 ............................................ 
 மாகெழு தானை வம்ப மோரியர் 
 புனைதேர் நேமி யுருளிய குறைத்த 
 இலங்குவெள் ளருவிய அறைவா யும்பர் 

 மாசில் வெண்கோட் டண்ணல் யானை 
 வாயுள் தப்பிய அருங்கேழ் வயப்புலி 
 மாநிலம் நெளியக் குத்திப் புகலொடு 
 காப்பில வைகும் தேக்கமல் சோலை 
 நிரம்பா நீளிடைப் போகி 
 அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே" 
(அகம். 25)

என்னும் நெடுந்தொகைச் செய்யுள், விந்திய மலைக்கப்பாற்பட்ட வடநாட்டிற்கும், வணிகச் சாத்துக்கள் போய்வந்தமையைக் குறிப் பாய்த் தெரிவித்தல் காண்க.

நீர்வாணிகம்

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

"உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் 
 புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ" 
(அகம். 255:1-2)

என்பதால், கடலைப் பிளந்து செல்லும் மாபெருங் கப்பல்கள் தமிழகத்திற் செய்யப்பட்டமை அறியப்படும்.

   கப்பல்கள் தங்கும் துறைமுகத்தைச் சேர்ப்பு, கொண்கு என்பது இலக்கிய வழக்கு.

   கீழ் கடற்கரையில் கொற்கை, தொண்டி, புகார் (காவிரிப்பூம் பட்டினம்) என்னும் துறைநகர்களும், மேல் கடற்கரையில் வஞ்சி, முசிறி, தொண்டி என்னும் துறைநகர்களும் இருந்தன. இடைகழகக் காலத்தில் பாண்டியர் துறைநகர் குமரியாற்றின் கயவாயில் (estuary) அமைந்திருந்தது. அதன் தமிழ்ப் பெயர் (அலைவாயில்?) மறைந்து, அதன் மொழிபெயர்ப்பான கபாடபுரம் என்னும் வடசொல்லே இன்று இலக்கிய வழக்கிலிருக்கின்றது. 

இரவில் வழிதப்பிச் செல்லும் கலங்கட்கு வழிகாட்டுவதற்கு, ஒவ்வொரு துறைநகரிலும் கலங்கரை விளக்கம் (Light house)இருந்தது.


"இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்" (சிலப்.6:141) 
"வான மூன்றிய மதலை போல 
 ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி 
 விண்பொர நிவந்த வேயா மாடத்து 
 இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி 
 உரவுநீர் அழுவத் தோடுகலங் கரையும் 
 துறை." 
(பெரும்பாண்.349-54)

   கடற்கரை, உள்நாட்டை நோக்க மிகத் தாழ்ந்த மட்டத்தி லிருப்பதால், துறைநகர்களெல்லாம் பட்டினம் எனப்பட்டன. 

   பதிதல் தாழ்ந்திருத்தல். பள்ளமான நிலத்தைப் பதிந்த நிலம் என்பர். பதி + அனம் = பதனம் - பத்தனம் - பட்டனம் - பட்டினம்.

தகரம் டகரமாவது பெருவழக்கு. 
ஒ.நோ: கொத்து மண்வெட்டி - கொட்டு மண்வெட்டி. 
களைக்கொத்து - களைக்கொட்டு. 
பொத்து - பொட்டு பொருத்து. 
வீரத்தானம்(வ.)-வீரட்டானம். 
பதனம் - படனம் = நோயாளியைப் பாதுகாத்தல்.

   இனி, பதனம் என்பது, கலங்கள் காற்றினாலும் கொள்ளைக் காரராலும் சேதமின்றிப் பாதுகாப்பாயிருக்குமிடம் என்றுமாம். 

   பதனம் = பாதுகாப்பு. 

   பட்டினம் என்பதைப் பட்டணம் என்பது உலக வழக்கு. இக் காலத்திற் பட்டணம் என்பது சென்னையைச் சிறப்பாய்க் குறித்தல் போல், அக்காலத்தில் பட்டினம் என்பது புகாரைச் சிறப்பாய்க் குறித்தது. பட்டினப்பாலை, பட்டினத்துப் பிள்ளையார் என்னும் வழக்குகளை நோக்குக. 

   ஒரு திணைக்கும் சிறப்பாயுரியதன்றி நகரப் பொதுப்பெயராய் வழங்கும் பதி என்னும் சொல், மக்கள் பதிவாய்(நிலையாய்) இருக்கும் இடத்தைக் குறிக்கும். பதிதல் நிலையாய்க் குடியிருத்தல். 

   கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து சேரும்போதும் அதை விட்டுப் புறப்படும்போதும், முரசங்கள் முழக்கப்பட்டன. 

"இன்னிசை முரசமுழங்கப் 
பொன்மலிந்த விழுப்பண்டம் 
நாடார நன்கிழிதரும் 
ஆடியற் பெருநாவாய்" 
(மதுரைக். 80 - 3)

   கப்பலில் வந்த பொருள்கள் கழிகளில் இயங்கும் தோணி களாற் கரை சேர்க்கப்பட்டன.

"கலந்தந்த பொற்பரிசம் 
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து" 
(புறம்.343: 5-6)

அக்காலத்திற் காவிரியாறு அகன்றும் ஆழ்ந்தும் இருந்ததால், பெருங்கப்பல்களும் கடலில் நிற்காது நேரே ஆற்றுமுகத்திற் புகுந்தன.

"........கூம்பொடு 
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது 
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்" 
(புறம்.30:10-2)

   "பாய் களையாது பரந்தோண்டா தென்பதனால், துறை நன்மை கூறியவாறாம்" என்று பழைய வுரை கூறுதல் காண்க. கரிகால் வளவன் காவிரிக்குக் கரை கட்டியது இங்குக் கருதத்தக்கது. 

   நீர்வணிகம் நிரம்ப நடைபெற்றதால், துறைமுகத்தில் எந் நேரமும் கப்பல்கள் நிறைந்திருந்தன.

"வெளிவிளங்கும் களிறுபோலத் 
தீம்புகார்த் திரைமுன்றுறைத் 
தூங்குநாவாய் துவன்றிருக்கை" ( 
பட்டினப். 172-4)

   ஏற்றுமதியும் இறக்குமதியும் ஏராளமாயிருந்ததால், நாள் தோறும் ஆயத்துறைக் கணக்கர் மூடைகளை நிறுத்து உல்கு (சுங்கம்) வாங்கி வேந்தன், முத்திரையைப் பொறித்துக் குன்றுபோற் குவித்து வைத்திருந்தனர். அவற்றிக்குக் கடுமையான காவலிருந்தது.

"வைகல்தொறும் அசைவின்றி 
உல்குசெயக் குறைபடாது 
............................ 
நீரினின்று நிலத்தேற்றவும் 
நிலத்தினின்று நீர்பரப்பவும் 
அளந்தறியாப் பலபண்டம் 
வரம்பறியாமை வந்தீண்டி 
அருங்கடிப் பெருங்காப்பின் 
வலியுடை வல்லணங்கினோன் 
புலிபொறித்துப் புறம்போக்கி 

மதிநிறைந்த மலிபண்டம் 

பொதிமூடைப் போரேறி 
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன் 
வரையாடு வருடைத் தோற்றம் போல" 
(பட்டினப்: 124-39)

   பல நாடுகளிலிருந்து வந்த பல்வேறு பொருள்கள், காவிரிப் பூம்பட்டினக் கடை மறுகில் மண்டிக் கிடந்தன.

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் 
காலின் வந்த கருங்கறி மூடையும் 
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் 
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் 
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் 
கங்கை வாரியும் காவிரிப் பயனும் 
ஈழத் துணவும் காழகத் தாக்கமும் 
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி 
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்" 
(பட்டினப்.155-63)

   நீர்வாணிகத்தின் பொருட்டு, பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு நாட்டுமக்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் வந்து கலந்தினிது வாழ்ந்தனர்.

"மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் 
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் 
முட்டாச் சிறப்பிற் பட்டினம்" 
(பட்டினப்.216-8) 
"கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும் 
பயனற வறியா யவனர் இருக்கையும் 
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் 
கலந்திருந் துறையும் இரலங்கு நீர்வரைப்பும்" 
(சிலப்.5:9-12) 

யவனர் கிரேக்கர். பின்பு உரோமரும் யவனர் எனப்பட்டார்.

மேலை யாரியக் கலப்பெயர்கள்

   கலங்கள் முதன்முதல் தமிழகத்திலேயே செய்யப்பட்டன. அதனால், பல கடல்துறைச் சொற்களும் கலத்துறைச் சொற்களும் மேலையாரியத்திலும் கீழையாரியத்திலும் தமிழாயிருக்கின்றன.

வாரி = நீர், பெரிய நீர் நிலையான கடல். L.mare, Skt. vari (வாரி) 
வாரணம்=கடல். 
L. marinus, E. marina, Skt. varuna (வாருண) 
வார்தல் = நீள்தல். வார் - வாரி, ஒ.நோ: நீள் - நீர். 
வார்- வாரணம் = பெரிய நீர் நிலை அல்லது வளைந்த நீர்நிலை.   

கரை = கடற்கரை. 
"நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப" (நாலடி. 224) 
E. shore = "Land that skirts sea or large body of water" (C.O.D.) 
c(k) - sh : ஒ.நோ: L. curtus - E. short 
படகு - LL. barca, Gk. baris, E. short. 
ML. barga, variation of barca. E. barge 

ட - ர. ஒ.நோ: பட்டடை - பட்டரை, அடுப்பங்கடை- அடுப்பங்கரை, படவர்-பரவர். 
கொடுக்கு 
ME.croc , ON. krokr, 
E. crook. குடகு - E. Coorg. 
நாவாய் - 
L. navis, Gk. naus, Skt. nau, E. navy (கப்பற்படை)

நாவுதல்-கொழித்தல். நாவாய் கடல்நீரைக் கொழித்துச் செல்வது.

"வங்கம் .....நீரிடைப் போழ" (255:1-2)

என்னும் அகப்பாட்டுப் பகுதியை நோக்குக. 

   கடலையும் கப்பலையும் காணாதவரும் நெடுகலும் நில வழியாய் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தவருமாகிய இந்திய ஆரியர், நௌ என்னும் (படகைக் குறிக்கும்) வடசொல்லினின்று நாவாய்ச் சொல் வந்ததென்பது, வாழைப்பழத் தொலியை நட்டால் வாழை முளைக்கும் என்பது போன்றதே.

   கப்பல் - L. scapha, Gk. skaphos, Ger. schiff, OHG. scif, OS., ON., Ice., Goth, skip, OE. scip, F. esquif, Sp., Port, esquife, It. schifo, E. skiff, ship. 
கப்புகள் (கிளைகள்) போன்ற பல பாய்மரங்களை யுடையது கப்பல்.

   L. galea, Gk. galaia, E.galley, galleon முதலிய சொற்களும், கலம் என்னும் தென்சொல்லோடு ஒப்புநோக்கத் தக்கன. 
   
    
OS., OE. segel, OHG. segal, ON, segl, E.sail என்னும் சொற்களும் சேலை என்பதை ஒத்திருப்பது கவனிக்கத் தக்கது. 

   இங்ஙனம், கட்டுமரம் 
(E. catamaran) முதல் கப்பல்வரை, பல வகைக் கலப்பெயர்கள் மேலை யாரிய மொழிகளில் தமிழாயுள்ளன. 

   நங்கூரம் - 
L. ancora, Gk. angkyra, Fr. ancre, E. anchor, Pers. langar. 
கவடி - 
E. cowry. 

மேனாடுகட்கு ஏற்றுமதியான பொருட்பெயர்கள்

தோகை(மயில்) - Heb. tuki, Ar.tavus. 
L. pavus, E.pea (-****, hen) 

அரிசி - 
Gk., L. oruza, It. riso, OF. ris, E. rice. 
இஞ்சிவேர் - 
Gk - ziggiberis. L. zingiber, 
OE. gingiber, E. ginger. Skt. srungavera

   இஞ்சிவேர் என்பது தெளிவாயிருக்கவும், வடமொழியாளர் (ச்ருங்க கொம்பு, வேர = வடிவம்) மான் கொம்பு போன்றது என்று தமிழரை ஏமாற்றியதுமன்றி, மேலையரையும்

இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். 
திப்பிலி - 
Gk. peperi. L. piper, ON, pipar, OHG. pfeffar, 
OE. piper, E. pepper, Skt. pippali. 
பன்னல் (பருத்தி) - L. punnus, cotton, It. panno, cloth 
கொட்டை (பஞ்சுச்சுருள்) - 
Ar. qutun, It. cotone, Fr. coton, E. Cotton. 
கொட்டை நூற்றல் என்பது பாண்டிநாட்டு வழக்கு. 
நாரந்தம் (நாரத்தை) - 
Ar. Pers. naranj, Fr., It. arancio, E. orange.

   கட்டுமரம், கலிக்கோ (calico), தேக்கு (teak), பச்சிலை (pac houli), வெற்றிலை (betel) முதலிய சொற்கள் கிழக்கிந்தியக் குழும்பார் காலத்திற் சென்றனவாகும். கோழிக்கோட்டிலிருந்து (Calicut) ஏற்றுமதியான துணி கலிக்கோ எனப்பட்டது. 

   குமரிக்கண்டத் தமிழக்கலவரும் கடலோடிகளும் உலக முழுதும் கலத்திற் சுற்றினமை வடவை 
(Aurora Borealis) என்னும் சொல்லாலும், தமிழர் கடல் வணிகத் தொன்மை,

"முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" (980)

என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும், அரபிநாட்டுக் குதிரையும் ஒட்டகமும் தொல்காப்பியத்திற் குறிக்கப்படுவதாலும், உணரப்படும். 

   பேரா. நீலகண்ட சாத்திரியாரும் தாம் எழுதிய திருவிசய 
(Sri Vijay) நாட்டு வரலாற்றுத் தோற்றுவாயில், "The more we learn the further goes back the history of eastern navigation and so far as we know, the Indian Ocean was the first centre of the oceanic activity of man" என்று, தமிழர் முதன் முதல் இந்துமா வாரியிற் கலஞ் செலுத்தியதையும் அவர் கடல் வாணிகத் தொன்மையையும் கூறாமற் கூறியிருத்தல் காண்க. 

"யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்" 
(அகம். 149: 9 - 10)

என்பது, கிரேக்கரும் உரோமரும் பொன் கொண்டு வந்து மிளகு வாங்கிச் சென்றதையும்.

"விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார் 
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ டனைத்தும்" 

(மதுரைக். 321 - 23)

என்பது அரபியரும் பிறரும் குதிரை கொண்டு வந்து அணிகலம் வாங்கிச் சென்றதையும் கூறும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முசிறித் துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 

முசிறி என்னும் ஊர் சேரநாட்டின் துறைமுகம். சங்ககாலத்தில் அரபிக்கடலின் கடற்கரையில் இருந்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவுக்குபெரிப்ளஸ் குறிப்பு பத்தி 54-ல் இது முசிறிஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரேக்க, ரோமானிய மக்களைத் தமிழ் நூல்கள் யவனர் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் கலம் என்னும் கப்பலில் பொன்னொடு வந்து மிளகொடு மீளும் வாணிகம் செய்தனர். முசிறித் துறைமுகத்தில் கடலோடு கலக்கும் ஆறு சுள்ளியம் பேரியாறு. இது இக்காலத்தில் பெரியாறு என வழங்கப்படுகிறது. இந்த ஆற்றின் வழியாக உள்நாட்டுக்குக்கூட கலம் செல்லுமாம். பாண்டிய அரசன் அடுபோர்ச் செழியன் இந்த முசிறியை முற்றுகையிட்டு அங்கு வந்த அழகிய படிமப் பொருள்களைக் கைப்பற்றிச் சென்றானாம். இது புலவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் தரும் செய்தி.[1]

பொலந்தார்க் குட்டுவன் முசிறியின் அரசன். அவ்வூர் மக்கள் அம்பியில் மீனை ஏற்றிச் சென்று பண்டமாற்றாக நெல்லை வாங்கி வருவர். அவற்றில் மிளகு மூட்டைகள் விற்பனைக்கு வரும். கலம் என்னும் கப்பலில் வந்த பொற்குவியல்களை உப்பங்கழித் தோணியால் கரைக்குக் கொண்டுவருவர். அங்குக் குவிந்துகிடக்கும் கடல்வளப் பொருள்களையும், மலைவளப் பொருள்களையும் அவ்வூர் அரசன் குட்டுவன் வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்குவான். சங்ககாலப் புலவர் பரணர் இதனைக் குறிப்பிடுகிறார்.[2]

கொடித்தேர்ச் செழியன் (தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்) சேரனின் முசிறியை குற்றுகையிட்டு அவனது யானைப்படையை அழித்தபோது சேரநாற்று மக்கள் துன்புற்றது போலத் தலைவன் பிரிவால் தலைவிக்குத் துன்பம் நேர்ந்துள்ளதாம். இது சங்ககாலப் புலவர் நக்கீரர் தரும் செய்தி [3]

முத்தொள்ளாயிரம் என்னும் சங்கம் மருவிய காலத்து நூல் இவ்வூர் மக்களை முசிறியார் எனக் குறிப்பிடுகிறார்.[4]

 

 

பெரியாறு அரபிக் கடலில் கலக்குமிடம்[தொகு]

முசிறித் துறைமுகம் சேர நார நாட்டின் துறைமுகம். இது பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் இருந்தது [5].[6]

தாலமி[தொகு]

தாலமி (இரண்டாம் நூற்றாண்டு) என்னும் கிரேக்க மாலுமி இதனைக் குறிப்பிடுகிறார். Muziris என்பது அவர் குறிப்பிடும் பெயர். ரோமானியர் இந்தியா வந்தபோது இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

ரோமானியப் பேரரசன் அகஸ்டஸ் நாணயங்கள் சேரநாட்டுப் பகுதியில் கிடைத்துள்ளன. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன.

வஞ்சி[தொகு]

வஞ்சி சேரநாட்டின் தலைநகரம். பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் வஞ்சி மரங்கள் அடர்ந்திருந்த ஊர்ப் பகுதிதான் வஞ்சி. இது சேரன் செங்குட்டுவனின் தலைநகராக விளங்கியதைச் சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது.

அஞ்சைக் களம்[தொகு]

கி.பி. எட்டாம் நூற்றாண்டு வாக்கில் ஆண்ட சேரமான் பெருமாள் நாயனார் காலத்தில் வஞ்சி நகரம் அஞ்சைக்களம் என்னும் பெயருடன் விளங்கியது.

கொடுங்கோளூர்[தொகு]

கடற்கோள் ஒன்றுக்குப் பின்னர் இதற்குக் கொடுங்கோள் ஊர் என்னும் பெயர் காரணப் பெயராய் அமைந்து விளங்கியது. தற்போது கேரளாவிற்கு உட்பட்ட கொடுங்கோளூர் மலையாள மொழியில் கொடுங்கல்லூர் (കൊടുങ്ങല്ലൂര്‍) என்று அழைக்கப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

  • முசிறி (திருச்சி மாவட்டம் காவிரியாற்றங்கரை)

அடிக்குறிப்பு[தொகு]

  1. Jump up சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் - அகநானூறு 149
  2. Jump up புறநானூறு 343
  3. Jump up கொய்சுவல் புரவி கொடித்தேர்ச் செழியன் முதுநீர் முன்றுறை முசிறி முற்றி களிறுபட எருக்கிய கல் என் ஞாட்பின் அரும்புண் உறுநரின் வருந்தினள். அகநானூறு 57
  4. Jump up முத்தொள்ளாயிரம் 9
  5. Jump up தாயங்கண்ணனார் - அகநானூறு 149
  6. Jump up பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் தென்கரையில் இருந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முசிறி



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நீலகண்ட நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 

நீலகண்ட நகரம் என்பது சங்ககாலச் சேரர் துறைமுகமாகும்.

ஆதாரங்கள்[தொகு]

இந்நகர் பெரிப்ளசு காலத்தில் நெல்சின்டா எனவும்[1][2] ப்ளைனி காலத்தில் நியாசின்டி எனவும்[3][4] டாலமி காலத்தில் இது மேல்கிந்தா எனவும்[5]குறிக்கப்பட்டுளது. இது பாண்டியர் ஆளுகைக்குள் இருந்ததாகவும் இங்கிருந்தே மிளகு செங்கடல் துறைமுகங்களுக்கு ஏற்றுமதை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

தற்போதைய இடம்[தொகு]

இந்நகரம் தற்போது இருக்கும் இடம் குறித்து அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அதில் கால்டுவெல் இந்நகரம் காநெற்றி எனவும்[6]யூலே இதை கொல்லம் எனவும்[7] கூறுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jump up

    Then come Naura (Kannur) and Tyndis, the first markets of Damirica or Limyrike, and then Muziris and Nelcynda, which are now of leading importance. Tyndis is of the Kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris, of the same kingdom, abounds in ships sent there with cargoes from Arabia, and by the Greeks; it is located on a river (River Periyar), distant from Tyndis by river and sea five hundred stadia, and up the river from the shore twenty stadia. Nelcynda is distant from Muziris by river and sea about five hundred stadia, and is of another Kingdom, the Pandian. This place also is situated on a river, about one hundred and twenty stadia from the sea...."

    The Periplus of the Erythraean Sea, 53-54
  2. Jump up John Watson McCrindle The commerce and navigation of the Erythraean sea. Thacker, Spink & co., 1879, p. 134.
  3. Jump up

    To those who are bound for இந்தியாOcelis (On the Red Sea) is the best place for embarkation. If the wind, called Hippalus (Southwest Monsoon), happens to be blowing it is possible to arrive in forty days at the nearest market in India, "Muziris" by name. This, however, is not a very desirable place for disembarkation, on account of the pirates which frequent its vicinity, where they occupy a place called Nitrias; nor, in fact, is it very rich in articles of merchandise. Besides, the road stead for shipping is a considerable distance from the shore, and the cargoes have to be conveyed in boats, either for loading or discharging. At the moment that I am writing these pages, the name of the king of this place is Caelobothras (Keralaputras). Another port, and a much more convenient one, is that which lies in the territory of the people called Neacyndi, Barace by name. Here king Pandion (Pandya) used to reign, dwelling at a considerable distance from the market in the interior, at a city known as Modiera (Madurai). The district from which pepper is carried down to Barace in boats hollowed out of a single tree is known as Cottonara (Kuttanadu).

  4. Jump up Study points to ancient trade connection in Central Travancore
  5. Jump up http://books.google.co.in/books?id=leHFqMQ9mw8C&pg=PA100#v=onepage&q&f=false
  6. Jump up Gazetteer of the Bombay Presidency: Kola'ba and Janjira. Govt. Central Press, 1883, p. 140.
  7. Jump up

    That Nelkynda cannot have been far from this is clear from the vicinity of the Red Hill of the Periplus. There can be little doubt that this is the bar of red laterite which, a short distance south of Quilon, cuts short the backwater navigation, and is thence called the Warkalle Barrier. It forms abrupt cliffs on the sea, without beach, and these cliffs are still known to seamen as the Red Cliffs. This is the only thing like a sea cliff from Mount D'Elv to Cape Comorin""

    Notes on the Oldest Records of the Sea-route to China from Western ASia


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்கள்

 

 

 

பாண்டியர் துறைமுகங்கள்
 http://kallarperavai.weebly.com/2997296930212965296530212965297529943021-298030092993301629903009296529693021296529953021.html

பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. இதற்கு முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சாட்சி. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர்த் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது. அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்ததை மார்க்கோ போலோவின் காயல்பட்டினம் குதிரை வணிகக் குறிப்புகளை கொண்டும், இபின் பட்டுடாவின் பாண்டியர்-ஏமன் கப்பல்கள் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம். குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்ததைக் கொண்டு அக்காலத்தில் பாண்டியர் உலகிலேயே சிறந்த வணிகத் துறைமுகங்களை பெற்றிருந்தது தெரிகிறது.


பிளைனி மற்றும் தாலமி மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர். முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர். செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.

கொற்கை துறைமுகம்
இந்த கொற்கைநகர் பொ.மு. 600 வரை பாண்டியர் தலைநகராய் இருந்தது. பின்னர் நெடுஞ்செழியன் காலத்திலேயே தற்போதைய மதுரைக்கு பாண்டியர் தலைநகர் மாற்றப்பட்டது. அதன்பிறகும் இந்நகர் சிறப்புக்குன்றாமல் பெரிப்ளூஸ், டாலமி காலம் வரை சிறந்த துறைமுக மற்றும் வணிக நகரமாய் திகழ்ந்தது. முத்துக்குளித்தலுக்கு இந்நகர் பெருஞ்சிறப்பைப் பெற்றிருந்ததை பெரிப்ளூஸின் செங்கடல் செலவு நூல் மூலமாக அறியலாம்

கொற்கை
 என்பது பாண்டிய முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாகும். பாண்டியர்களின் மூன்றாம் தலைநகரம் கொற்கை ஆகும். கடல் கொண்ட தென்னாட்டில் இருந்து மீண்ட பரதவர்கள் உருவாக்கியதே கொற்கை.கொற்கை பாண்டியர்களின் முத்து நகரம்,பாண்டிய நாட்டு வணிக துறைமுகமாகவும்,பாண்டியர்களின் கப்பல் படைத்தளமாகவும் இருந்தது.

  • சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.
கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம்.                பட்டினப்பாலை எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம்.சிறுபாணாற்றுப்படை நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம். 

பெரும்பாணாற்றுப்படை கொற்கை முத்து சிறந்த முத்தாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது. 
கொற்கை விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
தலையாங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதுர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான். கடலலை குவிக்கும் முத்துக்கள் செல்வர் ஏறிவரும் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும்.
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோர் தாம் உண்ணும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தருவர். 
முத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும் அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர். 
அங்கு உப்பு விளைவிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்களைப் போட்டு ஆட்டித் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவர்.
இந்தக் கொற்கைத் துறையில் காலையில் மலரும் நெய்தல் பூப் போலத் தன் காதலியின் கண் இருந்தது எனக் காதலன் ஒருவன் பாராட்டுகிறான். 
மறப்போர்ப் பாண்டியர் கொற்கையில் முத்துக்களைப் பாதுகாக்க வேங்கடமலைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த யானைகளைப் பயன்படுத்தினர்.
கொற்கைப் பகுதியில் பழையர் எனப்படும் குடிமக்கள் வாழ்ந்துவந்தனர். அந்தக் குடியைச் சேர்ந்த மகளிர் முத்துக்குளிக்கும் துறையை வழிபட்டு விழாக் கொண்டாடும்போது தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், கிளிஞ்சல்களையும் கொட்டிப் படையல் செய்து மகிழ்ந்தனர். 

கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிட்டு அது பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகவும் எழுதியுள்ளார்.

மறைமுகமான துறைமுகம் கொற்கை.
கொற்கை என்பது பண்டைய பாண்டியர்களின் தலைநகரம் என்று சங்க பாடல்கள் சான்றுக் கூறுகின்றன. கண்ணகி மதுரையை எரித்தப்போது பாண்டிய நாட்டின் மன்னராக இருந்த நெடுஞ்செழியனின் தம்பியான வெற்றிவேல் செழியன், கொற்கையை தலைநகராக கொண்டு ஆண்டு வந்துள்ளதாகச் சிலப்பதிகாரம் செப்பிகின்றது. இந்த கொன்றை நகர் மிகப்பெரியக் கடல்துறைமுகமாக இருந்திருகின்றது. சீன யாத்திரிகர் ''யுவான் சுவாங் அவர்களின் குறிப்புகளில் கூட கொற்கைப் பற்றி சில செய்திகள் கூறப்பட்டிருகின்றது . ஆனால் இன்று தமிழ்நாட்டு கடற்புர மாற்றங்களால் துறைமுகமாக இருந்த இந்த நகரம் இன்று ஒரு சிற்றூராக மாறியுள்ளது. ஒருக் காலத்தில் கொற்கை நகரை நீராட்டிய கடல் இன்று 6 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ளது. முன்பு, கொற்கை பக்கமாகத்தான் தாமிரபரணி ஆறு பாய்ந்து கொண்டிருந்ததாம். ஆறு வழியாக, கடலுக்கு பாதை. இன்றோ ஆறும் இல்லை. கடலும் இல்லை. 

மடல் விரிந்த வாழைகள், தாரைகள் நீந்தும் குளம், மங்கையின் மார்பிலிருந்து நழுவிய சிற்றாடை போல் நெளியும் சிற்றோடை என மருதநிலத்தின் இலக்கணம் மாறாத அந்த சிற்றூர்தான் அலையடிக்கும் கடலும், நீர்யானை போன்ற நாவாய்களும், சங்கறுக்கும் ஒலியும், முத்துக்கு விலை பேசும் சத்தச் சலனமும் மிக்க நெய்தல் நிலஞ்சார்ந்த பட்டினப்பாக்கமாக விளங்கியதென்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும்.

இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்மதில் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லென
கலிகெழு கொற்கை
என உயர்வு நவிற்சி இல்லாத சங்கப்பாடலே சான்று பகர்ந்தபின் அதை நம்பித்தான் ஆகவேண்டும்.

காலத்துக்கு ஆற்றல் அதிகம். அது மானுட வரலாற்றின் பக்கங்களை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் புரட்டிப் போட்டுவிடும். மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கை அம்பெருந்துறை‘ என அகநானூறு அடையாளம் காட்டும் பாண்டியர்களின் பழம்பதியான கொற்கை தான் இவ்வாறு உருமாறிக்கிடக்கிறது.

கி.மு. 4&ம் நூற்றாண்டு முதல் கி.பி. 4&ம் நூற்றாண்டு வரை நூற்றுக்கும் மேற்பட்ட நம்நாட்டுப்புலவர்களும், வெளிநாட்டு பயணிகளும் கொற்கையின் புகழைப் பாடியிருக்கிறார்கள்.

கொற்கை சரித்திரத்துக்கு சான்று பகரும் பல இடங்களை மன்னர்கள் வேதியர்களுக்கு கோ தானம், பூதானம் செய்து தானமாக வழங்கும் ஊர்களுக்கு ‘மங்கலம் ’என்று பெயர்.

சேந்தமங்கலம், மாறமங்கலம், ஆறுமுகமங்கலம், மங்கலக்குறிச்சி என்று பாண்டிய மன்னர்கள் தானம் வழங்கிய ஊர்களில் சேந்தன், மாறன் என்பதெல்லாம் பாண்டியனின் பட்டப்பெயர்கள். ஆறுமுகமங்கலம் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால் (ஆறு+முக +மங்கலம்) என பெயர் பெற்றது. திருவழுதிநாடார்விளை, கோவன்காடு என்றெல்லாம் பாண்டியன் பெயரைச் சொல்லும் ஊர்கள் கொற்கையை சுற்றி உண்டு.

அக்காலத்தில் அனைத்து ராஜ்யங்களுக்கும் இரு தலைநகரங்கள் இருந்தன. சேரருக்கு வஞ்சி, முசிறி, சோழருக்கு உறையூர், பூம்புகார், பாண்டியர்களுக்கு கொற்கை, மதுரை. பெரும்பாலும் ஒரு நகரம் நிதி ஆதாரத்துக்கும், மற்றொரு நகரம் நிர்வாகத்துக்கும் வசதியாக இருந்தது.

கணிசமான கடல் வருமானம் இருந்ததால் பாண்டிய இளவரசர்கள் கொற்கையில் தங்கியிருந்து நிதி நிர்வாகம் செய்திருக்கின்றனர். மற்ற மன்னர்களைப் போலன்றி பாண்டியர்களுக்கென்று ஒரு மாறுபட்ட குணம் உண்டு. இவர்கள் முன்னோர்கள் குன்றுபோல் சேர்த்த சொத்தை குந்தியிருந்து சாப்பிட்டு அழிக்கமாட்டார்கள். புதிது ,புதிதாக வருவாயை பெருக்குவார்கள் என அரபி பயணி இதான் பதூதா தன் பயணக்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். 

கொற்கைக்குமிக அண்மையில் அக்காசாலை என்று அழைக்கப்படுகிற அக்கசாலை இருக்கிறது. இது பாண்டியர்களின் ரிசர்வ் வங்கி. (அக்கம்= பாண்டவர்கள் வெளியிட்ட நாணயம். அதை அச்சடிக்கும் (தொழிற்)சாலை அக்கசாலை).இந்தப்பகுதியில் ‘ ஏர வெற்றிவேல்செழியன் ’என்று வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட செப்புக்காசுகள் கிடைத்துள்ளன. இந்த அக்கசாலை கொல்லர்களின் வம்சாவளியினர் இன்றளவும் ஏரலில் வசிக்கின்றனர். கண்ணகியின் காற்சிலம்பை திருடி மன்னனின் கோபத்துக்கு முன்னோர்கள் ஆளாகிவிட்டதால் அஞ்சி இடம்பெயர்ந்துவிட்டதாக இவர்கள் கூறுகிறார்கள்.

உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது.காலங்காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்க முடியாத சான்றுகள்.

கொற்கை குளம் நடுவே கோவிலொன்று உள்ளது. அதில் உறையும் தெய்வத்தை வெற்றிச் செல்வியம்மன் என்றும், வெற்றிச் செழியஅம்மன் என்றும் இருவிதமாக அழைக்கிறார்கள். கி.பி. 2&ம் நூற்றாண்டளவில் வடிவமைத்த சிலை இங்கு இருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் தான் சிலப்பதிகாரம் அரங்கேறியிருந்தது. அதில் கூறப்படும் வெற்றிச்செழியன் எனும் பாண்டியனின் பெயரால் அக்கோயில் வழங்கியிருக்கலாம்.
ஆள்பவர்கள் பெயரில் ஆண்டவரை அழைப்பது அக்கால மரபு.

கொற்கை குளத்துக்கோவிலுக்குள் முற்காலத்தில் கண்ணகி சிலையே இக்கோவில் கருவறையில் இருந்ததாக கூறுகிறார்கள். கண்ணகி புகழ் பரவத்தொடங்கிய காலகட்டத்தில், தன் முன்னோர் இழைத்த அநீதிக்காக பொங்கிய கண்ணகியின் கோபத்தை தணிக்க பாண்டியன் இந்த ஆலயத்தை அமைத்துள்ளான்.

கி.பி. முதல் நூற்றாண்டின் முடிவுக் காலத்தில்தான் கண்ணகிக்கு நீதி பிழைத்த நெடுஞ்செழியன் வாழ்ந்தான். அவனது வழித்தோன்றலான வெற்றிச்செழியன், திருட்டுப்பழியை கண்ணகி மேல்சுமத்தி தன் குலக்கொம்பை தலை கவிழச்செய்த கொல்லர்களின் தலைவிழச்செய்ய வேண்டுமென்று வன்மம் கொண்டான்.

எனவே, கற்புத் தெய்வத்தின் ஆத்திரம் ஆற, அக்கசாலையில் வாழ்ந்த ஆயிரம் கொல்லர்களை அவள் கோவில் முன்பு கழுவேற்றினான். நரபலி கொடுத்த பின் வெறுமனே விட்டுவிடக்கூடாது என்பதற்காக பின்னாட்களில் எருமைகள் ஆயிரம் பலியிட்டதாக கூறுகிறார்கள். இங்கு எழுந்தருளியுள்ள வெற்றிச்செழிய அம்மன் சிலையின் தலை சற்று சாய்ந்துள்ளது. எருமைப்பலியை அம்மன் ஏற்காததால் அவள் தலை திரும்பி இருப்பதாகவும் ஐதீகம் நிலவுகிறது.

ஊர் மந்தையில் வன்னிமரம் ஒன்று வயோதிபத்தால் தரை சாய்ந்து கிடக்கிறது. அதன் வயதை 2000 ஆண்டுகள் என்று தொல்லியல் துறையினர் கணிக்கின்றனர். மரத்தின் அருகே வீரன் ஒருவனின் நடுகல்லும் சற்றுத்தள்ளி சமண முனிவர் சிலையும் கிடைத்திருக்கிறது. சுரங்கப்பாதை ஒன்றும் தூர்ந்து கிடக்கிறது.

ஊருக்கு வடமேற்கில் ஓடும் சிற்றோடையின் நடுவே ‘கன்னிமார் குட்டம்’ என்று அழைக்கப்படும் குறுநீர்த்தேக்கம் உள்ளது. பாண்டிய இளவரசிகள் இதில் குளித்ததாக பேசிக்கொள்கிறார்கள். ஊருக்குள் எங்கு தோண்டினாலும் சங்கும், சிப்பியும் கிடைக்கின்றன. பெரிய, பெரிய வெண்சங்குகளை வீடுகளிலும் தோட்டங்களிலும் வைத்து அலங்கரித்திருக்கிறார்கள்.

அறுக்கப்பட்ட சங்கும், சங்கு வளையல்களும் அகழ்வாராய்ச்சிக்குழுவினருக்கு மூட்டை மூட்டையாய் கிடைத்திருப்பதால் சங்கு ஆபரணம் தயாரிக்கும் தொழிற்சாலை அங்கு இருந்ததை அறிந்துள்ளனர்.

சங்கு குளிப்போர் அமரும் இருக்கைகளையும், கள் அருந்துவோர் உறையும் சிறிய ஊர்களையும் உடையது கொற்கை என்ற சங்க பாடலுக்கு ஆதாரத்தை சங்கொலித்து கூறுகின்றன இந்த சான்றுகள். சங்கும் கள்ளும் கொற்கை கடற்கரையில் சங்கமித்திருக்கின்றன.

முத்து வணிகம் கி.பி.1ம், 2ம் நூற்றாண்டுகளில் மும்முரமாக இருந்துள்ளது. முத்தோடு குரங்கும், மயில் தோகையும், வாசனை திரவியங்களும் கிரேக்க, ரோம் தேசங்களுக்கு கொற்கை துறைமுகத்திலிருந்து போயிருக்கிறது. ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்,கொற்கை பொருட்கள் மீது மக்களுக்கு ஏற்பட்ட மோகத்தால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிடும் எனப்பயந்து இறக்குமதிக்கு தடை விதித்துள்ளான்.
ஆதித்தமிழர்களின் கட்டடத்துக்கு ஆதாரக் கல்லாக விளங்கிய பெரிய சைஸ் செங்கல்கள், ஓடுகள் கொற்கை குளத்துக்குள் கிடைத்திருக்கின்றன. முதுமக்கள் தாழியும் நிறைய கிடைத்திருப்பதால் இப்போதைய குளம் அப்போதைய இடுகாடு என்போரும் இருக்கிறார்கள்.

மண்ணால் செய்த வலிமையான உறைகிணறுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக உறைக்கிணறுகள் எளிதில் மண் தூருகின்ற நெய்தல், பாலைப் பகுதிகளில்தான் அமைக்கப்படும் என்பதால் கொற்கை துறைமுகப்பகுதி என்பது உறுதியாகிறது.

அகரம் அருகே துறைமுக சாஸ்தா கோவில் ஒன்று உள்ளது. அப்போதைய கொற்கை கோட்டத்துக்கு உட்பட்ட உமரிக்காட்டில் கோட்டை வாழ் ஐயன் கோவில் உள்ளது. ஆறுமுக மங்கலத்தில் பெரும்படை சாஸ்தா கோவில் உள்ளது.புன்னக்காயல் பக்கம் கோட்டைமூலக்காடு என்ற இடம் உள்ளது. இவை எல்லாமே பாண்டிய ராஜாங்க படை, பல பராக்கிரமங்களோடு தொடர்புடையது.

பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாமே பாண்டியர்களை கொற்கையோடு தொடர்பு படுத்தி பேசுகின்றன.‘மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கையம் பெருந்துறை’ என்பது அகநானூறு.‘நற்றிறம் படரா கொற்கை வேந்தே’என்கிறாள் சிலப்பதிகார கண்ணகி.

குமரித் தென் கடலில் கடல்கோளால் அழிந்த பண்டைய பாண்டிய நாட்டிலிருந்து மறுபிறவி எடுத்ததுபோல் மீண்ட பாண்டியர்கள் வடக்கு நோக்கி மறுவாழ்வு தேடி வந்தனர். கடலோடிகளான அவர்கள் கண்டறிந்து தங்கிய இடம் தான் கொற்கை. இனம் அழிந்த பெருந்துயரிலிருந்து நீங்கி வம்சவிருத்தி செய்து வருவாய் ஈட்டி அரசாட்சியை அடைந்த நிகழ்வுகள் கொற்கையில் இருந்தபோதே நடந்திருக்க வேண்டும். கடல் பின்வாங்கி கொற்கை தனது சிறப்பை இழந்தபின்பும் நன்றி மறவா நற்பண்பு காரணமாக எங்கு சென்றாலும் கொற்றம் அளித்த கொற்கையை நினைவு கூர்ந்துள்ளனர்.

செயற்கை கோள் எடுத்த தூத்துக்குடி படம் மூலம் ஒரு உண்மைதெரிந்துள்ளது. தற்போது ஏரலுக்கு தெற்கே ஓடும் தாமிரபரணி ஆறு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஓடியுள்ளது. அதன் முகத்துவாரத்தில் இருந்ததால்தான் ஆறுமுகமங்கலத்துக்கு அப்பெயர் வந்தது. கொற்கைக்கு 1 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்த கனவி சமுத்திரத்தில் தாமிரபரணி கடலில் கலந்திருக்கவேண்டும் என்பது நிபுணர்கள் கணிப்பு. ஏரலுக்கு வடக்கே நட்டாத்தியம்மன் கோவில் ஒன்று உள்ளது. நடு ஆற்றுக்குள் அமைந்த கோவிலே நட்டாத்தியம்மன் கோவில்.

‘ கொல் ’என்றால் முத்து. கொற்கை முத்துக்குளித்துறைமுக நகரம்.‘ கபாடம் ’என்றாலும் முத்து என்று ஒரு பொருள் உண்டு. பாண்டியர்களின் பழமையான தலை நகரமான கபாடபுரம் பொருநை நதிக்கரையில் தான் அமைந்திருந்ததாக சொல்பவர்களும் உண்டு. ராமாயாணமும், மகாபாரதமும், கவுடில்யரின் அர்த்தசாஸ்திரமும் குறிப்பிடும் கபாட மாநகர் கொற்கை தானா? கடல்கொண்ட லெமூரியாவையும், பூம்புகாரையும் ஆராயத்தான் அரசு தயங்குகிறது என்றால் மண்கொண்ட கொற்கையை யாவது விரிவாக ஆய்வு செய்யவேண்டும்.

அழகன்குளம் துறைமுகம்
இங்கு கிடைத்த ரோமானியர் காசுகள், மட்கலன்கள், பானை ஓடுகள் போன்றவை இந்த அழகன்குளத்தின் தொடர்ச்சியான வரலாறுகளை கி.மு. 4 - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரையிலும் அறிய உதவுகிறது. அதன்படி இதுவும் ஒரு சங்ககாலத் துறைமுகம். இதன் பெயர் நேரடியாக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை ஆயினும் தாலமி குறிப்பிடும் அர்கெய்ரு என்ற நகரம் இதுவாக இருக்கலாம். ஆனாலும் இந்த ஆர்கெய்ரு சோழரின் உறையூர் என்பது நீலகண்ட சாஸ்திரி போன்றோரின் கருத்து.

மருங்கூர் துறைமுகம்
இம்மருங்கூர் மருங்கூர்ப் பட்டினம் மற்றும் ஊணூர் என்று இரண்டு துறைமுகப் பட்டினங்களை அடக்கியது. தாலமி இதை சாலூர் எனக்குறிக்கிறார்.

நீலகண்ட நகரம் துறைமுகம்
இந்நகரம் சேர நாட்டிலிருந்தாலும் பிளைனி காலத்தில் மட்டும் இது பாண்டியர் துறைமுகமாக திகழ்ந்தது. இங்கிருந்தே செங்கடல் துறைமுகங்களுக்கு மிளகு ஏற்றுமதி அதிகளவு நடந்ததாகத் தெரிகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 



சங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளர காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே 25க்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் பட்டினம் என்ற பின்னொட்டு பெயரோடு தோன்றின. 

செங்கடல் செலவு குறிப்பிடும் துறைமுகங்கள்
முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட துறைமுகப் பட்டினங்கள் பற்றி அறிய தொண்டி, பெரியபட்டினம், பழைய காயல், போன்ற பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளும், அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா போன்ற பல்வேறு நாட்டவர் குறிப்புகளும், கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் போன்றவையும் துணைபுரிகின்றன.

இந்த துறைமுகங்களிலிருந்து நெல், அரிசி, உப்பு, அவிழாகட்டு, பயித்தம் பருப்பு, அவரை, துவரை, ஆமணக்கு, எள், கடுகு, சீரகம், வெங்காயம், புளி, கருப்பட்டி, மஞ்சள், பாக்கு, மிளகு, சுக்கு, தேன், சந்தனம், அகில், பன்னீர், கற்பூரம், சாந்து, புனுகு, கஸ்தூரி, சவ்வாது, புடவை, பருத்திப் புடவை, நூல் புடவை, நொய் புடவை, பரும்புடவை, பட்டு, நூல், கொடி, கணபம், இரும்பு, செம்பு, வெண்கலம், குதிரை, யானை, ஒட்டகம், சவுரி மயிர், முத்து, சிப்பி, மணிகள் போன்றவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது.

திருச்செந்தூர். (கபாடபுரம்)
தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் வட்டத்தில் திருச்செந்தூர் [THIRUCHENDUR] அமைந்துள்ளது. கடற்கரைக்கோயில் நகரமானதிருச்செந்தூர் ,வடக்கு அட்ச ரேகை 8.483 டிகிரியும் கிழக்குதீர்க்கரேகை 78-1167 டிகிரி என்னும் பாகையில் அமைந்துள்ளது.சங்க காலச்சிறப்பு மிக்க இவ்ஊரின் எல்கைகளாக இவ்வூரோடும் முருகப்பெருமானோடும்
தொடர்புடைய சோனகன்விளை[SONAGANVILAI],
அம்மன்புரம்[AMMANPURAM],
குலசேகரன்பட்டினம்[KULASEKARANPATINAM],
வீரபாண்டியன்பட்டினம்[VIRAPANDIANPATINAM],
காயல்பட்டினம்[KAYALPATINAM]
ஆறுமுகனேரி[ARUMUGANERI] ஆகிய ஊர்கள் உள்ளன.

கோயிலின் மூலவர் உற்சவர் விபரம்
மூலவர் -அருள்மிகு பாலசுப்பிரமணியர்
உற்சவர் -அருள்மிகு சண்முகர்,ஜெயந்திநாதர்
               குமாரவிடங்கப்பெருமாள்,
               அலைவாய் உகந்தபெருமாள்
அம்மன் -அருள்மிகு வள்ளி ,அருள்மிகு தெய்வானை
தீர்த்தம் -கந்தபுச்கரணி [நாழிக்கிணறு],சரவனப்பொய்கை
தலமரம் -பன்னீர் மரம்
பாடியவர்கள் -நக்கீரர்,பகழிக்கூத்தர்,அருணகிரிநாதர்,
              குமரகுருபரர்,வென்றிமாலைக் கவிராயர் 

பழமையும் சிறப்பும்-பெயர்க் காரணமும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தின் தென் கோடியில் தலைசிறந்த கடற்கரைப்பட்டினமாக விளங்கிய கபாடபுரம்,இன்றைய திருச்செந்தூராகும்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில்அமைந்துள்ள திருச்செந்தூர் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப் பகுதியாகும்.ஓயாமல்அலைகள் அடித்துக் கொண்டிருந்ததால்  அலைவாய்  என்றும் முற்காலத்தில் அழைக்கப்பட்டது.
            
1986 வரை திருநெல்வேலி மாவட்டத்திலும் தற்போது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகப்பிரிவிலும் உள்ள திருச்செந்தூர்,சங்ககாலத்தில் குட நாடு என்ற நிர்வாகப்பிரிவில் இருந்தது. ஊரின் மேற்கே பசுமையான வயல் வெளிகளும்,தோட்டங்களும், தெற்கே உவர் நிலங்களும் காணப்படுகின்றன. இவ்விருவகை நிலங்களுக்கும் மகடம் வைத்தாற்போல பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குன்று உள்ளது.வெள்ளைப் பாறைகளால் ஆன இக்குன்றுசந்தனாமலை என்று போற்றப்படுகிறது.குறிஞ்சி நிலக்கடவுளான முருகப்பெருமான் இம் மலையில்அமர்ந்துள்ளார்.இம்மலை மீது அமையப் பெற்ற 134 அடிக்கோபுரம்திருச்செந்தூருக்கு வெகு தொலைவில் வரும் போதே நம்மை வா...வா என்றழைக்கும்.கையெடுத்து தலை மீது வைத்துத் திசைநோக்கித் தொழ வைக்கும்.

பெயராய்வு

மக்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து இனங் காண பெயர்களை வழங்கியது போல தாங்கள் வசித்த இடத்திற்கும் பெயரிட்டுப் பெருமை கொண்டனர்.இயற்கையோடு தங்கள் வாழ்வு நெறி முறைகளை இணைத்துக் கொண்டனர்.இயற்கையோடுதங்களுடைய தங்களுடைய தெய்வங்களை வழிபட்டுக் கொண்டனர்.இயற்கைப் பெயரினை தாங்கள் வாழ்ந்த இடத்திற்கு இட்டுக்கொண்டனர்.இவ்வடிப்படையிலேயே திருச்செந்தூர் என்ற பெயர் பல்வேறு மாற்றங்களைப் பெற்று உருவாயிற்று.

கபாடபுரம்
ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பாண்டிய மன்னர்களின்
இரண்டாம் தமிழ்ச்சங்கம் செயல்பட்ட கபாடபுரம் என்ற 
தமிழூர் திருச்செந்தூர் ஆகும்.கபாடம் என்றால் முத்து.உலகம் போற்றிய ஒளிவிடும் முத்து விளைந்த பகுதியாக திருச்செந்தூரின் கடற்பகுதி முன்னாளில் விளங்கியது.
  
கபாடபுரம் பற்றி வால்மீகி தான் இயற்றிய இராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தில் இல்ங்கை நோக்கிச்செல்ல இருந்த அனுமனுக்கு சில அறிவுரைகளைக் கூறும் போது,
      ‘ததோ ஹேமமயம் திவ்யம் முக்தாமணி விபூஸ்யதம்
      முக்தா கபாடம் பாண்ட்யானாம் கதா திருக்யசவானரா’
என்று கூறுகிறார்.
    
‘தமிழ் நாட்டில் தென்பாண்டி நாடான மதுரையைக் கடந்து நீ செல்லும்போது முத்லில் ஒரு ஊர் வரும்.அங்கு நீ இறங்கி விடாதே.இறங்கி விட்டால் அந்த ஊரை விட்டு நீ இலங்கைசெல்ல உன் மனம் விரும்பாது.ஏனெனில் அங்குள்ள நாகரீகமும்;பண்பாடும் உன்னை இழுக்கும் எனவே அங்குநிற்காமல் தொடர்ந்து போ அதற்கு அடுத்தாற்போல இலங்கைவரும்’ இராமாயணக் காலத்தில் கபாடபுரம் இருந்தது என்பதும் உறுதியாகிறது.
  
முதலில் தமிழ்ச்சங்கம் குமரி நாட்டில் தென் மதுரையில் செயல்பட்டது. கடல் கோளினால குமரி நாடு அழியவே வடதிசை நோக்கிக் . குடிபெயர்ந்தனர். குமரியாற்றிற்கும் தாமிரபரணிக்குமிடையே உள்ள கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் தழிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.பாண்டிய மன்னருள் அப்பேறு பெற்றவன் வெண்தேர்ச்செழியன் ஆவான்.அவனைத் தொடர்ந்து 59 பாண்டியமன்னர்கள் ஆண்டனர். அந்நாளிலும் கடல் கோள்[சுனாமி]ஏற்படவே, கடைசி அரசனான முடத்திருமாறபாண்டியன் தப்பிப் பிழைத்து தற்போதுள்ள மதுரையைத் தலைநகராகக் கொண்டு கடைச்சங்கத்தைத் தோற்றுவித்தான். இஃது தமிழறிஞர்களின்கூற்று ஆகும்.


இரண்டாம் தமழ்ச்சங்கத்தின் காலம் கி.மு.6804 முதல்கி.மு.3105 வரை ஆகும்.3700 ஆண்டுகள் கபாடபுரம் பொருணை[தாமிரபரணி]ஆற்றின் முகத்துவாரத்தில் [அலைவாய்]இருந்தது.இச்சங்கத்தில் அகத்தியர்,குன்றம் எறிந்தகுமரவேள்[முருகன்] ஆகியோர் புலவர்களாக இருந்தனர்.73 புலவர்கள் கவி பாடி அரங்கேற்றினர்.கபாடபுரம் என்றபெயர் காலவெள்ளத்தில் வழக்கொழிந்து போனது.   திருச்செந்தூரில் காண்ப்படும் கல்வெட்டொன்று, ‘திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்’  என்று இவ்வூரைக்
குறிப்பிடுகிறது. இப்பெயரும் வழக்கொழிந்து போயிற்று.சதுர் வேதம் என்றால் நான்கு வேதங்களாகும்.நான்கு வேதங்களும் இடையறாது ஒலிக்கும் ஊர் என்றும்,அவ் வேதங்களை ஓதும்அந்தணர்களுக்கு[வேதியர்களுக்கு]தானமாகக் கொடுக்கப் பெற்றஊர் என்றும் பொருள்படும்.வேதியர்களான திரிசுதந்திரர்கள்2000 மக்கள் திருச்செந்தூரிலிருந்து முருகனுக்குத் தொண்டுசெய்து வந்தனர்.இன்றும் அவர்களது வாரிசுகள் உள்ளனர்.

பாண்டியர் துறைமுகங்கள் 
சங்ககாலம் தொட்டேமுத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே  களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின்ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. இதற்கு முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்டதுறைமுகப்பட்டினங்களே சாட்சி. இப்பட்டினங்களால்சங்ககாலப் பாண்டியர்த்  துறைமுகங்களான  கொற்கை,  மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது. அதே நேரம்  காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்ததை மார்க்கோ போலோவின்   காயல்பட்டினம்  குதிரை வணிகக் குறிப்புகளை கொண்டும், இபின் பட்டுடாவின் பாண்டியர்-ஏமன் கப்பல்கள் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம்.குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாகமார்க்கோ போலோ குறித்ததைக் கொண்டு அக்காலத்தில் பாண்டியர் உலகிலேயே சிறந்த வணிகத் துறைமுகங்களை பெற்றிருந்தது தெரிகிறது.

பண்டைய துறைமுகங்கள்.
பிளைனி மற்றும் தாலமி மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர். முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர்.  செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான  நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை,அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.

துறைமுகங்கள.
கொற்கை
இந்த கொற்கை நகர் பொ.மு. 600 வரை பாண்டியர் தலைநகராய் இருந்தது.[4] பின்னர் நெடுஞ்செழியன் காலத்திலேயே தற்போதைய மதுரைக்கு பாண்டியர் தலைநகர் மாற்றப்பட்டது.[5] அதன்பிறகும் இந்நகர் சிறப்புக்குன்றாமல் பெரிப்ளூஸ், டாலமி காலம் வரை சிறந்த துறைமுக மற்றும் வணிக நகரமாய் திகழ்ந்தது. முத்துக்குளித்தலுக்கு இந்நகர் பெருஞ்சிறப்பைப் பெற்றிருந்ததை பெரிப்ளூஸின் செங்கடல் செலவு நூல் மூலமாக அறியலாம்.[6] கொற்கையில் கிடைத்த தமிழி எழுத்து படித்த பானை ஓட்டின் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் கி.மு. 785 ± 95 எனக் கணிக்கப்பட்டது. அப்பானை ஒட்டுடன் கிடைத்த கரித்துண்டு இது அப்போதே துறைமுகமாய் விளங்கியதை காட்டுகிறது.[7] இதிலிருந்து கொற்கை கி.மு. 1000 தொட்டே செயல்ப்படதாகக் கூறலாம்.

முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர் துறைமுகங்கள்.
சங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளர காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே 25க்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் பட்டினம்என்ற பின்னொட்டு பெயரோடு தோன்றின. அவை,

பட்டியல்
பெயர் (நாடு). காலம்தற்போதைய பெயர் அல்லது வட்டம். ஆற்றுக்கழிமுகம்

01. தொண்டி (முத்தூர்க்கூற்றம்). பொ.பி. 875க்கு முன் - 1368. திருவாடானை வட்டம்.

02. மானவீரப்பட்டினம் (மானவீரவளநாடு). பொ.பி. 875க்கு முன்மருதூர், சாத்தான்குளம்
       வட்டம். கருமானியாறு.

03. பாசிப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்).பொ.பி. 875 - 1090. திருவாடானை வட்டம்.   
       பாசியாறு.

04. உலகமாதேவிப்பட்டினம் (செவ்விருக்கை நாடு)பொ.பி. 875 - 1368 இளங்கோமங்கலம்,
       திருவாடானை வட்டம்.

05. நானாதேசிப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்). பொ.பி. 875 - 1368. வீரகேரளபுரம், 
       திருவாடானை வட்டம்.

06. பவித்ரமாணிக்கப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 875 - 1368. இராமநாதபுரம் 
       வட்டம்.கப்பலாறு.

07. மேன்தோன்றிப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 875 - 1090. இராமநாதபுரம் 
       வட்டம். 

08. கேரளாந்தகபுரம் (குரங்குடிநாடு). பொ.பி. 875 - 1090. பட்டினமருதூர்,விளாத்திக்குளம்
       வட்டம். மலட்டாறு.

09. குலோத்துங்கச்சோழப்பட்டினம்(மிழலைக்கூற்றம்). பொ.பி. 1090 - 1271 
       மணமேல்குடி, ஆவுடையார்கோயில் வட்டம். வெள்ளாறு

10. பெரியபட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1090 - 1368. இராமநாதபுரம் வட்டம்.
       கப்பலாறு.

11. குலசேகரப்பட்டினம் (மானவீரவளநாடு). பொ.பி. 1090 - 1368. சாத்தான்குளம் வட்டம். 
       கருமானியாறு.

12. ஆவுடையார்பட்டினம் (மிழலைக்கூற்றம்). பொ.பி. 1271 - 1368. ஆவுடையார்கோயில் 
       வட்டம். வெள்ளாறு

13. சுந்தரபாண்டியன்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்). பொ.பி. 1271 - 1368. திருவாடானை 
       வட்டம். பாம்பாறு. 

14. நீர்ப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்). பொ.பி. 1271 - 1368கண்ணங்குடி, திருவாடானை 
      வட்டம்.

15. புதுப்பட்டினம் (செவ்விருக்கைநாடு). பொ.பி. 1271 - 1368. திருவாடானை வட்டம்.

16. சீவல்லபப்பட்டினம் (செவ்விருக்கைநாடு). பொ.பி. 1271 - 1368. புறக்குடி, 
       திருவாடானை வட்டம்.

17. நினைத்ததை முடித்தான் பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1271 - 1368. கீழக்கரை,
      இராமநாதபுரம் வட்டம்

18. குண்டாறுஇருவரைவென்றான் பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1271 - 1368. 
       இராமநாதபுரம் வட்டம்.

19. வல்லபப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1271 - 1368. ஏறிக்கிட்டூர்,   
       இராமநாதபுரம் வட்டம்.

20. தத்தையார்ப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1271 - 1368. இராமநாதபுரம் வட்டம்

21. முடிவீரன்பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1271 - 1368. இராமநாதபுரம் வட்டம்.

22. கோதண்டராமன்பட்டினம் (கீழ்செம்பில்நாடு). பொ.பி. 1271 - 1368. இராமநாதபுரம்
       வட்டம்.

23. ஏறிவீரப்பட்டினம் (அளற்றுநாடு). பொ.பி. 1271 - 1368. இடைவழி, முதுகுளத்தூர் 
       வட்டம்.

24. வென்றுமுடிசூடிய சுந்தரபாண்டியப்பட்டினம் (பராந்தகவளநாடு). பொ.பி. 1271 - 1368 
      ஸ்ரீவைகுண்டம் வட்டம்.

25. காயல்பட்டினம் (குடநாடு). பொ.பி. 1271 - 1368. திருச்செந்தூர் வட்டம்

26. தாமிரபரணி சோனாடு கொண்டான்பட்டினம் (குடநாடு). பொ.பி. 1271 - 1368. 
       திருச்செந்தூர் வட்டம். பாம்பாறு.

27. வீரபாண்டியன் பட்டினம் (குடநாடு). பொ.பி. 1271 - 1368. திருச்செந்தூர் வட்டம். 
       பாம்பாறு.

28. முத்துராமலிங்கப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்). திருவாடானை வட்டம் பாசியாறு.

29. அம்மாப்பட்டினம். ஆவுடையார்கோயில் வட்டம். அம்புலியாறு



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 



தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள்.
முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட துறைமுகப் பட்டினங்கள் பற்றி அறிய தொண்டி, பெரியபட்டினம், பழைய காயல், போன்ற பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளும், அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா போன்ற பல்வேறு நாட்டவர் குறிப்புகளும், கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் போன்றவையும் துணைபுரிகின்றன.

வணிகப் பொருட்கள்.
இந்த துறைமுகங்களிலிருந்து நெல், அரிசி, உப்பு, அவிழாகட்டு, பயித்தம் பருப்பு, அவரை, துவரை, ஆமணக்கு,எள், கடுகு, சீரகம், வெங்காயம், புளி, கருப்பட்டி, 
மஞ்சள், பாக்கு, மிளகு, சுக்கு, தேன், சந்தனம், அகில், பன்னீர்,கற்பூரம், சாந்து, புனுகு, 
கஸ்தூரி, சவ்வாது, புடவை, பருத்திப் புடவை, நூல் புடவை, நொய் புடவை, பரும்புடவை,பட்டு, நூல், கொடி, கணபம், இரும்பு, செம்பு, வெண்கலம், குதிரை, யானை, ஒட்டகம், சவுரி மயிர், முத்து, சிப்பி,மணிகள் போன்றவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது.

வணிக நகரங்கள்.
கடலோர வணிகத் துறைமுகங்கங்களுக்குத் துணையாக உள்ளூர் வணிக நகரங்களும் அமைந்திருந்தன. கடற்கரைத் துறைமுகப்பட்டினங்களும் உள்ளூர் வணிக நகரங்களும் பெருவழிகளால் இணைந்திருந்தன. இதற்கு உதாரணமாக மதுரையிலிருந்து தொண்டி செல்லும் பெருவழியிலேயே இடையாற்று நாட்டு பூவேந்தியபுரமும், தென்களவழிநாட்டு முடிகொண்ட பாண்டியபுரமும் இருந்ததையும்,, அதே போல் கீரனூர்கூற்றத்து கங்கைகொண்ட பெருந்தெருவும், காணப்பேர்கூற்றத்து கானபேர் பெருந்தெருவும் முத்தூர்கூற்றத்தையும் பல துறைமுகங்களையும் இணைத்ததையும் கொள்ளலாம்.

வணிகக் குழுக்கள்.
இத்துறைமுக மற்றும் வணிக நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதியைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள், பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள், இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டு வணிகர்கள் போன்றவர்கள் அமைத்த நகரங்களும் பட்டினங்களும் இருந்தன. அவற்றுள் பல வணிகக் குழுக்கள் இருந்தன. அவை,

  • மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள் - காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வலுப்படுத்தும் விதமாக இந்த செட்டிகளைப் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.
  • நகரத்தார் - முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார்  என்னும் வணிகக்குழுக்களிடம் இருந்தது.
  • மணிக்கிராமத்தார், சாமக பண்டசாலிகள் - இவர்கள் மேற்கு கடற்கரைகளுக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் வணிகத்தை கவனிப்பவர்கள்.
  • நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார் - இவ்வணிகக் குழுக்கள் தென்னிந்தியா முழுவதுமே புகழ்பெற்றவை. சாயல்குடியில் இக்குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட ஏறிவீரப்பட்டினம் உள்ளதை அடுத்து இவர்களின் வணிகச்சிறப்பை அறியலாம்.
  • தென்னிலங்கை வளஞ்சியர் - இவர்கள் தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும்.
  • சோனகரர் - இவர்கள் அரேபிய வணிகக் குழுக்களுள் ஒரு குழுவினர்.
  • அஞ்சுவண்ணம் - இவர்களும் அரேபியர்களே. இவர்களைப் பற்றிய ஆய்வு நூல்கள் பல தமிழில் வந்ததை வைத்தே இவர்களின் சிறப்பை அறியலாம்.




வரிகளும் கொடைகளும்

மேற்குறிப்பிட்ட வணிகக்குழுக்கள் அனைத்துமே ஏதாவது ஒரு விதத்தில் கோயில்களுக்குக் கொடையோ அல்லது பெருவழிகளின் உபயோகத்திற்காக வரியோ செலுத்தி அரசாங்கத்துக்கு உதவியதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர் போன்றோர்கள் உலகமாதேவிப்பட்டினம் என்ற ஊரிலுள்ள திருஞான சம்பந்தன் தளம் என்ற கோவிலிற்குப் பல கொடைகளை அளித்துளனர். இக்கோயிலுக்கான பாக்கு, மிளகு போன்றவற்றிற்கு ஆட்சுமைக்கு ஒருமாப்பணமும் உறுக்களில் ஏற்றும் சிறுகலங்களின் கட்டொன்றிற்கு அரைக்கால் பணமும் வாங்கியுளனர். மேலும் இப்பட்டினத்திற்கு வரும் சிற்றுரு, தோணி போன்ற கலங்களில் வரும் பொருட்களுக்கு முறையே அரைக்கால் மற்றும் கால் பணமும் வாங்கியுளனர்.

காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற பட்டினங்களிலிருந்து வரும் பெரும்வழிகளை உபயோகிக்கும் மற்ற வணிகர்களிடமிருந்து வரும் வரிகளை வீரபாண்டியன்புரத்து கோயிலொன்றுக்கு அளித்துள்ளனர். 

நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் இருந்த முத்து வணிகர்களான திசையாயிரத்து ஐநூற்றுவர் அதில் பெறப்படும் வரியை அவ்வூர்க் கோயிலுக்குத் தானமளித்துளனர்.

இத்துறைமுக மற்றும் வணிக நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதியைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள், பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள், இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டு வணிகர்கள் போன்றவர்கள் அமைத்த நகரங்களும் பட்டினங்களும் இருந்தன. அவற்றுள் பல வணிகக் குழுக்கள் இருந்தன. அவை,

மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள் 
காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வலுப்படுத்தும் விதமாக இந்த செட்டிகளைப் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.

நகரத்தார் 
முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார் என்னும் வணிகக்குழுக்களிடம் இருந்தது.

மணிக்கிராமத்தார், சாமக பண்டசாலிகள் 
இவர்கள் மேற்கு கடற்கரைகளுக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் வணிகத்தை கவனிப்பவர்கள்.

நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார் 

இவ்வணிகக் குழுக்கள் தென்னிந்தியா முழுவதுமே புகழ்பெற்றவை. சாயல்குடியில் இக்குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட ஏறிவீரப்பட்டினம் உள்ளதை அடுத்து இவர்களின் வணிகச்சிறப்பை அறியலாம்.

தென்னிலங்கை வளஞ்சியர் 
இவர்கள் தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும்.

சோனகரர் 
இவர்கள் அரேபிய வணிகக் குழுக்களுள் ஒரு குழுவினர்

அஞ்சுவண்ணம் 
இவர்களும் அரேபியர்களே. இவர்களைப் பற்றிய ஆய்வு நூல்கள் பல தமிழில் வந்ததை வைத்தே இவர்களின் சிறப்பை அறியலாம்.

திருப்புடைமருதூர் ஓவியங்கள், புன்னைக்காயலில் அரபிய வணிகர்கள் உலாவுவது போல் காட்டப்பட்டுள்ளது .

மேற்குறிப்பிட்ட வணிகக்குழுக்கள் அனைத்துமே ஏதாவது ஒரு விதத்தில் கோயில்களுக்குக் கொடையோ அல்லது பெருவழிகளின் உபயோகத்திற்காக வரியோ செலுத்தி அரசாங்கத்துக்கு உதவியதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர் போன்றோர்கள் உலகமாதேவிப்பட்டினம் என்ற ஊரிலுள்ள திருஞான சம்பந்தன் தளம் என்ற கோவிலிற்குப் பல கொடைகளை அளித்துளனர். இக்கோயிலுக்கான பாக்கு, மிளகு போன்றவற்றிற்கு ஆட்சுமைக்கு ஒருமாப்பணமும் உறுக்களில் ஏற்றும் சிறுகலங்களின் கட்டொன்றிற்கு அரைக்கால் பணமும் வாங்கியுளனர். மேலும் இப்பட்டினத்திற்கு வரும் சிற்றுரு, தோணி போன்ற கலங்களில் வரும் பொருட்களுக்கு முறையே அரைக்கால் மற்றும் கால் பணமும் வாங்கியுளனர்.

காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற பட்டினங்களிலிருந்து வரும் பெரும்வழிகளை உபயோகிக்கும் மற்ற வணிகர்களிடமிருந்து வரும் வரிகளை வீரபாண்டியன்புரத்து கோயிலொன்றுக்கு அளித்துள்ளனர். நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் இருந்த முத்து வணிகர்களான திசையாயிரத்து ஐநூற்றுவர் அதில் பெறப்படும் வரியை அவ்வூர்க் கோயிலுக்குத் தானமளித்துளனர்.

நன்றி
1. பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்கள், வணிகத் தொடர்புகள். 
     (கி.பி. 600-1400), வெ.வேதாச்சலம், மதுரை.

2. தமிழகக் கடல்சார் ஆய்வுகள், ந. அதியமான் மற்றும் பா. ஜெயக்குமார்,              
    தமிழ்ப் பல்க்லைக்கழகம், தஞ்சாவூர், நவம்பர் 2006.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தொல்லியல் நோக்கில் சங்ககாலம் 
புலவர். செ.இராசு, ஈரோடு.

flow.gif

http://www.tamilheritage.org/old/text/etext/nirutha/thol.html




தொல்லியல் ஆய்வு

தொல்லியலை Archaeology எனக்கூறுவர். 'ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்' என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும் மனித இனத்தோடு தொடர்புடைய பொருள்களையும், அவர்கள் நாள்தோறும் வாழ்க்கையில் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருள்களையும் அகழ்ந்தெடுத்து ஆய்வுசெய்து அவர்களின் பழம்பண்பாடுகளைப் பற்றி உய்த்தறியும் ஓர் ஆய்வாகும்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் எடுத்த அரிய பல தொல்பொருட்கள் C14 எனப்படும் கரிப்பகுப்பாய்வு மூலம் அறிவியல் முறைப்படி காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் அவற்றின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வுகளில் சங்க இலக்கியங்களோடு தொடர்புடைய பல பெயர்கள் - பொருள்கள் கிடைத்துள்ளன. எனவே அந்தத் தொல்லியல் அகழாய்வுக் காலத்தைச் சங்ககாலம் என்று கொள்ளுவது தவறாகாது.

சங்ககால ஊர்கள்

சங்க இலக்கியம் குறிக்கும் தொன்மையான சில ஊர்களில் முறைப்படி அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் மூலம் அவ்வூர்கள் இருந்தமையும், அங்கு மக்கள் வாழ்ந்தமையும் அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளன. 
அகழாய்வு நடைபெற்ற ஊர்கள் - அதன் சங்ககாலப் பெயர்

அரிக்கமேடு (வீராம்பட்டிணம்) - வீரை முன்துறை (அகம் 206)
அழகன்குளம் - மருங்கூர்ப்பட்டினம் (நற் 258)
உறையூர் - உறந்தை (புறம் 39)
கரூர் - கருவூர், வஞ்சி (புறம் 13,11)
காஞ்சிபுரம் - கச்சி (பெரும் 420)
காவிரிப்பூம்பட்டினம் - புகார் (பட்டின 173)
கொடுமணல் - கொடுமணம் (பதிற் 74)
கொற்கை - கொற்கை (அகம் 27)
தருமபுரி - தகடூர் (பதிற் 78)
திருக்கோவிலூர் - கோவல் (அகம் 35)
திருத்தங்கல் - தங்கால் (நற் 386)
மதுரை - மதுரை (பரி 11)
வல்லம் - வல்லம் (அகம் 336)
கொடுங்கலூர் - முசிறி (புறம் 343)

மைய அரசு, தமிழக அரசு, சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த தொல்லியல் துறைகள் இவ்வூர்களில் அகழாய்வை மேற்கொண்டன. அரிக்கமேட்டில் அமெரிக்கத் தொல்லியல் துறையினரும் அகழாய்வில் ஈடுபட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னர் மேற்கண்ட ஊர்கள் சிறந்த நாகரிகத்துடன் விளங்கின என்பது அகழாய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வூர்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் சங்ககாலச் சிறப்பும் தொன்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பெருங்கற்படை

சங்ககாலத்திற்கு இணையான தமிழகத் தொல்லியல் ஆய்வில் மிகவும் சிறப்பாகக் குறிக்கப்பெறும் தன்மையுடையது பெருங்கற்படைச் சின்னங்களின் அகழாய்வாகும். தமிழகமெங்கும் பரவலாகவும். மிகுதியாகவும் காணப்பெறுவது இச்சின்னங்களேயாகும். இதனைத் தொல்லியலார் Megalithic என அழைப்பர். இக்கால ஈமக் குழிகள் மிகப் பெரிய கற்பலகைகளைக் கொண்டும், பெரிய கற்களைக் கொண்டும் அமைக்கப்பட்ட காரணத்தால் இதனைப் பெருங்கற்படைப் பண்பாடு என அழைப்பர். கல்அறை, கல்வட்டம், கல்படை, கல்குவை, கல்திட்டை, கற்கிடை எனப் பலவாறாக இவை காணப்படும். பெருங்கற்படைப் பண்பாடு 2500 ஆண்டுகட்கு முற்பட்ட பண்பாடாகும். 

பெருங்கற்படைச் சின்னங்களைச் சங்க இலக்கியங்கள் 'பதுக்கை' எனக் குறிப்பிடுகின்றன.
'செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை' (புறம் 3)
'வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கை' (அகம் 109)
'இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை' (கலி 12)

என்பன 2500 ஆண்டுகட்டு முற்பட்ட பெருங்கற்படையைக் குறிக்கும் சங்க இலக்கியத் தொடர்கள். பூமிக்குள் பதுங்கியிருப்பது, பதுக்கப்பட்டிருப்பது பதுக்கை ஆயிற்று. இவை வீரம்காட்டி மாய்ந்த வீரர்கட்குப் புதிதாக எடுக்கப்பட்டது என்பதை 'வம்பப்பதுக்கை' என்பதன் மூலம் அறியலாம். வீரயுகமான சங்ககாலத்தில் பெரும்பாலும் வீரர்கட்கென்றே பெருங்கற்படைகள் அமைக்கப்பட்டன.

நெடுங்கல்

பெருங்கற்படைச் சின்னங்களான இப்பதுக்கைகளை அமைத்தபின்னர் அதன் அருகே நீண்டு உயர்ந்த குத்துக்கல்லை அடையாளமாக அமைத்தனர். இதனைத் தொல்லியலார் Menhir என அழைப்பர். இவை ஒன்றோ இரண்டோ பெருங்கற்படையின் அருகே இருக்கும்.

இதனைப் புறநானூறு 'பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி 
இனி நட்டனரே கல்லும்'
என்று கூறும் (264). அகநானூற்றில் இவை
'சிலை ஏறட்ட கணைவீழ் வம்பலர் 
உயர்பதுக்கு இவர்ந்த அதர்கொடி அதிரல்
நெடுநிலைநடுகல்' என்றும்.
'பிடிமடித் தன்ன குறும்பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்'
என்றும் குறிக்கப்படுகின்றன (289, 269). 

இந்நெடுநிலைக் கற்களே பிற்காலத்தில் நடுகற்களாக (Hero Stones) மாறின என்பர்.

நடுகல்

Hero Stones (வீரன்கல் - வீரக்கல்) என வழங்கிய கற்கள் இப்பொடுது Memorial Stones (நினைவுக் கற்கள்) என வழங்கப்படுகின்றன.

வரலாற்றின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பழங்குடி மக்களின் பண்பாட்டை விளக்க நடுகற்களே காரணமாக அமைந்துள்ளன. மறவர், எயினர், மழவர், வேடர், கோவலர், வடுகர், கள்வர், பறையர், பாணர் ஆகிய குடிகளைச் சேர்ந்த சேவகன், இளமக்கள், இளையோர், ஆள், இளமகன், அடியாள், அடியார், மன்றாடி, தொறுவாளன் ஆகியோருக்கே பெரும்பாலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கிருந்து உயிர்நீத்த கோப்பெருஞ்சோழனுக்கும், போரில் வீரமரணம் அடைந்த அதியமானுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது (புறம் 221,223,232). பிற்காலத்தில் இவை பள்ளிப்படையாக மாறியது. பெரும்பாலும் வீரர்களுக்கே நடுகல் நாட்டப்பட்டது. குறிப்பாக போருக்கு முதற்காரணமாக அமையும் ஆநிரைகவரும் வெட்சித்திணைக்கும், கவர்ந்த ஆநிரைகளை மீட்கும் கரந்தைத் திணைக்கும் உரிய நடுகற்களே மிகுதியாகும். கல் என்றாலே நடுகல்லையே குறிக்கும் பழக்கம் இருந்தது. 'விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர் 
நன்னிலை பொறித்த கல்' (அகம் 179)
'என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்' (குறள் 771)

இவ்விடங்களில் நடுகல் கல் என வழங்கப்பட்டுளமையைக் காணுகிறோம். (கல் நடுவித்தார் மதியுளி - தருமபுரி நடுகல் கல்வெட்டு). ஒரு காலத்தில் நடுகல்லை மட்டுமே தெய்வமாக வணங்கியுள்ளனர். 'ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பில் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே' (புறம் 335)

என்பது மாங்குடிகிழார் பாடலாகும்.

இறந்த வீரனின் பெயரையும் பெருமையையும் கல்லில் பொறிப்பர் நடுகல்லுக்கு நீராட்டி நெய்பெய்து வாசனைப்புகை காட்டுவர். விளக்கேற்றுவர். பூக்களைச் சொரிவர். மாலை சூட்டுவர். மயிற்பீலி சாத்துவர். காப்புநூல் கட்டுவர். ஆட்டுக்கிடாய்களைப் பலியிடுவர். துடி, மணி ஒலிப்பர். எண்ணெய் பூசுவர். சிறு கலங்களில் கள் படைப்பர். துணிப்பந்தல் அமைப்பர். வில், வேல், வாளால் வேலி அமைப்பர். பெரும்பாலும் வழிகளில் நடுகல்லை நட்டனர். ஆழமாக நட்டனர். நடுகல்லை ஆள் என ஒரு யானை உதைத்தது. நடுகல் சாயவில்லை, யானையின் கால் நகம் உடைந்ததாம். போர்க்களத்தில் விழுப்புண் பட்டோர் நடுகல் அருகே வந்து புண்ணைக் கிழித்து உயிர் விடுவர். நடுகல்லை வணங்கினால் மழைவரும், அரசன் வெற்றி பெறுவான், பயிர் செழிக்கும், கால்நடை பெருகும், வீட்டுக்கு விருந்தினர் வருவர் என நம்பினர்.

தாழிகள்

தொல்லியல் ஆய்வில் மிகவும் சிறப்பிடம் பெறுவது தாழிகள் ஆகும் (Urns). தமிழ்நாட்டில் இவை பல வகைகளாகக் காணப்படுகின்றன. இவை கூர்முனைத் தாழிகள், கால்கள் உடைய தாழிகள், விலங்குருவத் தாழிகள் எனப் பலவகைப்படும்.

சங்க இலக்கியங்களில் இவை கலம், தாழி, கவிசெந்தாழி, ஈமத்தாழி, தாழியபெருங்காடு. முதுமக்கள் தாழி, மன்னர் மறைத்த தாழி எனப்பலவாறு அழைக்கப்பெறுகின்றன (அகம் 129, புறம் 228, 236, 256, 364, பதிற் 44). தாழிப்புதையல் 2500 ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு வழக்கமாகும், கி.பி. 2,3 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அவ்வழக்கம் மறைந்து விட்டது - தாழிகள் பல மிகப் பெரியவையாக இருந்த காரணத்தால்

மா இருந்தாழி (நற் 271)
ஓங்குநிலைத்தாழி (அகம் 275)
கண்ணகன்தாழி (புறம் 228)

எனக் குறிக்கப்பட்டுள்ளன. இவை கைகளாலும் (Hand made), சக்கரங்களாலும் (Wheel made) செய்யப் பெற்றிருந்தன.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இறந்தான். மிகப்பெரும் புகழ்கொண்ட இவனுக்கு மிகப் பெரிய தாழி அல்லவா வனைய வேண்டும். உலகையே சக்கரமாகக் கொண்டு, இமய மலையையே மண்ணாக வைத்துப் பெரிய தாழியைவனைய வேண்டும். அது உன்னால் முடியுமா? என்று வேட்கோவனைப் பார்த்து வினவுகிறார், ஐயூர் முடவனார் என்னும் புலவர் (புறம் 228).
'அன்னோன் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை யாயின் எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே'
என்பது ஐயூர் முடவனார் பாடலாகும்.
கணவன் மனைவி இருவரையும் ஒன்றாகத் தாழியுள் அடக்கம் செய்ய வேண்டும். அதனால்
'வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலிதாக வனைமோ'.
எனக் கூறுகின்றார் ஒரு புலவர் (புறம் 256). 

தாழி வனைவோர் 'கலம்செய் கோ' எனப்பட்டனர்.
சங்ககாலச் சோழமன்னர்கள் தாழிப் புதையல் வழக்கத்தை ஏற்படுத்தினர் என்று மூவருலாக் கூறுகிறது.
'பதுமக் கடவுள் படைப்படையக் காத்த 
முதுமக்கட் சாடி முதலோன்'
என்று பண்டைச் சோழன் ஒருவன் புகழப்படுகின்றான். (குலோ உலா 12).

யவனர்

சங்ககாலத்தில் தமிழ்நாட்டோடு யவனர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். கிரேக்கர், ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அராபியர் ஆகிய அனைவரையும் 'யவனர்' என அழைக்கும் வழக்கம் இருந்தாலும் பெரும்பாலும் ரோமானியரே மிகுதியாகத் தமிழகம் வந்தனர்.

மேற்குக் கடற்கரைக்கு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம், சில விலங்குகள், பறவைகள் ஆகிய பல பொருள்களுக்காக வந்த ரோமானியர் பாலக்காடு, போளுவாம்பட்டிக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டுக்கு வந்து பல வண்ணக் கல்மணிகளை விரும்பி வாங்கினர். சோழநாடு, பாண்டிய நாட்டின் துறைமுக நகரங்கள் வரை சென்றனர். கிழக்குக்கரை முத்துக்களையும் பெற்றனர். ரோம் நாட்டவரின் ரெளலடெட், அரிட்டைன் என்ற உயர்வகைப் பானை ஓடுகள், அம்போரா என்னும் கூர்முனை மதுக்குடங்கள், ரோமானிய சுடுமண் பொம்மைகள், ரோம அரசரின் பொன், வெள்ளி, செம்பு நாணயங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. அகஸ்டஸ் (கி.மு. 44 - 14); டைபீரியஸ் (கி.பி. 14 - 37); நீரோ (கி.பி. 54 - 68) போன்ற ரோம் நாட்டு அரசர்களின் பெயரும் உருவமும் பொறித்த நாணயங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. 

agustus.jpg

A slashed Roman Aureus of Augustus

மிளகு யவனர்கட்கு மிகவும் பிடித்தமான பொருள். அதனை 'யவனப்பிரியா' என அழைத்தனர். யவனர் கப்பல்களில் பொன்னொடு முசிறிக்கு வந்து பொன்னைக் கொடுத்துவிட்டு கப்பலில் மிளகை ஏற்றிச் செல்வர். 'சேரலர் 
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி'
என அகநானூறு (149) கூறும்.

'யவனர் இயற்றிய வினைமாண் பாவை' (நெடுநல் 101)
'வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமாண் நல் இல்' (முல்லை 61-62)
'நயனில் வன்சொல் யவரைப் பிணித்து
நெய்தலைப் பெய்து கையிற் கொளீஇ' (பதிற். பதிகம் - 2)
'யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன் செய் புனைகலத்து ஏந்தி நாளும் 
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து 
ஆங்க இனிது ஒழுகுமதி' (புறம் 56)

என்பன சங்க இலக்கியம் குறிக்கும் யவனர் பற்றிய தொடர்களாகும். இத்தொடர்பு 2000 ஆண்டுகட்கு முற்பட்டதாகும்.

தொல்லெழுத்தியல்

பழங்காலக் குகைகளில் உள்ள சமணப்பாழிகளிலும், அகழ்வாய்வில் கிடைத்த பானை ஓடுகளிலும், பழங்காசுகளிலும், மோதிரங்களிலும், முத்திரைகளிலும், கற்களிலும் ஏறக்குறைய 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தொல்லெழுத்துக்கள் பல காணப்படுகின்றன. இவற்றைத் 'தமிழி' என அழைப்பர். கரூர் அருகேயுள்ள புகலூர் ஆறுநாட்டார் மலையில் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்திற்குரிய அரசர்கள் அதே வரிசையில் குறிக்கப்பட்டுள்ளனர்.
'மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் 
பெருங்கடுங்கோன் மகன் (இ) ளங்
கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்'
என்பது ஆறுநாட்டார்மலைத் தமிழிக் கல்வெட்டாகும்.

naga-f.jpg naga-b.jpg

மதுரை அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தை அந்துவன் பாடியதாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. அதே மலைக் குகையில் 'அந்துவன் கொடுபித்தவன்' என்ற 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிக் கல்வெட்டு உள்ளது. (அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை. அகம் 59)

திருக்கோவிலூரைச் சங்க இலக்கியம் 'கோவல்' என்று கூறும். மலையமான் ஆட்சிப்பகுதி. தகடூர் அதியமான் மலையமானை வென்று கோவலை அழித்தான் என்று அவ்வையார் பாடுகிறார் (புறம் 99). திருக்கோவிலூர் அருகில் உள்ள ஐம்பையில் அதியமான் சமண முனிவர்கட்குப் பாழி அமைத்துக் கொடுத்த செய்தி தமிழிக் கல்வெட்டொன்றில் கூறப்படுகிறது.

'ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி' என்பது ஜம்பைக் கல்வெட்டாகும். அசோகனின் பிராமிக் கல்வெட்டில் 'ஸதியபுத்ரர்' குறிக்கப்படுகின்றனர். 'அதியாமகன்' என்ற சொல்லே ஸதியபுதோ எனக் குறிக்கபட்டுள்ளது. எனவே தகடூர் அதியமான் மரபில் ஒருவன் அசோகன் காலத்தவன் என்பதில் ஐயமில்லை.

மாங்குளம் தமிழிக் கல்வெட்டில் 'நெடுஞ்செழியன்' என்ற பெயர் காணப்படுகிறது. அந்தை, ஆந்தை, நள்ளி, பிட்டன், கீரன், ஓரி, பரணன், சாத்தந்தை, பண்ணன், வண்ணக்கன் போன்ற சங்க இலக்கியங்களில் மட்டுமே பயின்று வரக்கூடிய பல சொற்கள் தமிழி என்ற தொல் எழுத்துக்களில் எழுதப்பட்டுக் கிடைத்துள்ளன. குறவன் (நற் 201), தித்தன் (புறம் 80), தாயன் (குறு 319), சாத்தன் (நற் 370), வேட்டுவன் (அகம் 36), குட்டுவன்கோதை (புறம் 54), கொல் இரும்பொறை (புறம்53), மாக்கோதை (புறம் 48), பெருவழுதி நற் 55) என்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளும், மோதிரங்களும், காசுகளும் தமிழ்நாட்டில் பெரும்பாலும் கரூர்ப் பகுதியில் கிடைத்துள்ளன. இவற்றின் எழுத்தமைதி கொண்டு இப்பெயர்கள் எறக்குறைய 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை என அறிகின்றோம். 

புலி முத்திரை

புகார் நகரின் துறைமுகத்தில் சங்ககாலத்தில் பொருள்களுக்குப் புலி முத்திரை பொறிக்கப்பட்டதாகப் பட்டினப்பாலை கூறிகிறது. 
'அளந்து அறியாப் பலபண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெரும் காப்பின்
வலியுடைவல் அணங்கின் நோன்
புலி பொறித்துப் புறம் போக்கி'

என்பது பட்டினப்பாலைப் பகுதி (131 - 135). அவ்வாறு புலிச்சின்னம் பொறிக்கப் பயன்படுத்திய முத்திரையொன்று பூம்புகார் நகரில் அண்மையில் கிடைத்துள்ளது. 

கடல் கடந்த சான்றுகள்

சங்கத் தமிழர் கடற்செலவில் தேர்ந்தவர்களாக விளங்கினர். கடல் கடந்து பல நாடுகளுக்கும் சென்றுள்ளனர். > 'நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக' (புறம் 66)

'சினம் மிகு தானை வானவன் குடகடல் 
பொலம்தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
பிறகலம் செல்கலாது' (புறம் 126)

என்பன அதைப்பற்றிய சான்றுகளுட் சிலவாகும். பருவக் காற்றின் பயந்தெரிந்து 2000 ஆண்டுகட்கு முன்பு தமிழர் 'கப்பலோட்டிய' தமிழர்களாக வாழ்ந்துள்ளனர் என்பதை 'வளிதொழில் ஆண்ட' என்ற தொடர் சிறப்புடன் விளக்குகிறது.

தமிழ்நாட்டில் வெளிநாட்டார் குறிப்புகளும், வெளிநாட்டார் தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. பிற வெளிநாடுகளில் இதுவரை சங்காலத் தமிழகச் சான்றுகள் பெரும்பாலும் அகப்படாமல் இருந்தன. அண்மைக் காலத்தில் மேற்கு நாடுகளிலும், கிழக்கு நாடுகளிலும் சங்ககாலச் சான்றுகள் பல கிடைத்துள்ளன. எகிப்து நாட்டில் நைல்நதிக் கரையில் உள்ள 'குவாசிர் அல் காதிம்' என்னும் ஊரில் அமெரிக்க நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்ணன், சாத்தன் என்ற சங்ககாலத் தமிழி எழுத்துப் பொறிப்புக்கள் கிடைத்துள்ளன.kannan.jpg

 

எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் லெய்டன் பல்கலைக்கழகத்தார் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 'கொற்ற பூமான்' என்ற சங்ககாலத் தமிழி எழுத்துக்கள் பொறித்த மதுச்சாடி கிடைத்துள்ளது. இவையிரண்டும் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துப் பொறிப்புக்கள் ஆகும்.

வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ள 'பேபிரஸ்' எனப்படும் பண்டைய தாளில் எழுதப்பட்ட கி.பி. முதல் நூற்றாண்டு ஆவணத்தில் முசிறி வணிகன் ஒருவன் கப்பலில் ஏற்றிச் சென்ற வாசனைப் பொருள், தந்தப் பொருள், துணிகள் பற்றிய செய்திகளும். அவற்றின் எடையும் கூறப்பட்டுள்ளது. ஒரு கப்பலில் 150 வணிகரின் பொருள்கள் இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.

தாய்லந்து நாட்டில் கிளாங்தோம் நகரில் நடத்திய அகழாய்வில் சோழரின் சதுர வடிவான புலிபொறித்த ஒரு செப்புக்காசும், 8 x 4 சென்டி மீட்டர் அளவுள்ள தங்கம் மாற்றுரைத்துப் பார்க்கும் பட்டைக்கல் 'பெரும்பத்தன் கல்' என்ற சங்ககாலத் தமிழிப் பொறிப்போடு கிடைத்துள்ளது. இந்த அயல்நாட்டுச் சான்றுகள் அனைத்தும் 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

தமிழகத்திலும், மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பல்வேறு தொல்பொருட்கள் மூலமும், அறிவியல் பூர்வமாக கால நிர்ணயம் கணிக்கப்பட்டதில் அவை சுமார் 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை எனத் துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் மேல் எல்லை கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என்றும், கீழ் எல்லை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றோடு சங்க இலக்கியம் பல்வேறு வகைகளில் நெருங்கிய தொடர்பு உள்ளவையாக இருப்பதால் சங்க காலமும் அக்காலமே என்று உறுதிப்படுகிறது. எனவே தொல்லியல் நோக்கில் சங்க காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை என ஓரளவு நாம் கணிக்கலாம்.

தமிழக வரலாற்றுப் பேரவையின் எட்டாவது ஆண்டுக் கருத்தரங்கம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் 13, 14.10.2001 ஆகிய நாட்களில் நடைபெற்ற போது 13.10.2001 அன்று மாலை நடைபெற்ற 'சங்ககாலம்' என்னும் சிறப்புக் கருத்தரங்கில் அளிக்கப் பெற்ற கட்டுரை.
தொடர்புக்கு

புலவர். செ.இராசு, எம்.ஏ., பிஎச்.டி.,
கொங்கு ஆய்வு மையம், 
3, பி. வெங்கடேசுவராநிவாஸ்,
13/2, வள்ளியம்மை தெரு, நாராயணவலசு,
ஈரோடு - 638011.
தொலைபேசி: 220940

rasu.jpg

தொல் எழுத்தியல் இயம்பும் சங்கக் களிமண் தகடொன்றைத் தாங்கி நிற்கும் புலவர் இராசு.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கரூர் - கருவூர் - வஞ்சி - கோருவூரா

‪#‎கரூரில்_கிரேக்கக்_காசு‬:

தமிழகத்தில் கிடைத்த கிரேக்கக் காசுகளின் பழமை பொ.மு. 300 வரை செல்லும். மேலும், கிடைத்துள்ள காசுகள் பல எந்த நகரத்தில் அச்சிட்டது என்பதைக் கூட அறிய முடிகிறது. கரூர் நகரிலே அதிகக் காசுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இக்காசுகளைக் கொண்டு கிரேக்கத் தீவுகளான ரோட்சு, கிறீட்சு, திரேசு, தெசிசு போன்றவற்றுக்கும் தமிழகத்துக்கும் இருந்த வணிகத்தொடர்புகளையும் கிரேக்க நாகரிக கடவுளர்களையும் அறிய முடிகிறது. மேலும், கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் மரணத்துக்குப்பின் டைகிரிசு நதியில் ஆதிக்கம் செலுத்திய செலியூசிட் வம்சத்தவர் வெளியிட்ட பத்து காசுகள் கரூர் நகர அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்துளன . இவற்றைக் கொண்டு கரூர் நகரை மையமாக கொண்ட வர்த்தகத்தில் கரூரிலிருந்து சேரர் துறைமுகம் முசிறிக்கு பொருட்கள் கொண்டு சென்று பின் மெசொப்பொத்தேமியா நகரங்களுக்கு எடுத்துச் சென்றனர் என்ற கருதுகோளை உறுதிப்படுத்தினர்
.....
தமிழகத்தில் கிடைத்துள்ள ரோமானியர்காசுகள் - ரோமானியர்கள் (பொ.ஆ.மு. 1 ஆம் நூ. – பொ.ஆ. 3 ஆம் நூ): பொ.ஆ.மு. 1-3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியர் காசுகள் தமிழகத்தில் பரவலாக்க் கிடைக்கின்றன. இது சங்ககாலத் தமிழருக்கும் ரோமானியருக்கும் இடையே நிலவிய கடல் சார் வணிகத்திற்கு மிகச் சிறந்த சான்று ஆகும். தமிழர்கள் கடல் சார் வணிகத்தில் சிறந்து விளங்க தமிழ் நாட்டின் இயற்கையமைப்பும் ஒரு முக்கிய காரணி என்பது நாம் அறிந்ததே. தொன்மைக் காலந்தொட்டே இவர்கள் கடலின் வலிமையை உணர்ந்து அதை அடக்கி ஆண்டுள்ளனர் என்பதற்கு “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி” என்ற புறப்பாடல் வரிகளே சான்றாக உள்ளன. தமிழர்கள் கடலோரங்களில் மட்டுமின்றி நடுக்கடலிலும் பயணம் செய்துள்ளனர். ‘நாவாய்’ என்ற இந்த லத்தீனிய சொல்லே தமிழருடன் யவனர்கள் கொண்டுள்ள கடல் வாணிகத் தொடர்பினை விளக்கும் சான்றாக உள்ளது.

“யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என்று சங்க இலக்கியமான புறநானூறும் சான்று பகர்கிறது. யவனர்கள் என்ற சொல் பொதுவாக அந்நியர்களைக் குறித்தாலும் பெரும்பாலும் அது கிரேக்க, ரோமானியர்களையே குறித்து நின்றது. ரோமானியரது கலமானது தமிழ்நாட்டின் மிளகை எடுத்துச் சென்று ரோம நாட்டின் பொன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்ததை மேற்சுட்டிய புறநானூற்றுப் பாடல் சுட்டுகிறது. மிளகு வணிகமே முற்காலத் தமிழ் வணிகர்களுக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்துள்ளது. ரோமப் பேரரசிற்கும் இந்தியாவிற்கும் இடையே சென்ற கப்பல்களின் சரக்கில் முக்கால் பகுதி மிளகும் வாசனைத் திரவியங்களும், அரிய கல்மணிகளுமாகவே இருந்தன. இவை தென்னிந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. இம்மிளகு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்பட்டதால் ரோம் நகரில் ஒரு பவுண்டு 15 தினாரி வரை விற்கப்பட்டது.

தமிழகத்துடனான ரோமானிய வணிகம் பொ.ஆ.மு. 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் செழிக்கவில்லை. இக்கால வரம்புக்கு முற்பட்ட ரோம மன்னர்களின் நாணயங்கள் தமிழ்நாட்டில் இதுவரையில் கிடைக்கவில்லை. ரோமாபுரியின் அகஸ்டஸ் மன்னன் (பொ.ஆ.மு. 34) காலத்திலிருந்தே தமிழகத்துடனான நேர்முக ரோமானிய வணிகத் தொடர்பு கிட்டியுள்ளது. ரோமானிய நாட்டுடனான தமிழரது வாணிகம் பேரரசின் ஆதரவின் கீழ் செழித்து வளர்ந்தது. ரோமிற்கு பாண்டிய மன்னனின் தூதுவன் சென்றுள்ளான். மதுரையிலும் யவனர்களுக்கான தனிச்சேரி இருந்துள்ளது.

ரோமாபுரி வணிகம் சிறந்து விளங்கிய காலத்தில் அரிக்கமேட்டில் பண்டகச் சாலையொன்றும், விற்பனைச் சாலையொன்றும் நடைபெற்றுதையும், ரோம மட்கலங்கள் இங்கு கிடைப்பதையும் அகழாய்வுகள் மெய்பித்துள்ளன. ரோமிலிருந்து ஆண்டுதோறும் 6,00,000 பவுன் மதிப்புள்ள தங்கம் தமிழரின் வாணிகத்திற்காகச் செலவானது. இவ்விதம் ரோமாபுரியின் செல்வம் தமிழகத்திற்குச் சென்றதையும் தமிழகப் பண்டங்களில் ரோமருக்கிருந்த ஆரா வேட்கையையும் மக்கள் சிலரால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.

ரோம பேரரசன் நீரே (பொ.ஆ. 68) காலமான பிறகு வெஸ்பேசியன் அரசேற்றான். இவன் எளிமை விரும்பி. அதனைத் தொடர்ந்து நிலவிய அரசியல் குழப்பங்கள் போன்ற பல காரணங்களால் தமிழக ரோமானிய வணிகம் சிறிது காலம் குன்றியது. பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு வெளியிடப் பெற்ற நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லையென கே.கே.பிள்ளை குறிப்பிடுவதுடன் இந்த ஒரு காரணத்தை மட்டுமே கொண்டு வாணிகம் அறவே அற்றுவிட்டது என்றும் கூற இயலாது. பேரரசன் கான்ஸ்டன்டைன் (பொ.ஆ. 324-337) காலத்தில் மீண்டும் தமிழகத்துடனான வணிகம் தொடர்ந்து வந்துள்ளது என்றும் உரைக்கின்றார்.

இக்கருத்தை உறுதி செய்யும் சான்றாக பிற்காலத்தைச் சேர்ந்த ரோமானிய செப்புக் காசுகளை ஆர்.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்து தெளிவுற விளக்கியுள்ளார். இவை மதுரை, திருக்கோயிலூர், கரூர் போன்ற ஊர்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.

‪#‎காசுகள்‬:

ரோமானியர்களது காசுகளைக் குடியரசு காசுகள், பேரரசுக் காசுகள் என இரு வகைப்படுத்தலாம்.

குடியரசு காசுகள்:

குடியரசு காசுகளில் தொன்மையானதாக்க் கிடைக்கப் பெறுவது சி.நேவியஸ் பல்புஸ் (C.NAEVIOUS BALBUS) என்ற வெளியீட்டாளரின் பெயர் பொறித்த காசுகளாகும். இவ்வகைக் காசுகளில் பெரும்பாலும் ஒருபுறம் வீனஸ், புவன் போன்ற கிரேக்க கடவுளர்களின் தலையும், பின்புறம் ஒரு சில காசுகளில் நின்ற நிலையிலுள்ள பருந்து, அதன் கீழே அரசனின் பெயர் பொறிக்கப் பெற்றுள்ளது. கரண்டி, ஜாடி, மந்திரக்கோல் போன்றவையும் காணப்பெறுகின்றன. இக்காசுகளில் DICTITER COSTER, CASSIVS, MAXIM PONTIF, AVGVR இது போன்ற வாசகங்கள் இடம்பெறுகின்றன.

பேரரசு காசுகள்:

ரோமானியப் பேரரசு காலக் காசுகளில் அகஸ்டஸ், டைபீரியஸ் ஆகியோரின் காசுகளே அதிகம் கிடைத்துள்ளன. டைபீரியஸின் காசுகள் மக்ஸிம் பாண்டிஃப் (maxim pontiff) வகைக் காசுகள் என்றழைக்கப் பெறுகின்றன. மற்ற அரசர்களில் கயஸ் (Gaius) கிளாடியஸ் நீரோ வெஸ்பேசியன், டோமிதியன் (Domitian) அந்டோநியஸ் பயஸ் (antoninus pius) மார்க்கஸ் ஆரேலியஸ் (marcus aurelius) செப்திமியஸ் செவெரெஸ் (septimius severus) கரகல்லா ஆகியோரது காசுகள் குறைந்த அளவிலும் கிடைத்துள்ளன. பொ.ஆ.மு. 100லிருந்து பொ.ஆ. 300 வரைக் கிடைக்கும் ரோமானியர்களது காசுகள் தங்கம், வெள்ளி உலோகத்தாலானதாகவே உள்ளன. குறிப்பாகத் தங்க்க்காசுகளே அதிகம் கிடைத்துள்ளன. இவை உலோக மதிப்புக் கருதி தமிழக வணிகர்களால் வரவேற்கப் பெற்றுள்ளன. ஆனால் பொ.ஆ. 300க்குப் பிறகு தமிழகத்தில் கிடைக்கும் (கரூர், திருக்கோயிலூர் போன்ற இடங்களில்) ரோமானியர்களது காசுகள் செப்பு உலோகத்தாலான குவியல்களாகவே கிடைத்துள்ளன. இது கொண்டு ரோமானியர்களது குடியிருப்புகள் தமிழகத்தில் இக்காலக் கட்டத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கருதலாம்.

சின்னங்கள்:

ரோமானியர்களது காசுகளில் வீனஸ், புவன் போன்ற அவர்களது தெய்வங்களோ அல்லது அந்தந்த அரசர்களின் தலை உருவத்துடன் எழுத்துப்பொறிப்புகளும் இடம்பெறுகின்றன.
தமிழகத்தில் ரோமானியக் காசுகள் கிடைக்கும்

இடங்கள்:

தமிழகத்தில் அகிலாண்டபுரம், ஆனைமலை, கல்லகிணர், சாவடிப்பாளையம், திருப்பூர், பூதி நத்தம், பெண்ணார், பொள்ளாச்சி, வெள்ளலூர் (கோயமுத்தூர்), உத்தமபுரம் (மதுரை), கத்தாங்கண்ணி (ஈரோடு), கரிவலம் வந்த நல்லூர் (திருநெல்வேலி), கரூர், கலையம்பத்தூர் (திண்டுக்கல்), காருகாக்குரிச்சி (புதுக்கோட்டை), கிருஷ்ணகிரி (தருமபுரி), கோனேரிப்பட்டி (சேலம்), சொறையப்பட்டு, தொண்டைமாநத்தம் (கடலூர்), பிஷப்டவுன் (உதகமண்டலம்), , மாம்பலம் (சென்னை), மதுரை போன்ற இடங்களில் ரோமானியக் காசுகள் கிடைக்கின்றன.

ரோமானிய போலிக் காசுகளும் வெட்டுக் காசுகளும்: (Imitaiton & slash coins)
ரோமானியர்களது காசுகளைப் போல் போலியாகச் செய்யப் பெற்ற காசுகள் இந்தியா முழுவதும் தமிழகத்திலும் காணப்பெறுகின்றன. அரசனின் காசின் பின் பக்கத்தில் மற்றொரு அரசனின் உருவம் பொறிக்கப் பெற்ற காசுகளும், சரியாக அரசனின் முகப்பகுதியில் வெட்டுக் குறியுள்ள காசுகளும் தமிழகத்தில் கிடைக்கின்றன. இவ்விதக் காசுகள் ரோமானிய காசுகளின் உலோக மதிப்புக்கருதி, குறைந்த மாற்றுள்ள காசுகள் புழகத்தில் விடுவதற்காக அச்சிடப் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

அந்நியரது காசுகளைப் புழகத்திலிருந்து நிறுத்துவதற்காக இவ்விதம் வெட்டுக்குறிகள் இடம்பெற்றுள்ளதாக ஒரு சிலரும், தங்கத்தின் மதிப்பை சோதிக்கவே இவ்விதம் இடம்பெற்றுள்ளது என ஒரு சிலரும் கருதுகின்றனர்.

http://www.tamilvu.org/…/t…/inscription/html/roman_coins.htm

கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா (Korevora)” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Source : Ancient Tamil Civilization



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 December 27, 2013

கொடுமணல் தொல்லியல் களம்

 
தனுஷ்கோடியையும், பூம்புகாரையும் கடல் தின்று விட்டது. உலகலாவிய பண்டைய நாகரீகங்களில் பூம்புகாருக்கு தனிப்பெரும் இடமுண்டு. காவிரி கடலில் புகும் இந்தப் பூம்புகாரைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். மைசூர் மகாராஜா வம்சத்தின் மீதான் சாபத்தினால் மண்மேடாகிப் போன தலக்காட்டின் பண்டைய வரலாறு பற்றிக் கூட இப்போது பலர் பேசுகிறார்கள். ஆதிச்சநல்லூரையும், கொடுமணலையும் குறித்து சமீபத்தில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் ஆதிச்சநல்லூர் பரவலாக அறியப்பட்ட ஒன்று. என் நண்பர் ஒருவர் கூட ஆதிச்சநல்லூர் ஆதாரங்களை வைத்து உலகின் முதல் மொழி தமிழ் மொழியே என நிறுவ முயன்று வருகிறார். (இந்த வரியை வாசிக்கும் போது உங்களுக்கு சிரிப்பு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல)
 
ஆனால் கொடுமணல் அவ்வளவாக அறியப்படாத ஒரு ஊர். இன்றைய ஆனந்த விகடன் இதழில் கூட பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ராஜனை 2013 இன் டாப்-10 மனிதர்களில் ஒருவராக அடையாளம் காட்டி விட்டு, ” 2013-ல் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் பேராசிரியர்ராஜனும்அவரது ஆய்வுக் குழுவினரும் நடத்திய மற்றோர் அகழாய்வில், 2,300ஆண்டுகளுக்கு முன்னரே வணிக நகரமாக இருந்த கொடுமணலில்இரும்புஎஃகு உருக்குஆலை மற்றும் கல்மணிகள் செய்யும் ஆலைகள் இயங்கியிருப்பது தெரிய வந்தது” என்ற செய்தியைக் கொடுத்திருக்கிறார்கள்.
 
காங்கேயத்திற்கும், சென்னிமலைக்கும் நடுவே கிழக்கு நோக்கி நொய்யல் நதி ஓடிய காலமொன்றிருந்தது. இப்போது திருப்பூர் சாயப்பட்டறையின் புண்ணியத்தில் அது நாகமாகப் போய் விட்டது. இப்போது என்றால் கடந்த முப்பது ஆண்டுகளாகவே. ஆனால் தொழிலை வைத்து பணக்காரர் ஆன பிசினஸ்மேன்கள் தீரன் சின்னமலையின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்திக்கொண்டு மண்ணை நம்பியிருக்கும் குடியானவக் கவுண்டன்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

காங்கேயத்திற்கும், சென்னிமலைக்கும் மேற்கே ஒரத்துப்பாளையும் நீர்த்தேக்கத்திற்குப் பக்கத்தில் ஆற்றின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கிராமமே கொடுமணல். நீர்த்தேக்கம் என்ற பெயர் கொண்டிருந்தாலும் அங்கே செல்வதானால் வாட்டர் பாட்டில் வாங்கிச் சென்றாக வேண்டும்.
 
அமராவதிக் கரையில் சேர நாட்டுத் தலைநகராக கரூர் (வஞ்சி மாநகர்) விளங்கினாலும், நொய்யலாற்றங்கரையில் கொடுமணல் சேர நாட்டின் முக்கியமான தொழில் நகரமாக இருந்திருக்கிறது. பண்டையை சங்க நூல்களில் அதைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். கொடுமணலைக் கண்டறிந்ததில் புலவர்.ராசு அவர்களுக்கு பெரும் பங்குண்டு.
 
கொடுமணல் குறித்து கலைஞர் கூட ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதிலும் ஏகப்பட்ட அரசியல் இருக்கும் போல.
மே 24 மாலை மலர்:

// ஈரோடு மாவட்டத்தில், சென்னிமலைக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ளதுதான் கொடுமணல் என்ற சிறப்புமிக்க ஊர். அங்கே 50 ஏக்கர் பரப்பில் 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பிலான ஈமக்காட்டில் ஒரு ஈமச் சின்னமும் அகழாய்வு செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அங்கே விலை உயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் உருக்கு உருக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும் கண்டு அறியப்பட்டுள்ளன.

கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களைப் பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் எல்லாம் வந்துள்ளார்கள். கொடு மணலில் கிடைத்த மட்பாண்டம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும். அங்கே கிடைத்துள்ள மட்பாண்டங்கள் தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன், எழுத்தறிவு பெற்று, மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துகின்றதாம்.

இந்தக் கொடுமணல் அகழாய்வு களத்தைப் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்துள்ள சூழ்நிலையில், அந்த நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு தொல்லியல் துறை தயாராக இல்லை என்று செய்தி வந்துள்ளது. 

தனது பெயரை வெளியிட விரும்பாத தொல்லியல் துறை அதிகாரி ஒருவர், “தனிப்பட்ட குழுக்களோ, அரசு சார்ந்த நிறுவனங்களோ அகழாய்வு செய்யும்போது, அதில் கிடைக்கும் அரிய பொருள்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும். அப்பொருள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டதோ, அந்த இடத்திற்கு அருகில் உள்ள, அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். மற்றபடி நிலத்தை கையகப்படுத்த முடியாது. அதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன” என்று கூறியிருக்கிறார்.

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், “கொடுமணலில் கண்டறியப்பட்ட தாமிர தொழிற்கூடம், தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அங்கு காணப்படும், பல்வேறு விதமான அணிகலன்கள், அதை உறுதி செய்கின்றன. தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில், கொடுமணல் அகழாய்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமை வாய்ந்தது. எனவே தமிழக அரசு, கொடுமணல் தொல்லியல் களத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும். அந்த நிலத்தைக் கையகப்படுத்தி, பாதுகாக்கப்படும் இடமாக அறிவிக்க வேண்டும்” என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சங்க இலக்கியமான பதிற்றுப் பத்தில், “கொடுமணம்பட்ட....நன்கலம்” எனக் கபிலரும், “கொடுமணம்பட்ட வினைமான்” என அரிசில் கிழாரும் பாடியுள்ளனர். தொன்மைமிக்க தமிழர்களின் வாழ்க்கை முறையிலும், நாகரிகம் மற்றும் பண்பாட்டிலும் மிகுந்த ஈடுபாடும் ஆராய்ச்சி அறிவும் கொண்ட அவரது வேண்டுகோளையேற்று கொடுமணல் அகழாய்வுக் களத்தை தொல்லியல் துறை சார்பில் ஏற்று, அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். 

கோவையில் 27-6-2010 அன்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நான் ஆற்றிய நிறைவுரையில், “கி.பி. இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமர்கள் தமிழர்களோடு நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பழைய ரோம் நாணயங்கள் தமிழ் நாட்டுக் கடற்கரைகளில் ஏராளமாகக் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் கிடைத்தவற்றைவிட, ரோமானிய நாணயங்கள் இந்தக் கொங்கு நாட்டில்தான் மிகுதியாகக் கிடைத்துள்ளன” என்று குறிப்பிட்டதை மேலும் மெய்ப்பிக்கும் வகையில், பழம்பெருமைமிக்க கொங்குநாட்டின் கொடுமணல் அகழாய்வின் போது இந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.//


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கரூர் வரலாறு : இணையங்களில்

விக்கிபீடியா:

2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ,பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது.தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சேரர்களால் தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு பிந்நாளில் பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான் ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.1793ல் கரூர் கோட்டையை அழித்து ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர்.

ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.

பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.

கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போதுரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.

கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது.

பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கரூவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.

Chera Rulers:

Karur was ruled by different Chera kings. Kongu Cheras (capital:Karur (Vanji), ruling nearly the whole of old Kongu – lineage unclear- Cheran kootam) [2]

Ruler NameReign
Vanavaramban[430-350 BC]
Kuttuvan Uthiyan Cheralathan[350-328 BC]
Imayavaramban Neduncheralathan[328-270 BC]
Palyaanai Chelkezhu Kuttuvan[270-245 BC]
Kalangaikanni narmudicheral[245-220 BC]
Perumcheralathan[220-200 BC]
Kudakko Neduncheralathan[200-180 BC]
Kadal Pirakottiya Velkezhu kuttuvan[180-125 BC]
Adukotpattuch Cheralathan[125-87 BC]
Selvak kadungo Vazhiyathan[87-62 BC]selva cheralathan[93-still now bc]

As found in Allahabad inscriptions of Samudragupta.

கரூரை ஆண்ட சேர மன்னர்களைப் பற்றி மேலும்  தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட முகவரிக்கு செல்லவும்.

http://karurmakkalkalam.blog.com/வரலாற்றுக்களம்

கரூரின் சமீபத்திய தகவல்களைத் தெரிந்து கொள்ள :

http://karurmavattam.blogspot.in/



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மண்ணின் மைந்தர் - கவிஞர் குலோத்துங்கன் கல்விக்காட்சியகம், தென்னிலை (கரூர் = சேரர் தலைநகர் வஞ்சி)

அண்மையில் கல்வியாளர் கவிஞர் குலோத்துங்கன் (பத்மபூஷண் முனைவர் வா. செ. குழந்தைசாமி) சொந்த ஊரில் நடைபெறும் கல்லூரி சிறப்பான விழா எடுத்து அவரது தன்வரலாற்று நூலை அறிமுகம் செய்தது. அக் கல்லூரி நிர்வாகிகளுக்குப் பாராட்டு! வாசெகு ஐயா பெற்ற பல்வேறு பட்டயங்களை தென்னிலைக் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்துவிட்டார். அந்த விழாக் காணொளியுடன் சில சொற்பொழிவுகளும் கேட்போம். தமிழ் எழுத்துச் சீர்மையின் மூலம் தமிழெழுத்துக்களை ஆங்கில மீடியம், அயல் நாட்டுத் தமிழர்கள் போன்றவர்கள் சிறந்த தமிழ் அறிவு பெற்று வாழ வழிவகுப்பவர். அவரது சென்னைப் பல்கலைக்கழகச் சொற்பொழிவு இணையப் பல்கலைத்தளத்தில் இருக்கிறது. கேட்டுப் பாருங்கள். தமிழை நவீன யுகத்துக்கு எடுத்துச் செல்லும் இணையப் பல்கலை நிறுவுனர் கவிஞர் குலோத்துங்கன் வாழி! 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=_K9nIWuEbm4

இன்று தமிழ் இணையப் பல்கலைக்கழகம் விரிந்த ஆலமரமாக தமிழ் வளர்ச்சிக்கு உலகெங்கும் துணையாக விளங்குகிறது. உலகிலேயே முதல் முறையாக ஒரு மொழிக்கென இணையத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பெற்றது உலகின் ஆறு செம்மொழிகளில் ஒன்றாய தமிழ்மொழிக்குத் தான். இணையப் பல்கலைச் சிந்தனை கவிஞர் குலோத்துங்கன் (முனைவர் வா. செ. குழந்தைசாமி) அவர்களுக்கு முதலில் உதித்தது. அதை நடுவணரசிடம் சென்று நடைமுறைப் படுத்தியும் செய்த செயல் வீரர் அவர். இன்று அவரோடு 1970களில் இருந்து தமிழ்ப் பணியாற்றும் பேரா. ப. அர. நக்கீரனார் இயக்குனராக இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட அருந்தமிழ் நூல்களை வெள்ளுரையாகவும் (plain-text unicode), பிடிஎப் கோப்புகளாகவும் இணையப் பல்கலைக்கழகம் வேண்டுவோர்க்கெல்லாம் பகிர்ந்தளித்து வருகிறது. முந்தை நாளில் தமிழ் ஏடுகள் தீயாலும், வெள்ளத்தாலும், கரையானாலும், கவனிப்பாரின்றியும் அழிந்தன. நம் முன்னோர்கள் அச்சிட்ட லட்சக்கணக்கான நூல்கள் படிப்பாரும், பாதுகாப்பாரும் இன்றி விரைவில் அழியும் தறுவாயில் உள்ள அவலத்தைத் தமிழ்நாடெங்கும் காண்கிறோம். ரியூனியன், தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, நார்வே ... போன்ற நாடுகளில் தமிழ் பேசாத, எழுதாத மரபுவழித் தமிழினத்தார்களுக்குத் தமிழ் போதிப்பது இணையப் பல்கலையின் முக்கிய நோக்கம். ஆனால், அது ஒரு கூறுதான். அதை விடவும் முக்கியமானது நூல்களை பிடிஎப் ஆக்கி ஆய்வாளருக்கு அளித்து தமிழாராய்ச்சியை உலகத்தின் சிறந்த பல்கலைகளில் விரிவாக்க உதவுவதாகும். தமிழறிஞர்கள், மொழியியல் பேராசிரியர்கள் கருத்தாடும் ஆய்வுக்களங்களில் (உ-ம்: செந்தமிழ் குழுமம் (பாரிஸ் பல்கலை), இந்தாலஜி லிஸ்ட், ...) பயன்படும் வகையில் இந்த 19-ஆம் நூற்றாண்டு, 1950-60 வரை அச்சான தமிழ் நூல்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை முழுதுமாய்த் தரும் பெரும்பணி போன்றவை வழிகாட்டியாய் விளங்கும். இந்த பிடிஎப், வெள்ளுரை என நூல்களை அளிக்கும் பணியை அரசாங்க வரிப்பணத்தில் செய்தால் இணையப் பல்கலைக்கழகத்தின் செந்தமிழ்க் கொடையாக விளங்கும். சிங்களக் காடையர் யாழ் பல்கலையை எரித்த போது, எழுத்தாளர் சுஜாதா ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’ என்ற கதையை எழுதினார். அது யாழில் ஏற்பட்ட தமிழ் அழிப்பை லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எடுத்துச்சொன்ன எழுத்து. ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’ இணையப் பல்கலையில் அதன் அதிகாரிகள் வழங்கும் நாள் செந்தமிழின் பொன்னாள்! 

இன்று இணையம் ஏற்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தமிழ் வளர்ச்சி, தமிழாய்வின் வளர்ச்சி என்று பார்த்தால் இணையத்தில் அதிகமாக இல்லை என்றுதான் நான் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. 8 கோடித் தமிழர்கள்! ஆனால், வெறும் 10,000 வலைப்பதிவுகள். அதிலும் எழுதுவோர் தொகை ஆயிரத்துக்கும் குறைவே. சினிமாதான் அதிலும் பெரும்பங்கு. ஒரு 10 மின்குழுக்கள். அவ்வளவுதான். உலக அறிவும், விஞ்ஞானமும் ஆங்கிலத்தில் நாள்தோறும் விரிந்தும் பரந்தும் வளர்ந்துவருகிறது. ஆனால் அதுபோல், பாரதி, பாரதிதாசன் கனவாகிய தமிழ் வளர்ச்சி இருக்கிறதா? என்று பார்த்தால் காணோமே. அரசை எடுத்துக் கொள்ளுங்கள்: எத்தனை தமிழ்நாட்டு அரசாங்கத் தளங்கள் தமிழிலே இருக்கின்றன? பெரிதாக ஒன்றையும் காணோமே. இதற்கெல்லாம் விடிவாக தமிழ் இணையப் பல்கலை ஒன்றுதான் தெரிகிறது. அதுபோன்ற தளங்கள் மிக வேண்டும். புராணிகர்களுக்குக் கூட இணையப்பல்கலை தரவுதளங்கள் மிகுதியும் பயனாகிறது என்பது அனுபவத்தில் கண்டுள்ளேன். ’திடீர்’ சாம்பார் போல, ‘திடீர்’ புலவர்கள் ஐயா இவர்கள்’ என்று தமிழ்ப் பேராசிரிய நண்பர்கள் நகைச்சுவையாய்க் குறிப்பிடுகின்றனர். 8 கோடி தமிழ் பேசும் மக்களில் ஆயிரம் பேருக்குக் குறைவாக எழுதும் நிலை மாறி, பல லட்சோபலட்சம் தமிழர்கள் விரிவாக தங்கள் ஆராய்ச்சியை இணையப் பல்கலை போன்றவற்றைப் பயனித்து எழுதும்போது புராணிகக் கதைகள் மாறி அறிவியல் பார்வைக்குத் தமிழ் வளரும் என்பதுறுதி. தாய்லாந்து, கொரியா மொழிகளில் எத்தனை லட்சம் பேர் எழுதுகிறார்கள் இணையத்தில் என்று பார்த்தால், தமிழ், தமிழாய்வு செல்லவேண்டிய தூரம் நன்கு தெரிகிறது. 

அண்மையில் மரை என்றால் Antelope. மரையூர், மரைக்காடு என்னும் பழந்தமிழ்ப் பெயர்கள் கொண்ட ஊர்கள் மிகுதி. இடைக்காலத்திலே ரகர > றகர திரிபு ஏற்பட்டதால் மறைக்காடு எனத் திரிந்துள்ளது. ’வேதம் அஃறிணைப் பொருள், அது எப்படி சிவனை வழிபடும்? மனிதர்கள் மரைப்புத்தகம் படிக்க அல்லாவா வேண்டும்?’ எனவே, மறைக்காடு ஆனது என்பது புராணக்கதை விஞ்ஞானத்துக்குப் பொருத்தமில்லாத கதை என்பார் பாவாணர். அதேபோல் தான் வரகூர் என்னும் பழந்தமிழ்ப் பெயருக்கு தேசாந்திரியாய் வந்த தெலுங்குநாட்டு 18-ஆம் நூற்றாண்டு சுவாமிகளுக்கு வரகூர்ப் பொருளும், தமிழ் உச்சரிப்பும் விளங்காததால் ஊரை புரி என்றும், வரகை வராஹம் என்றும் மாற்றியதையும் விளக்கினேன். அதற்கேற்பட்ட கதையை 'Urban myth' என்பர். வரகூர் மாறியிருப்பது சென்னையின் Urban mythகளில் ஒன்று எனத் தெளிவாகிறது. சென்னைத் தமிழறிஞர் ஒருவர் பர்கூர் (Burgur) என்பதும் வரகூர் என்பதன் திரிபுதான் எனக் காட்டினார். ஆர்க்காடு ஆறுகாடு (ஷடாரண்யம்) என மாறியதுபோல, மரைக்காடு வேதாரணியம் (மறைக்காடு) ஆகியுள்ளது. எனவே தான், தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் (உ-ம்: முனைவர் தி. நெடுஞ்செழியனார், மயிலாடுதுறை, 2008) அறிவுறுத்துவது போல மரைக்காடு என்று வேதாரணியத்தை பழந்தமிழ்ப் பெயரால் அழைத்தல் சிறப்பு. முதலில், பத்திரிகைகள் இதனைச் செய்ய தமிழ் முனைவர்கள் திருப்பூர் கிருஷ்ணன், அண்ணாகண்ணன், வல்லமை இதழாளர்கள் போன்றோர் முன்வரவேண்டும். அப்போது இளைஞர்கள் பழந்தமிழ்ப் பெயரை அறிந்துகொள்ள ஏதுவாகும். ஆர்க்காடு, மயிலாடுதுறை, மரையூர், மரைக்காடு, ... எனத் தமிழர் எழுதுதல் தமிழ் வரலாற்றுக்கும், தமிழின் விஞ்ஞான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். மரைக்காடு பற்றி விரிவாக இராமகி ஐயா பலமுறை எழுதியுள்ளார். நூலாராய்ச்சிகளில் சிறந்த தமிழறிஞர்கள் பலரும் 60-70 ஆண்டுகளாய் விளக்கிவரும் ஆய்வுமுடிபுகள் இவை. நேற்று கவிமாமணி இலந்தை ராமசாமி ஹ்யூஸ்டனில் பாரதியார் கலைமன்றத்தில் பேசியதைப் பற்றி அகத்தியர் குழுவில் எழுதியிருந்ததைப் பல்லாண்டுகட்குப் பின்னர் படித்தேன். ரகர, றகர வேறுபாட்டை எவ்வளவு நுட்பமாக பாரதியார் கையாண்டுள்ளார் என இலந்தை விளக்கியிருக்கிறார். அதேபோல, ரகர, றகர வேறுபாடுகள் ஊர்ப்பெயர்களில் உள்ள முக்கியத்துவம் தமிழர் வாழ்வில் பனுவலியல் ஆய்வினால் தெளிவாகிறது: ஆர்க்காடு > ஆற்காடு (ஷடாரணியம் என ஆனது!!), ஏர்க்காடு > ஏற்காடு, மரைக்காடு > மறைக்காடு ... பாரதியார் வலியுறுத்தும் செந்தமிழின் ரகர, றகர நுட்பங்களைத் தமிழ் ஊர்ப்பெயர்களில் ஆர்க்காடு, மரைக்காடு, மரையூர் என்பவற்றில் பயன்படுத்துவதன் இன்றியமையாமையினை விளக்கி ‘மரை, மரையூர், மரைக்காடு’ என்று கட்டுரை எழுதலாம். Smile of Murugan is  a great intro by Zvelebil to Tamil literature. முத்தமிழ் வினோதன் மரைமகள் மணாளன் முருகன் தமிழர் ஆர்க்காடு, மரையூர் போல மரைக்காடு, முதுகுன்று, மயிலாடுதுறை, ... எனும் போது முறுவல் புரிகிறான்!

என் போன்ற பலரை அறிவியற் பார்வையில் தமிழாராய்வு செய்யத் தூண்டிய பேராசான் வாசெகு ஐயாவின் காணொளிகள் சில காண்போம்! 

நா. கணேசன் 
 
At MIT, Dr. VCK speech - Tiru. APJ Abdul Kalam, President of India
 
கலைக்களஞ்சியம் சிடி வெளியீட்டு விழா:
 
திருக்குறள் விழா, சிங்கப்பூர், 1994
 
Tamil as Classical language of India:
 
கவிஞர் குலோத்துங்கன் - தென்னிலை கல்லூரிவிழாக் காணொளி: 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கருவூர்

அக்காலத்தில் மூன்று கருவூர்கள் இருந்துள்ளன. அதில் சேரர்கள் ஆண்ட கருவூர், “சேரபோத்ரர்களின் அரண்மையுள்ள கரோரா“ என்று தாலமியால் சுட்டப்பட்டு்ள்ளது. இது கொங்குநாட்டில் ஆன்பொருநை நதிக்கரையில், சேரர்களின் இரும்பொறை மரபினரால் ஆளப்பட்ட கருவூர் ஆகும். இதற்கு “வஞ்சி“ என்ற வேறொருபெயரும் உண்டு. இது இன்றைய “கரூர்“ ஆகும். மற்ற இரண்டு கருவூர்களுள் ஒன்று மேலைக்கடற்கரையிலும் மற்றொன்று தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ளது. தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ள கருவூரைச் சேரர்களின் குட்டுவன் மரபினரால் ஆளப்பட்டுவந்துள்ளது.

இன்றைய கரூர் அன்றைய காலத்தில் செல்வச் செழிப்புள்ள நகரமாக இருந்துள்ளது. இது அயல்நாட்டு வாணிபத்தோடு மிகுந்த தொடர்புடையது. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வுகளில் யவனர்களின் காசுகள் பல கிடைத்துள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அமராவதி நதிக்கரையில், தமிழகத்தின் மையப் பகுதியில், திருச்சிராப்பள்ளியையும், ஈரோட்டையும் இணைக்கும் இருப்புப் பாதை தடத்தில், அவ்விரு நகரங்களுக்கும் இடையில் அமைந்திருக்கும் நகரம் கரூர் ஆகும். கடந்த 1874ம் ஆண்டிலிருந்து கரூரானது நகராட்சியாக அங்கீரிக்கப்பட்டது. பின்னர் 1974ம் ஆண்டு முதல் முதல் நிலை நகராட்சியானது. தற்போது சிறப்பு நிலை நகராட்சியாக இருக்கிறது, கரூர் நகர ஒருங்கினைப்பில், கரூர் நகராட்சியோடு, இனாம் கரூர், தாந்தோன்றி போன்ற மூன்றாம் தர நகராட்சிகளும், ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 1951ம் ஆண்டில் கரூர் நகராட்சியின் மக்கள் தொகையானது சுமார் 42,155 ஆகும். கடந்த 2001ம் ஆண்டு கால வாக்கில் மக்கள் தொகையானது சுமார் 76,336 ஆக அதிகரித்தது. தற்போது 2014ம் ஆண்டு மக்கள் தொகையானது சுமார் 9,33,791 ஆக உள்ளது. பரப்பளவில் சுமார் 2.895.57 சதுர மீட்டராகும். (பார்க்க. தமிழ்நாடு அரசு இணையதளம்)
சேரர்களின் தலைநகரான வஞ்சியே இன்றைய கரூர் எனச் சொல்வதற்கு ஆதாரங்கள் உள்ளன. கரூர். சோழர்களின் ஆறு தலைநகரங்களில் ஒன்றாகும்.கரூரைச் சுற்றியுள்ள ஆறு நாட்டார் மலை, சுக்காலியூர் மற்றும் ஐவர்மலை போன்ற இடங்களில் காணப்படும் சமணர் படுக்கைகள் கி.மு. மூன்றாம் நு◌ாற்றாண்டிலிருந்து, கி.பி. இரண்டாம் நு◌ாற்றாண்டு வரை இந்தப் பகுதியில் சமணம் சிறப்புற்றிருந்ததாக சான்றுகள் கூறுகின்றன.    
தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் கரூர் பசுபதிஸ்வரர் ஆலயமும் ஒன்று. பேரரசன் இராசராச சோழனின் ஆன்மிக குருவும் தஞ்சைப் பெரிய கோயிலின் லிங்கத்திருவுருவைப் பிரதிஷ்டை செய்தவரும் திருவிசைப்பா இயற்றியருவருமான கரூவூர் தேவர் அவதரித்த இடம் கரூர்.

கரூரை பற்றிய சிறிய தகவல் மற்றும் முன்னுரை, 

 

 

    இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. வரலாற்று புகழ்பெற்ற பழமையான சோழர்கால நகரம். சோழர்களும், மதுரை நாயக்க மன்னர்களும், கடைசியாக ஆங்கிலேயரும் ஆண்டனர். முற்காலத்தில் கரூர் தங்க நகை வேலைப்பாடுகளுக்கும் வைரம் பட்டை தீட்டுவதற்கும் வர்த்தக மையமாக விளங்கியுள்ளது. அந்த நாட்களில் ரோம் நகரிலிருந்து கரூரில் தங்கம் இறக்குமதியாகியுள்ளது. படைப்புக் கடவுளான பிரம்மா இங்குதான் தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்று ஐதீகம். வடக்கே நாமக்கல், தெற்கு திண்டுக்கல், மேற்கே திருச்சி, கிழக்கே ஈரோடு என பல மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது கரூர்.                

    2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
            ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது.
 
               கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது.
 
         கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சிமற்றும் தஞ்சாவூர் ஆகிய வட மாவட்டங்களை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.
 
         கரூரானது தமிழகத்தின் மைய மாவட்டமாகும். இது திருச்சிக்கு மேற்கே 78 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டிற்கு தென் கிழக்கே 60 கி.மீ. தொலைவிலும், சேலத்திற்கு தெற்கே 100 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு வடக்கே 143 கி.மீ. தொலைவிலும், கோவைக்கு கிழக்கே 135 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வரலாற்றுக்களம்

வரலாறு படி... வரலாறு படை....
வரலாறு படி… வரலாறு படை….

கரூர் வரலாறு…சேரர் வரலாறு…

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.பெரும்பாலும் இன்றைய தமிழகம்த்தின் கொங்குநாடு பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின.

மெலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டிநாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்:
சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

மன்னர்கள்:
சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

நகரங்கள்:
கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.

சில அரசர்களின் ஆட்சியாண்டுகள் ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:
* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்

தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் கி.மு 1200:
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.

உதியஞ்சேரலாதன் – கி.பி. 45-70:
உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்” என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – கி.பி. 71-129:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் “இமய வரம்பன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் அடங்கும், குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட காழா அத் தலையார், மாமூலனார், பரணர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.

வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.

முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் – கி.பி. 80-105:
பல்யானைச் செல்கெழுகுட்டுவன், சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – கி.பி. 106-130:
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ….சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்…. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம்:
பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.

செயல்கள்:
பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், “……இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்…..” என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.

சேரன் செங்குட்டுவன் – கி.பி. 129-184:
சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.

காலம்:
பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள் எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.

வரலாற்றுத் தகவல்கள்: தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

அந்துவஞ்சேரல் இரும்பொறை:
அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.

அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.

இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை – கி.பி. 123-148:
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.

இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு “கோ ஆதன்” என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 148-165:
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.

தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.

இளஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 165-180:
இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.

இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.

குட்டுவன் கோதை – கி.பி. 184-194:
குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.

சேரமான் வஞ்சன்:
சேரமான் வஞ்சன், என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச் சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.ன் புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.

மருதம் பாடிய இளங்கடுங்கோ:
மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.

சேரமான் கணைக்கால் இரும்பொறை:
சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை:
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். “மாக்கோதை” என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.

நன்றி: கட்டுரை தொகுப்பாளர் பகலவன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முசிறித் துறைமுகம்

முசிறித் துறைமுகப்பட்டினம் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங் களில் பேர்போனது. அக்காலத்தில் அது கிழக்குக் கடற்கரையில் உலகப் புகழ்பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம் போல மேற்குக் கரையில் உலகப் புகழ் பெற்றிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையி லிருந்து உண்டான பேரியாறு மேற்குக் கடலில் விழுந்த இடத்தில் முசிறித் துறைமுகம் அமைந்திருந்தது. சேர நாட்டுத் தலைநகரமாக அக் காலத்தில் இருந்த வஞ்சி (கரூர்) நகரம், பேரியாறு கடலில் விழுந்த இடத்துக்கு அருகில் பெரி யாற்றின் கரைமேல் இருந்தது. வஞ்சி நகரத்திலே சேரஅரசர் வாழ்ந்திருந்தார்கள். (இந்தச் சேரர் வஞ்சி, கொங்குநாட்டு வஞ்சி (கரூர்) அன்று. சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் வஞ்சி என்றும் கரூர் என்றும் பெயர் பெற்றிருந்த இரண்டு ஊர்கள் சங்க காலத்தில் இருந்தன). சேரநாட்டுத் தலைநகரமான வஞ்சிமா நகரத்து மேற்கே கடற் கரையில் பேரியாறு கடலில் சேர்ந்த புகர் முகத்தில் முசிறித் துறைமுகப் பட்டினம் இருந்தது.

முசிறித் துறைமுகத்தில் முக்கியமாக மிளகு ஏற்றுமதியாயிற்று. யவனக் கப்பல்கள் மிளகை வாங்குவதற்காகவே முசிறிக்கு வந்தன. யவனர் முசிறியை முசிறிஸ் என்று கூறினார்கள். வால்மீகி இரமாயணம் முசிறியை முரசி பதனம் என்று கூறுகின்றது. முசிறி வட மொழியில் முரசி ஆயிற்று. முசிறிக் கடலில் முத்துச் சிப்பி களும் உண்டாயின. சிப்பியி லிருந்து முத்துக் கிடைத்தது. முசிறி யில் உண்டான முத்துக்களைக் கவ்டல்லியரின் அர்த்த சாத்திரம் கௌர்ணெயம் என்று கூறுகின்றது. பேரியாற்றுக்குச் சூர்ணியாறு என்றும் பெயருண்டு. சூர்ணியாற்றின் முகத் துவாரத்தில் உண்டானபடியால் இந்த முத்து, கௌர்ணெயம் என்று பெயர் பெற்றது. சௌர்ணெயம் என்னும் பெயர் திரிந்து கௌர்ணெயம் என்றாயிற்று. முசிறிக் கடலில் உண்டான முத்துக்கள் முசிறிப் பட்டினத்தின் ஒரு பகுதியான பந்தர் என்னும் இடத்தில் விற்கப் பட்டன. முசிறிப் பட்டினத்தைச் சேர்ந்த பந்தரில் முத்துக்களும் கொடுமணம் என்னும் இடத்தில் பொன் நகைகளும் விற்கப் பட்டன என்று பதிற்றுப் பத்து கூறுகிறது.

இன்னிசைப் புணரி இரங்கும் பௌவத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்
கமழுந தாழைக் கானலம் பெருந்துறை 

பந்தரிலும் கொடுமணத்திலும் முத்துக்களும் நன்கலங்களும் (நகைகள்) விற்கப்பட்டன என்று 7 ஆம் பத்து 7ஆம் செய்யுள் கூறுகின்றது.

‘கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்’

என்று 8ஆம் பத்து (4: 5-6) கூறுகின்றது. பந்தர் என்பது அரபு மொழிச் சொல். பந்தர் என்றால் ஆவணம், கடைவீதி என்பது பொருள். அக்காலத்திலேயே அரபியர் இங்கு வந்து வாணிகஞ் செய்தார்கள்.

கி.மு. முதல் நூற்றாண்டில் தென்மேற்குப் பருவக்காற்றை ஹிப்பலஸ் என்னும் யவன மாலுமி அரபு வாணிகரிடமிருந்து அறிந்து கொண்டு, அக்காற்றின் உதவியினால் நடுக்கடலினூடே கப்பலை முசிறிக்கு ஓட்டிக் கொண்டு வந்தான். தென்மேற்குப் பருவக் காற்றின் உதவியை யவனர் அறிவதற்கு முன்பு கப்பல் களைக் கரையோரமாகச் செலுத்திக் கொண்டுவந்தனர். அதனால் நெடுங்காலம் பிரயாணஞ் செய்ய வேண்டியிருந்தது. பருவக் காற்றின் உதவி கண்டுபிடித்த பிறகு யவனக் கப்பல்கள் நேரே முசிறித் துறைமுகத்துக்கு விரைவாகவும் கால தாமதம் இல்லாமலும் வரத் தொடங்கின. இந்தப் பருவக் காற்றுக்கு ஹிப்பலஸ் என்று பெயரை (அதைக் கண்டுபிடித்த ஹிப்பலஸ் என்பவனின் பெயரை) யவனர் சூட்டினார்கள்.

யவனக் கப்பல்கள் பவழம், கண்ணாடி, செம்பு, தகரம், ஈயம் முதலான பொருள்களைக் கொண்டு வந்து முசிறியில் இறக்குமதி செய்து இங்கிருந்து பல பொருள்களை ஏற்றுமதி செய்து கொண்டு போயின. ஏற்றுமதியான பொருள்களில் முக்கியமானதும் அதிகமாக வும் இருந்தது மிளகுதான். யவனர் மிளகை ஏராளமாக ஏற்றுமதி செய்து கொண்டு போனார்கள். உரோம் நாட்டில் மிளகு பெரிதும் விரும்பி வாங்கப் பட்டது. யவனர் மிளகை ஆவலோடு விரும்பி வாங்கினபடியால் அதற்கு ‘யவனப் பிரியா’ என்ற பெயர் உண்டாயிற்று. பெரிய யவனக் கப்பல் வாணிகர் பொன்னைக் கொண்டு வந்து விலையாகக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனார்கள். தாயங் கண்ணனார், யவனர் பொன்னைக் கொடுத்து மிளகை ஏற்றிக் கொண்ட போனதைக் கூறுகிறார்.

‘சுள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி’

(அகம், 149: 8-11)

சுள்ளியம் (பேரியாறு - பெரியாறு. நன்கலம் - நல்ல மரக்கலம். கறி - மிளகு)

முசிறித் துறைமுகம் ஆழமில்லாமல் இருந்தபடியால் யவனரின் பெரிய கப்பல்கள் கரைக்கு வரமுடியாமல் கடலில் தூரத்திலேயே நின்றன. ஆகவே தோணிகளில் மிளகை ஏற்றிக் கொண்டுபோய் யவனக் கப்பல்களில் ஏற்றிவிட்டு அதன் விலையாகப் பொன்னை வாங்கிக் கொண்டு வந்தார்கள். பரணர் இதை இவ்வாறு கூறுகின்றார்.

‘மனைக்குவைஇய கறிமூடையால்
கலிச் சும்மைய கரைகலக்குறுந்து
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து
... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... ..
முழங்குகடல் முழவின் முசிறி’

(புறம். 343 : 3-10)

(மனைக்குவை இய - வீடுகளில் குவித்து வைக்கப்பட்ட, கறி மூடை - மிளகு மூட்டை. கலம்தந்த - யவன மரங்கலங்கள் கொண்டு வந்த. பொற்பரிசம் - விலையாகிய பொன்)

கிரேக்கரும் ரோமரும் மட்டும் மிளகை வாங்கவில்லை. அக் காலத்தில் உலகத்திலே எல்லா மக்களும் மிளகை வாங்கினார்கள். அக்காலத்தில் மிளகாய் கிடையாதபடியால் எல்லாரும் மிளகை உணவுக்காகப் பயன்படுத்தினார்கள். பாரத நாட்டு மக்களும் மிளகைப் பயன்படுத்தினார்கள். முசிறித் துறைமுகத்திலிருந்து மிளகு கொண்டு போகப்பட்டபடியால் மிளகுக்கு ‘மரிசி’ என்று பெயர் உண்டாயிற்று. முசிறி என்னும் பட்டினத்தின் பெயர் தான் மரிசி என்று மருவிற்று. உலகப் புகழ் பெற்றிருந்த முசிறித் துறைமுகப் பட்டினம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இடையில் வெள்ளப் பெருக்கினால் அழிந்துவிட்டது. கிபி. 1341 இல் பெய்த பெருமழையின் காரணமாகப் பேரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு முசிறிப் பட்டினம் வெள்ளத்தில் மூழ்கி மறைந்து போயிற்று. அதனால் அதனையடுத்தப் புதிய காயல்களும் துருத்தி களும் (மணல் தீவு) ஏற்பட்டன. முசிறித் துறைமுகம் முழுகிப் போனபடியால் அதற்கு அருகில் பிற்காலத்தில் கொச்சித் துறைமுகம் ஏற்பட்டது.

குறிப்பு: முசிறிப் பட்டினத்துக்கு முயிரிக்கோடு என்றும் மகோதை என்றும் மகோதைப் பட்டினம் என்றும் சங்ககாலத் துக்குப் பிறகு பெயர் கூறப்பட்டது.

வைக்கரை

இது முசிறிக்குத் தெற்கேயிருந்த துறைமுகப்பட்டினம். கோட்ட யத்துக்கு அருகிலே இருந்தது. இந்தத் துறைமுகத்தைத் தாலமி என்பவர் பக்கரே (Bakarei) என்று கூறுகிறார். இந்தத் துறை முகத்தைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியவில்லை.

மேல்கிந்த

தாலமி என்பவர் இதை மேல்கிந்த (Molkynda) என்றும், பெரிப்ளூஸ் என்னும் நூல் நெல்கிந்த என்றும், பிளைனி என்பவர் நியாசிந்த என்றும் கூறுகின்றனர். தமிழில் இதை என்ன பெயரிட்டுக் கூறினார்கள் என்பது தெரியவில்லை. இது வைக்கரைக்குத் தெற்கே இருந்தது. இதைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை.

விழிஞம்

இலங்கொன் (Elankon) என்னும் துறைமுகப்பட்டினத்தைத் தாலமி என்னும் யவனர் கூறியுள்ளார். இது ஆயோய் (ஆய்) நாட்டில் இருந்ததென்று கூறுகின்றார். ஆய் நாடு பாண்டிய நாட்டில் இருந்தது. பொதிகை மலையைச் சூழ்ந்திருந்தது ஆய்நாடு. ஆய் மன்னர் பாண்டியருக்குக் கீழடங்கிச் சிற்றரசராக இருந்தார்கள். ஆய் நாட்டில் இருந்த துறைமுகத்தைத் தாலமி இலங்கொன் என்று குறிப்பிடுவது விழிஞம் என்னும் துறைமுகப் பட்டினமாகும். விழிஞம் மிகப் பழமையான சரித்திரப் புகழ் பெற்ற துறைமுகப்பட்டினம்.

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பதிகம்

 






5

குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்

ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக்கு
அமரர்க் கரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
காதற் கொழுநனைக் காட்டி அவளொடெங்
கட்புலங் காண விட்புலம் போயது
இறும்பூது போலுமஃ தறிந்தருள் நீயென

 


1
உரை
9

       குணவாயில் கோட்டத்து - திருக்குணவாயில் என்னும் ஊரிலுள்ள கோயிற்கண்ணே, அரசு துறந்து இருந்த - அரச போகத்தைத் துறந்து தவவுருத் தாங்கியிருந்த, குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு - குடதிசைக் கோவாகிய செங் குட்டுவன் என்னுஞ் சேரற்கு இளங்கோவாகிய அடிகட்கு, குன்றக் குறவர் ஒருங்கு உடன் கூடி - மலையில் வாழும் குறவ, ரெல்லாரும் திரண்டு சென்று, பொலம்பூ வேங்கை நலம் கிளர கொழுநிழல் - பொன் போலும் பூவினையுடைய வேங்கைமரத் தின் நன்மை மிக்க கொழுவிய நிழற்கண்ணே, ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு - ஒரு முலையினை இழந்து வந்து நின்றவளாகிய அழகிய பெருமையுடைய ஒருபத்தினியின் பொருட்டு, அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி - தேவர்க்கரச னாகிய இந்திரன் றமர் நெருங்கி வந்து, அவள் காதல் கொழு நனைக் காட்டி - அவளுடைய காதலையுடைய கணவனை அவட் குக் காட்டி, அவளொடு எம் கண்புலம் காண விண்புலம் போயது - அவளோடும் அவர் எம் கண்ணாகிய புலம் காண விண்ணினிடத்திலே சென்றது, இறும்பூது போலும் - ஓர் அதி சயமாயிருந்தது, அஃது அறிந்தருள் நீ என - அதனை நீ அறிந் தருள்வாயாக என்றவளவிலே,

       [அடியார்க்கு நல்லார்; குணவாயில் - திருக்குணவாயிலென்பதோரூர்; அது வஞ்சியின் கீழ்த்திசைக்க ணுள்ளது; அஃது ஆகுபெயர். கோட்டம் - அருகன் கோயில். இளமைப் பருவத்தே இராச போகத்தைத் துறத்தல் அருமையால் துறந்து என்றும், அங்ஙனம் போகம் நுகர்ந்தவிடத்தே மீட்டும் தவவுருத் தாங்கியிருத்த லருமையான் இருந்து என்றும் கூறினார்.

       குன்றக்குறவர் - ஏழுனுருபுத் தொகை; குன்றம் - கொடுங்கோளூர்க்கு அயல தாகிய செங்குன்றென்னும் மலை. அது திருச்செங்கோடு என்பவாலெனின், அவரறி யார்; என்னை? அத் திருச்செங்கோடு வஞ்சி நகர்க்கு வடகீழ்த் திசைக்கண்ணதாய்

இளங்கோவடிகள் இயற்றிய
 
சிலப்பதிகாரம்
 
மூலமும்
 
நாவலர் பண்டித
ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் 
எழுதிய உரையும்



      1. சூ.தொல். எழுத் 414

       அறுபதின் காத ஆறுண்டாகலானும், அரசனும் உரிமையும் மலை காண்குவமென்று வந்து கண்ட அன்றே வஞ்சி புகுதலானும் அது கூடாமையின் என்க.]

       கோட்டம் என்பது பல கடவுளர் உறையு மிடங்களுக்கும் பெயராகக் கனாத்திறமுரைத்த காதையில் வழங்கி யிருத்தலானும், கோயில் என்பதன் பரியாயமாகக் கொண்டு ஊர்காண் காதையிலும் முருகன் கோயிலைக் கோட்டம் என்று கூறியிருத்தலானும், குமர கோட்டம் முதலிய பெயர் வழக்கினும் இருத்தலானும் ஈண்டுக் கோட்டம் என்பதற்கு அருகன் கோயில் என்று பொருள் துணிதல் சாலாது. அடிகள் என்னும் பெயர் பெரும்பாலும் அருக சமயத் துறவிகட்கு வழங்கியதாகு மென்னும் கருத்தால் அடியார்க்கு நல் லார் அருகன் கோயில் என்று கூறினார் போலும்!

       செங்குன்று என்பது கொடுங்கோளூர்க்கு அயலதாகிய மலை யென்றும், திருச்செங்கோடு வஞ்சி நகர்க்கு வடகீழ்த் திசையில் அறுபதின் காத வழியில் உள்ளதென்றும் கொங்கு நாட்டினராகிய அப் புலவர் பெருமான் துணிந்து கூறுதலின் கொடுங்கோளூராகிய வஞ்சியையும் செங்குன்றையும் அவர் நன்கறிந்து கூறியுள்ளா ரென்பது பெறப்படும்.

       அரசாட்சி இன்பம் பயப்பதென்பதனை,

       1''தனிமு டிகவித் தாளு மரசினும் இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே''

என்னும் திருக்குறுந்தொகையானும் அறிக. பொலம் - பொன் என் பதன் திரிபு;

       2. ''பொன்னென் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுண் மருங்கிற் றொடரிய லான.''

       என்பது காண்க. 'திருமா பத்தினி இழந்து வந்து நின்றாள்; அவள் பொருட்டு' என விகுதி பிரிது விரித்துரைக்க. தமராவார் தேவர். கட்புலம்- கண்ணினது அறிவு என்றுமாம். போயது - போய அது என்பதன் விகாரமுமாம். போலும், 3ஒப்பில் போலி. குறவர் கூடிச் சென்று விட்புலம் போயது இறும்பூது என இளங்கோவடி கட்குக் கூறினாராக என்க. இது புதுமை பற்றிய மருட்கை யென்னும் மெய்ப்பாடு.


1. திருநா. திருகுறு, திருவிடைம. 2. தொல், எழுத். சூ, 356 3. தொல், சொல், சூ. 278



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. அமராவதி மற்றும்காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டம். இம்மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம், மாவட்டத் தலைநகரான் கரூர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 10,76,588 ஆகும். இவற்றில் கல்வியறிவு பெற்றவர்கள் 81.74 சதவிகதமாகும்.

 

 

வரலாறு[தொகு]

2000 ஆண்டுக்கும் பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ,பாண்டிய பேரரசுகள் இந்த ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது.தங்கநகைகள் ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சேரர்களால் தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு பிந்நாளில் பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான் ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.1793ல் கரூர் கோட்டையை அழித்து ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர்.

ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.

பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.[1]

கரூர் மாவட்டத்தின் உருவாக்கம்[தொகு]

நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

கரூர்,குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம் அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது. மணப்பாறை தாலுக்கா திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர் மாவட்டத்துட்ன் இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி மாவட்டத்துடன் இணைந்தது.[2]

 

எல்லைகள்[தொகு]

வடக்கில் நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களையும், கிழக்கில் பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களையும், தெற்கில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களையும், மேற்கில் ஈரோடு மாவட்டத்தையும் கரூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

சேரன் செங்குட்டுவனுக்கு இவர் சகோதரர். சிறு பிராயத்தில் துறவு மார்க்கத்தைக்கைக்கொண்டவர். இவர் காலத்தில் கற்பிற் சிறந்த கண்ணகி தன் கணவன் கோவலன் கொலையுண்டமையால் மனம் வெறுத்துப் பாண்டிய நாட்டை விட்டுச் சேரநாட்டில் கொடுங்கோளூர் அல்லது வஞ்சி என்னும் கடற்கரைப் பட்டினத்தை அடைந்து அங்கே மரணம் அடைந்தாள். இவள் மரணத்தின் பின் உண்டான கடுமையான பஞ்சத்தின் காரணம் கண்ணகியின் சாபமென்றும் அது தீர அவள்போல் ஒரு சிலை ஸ்தாபித்து உற்சவம் கொண்டாடவேண்டும் என்றும் தெரிந்து செங்குட்டுவன் கொடுங்கோளூரில் ஒரு பிரபலமான ஆலயம் கட்டி அதில் கண்ணகியைப்போல் கறுப்புக் கல்லினால் பத்தினிக் கடவுள் உருவமைத்து உற்சவம் கொண்டாடினார். இளங்கோவடிகள் இச்சரித்திரத்தைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரையுடைய நூலாக இயற்றி அதில் சேர சோழ பாண்டிய நாட்டையும் அவற்றை ஆண்ட அரசர்களையும் வளங்களையும் நாடு நகரச் சிறப்பையும் தமிழ் மக்களின் நாகரீகத்தையும் அவர்கள் காலத்தில் வழங்கிவந்த கலைகளையும் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் குறித்துச் சொல்லுகிறார், அதில் அரங்கேற்று காதையிலும் கானல் வரியிலும் வேனிற்காதையிலும் ஆய்ச்சியர் குரவையிலும் அக்காலத்தில் வழங்கிவந்த இசைத்தமிழ் அல்லது சங்கீதத்தின் நுட்பமான பலபாகங்களைச் சொல்லியிருக்கிறார்.

பாண்டிய நாட்டில் நெடுஞ் செழியனும் உறையூரில் சோழன் பெருங்கிள்ளியும் இலங்கையில் முதற் கயவாகுவுமிருந்த காலத்தில் இருந்தவராதலால் இவர் முதலாம் நூற்றாண்டில் இருந்தவரென்றுதெரிகிறது. மற்றும் விவரம் சிலப்பதிகாரத்தில் காண்க. 

http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=166&pno=52



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 http://www.frontline.in/static/html/fl2720/stories/20101008272006400.htm

ARCHAEOLOGY

A great past in bright colours

 

T.S. SUBRAMANIAN 
in Porunthal

 

 

Two seasons of excavations, in 2009 and 2010, have put Porunthal village in Tamil Nadu firmly on India's archaeological map.

 

 

 

 

K. RAJAN 
20101008272006401.jpg 
A cairn circle, or a circle of stones, marking a cist burial underneath

 

 

“START action! Camera!” shouted the young Sandeep Shetty genially, as he stood in the trench with a small spade in his hand. Around him were other students, K. Shiv Shanker, N. Vinod and D. Santosh, armed with shovels and brushes. As they started shovelling the earth with great care, a beautiful four-legged jar emerged. It was a matter of time before several pots, big and small, came into view, and a cist burial was revealed. V.P. Yathees Kumar, a research scholar then, who stood outside on the edge of the trench, beamed as he clicked away his camera.

It was June 12, 2009. We were at Porunthal, a village situated in the foothills of the Western Ghats, about 12 kilometres south-west of the pilgrim town of Palani in Dindigul district, Tamil Nadu. Although it was a hot afternoon, about a score of students, belonging to different universities, were working at the site energetically. They were excavating a stone circle that entombed a cist-burial. Directing them with a keen eye for detail was K. Rajan, Professor, Department of History, Pondicherry University.

 

S. JAMES 
20101008272006402.jpg 
A BRICK STRUCTURE found at the habitational site Pasi Medu, or mount of beads.

 

Two seasons of excavation, undertaken during May and June, in 2009 and 2010, have put Porunthal firmly on India's archaeological map. The village is a habitational-cum-burial site, datable from the second century Before Common Era (BCE) to the second century Common Era (CE). Excavation at its habitational mound called Pasi Medu and the opening of four graves about a kilometre away have yielded a wealth of artefacts. Among them are 2,000 superbly crafted glass beads in red, white, yellow, blue and green; 12,000 beads made of semi-precious material such as agate, quartz, carnelian and steatite; quartz micro-beads with a diameter of less than 1.4 mm and a hole punched through them; bangles made of glass and shell; exquisite four-legged jars that vary in height from 12 centimetres to one metre; two ring stands with similar Tamil-Brahmi inscriptions datable between the first century BCE and the first century CE; two iron swords; a big iron arrowhead; and a number of knives. A square copper coin belonging to the Tamil Sangam age; dice made of ivory; terracotta objects such as a humped bull, a woman's head with curly hair, a human figurine, gamesmen, spindle whorls and hopscotch; and weights made of quartz and ivory were among the other unearthed artefacts. An important find was two kilograms of paddy in a four-legged jar in a grave that had the remains of a skeleton. The paddy looked as fresh as if it had just been harvested.

Prof. Rajan, director of the excavation project, said: “Our excavation has established that Porunthal was the largest glass bead-manufacturing site in southern India. If an earlier excavation at Kodumanal near Erode had exposed the existence of industries for making beads of semi-precious material, iron and steel in Tamil Nadu, a glass-bead industrial site was eluding archaeologists. The Porunthal excavation has brought to light that also.”

 

S. JAMES 
20101008272006403.jpg 
Student-excavators at the burial site.

 

V. Vedachalam, senior epigraphist, said: “Porunthal was an important centre during the Tamil Sangam age. This excavation confirms it.” (The Tamil Sangam age is datable from the third century BCE to the third century CE.) There had been several archaeological excavations relating to the Tamil Sangam age. But there were many unexplored sites relating to the Sangam age chieftains and poets. “In this respect, this excavation is significant because Porunthal comes under the territory ruled by the Sangam age chieftain Pegan,” said Vedachalam.

For an archaeologist, the name Pasi Medu in Tamil, meaning “mound of beads”, was a giveaway. Furthermore, the mound's surface was strewn with glass beads. It was a big mound, measuring five hectares. Excavations in 2009 yielded an oval-shaped furnace for polishing glass beads, which was the first discovery of its kind in southern India. The trench yielded 30 red ware bowls, triangular terracotta pieces and 2,000 glass beads. The raw material for making the glass beads came from the sand in the nearby river, called the Porunthilaru.

 


20101008272006404.jpg

 

The manufacturing of glass beads, however, was not done at Pasi Medu itself but somewhere near by. The absence of glass slag, tuyeres and waste material indicated that the furnace might have been used only for polishing glass beads. Artisans brought semi-finished glass beads to Pasi Medu, reheated them in the furnace in the red ware bowls and polished them. The small triangular terracotta pieces were used for polishing the beads by removing their encrustation.

“More than 2,000 glass beads were discovered within 50 square metres of the excavated area. If we excavate the entire five-hectare site, we may get more than a million beads,” estimated Rajan. While the earlier, lower level yielded green-coloured glass beads, the upper level produced red beads. Yellow, white and black glass beads were also found.

 

T. SINGARAVELOU 
20101008272006405.jpg 
FOUR-LEGGED JARS EXCAVATED from the burial site. The biggest is one metre tall and the smallest, 15 cm.

 

If Pasi Medu yielded glass beads, the four graves – belonging to the Iron Age and the Early Historic period – which were opened during the excavation, yielded a bonanza of beads made of agate, carnelian, steatite and quartz. The highest number of steatite micro-beads so far discovered in Tamil Nadu is from Porunthal. “We found 9,639 micro-beads made of steatite. We also got the largest number of micro-beads made of quartz. There were about 1,015,” the professor said.

The craftsmanship of the quartz micro-beads is astounding. S. Selvakumar, research scholar in the Department of History, Pondicherry University, measured their diameter with a digital vernier calliper: the reading stood at just 1.43 mm. They had a hole in them, too, for a thread to pass through, for Porunthal residents to wear them as chains round their necks. There were specialists during the Tamil Sangam age, called “tiru mani kuyinars” ( tiru mani means semi-precious beads and kuyinars were artisans who drilled holes in them), said Rajan, quoting from a Sangam age poem called Madurai Kanchi (line 511).

 

K. RAJAN 
20101008272006406.jpg 
A RING STAND with a Tamil-Brahmi inscription.

 

“More than 12,000 beads made of semi-precious stones were discovered in two seasons of excavation from just four graves. There are hundreds of graves at Porunthal waiting for the spade of the archaeologist,” he said.

He argued that the availability of carnelian and agate beads suggested that the people of Porunthal had direct or indirect cultural contacts with Gujarat and Maharashtra even during early historic times, that is, during the Sangam age. These beads came to Porunthal in finished form. But the glass beads were manufactured at Porunthal itself and exported to the outside world. This was possible because Porunthal was located on the trade route that connected Madurai, the capital of the Pandyas, situated on the banks of the Vaigai river, and the ancient Chera port of Musiri on the west coast, in present-day Kerala. This trade route touched Nilakottai, Dindigul, Udumalpet, Pollachi and the Palakkad Gap.

 


20101008272006407.jpg

 

Y. Subbarayalu, Head of the Department of Indology at the French Institute of Pondicherry, underlined the importance of the presence of the relatively large quantity of paddy in a four-legged jar in one of the graves. He said: “Generally, we get a few grains in burials. We have never before found so much of paddy from a burial site as at Porunthal, which shows that paddy cultivation was going on at such an early age there. Generally, in Iron Age [datable from 1000 BCE to 300 BCE] burial sites, we get rain-fed millets. This is the first time we found a cultivated crop, that is, paddy, which is an interesting discovery. The site reflects the last stage of the Iron Age and the presence of paddy demonstrates the agricultural aspirations of the people of the age.”

The presence of a brick structure at Pasi Medu, according to Subbarayalu, is equally interesting. Brick structures belonging to such an early age were found in Tamil Nadu only at a few places. A brick structure, which was perhaps a Buddhist one, was found at Kaveripattinam. Another, found at Arikamedu in Puducherry, could have been used for commerce.

 


20101008272006408.jpg

 

The brick structure discovered at Porunthal was not used for any religious purpose. It was, however, difficult to surmise what purpose it served, he said.

A great deal of study went into the selection of Porunthal for conducting the excavation. More than 20 years of exploration by Rajan and his team had revealed the existence of hundreds of sites in southern India that covered the period from prehistoric to early historic times. Analysis of data from these sites revealed that there was a cultural gap in terms of time and space between the Neolithic Age and the Iron Age, and between the Iron Age and the Early Historic Age. The introduction of iron and the manufacture of iron implements in the Iron Age led to deforestation and the introduction of agriculture. Agriculture led to economic prosperity, and there were cultural exchanges between different regions. New schools of philosophy such as Jainism and Buddhism came into being. In sum, there was a cultural revolution around the sixth century BCE in the whole of India. The evolution of Asokan-Brahmi and Tamil-Brahmi scripts took place three centuries later. Archaeologists and scholars are divided on how the Tamil-Brahmi script evolved.

 


20101008272006409.jpg

 

In northern Tamil Nadu, the metamorphosis of the Neolithic Age into the Iron Age was well documented by the excavations done at Payamballi, Mayiladumparai and Mallappadi, all situated near Dharmapuri. But no clear-cut Neolithic site was available in southern Tamil Nadu. To understand this cultural gap, Rajan and his team designed a programme of micro-regional study of various sites. Continuous exploration and excavation by them in southern Tamil Nadu brought to light several microlithic and Iron Age sites. However, identification of a Neolithic Age site in southern Tamil Nadu is still eluding archaeologists. As part of this programme, Yathees Kumar, who is now an assistant archaeologist with the Archaeological Survey of India (ASI), discovered Porunthal.

Vedachalam said several chieftains, like Pegan, ruled the different parts of the Tamil country during the Sangam age. Porunthal village, situated on the banks of the Porunthilaru belonged to a territorial division named Vaikavur Nadu. Porunthal was originally called Porunthil. The Sangam poet Porunthil IIlangiranar belonged to Porunthal. He composed a poem in the collective work called Puranaanuru, in praise of the Chera king Cheraman Mantharal Irumporai. This king issued inscribed coins with the title ‘Kollipporai' in the Tamil-Brahmi script datable to the first century CE. Legend has it that the Chera kings' family goddess, Kotrravai, resided at “Aiyiarai Malai ,” about 10 km from Porunthal. All this placed Porunthal in a historical context.

 

K. RAJAN 
20101008272006410.jpg 
A CIST BURIAL with a double porthole linking its two chambers.

 

Musiri, which was linked with Porunthal by a trade route, was a thriving port in the first century BCE. Some scholars had earlier identified Vanchi with present-day Kodungallur. However, there is difference of opinion among scholars on the identification of Vanchi. Excavations under way now at Pattanam, 7 km from Kodungallur, indicate that Pattanam could be Musiri. From Karur, another trade route led to the Palakkad Gap and it passed through Kodumanal, Sulur, Vellalur, and Velanthavanam.

It was no coincidence, therefore, that nearly 90 per cent of the Roman gold coin hoards discovered in India were found on this route. Of this, almost all the hoards were found in the Kongu region of the Tamil country. One such hoard of 63 gold coins was discovered at Kalaiyamuthur on the left bank of the Porunthilaru, 8 km from Porunthal. This highlighted Porunthal's importance. Other archaeological sites that yielded Roman coin hoards in the vicinity were Boodhinattam, Udumalpet, Pollachi, Dharapuram and Karur.

 

K. RAJAN 
20101008272006411.jpg 
RING STANDS HOLDING pots found at the burial site.

 

The reason for the availability of Roman coin hoards on this trade route was the extensive trade in iron and steel, semi-precious stones made of quartz, sapphire and beryl, spices and medicinal plants between Rome and the Tamil country through the Musiri port. Steel was manufactured at Kodumanal and semi-precious gems were produced in and around Kangeyam, near Karur. Both Kodumanal and Kangeyam are in the Kongu region.

Besides, two trade guild inscriptions were found on the left and right banks of the Porunthilaru in villages named Rajapuram and Tamaraikulam. This was a clear pointer to the trade route passing through Porunthal. The inscription of 1192 CE, found at Tamaraikulam and issued by the Kongu Chola Prakesari Veera Cholan, referred to the existence of a trade guild called “Ainurruvar” (a guild of 500 members). “The availability of early historical vestiges, coin hoards, trade guild inscriptions and graffiti marks in the pottery in the archaeological sites in and around Porunthal clearly pointed to the site's potential,” said Rajan. However, what puzzled Rajan and his team before they began their excavation in 2009 was the existence of two villages called Porunthal. One was situated on the road that led from Cholavandan (near Madurai) to Nilakottai. An inscription belonging to Kulasekara Pandya of the 13th century CE made a reference to this village as “Poorunthil alias Devendra Vallavapuram”. The other Porunthal, near Palani, is where the excavation ultimately took place. What decided the choice was a fragmentary inscription that the excavation team found placed as part of a door jamb in a medieval temple dedicated to Madurai Kali Amman at this Porunthal. The inscription, in medieval Chola Tamil script of the 12th century CE, referred to this village as “Vaikavi [Vaikavur] Nattu Porunthal”. Rajan said, “This cleared the historical mist.”

 


20101008272006412.jpg

 

Two trenches were laid, one in the central part and the other in the southern part of Pasi Medu. Artefacts such as glass beads, paste (opaque) beads, glass bangles, a gold pendant, a bell made of copper, ivory weights, stoppers, spouts and gamesmen were found. Human and animal figurines, made of terracotta, were recovered. The craftsmanship of the figurine of a humped bull is superb. A human figurine has an elongated body, broad shoulders and short legs. Another exquisite figurine was the head of a woman with curly hair and prominent ear lobes, which could have come from Alexandria. Adjacent to these figurines, a copper coin, belonging to the Sangam age, was found.

The discovery of copper coins, in a highly corroded condition, was a surprise because excavations at Kodumanal, Karur, Perur and Poluvampatti (20 km west of Coimbatore) never yielded coins. The only site that has yielded Chera coins in an archaeological context is the current Pattanam excavation, which has yielded 40 of them.

 

S. JAMES 
20101008272006413.jpg 
A CAPSTONE PLACED above a cist burial.

 

An important revelation was the existence of a brick structure in the north-eastern corner of a trench in Pasi Medu. The brick wall with five courses was built over a base made of a 20-cm-thick clay foundation. The bricks' sizes were 7 cm x 21cm x 42 cm and 8 cm x 24 cm x 48 cm in the ratio of 1:3:6. “They are typical Early Historic bricks. The standardisation of size shows the Porunthal people's engineering skill,” observed Rajan.

 

K. RAJAN 
20101008272006414.jpg 
A CIST BURIAL site. The burial chambers are carved out of granite.

 

 

 

 

 


20101008272006415.jpg 
A HUMPED BULL in terracotta.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

http://www.tamilpaper.net/?p=9055

தென்னிந்திய நிலவியல்

 

வஞ்சி

சேரர் ஆண்ட பகுதி “வஞ்சிமாநகர்“ எனப்பட்டது. “கருவூர்“ என்றும் சுட்டப்பெற்றது. சேரர்கள் ஆண்ட பகுதிகளில் சிவன்கோவில், ஆடக மாடம், குணவாயில், வேண்மாடம் முதலிய பகுதிகள் ஒன்றோ சிலவோ அமைக்கப்பட்டன. “முசிறி“, “தொண்டி“ என்னும் துறைமுகங்கள் இந்நாட்டுக்குரியன. சேர மன்னர் செங்குட்டுவன், மைசூரிலும் அதைச் சுற்றி உள்ள கங்க நாட்டுக்காரர்களையும் கிழக்கில் தமிழ் வழங்கிய எல்லையில் இருந்த கட்டி நாட்டுக்காரர்களையும் கங்கரின் எருமை நாட்டுக்கு வடக்கிலிருந்த கருநடரையும் கொண்கானத்தின் வடக்கெல்லையான வானியாற்றின் வடபுறம் இருந்த பங்கள நாட்டினரையும் துளு நாட்டுக்கு வடக்கே இருந்த கொங்கணத்தவரையும் தமிழகத்தின் வடக்கில் கோதாவரி, கிருஷ்ணா ஆற்றுப் பகுதிகளில் பரவியிருந்த கலிங்கரையும் வென்றுள்ளார். ஆக, சேரரின் நிலப்பரப்பு இவ்வகையில் விரிவுபெற்றது.

கருவூர்

அக்காலத்தில் மூன்று கருவூர்கள் இருந்துள்ளன. அதில் சேரர்கள் ஆண்ட கருவூர், “சேரபோத்ரர்களின் அரண்மையுள்ள கரோரா“ என்று தாலமியால் சுட்டப்பட்டு்ள்ளது. இது கொங்குநாட்டில் ஆன்பொருநை நதிக்கரையில், சேரர்களின் இரும்பொறை மரபினரால் ஆளப்பட்ட கருவூர் ஆகும். இதற்கு “வஞ்சி“ என்ற வேறொருபெயரும் உண்டு. இது இன்றைய “கரூர்“ ஆகும். மற்ற இரண்டு கருவூர்களுள் ஒன்று மேலைக்கடற்கரையிலும் மற்றொன்று தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ளது. தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ள கருவூரைச் சேரர்களின் குட்டுவன் மரபினரால் ஆளப்பட்டுவந்துள்ளது.

இன்றைய கரூர் அன்றைய காலத்தில் செல்வச் செழிப்புள்ள நகரமாக இருந்துள்ளது. இது அயல்நாட்டு வாணிபத்தோடு மிகுந்த தொடர்புடையது. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வுகளில் யவனர்களின் காசுகள் பல கிடைத்துள்ளன.

தொண்டி

இரண்டு தொண்டிகள் உள்ளன. ஒன்று சேர நாட்டின் மேற்குப்பகுதியிலும் மற்றொன்று பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரையின் பகுதியிலும் உள்ளன. பாண்டிய நாட்டிலுள்ள தொண்டியில் கீழ்க்கடல் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு அகில், துகில், ஆரம், வாசம், கற்பூரம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இப்போது இராமநாதபுரத்திற்கு அருகில் ஒரு சிற்றூராகத் தொண்டி முடங்கிப்போனது. சேர நாட்டிலுள்ள தொண்டி இன்று ஆழப்புழை ஆற்றின் கரையில் இருந்துள்ளது. ஊருக்குச் செல்லும் வழி இருக்கிறது. ஆனால், ஊர்தான் இல்லை. தொண்டிக்குச் செல்லும் வழியில் “தொண்டிப்போயில்“ என்ற சிற்றூர் மட்டுமே உள்ளது. தொண்டி இல்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

http://www.puthiyatamil.net/t584-topic

 

 

HOT சேரர்கள் வரலாறு - முழு தொகுப்பு

சேரர்கள்

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத்
தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச்
சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும்.
சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று
உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும்
தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக்
கொண்டு ஆண்டனர்.பெரும்பாலும் இன்றைய தமிழகம்த்தின் கொங்குநாடு பகுதியே
அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில்
உருவாயின. மெலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டிநாடு ஆகிய கொடுந்தமிழ்
மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது
ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும்.
மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்

சங்க
காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில்
உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில்
முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள்
தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள்,
குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி
முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக்
கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.


மன்னர்கள்

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள்
பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க
நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற்
தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள்
உள்ளன.


நகரங்கள்


கரூர்
அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக
விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத்துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத்
தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற
துறைமுகம் தொண்டியாகும்.



சில அரசர்களின் ஆட்சியாண்டுகள் ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:

* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள் 

* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்




தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது). 
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் கி.மு 1200 (?)




சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன்.
இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு
வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள்
கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது
களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும்,
இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர்
முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால
சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன்
சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு
போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.


உதியஞ்சேரலாதன் - கி.பி. 45-70


உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன்.
இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு
ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன்
வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர்
மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று
கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன்
முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம்
எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள்
வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில்
போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து
உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர்,
வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.


இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - கி.பி. 71-129


இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில்
ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர
மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின்
சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் "இமய வரம்பன்" எனக்
குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து
என்னும் தொகுப்பு நூலில் அடங்கும், குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய
இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட
காழா அத் தலையார், மாமூலனார், பரணர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும்
புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.





வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து
வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது.
இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத்
தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின்
குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக்
கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள்
இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த
மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப்
படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.




முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில்
காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும்
புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று
சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து
வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.



பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - கி.பி. 80-105


பல்யானைச் செல்கெழுகுட்டுவன், சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது
தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர்
இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து
இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர்
காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும்
பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச்
சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.





இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின்
ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு
எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி
நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத்
தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.


களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - கி.பி. 106-130


களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச
மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில்
ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது.
இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப்
பதிகத்துள் இவன் ....சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற
மகன்.... எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


காலம்


பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை.
எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச்
செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய
மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக்
கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.


செயல்கள்

பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத்
தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக்
கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார்,
"......இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன்
பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி
நார்முடிச் சேரல்....." என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.





__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சேரன் செங்குட்டுவன் - கி.பி. 129-184 


சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில்
ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி.
முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும்
சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய
மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு
வலிமை மிக்க நாடாக்கினான்.




காலம்



பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில்
குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள்
எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது
வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை
எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும்,
அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக்
குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச்
சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில்
இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில்
வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும்
செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.


வரலாற்றுத் தகவல்கள்


தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன்
செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார்
மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை
எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில்
கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச்
சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய
வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள்
தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர
நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச்
சிலப்பதிகாரம்
 கூறுகிறது.
இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர்
தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன்
என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச்
சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு
செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர்,
இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.


அந்துவஞ்சேரல் இரும்பொறை



அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின்
ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன்
இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என
அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி
வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர
மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு,
அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள்
சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.




அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே
அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி
ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை
உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம்
அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல்
பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.




இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக
இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம்
முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன்
அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.


செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை - கி.பி. 123-148 


செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர்
மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச்
சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும்
இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான
மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை
அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம்
பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப்
பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான
மாயோனை வணங்கி வந்தான்.



இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது.
இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக்
கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக்
குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர்
என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும்
இத்தகையதொரு கல்வெட்டு "கோ ஆதன்" என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.



ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல் கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.


தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 148-165 


தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.


தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.



இளஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 165-180


இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான்.
பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.


இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு
கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச்
சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின்
வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.

<img alt="Align Center" class="gl_align_center" border="0">


குட்டுவன் கோதை - கி.பி. 184-194 


குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும்
சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே
என்பாரும் உளர்.


சேரமான் வஞ்சன்



சேரமான் வஞ்சன், என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச்
சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார்
என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள்
தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத்
தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.
ன்
புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி
வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத்
தெரிகிறது.


மருதம் பாடிய இளங்கடுங்கோ


மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச்
சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர்
அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக்
கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.


சேரமான் கணைக்கால் இரும்பொறை



சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன்
செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில்
இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர்
காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு
வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.


சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை



சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந் தமிழ் அரச மரபுகளில்
ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். "மாக்கோதை" என்பது இவன் ஒரு இளவரசன்
என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க
இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.


தொகுப்பு பகலவன்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311662.htm

6.2.2 நகராட்சி

சங்க காலத் தமிழகத்தில் சில நகரங்கள் இருந்தன. ஊர்களில் சிற்றூர், பேரூர், மூதூர் என இருந்தமை போல் நகரங்களில் பட்டினம், பாக்கம் எனச் சில இருந்தன. இவற்றில் பட்டினம் என்பது கடலோரத்தில் இருந்த நகரத்தைக் குறித்தது. பாக்கம் என்பது பட்டினத்தின் ஒரு பகுதியானது எனலாம்.

சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த நகரங்களுள் சிறந்தவை புகார்(காவிரிப்பூம்பட்டினம்) கொற்கை, மதுரை, வஞ்சி அல்லது கரூர், முசிறி, காஞ்சி முதலியவை.

நகரங்கள் வணிகத்தினாலும், தொழில் சிறப்பினாலும் வளமுற்றிருந்தன. குறிப்பாக, மதுரையும் காவிரிப்பூம்பட்டினமும் சிறப்புற்று வளர்ந்திருந்தன.

இரவு நேரங்களில் நகரங்கள் பாதுகாக்கப்பட்டன. ஊர்க்காவலர் என்பவர்கள் பாதுகாவலுக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

தமிழக மக்களின் வணிகக் கண்ணோட்டம்

 தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்றவற்றில் தலைவன் பொருள்வயிற்பிரிவு மேற்கொள்வதாக ஒரு செய்தி குறிப்பிடப்படுகிறது. இது குறித்து பொ. வேல்சாமி என்பவர், இச்செய்தி அக்காலகட்டத் தமிழ் இளைஞர்கள் பொருள் ஈட்டுவதற்காக அக்கம்பக்கத்து நாடுகளுக்குப் பயணம் செய்தார்கள் என்பதைக் குறிப்பதாகும் என்கிறார். மேலும் அவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மாக்கோபோலோகூட, “ஆண் மக்களுக்கு பதின்மூன்று வயதாகிவிட்டால் பெற்றோர்கள் அவர்களை வீட்டில் வைத்துக்கொள்வது இல்லை. அந்த வயதில் வணிகம் செய்து பொருள் ஈட்டும் ஆற்றலை அவர்கள் பெற்றுவிடுகிறார்கள் என்றும் அவர்களை வளர்க்கும் பொறுப்பு அதற்குமேல் தங்களுக்கு இல்லை என்றும் பெற்றோர்கள் கருதுகிறார்கள். எனவே அந்தப் பிள்ளையின் கையில் 20 அல்லது 24 குரோட்டோ அளவிற்குச் சமமான பணம் கொடுத்து அவர்களை வெளியில் அனுப்பிவிடுகிறார்கள். தங்கள் பெற்றோர்களது வருமானத்தில் கிடைக்கும் சோற்றில் ஒரு பருக்கையும் அவர்கள் தொடுவதில்லை எங்கிறார் அவர். கி.பி. 13ஆம் நூற்றாண்டுத் தமிழ் இளைஞர்கள் கூட வணிகம் செய்து பொருள் ஈட்டியுள்ளனர் என்பதற்கு இக்கூற்று ஒரு வரலாற்று ஆதாரமாக உள்ளது எனவும், இத்தகைய ஒரு பொது மனோபாவம் சிலப்பதிகார காலத்திற்கு முன்பிருந்தே வேரூன்றி வளர்ந்து வந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார் (ஆதாரம்: தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் மார்க்சிய ஆய்வுகள், கோவை வாணன், செப்டம்பர் 2011, பக்: 10, 11, NCBH).

ship 270 சிலப்பதிகாரக் காப்பியத்தில் கோவலன் தான் தொழில்செய்து சம்பாதித்த பணத்தை மாதவியிடம் இழந்த பின்னர் சொந்தமாக வணிகம் செய்து பொருள் சம்பாதிக்கவே கண்ணகியோடு மதுரை போகிறான். அனால் அப்பொழுது அவனது தந்தையும் சரி, கண்ணகியின் தந்தையும் சரி பெரும் பணக்காரர்களாகவே உள்ளனர், எனினும் அவர்களிடம் பொருள் கேட்டுப் பெறுவது இழுக்கு என்பதால்தான் அவன் சுயமாகப் பொருள் சம்பாதிக்க மதுரை போகிறான். அன்றைய தமிழ்ச் சமுதாய மரபுப்படி சுயமாகப் பொருள் சம்பாதித்து வாழ்வது தான் ஒரு ஆண்மகனின் கடமை ஆகும். தனது குடும்பச் செலவுக்குத் தன் தந்தையிடம் பணம் வாங்குவது இழுக்கு என்றே அன்றையத் தமிழ்ச் சமுதாயம் கருதியது. பொருள்வயிற் பிரிவு என்பது திருமணத்திற்கு முன் தனது குடும்ப வாழ்விற்குத் தேவைப்படும் பொருளை ஒரு ஆண்மகன் சுயமாகச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் எங்கிற தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படைக் கருத்தில் இருந்து உருவான ஒரு இலக்கியக் கருத்தாக்கம் எனலாம். 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இக்கருத்து தமிழர்களிடம் இல்லாது போய்விடுகிறது.

யூதன் பெற்ற வணிக உரிமை:

 யூதர்கள் குறித்துச் சங்க இலக்கியம் எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் யூதன் ஒருவன் பண்டையச் சேர வேந்தனோடு தொடர்பு கொண்டு சில உரிமைகளைப் பெற்றதாகப் பாஸ்கர ரவிவர்மன் லோகன் அவர்களின் மலபார் மேன்யுவல் தெரிவிக்கிறது என்கிறார் நரசய்யா அவர்கள். அந்த யூதனின் பெயர் சோசஃப் ரப்பன் என்பதாகும். அவன் கி.மு. 192 ஆம் ஆண்டு சில உரிமைகளைச் சேர அரசரிடமிருந்து பெற்றான் எனத் தெரிகிறது என்கிறார் நரசய்யா அவர்கள் (கடல்வழி வணிகம், பக்: 65). இத்தகவல் மிக முக்கியமானதாகும். இன்றைக்கு 2200 வருடங்களுக்கு முன்பு யூதன் ஒருவன் வணிக உரிமைகள் சிலவற்றைச் சேர அரசன் ஒருவனிடம் பெற்றிருப்பதும் அதுகுறித்தத் தகவல் இதுவரை பாதுகாக்கப் பெற்றிருப்பதும் மிகப் பெரிய வியப்புக்குரிய செய்தியாகும்.

இந்திய வணிக நெறி:

 மோதி சந்திரரின் இந்திய வணிக நெறி (பக்: 222-223) என்ற நூலில் கீழ்க்கண்ட குறிப்புகள் உள்ளன என்கிறாய் நரசய்யா அவர்கள்(பக்; 62).

 “கி.பி.முதலாம் நூற்றாண்டில் இந்தியக் கப்பல் வியாபாரம் மிகவும் முன்னேற்றமடைந்திருந்தது எனத்தெரிகிறது. மிகப் பண்டைய காலத்திலிருந்து இந்தியக் கப்பல்கள் மலேயா, கிழக்கு ஆப்ரிக்கா, பாரசீக வளைகுடா முதலான நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தன. ஆனால் அரபு நாட்டவர்கள் தடை செய்திருந்ததால் அதற்கு மேலும் முன்னேறிச் செல்ல இயலவில்லை. இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரையிலிருந்து சென்ற சில பெரிய கப்பல்கள் வடகிழக்கு ஆப்ரிக்காவிலுள்ள கர்தாபுயிவரை சென்று வியாபாரம் செய்து வந்தன. ஆனால் இதற்கு அரேபியர்களிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது

 இன்னும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதில் தென்மேற்கு கடற்கரை என்பது தமிழ் நாட்டுக்கடற்கரையையே குறிக்கும். அரபு நாடுகளின் தடை என்பதெல்லாம் கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே ஆகும். சங்ககாலத்தில் தமிழகக் கப்பல்கள் எகிப்து மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா வரை தடையில்லாமல் சென்று வந்தன என்பதோடு அரபியர்களோடு தமிழர்கள் நல்ல உறவு கொண்டிருந்தனர். மேற்குலக நாடுகளுக்குத் தேவைப்பட்ட பெரும்பாலான பொருட்கள் தமிழகம் மூலமே அரேபியர் பெற்று வியாபாரம் செய்து வந்தனர் என்பதும், தமிழர்கள் பெரும் கடற்படைகளைப் பராமரித்து வந்தனர் என்பதும், தமிழ் மூவேந்தர்களிடையே வணிகத்தைப் பாதுகாக்க ஒரு ஐக்கிய கூட்டணி இருந்தது என்பதும் தமிழகக் கப்பல்கள் தடையின்றி சென்று வந்ததற்கான முக்கியக் காரணங்களாகும்.

ஜவகர்லால் நேரு:

 நேரு அவர்கள் தனது ‘உலக சரித்திரம் என்கிற நூலில், “வட இந்தியாவைவிடத் தென் இந்தியா கடலோடு அதிக உறவு கொண்டாடியது. வெளிநாட்டு வியாபாரம் பெரும்பாலும் தென் இந்தியாவுடன் தான் நடைபெற்று வந்தது. பழந்தமிழ்பாடல்களிலே யவனர்களைப்பற்றிய குறிப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. யவன தேசத்து மதுவகைகள், பூந்தாழிகள், அணிவிளக்குகள், முதலியனவற்றைப்பற்றி தமிழ் நூல்கள் கூறுகின்றன (பக்: 184). தென்இந்தியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நல்ல வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. முத்து, பொன், தந்தம், அரிசி, மிளகு, முதலியவைகளும், மயில்களும் குரங்குகளும் பாபிலோன், எகிப்து, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கும், உரோமாபுரிக்கும் அனுப்பப்பட்டன. திராவிடர்களால் ஓட்டப்பட்ட இந்தியக் கப்பல்களிலே இப்பொருள்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலும் கொண்டுபோகப்பட்டன. புராதன உலகத்தில் தென்இந்தியா எத்தகைய உன்னத இடத்தை வகித்ததென்று இதன்மூலம் அறிந்துகொள்ளலாம் (தமிழாக்கம்- ஓ.வி. அளகேசன், 3ஆம் பதிப்பு, அக்டோபர்- 2006, பக்: 153) எனக் குறிப்பிடுகிறார். நேரு அவர்களும் தமிழர்கள் தங்கள் சொந்தக்கப்பல்களில் பாபிலோன், எகிப்து, கிரீஸ், உரோமபுரி போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து வணிகம் புரிந்தனர் என்பதையும், பெரும்பாலான பண்டைய வெளிநாட்டு வியாபாரங்கள் வட இந்தியாவைவிட, தென் இந்தியாவுடன் தான் நடைபெற்றன என்பதையும் இதன்மூலம் உறுதிப்படுத்துகிறார் எனலாம்.

ஆர்.எசு. சர்மா :

 “பண்டைக்கால இந்தியா (ANCIENT INDIA) என்கிற ஆங்கில நூலை வரலாற்றுத்துறையில் புகழ்பெற்றுள்ள வரலாற்று ஆய்வாளர் ஆர்.எசு. சர்மா (RRRAM SHARAN SHARMA) அவர்கள் எழுதியுள்ளார். அவர் தனது நூலில் தமிழ் நாடுகள் தமது இயற்கை வளங்களாலும், அயல்வணிகத்தாலும் பெரிதும் ஆதாயமும், அனுகூலமும் அடைந்தன எனவும், அவை செல்வச்செழிப்புடன் மிளிர்ந்தன எனவும் அவை மிளகு போன்ற வாசனைப்பொருள்கள், யானைத்தந்தங்கள், அரிய முத்துக்கள், அருமந்த மணிக்கற்கள் முதலிய மிகுந்த கிராக்கியும், பெரிதும் விலை மதிப்புமுடைய பொருட்களை தமிழகத்திலிருந்து மேலைய நாடுகளுக்குப் பெருமளவில் அனுப்பின எனவும் கூறுகிறார் (பக்: 282). அவர் மேலும், “இவையன்றி அவர்கள் மசுலின் எனப்படும் மென்துகில் வகைகளையும், பட்டையும் உற்பத்தி செய்தனர். பாம்புச்சட்டையைப்போன்ற மிகமெல்லிய பருத்தித் துணியையும் அவர்கள் தயாரித்ததாக அறிகிறோம். கலைவண்ணம் மிளிரும் பலபாணிகளில், பலதோரணைகளில் பட்டு நெய்யப்பட்டதாக ஆரம்பகாலச்செய்யுள்கள் குறிப்பிடுகின்றன. உறையூர் அதன் பருத்தி வணிகத்துக்குப் புகழ் பெற்றது. பண்டைக்காலத்தில் ஒருபுறம் கிரேக்கர்களுடனும், அச்சமயம் எகிப்தை ஆண்டுவந்த கிரேக்க இனமக்களுடனும், இன்னொருபுறம் மலாயத்தீவுக் கூட்டங்களுடனும், அங்கிருந்து சீனாவுடனும் தமிழர்கள் வணிகம் செய்து வந்தனர். இந்த வணிகத்தின் விளைவாக நெல், இஞ்சி, இலவங்கப்பட்டை, மற்றும் இதர பலபொருள்களின் தமிழ்ப்பெயர்கள் கிரேக்க மொழியில் இடம்பெற்றன என்கிறார் அவர் (தமிழில் இரா. இரங்கசாமி என்கிற மாஜினி அவர்கள், ஜூன்-2004, பக்:282).

டி.என். ஜா:

 பேராசிரியர் ஜா அவர்கள் இந்திய வரலாற்றுப் பேரவையின் தலைவராகவும், பண்டைய இந்திய வரலாற்றுத்துறையின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இருந்தவர் ஆவார். இவரது முழுப்பெயர் திவிஜெந்திரா நாராயண் ஜா (DWIJENDRA NARAYAN JHA) ஆகும். “பண்டையக்கால இந்தியா (ANCIENT INDIA IN HISTORICAL OUTLINE)” என்கிற அவரது ஆங்கில நூலில் தமிழகம் குறித்து, தமிழர்கள் வெகுகாலத்திற்கு முன்பாகவே கடற்பயணம் மேற்கொண்டவர்கள் எனவும், கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்குள்ளாகவே அவர்கள் இலங்கையின் மீது இருமுறை படையெடுத்தார்கள் எனவும் கூறுகிறார் (தமிழில் அசோகன் முத்துசாமி, டிசம்பர்-2011, பாரதி புத்தகலாயம், பக்:149). மெகத்தனிசு பாண்டியர்களைக் குறிப்பிடும் கி.மு. 4ஆம் நூற்றாண்டிலிருந்து வடக்கிற்கும் தெற்கிக்கும் இடையிலான தொடர்புக்கான சான்றுகள் கிடைக்கின்றன எனவும், சோழர்கள், பாண்டியர்கள், கேரளபுத்திரர்கள், சத்திய புத்திரர்கள் ஆகியோர் தனது பேரரசிற்கு வெளியே இருந்தார்கள் என்பதை அசோகரின் கல்வெட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றிக் குறிப்பிடுகின்றன எனவும் தமிழ் அரசுகளின் கூட்டமைப்பைத் தோற்கடித்தது குறித்து காரவேலா(கலிங்கமன்னன்) பேசுகிறான் எனவும் அந்தக் கூட்டமைப்பு இந்த மூன்று இராச்சியங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம் எனவும் அவர் கூறுகிறார் (பக்:150).

 தந்தம், ஆமை ஓடு, இதர வர்த்தகப்பொருட்கள் இலங்கை யிலிருந்து இந்தியச் சந்தைக்கு ஏராளமாகக் கொண்டுவரப்பட்டன என சுடிராபோ (கி.மு.63-கி.பி.20) கூறுகிறார். கிழக்கு இந்தோனேசியாவிலிருந்து சந்தன மரமும், தென்கிழக்கு ஆசியாவின் பெருநிலப்பரப்பிலிருந்து இலவங்கம், பட்டை ஆகியவையும், மலேசியாத் தீபகற்பம், சுமத்ரா, போர்னியே ஆகிய இடங்களிலிருந்து கற்பூரமும் தருவிக்கப்பட்டன. கிறித்து பிறப்பதற்கு முன்னரும் பின்னருமான ஆரம்ப நூற்றாண்டுகளில் இந்த வர்த்தகம் நடைபெற்றது எனவும் அவர் கூறுகிறார் (பக்:158, 159). இங்கு இந்தியா என்பது தமிழகத்தையே குறிக்கும். அந்நிய வர்த்தகத்தால் செழித்த தென்னிந்தியாவின் நகர மையங்கள் பெரும்பாலானவற்றிலும் அப்போது கணிசமான எண்ணிக்கையில் யவனர்கள் வசித்தனர். சங்கப்பாடல்கள் அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றன. காவேரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ள காவேரிப்பூம்பட்டினம் நகரத்தில் அவர்களது வசிப்பிடங்கள் இருந்தன (பக்: 166, 167). இவை ஜா தரும் தகவல்கள் ஆகும். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பல்வேறு பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு, பின் அங்கிருந்து மேற்குலக நாடுகளுக்கு AVAIஅவை ஏற்றுமதியாகின என்பது இத்தரவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

சில பண்டைய தமிழக வணிக நகரங்கள்; அழகன்குளம்:

 சங்ககாலப் பாண்டியர் துறைமுகமாக இந்நகரம் இருந்துள்ளது. இவ்வூருக்குப் பக்கத்தில் தான் வைகை நதி கடலில் கலக்கிறது. இவ்வூர்தான் மருங்கூர்ப்பட்டினமாய் இருக்கவேண்டும் என்கிறார் நரசய்யா அவர்கள். புகார் போன்றே இதுவும் மருங்கூர்பட்டினம், ஊணூர் என இரு ஊர்களாகப் பிரிந்திருந்ததது எனவும் மதிலையும் அகழியையும் கொண்டிருந்தது எனவும் மயிலை சீனி வெங்கடசாமி மருங்கூர்பட்டினம் குறித்துக் கூறுவதாக நரசய்யா குறிபிடுகிறார். இங்கு கி.மு.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எகிப்து பெண்ணுருவ ஓடுகளும், குடுவை ஏந்திய பெண்சித்திர ஓடு, விசிறி, கண்ணாடி ஏந்திய பெண் சித்திர ஓடு முதலியனவும் கிடைத்துள்ளன எனவும், இந்நகரம் ஒரு சிறந்த தொழிற்கூடமாய் இருந்திருக்கவேண்டும் எனவும் கூறுகிறார் நரசய்யா அவர்கள்(பக்:115-118).

 வடக்குக் கருப்புப் பளபளப்புப் பானைகள் (NORTHERN BLACK POLISHED WARE) வட இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 3ஆம் நூற்றாண்டு வரை பயன் படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை அழகன் குளத்தில் கிடைத்துள்ளன. Aஅழகன் குளத்தில் கிடைத்துள்ள பானைகளின் காலம் கிமு 6ஆம் 5ஆம் நூற்றாண்டு என்கிறார் புகழ்பெற்ற இந்திய அகழாய்வாளர் டாக்டர் பி.பி. இலால் (DR. B.B. LAL) அவர்கள்(TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 43). அப்துல் மசீத் அவர்கள், தமிழகக் கடல் சார் வரலாறு என்கிற நூலில், இங்கு கிடைத்த தொல்பொருட்கள் சிலவற்றைக் கரிமப் பகுப்பாய்வு செய்ததில் இத்துறைமுகத்தின் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை ஒரு தொடர்ச்சியான வரலாறு இதற்கு இருப்பதாகத் தெரிகிறது (பக்: 9) எனவும். நந்த அரசர்களால் வெளியிடப்பட்ட கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அச்சுக்குத்தப்பட்ட வெள்ளிக்காசு ஒன்றும் மொளரியப் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன (பக்: 12) எனவும் கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் உருவம் பொறித்த மட்பாண்டம் ஒன்றும் இங்குக் கிடைத்துள்ளது(பக்: 21) எனவும் இங்கு கிடைத்தத் தொல்பொருட்கள் இவ்வூர் எகிப்து, உரோம், அரேபியா, இலங்கை போன்ற அயல் நாடுகளுடனும், உள்நாட்டுடனும் கொண்டிருந்த வணிகப், பண்பாட்டுத் தொடர்பை வெளிப்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்கள். (பக்; 12)

அரிக்கமேடு:

 சோழர்களின் துறைமுக நகரமாக இது இருந்துள்ளது. அகழாய்வில் இங்கு பல அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மெல்லிய உயர்தர வகையைச் சேர்ந்த துணிகள் தயாரிப்பதற்கும், சாயம் தோய்க்கவும் ஆன தொட்டிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. மெல்லிய துணிவகைகள் மேற்கத்திய நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சோழ மண்டலக் கடற்கரையின் ஒரு நிலையான துறைமுகமாக இது இருந்துள்ளது. இங்கு தங்கம், அரிய கல்வகைகள், கண்ணாடி ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட மணிகள் இங்கு ஏராளமாய்க் கிடைத்துள்ளன. இத்துறைமுகப்பகுதி ஒரு சிறந்த தொழிற்கூட நகராய் இருந்துள்ளது. (கடல்வழி வணிகம், பக்: 101-106)

 பென்சில்வேனியா பல்கலைக்கழக விமலா பெக்ளி (VIMAL BEGLY), அவர்கள் 1989முதல் 1992 வரை மூன்று வருடங்கள் அரிக்கமேட்டுப் பகுதியில் ஆய்வு செய்தார். “கல், மணி ஆகியவை செய்யும் திறமை ஐரோப்பியர்கள் அறிவதற்கு சுமார் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அரிக்கமேட்டினருக்குத்(தமிழர்களுக்கு) தெரிந்திருந்தது என்கிறார் அவர். அரிக்கமேடு மத்தியதரைக்கடல் நாடுகளுடன் வணிகத் தொடர்பை கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்திருக்கவேண்டும் என்கிறார் பெக்ளி அவர்கள். புலி உருவம் ஒரு புறமும், யானை உருவம் ஒரு புறமும் கொண்ட சங்ககாலச் சோழர்காசு ஒன்று இங்கு கிடைதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலை நாடுகள் விரும்பிய கற்களும், மணிகளும் இங்கு தயாரிக்கப்பட்டன. பிலிப்பைன்சில் கிடைத்த இப்பொருட்களில் பெரும்பாலானவை இங்கிருந்து வந்தவையே ஆகும். இம்மணிகளையும், கற்களையும் கிழக்கு ஆப்ரிக்காவுக்கும், வட ஆப்ரிக்கவுக்கும் அரேபியர்கள் இங்கிருந்து கொண்டு சென்றனர்.

 உரோமர்கள் இதனைத் தங்கள் தொழிற்கூடமாகக் கொண்டிருந்தனர் என சில அறிஞர்கள் கருதினர். ஆனால் பெக்ளி அவர்கள் உரோமர்கள் வருவதற்கு முன்னரே கி.மு. 2ஆம் நூற்றாண்டிலேயே இந்நகரம் ஒரு சிறந்த தென்னிந்தியத் தொழிற்கூட நகரமாக இருந்தது எனவும் உரோமர்கள் சென்ற பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மது வியாபாரத்திலும், அம்போரா பண்டங்கள் தயாரிப்பதிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தனர் எனவும் கூறுகிறார் பெக்ளி அவர்கள். இவர்கள் அரிய கல்வகைகள், மணிகள் செய்வதில் புகழ் பெற்றவர்களாக இருந்ததால் ஐரோப்பியரின் இரூட்லெட் மண்பாண்டங்களை ஐரோப்பியரிடமிருந்து தாங்களே செய்யக் கற்றுக் கொண்டனர் என்கிறார் பெக்ளி அவர்கள். இதன்மூலம் இங்குத் தொழிநுட்பக் கைமாற்றம் (Transfer of Technology Knowledge) நடந்ததாகச்s சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (நரசய்யா-கடல்வழி வணிகம், பக்:101-109).

 ஐரோப்பியரின் இரூட்லெட் மண்பாண்டங்களை கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இறக்குமதி செய்த தமிழர்கள், கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து அரிக்கமேட்டில் சொந்தமாகத் தயாரித்து அதன்மேல் இறக்குமதி செய்யப்பட்டது எனக் குறியிட்டு விற்றனர் என்கிறார் விமலா பெக்லி அவர்கள்(DR. VIMALA BEGLY, ROME AND TRADE, CERAMIC EVIDENCE FOR PRE-PERIPLUS TRADE ON THE INDIAN COASTS, P-176, & TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 58).எலிசபெத் லிடிங்வில்(ELIZABETH LYDING WILL) அவர்கள் அரிக்கமேட்டில் கிடைத்த அம்போரா பண்டங்களை ஆய்வு செய்து, இரு கைப்பிடி அம்போரா பண்டங்களில் பாதிக்கு மேல் கிரேக்கக் கோயன்(Greek Koyan Amphoras)அம்போரா பண்டங்கள் எனவும் இவை கிரேக்கத்தீவில் உள்ள ஏஜியன் கடலில்(Agegean sea) இருக்கும் கோச்(kos) தீவில் கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை எனவும் மீதியுள்ளவை கி.மு. 2ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரோமில் உற்பத்தி செய்யப்பட்டவை எனவும் கூறியுள்ளார். (Source: Elizabeth Lyding will- The Mediterraneian Shipping Amphorae from Arikkamedu p.isi &TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 43).



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பூம்புகார்:

 காவிரிப்பூம்பட்டினம் எனப்படும் சோழர்களின் தலைநகரம் இதுவாகும். 1965இல் நடந்த அகழாய்வில் இங்கு இரண்டு மரத்தூண்கள் கிடைத்துள்ளன. அவற்றை கார்பன் பகுப்பாய்வு முறையில் அறிவியல் ஆய்வுக்குட்படுத்தி அதன் காலம் கி.மு. 5ஆம் 4ஆம் நூற்றாண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள். (Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 58, 59, & S.R. RAO JOURNAL OF MARINE ARCHAEOLOGY, vol-2, 1991 page-6) இங்கு மெகாலிதிக் கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அவைகளின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.4ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் என்கிறார் நடன காசிநாதன் அவர்கள் (Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 71). நடன காசிநாதன் அவர்கள் தனது நூலில் பக்கம் 69 முதல் 76 வரை இந்த பூம்புகாரில் நடைபெற்ற பல்வேறு அகழாய்வுகள் குறித்தும் அதன் விடயங்கள் குறித்தும் விரிவாகச் சொல்லியுள்ளார். இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு (கி.மு 500 வாக்கில்) முன் இந்த பூம்புகார் நகரம் கடலுக்குள் 5 கி.மீ வரை பரவி இருந்துள்ளது என்கிறார் அவர்(Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 72).

பூம்புகார் நகர நாகரிகம்:

 1991, 1993 ஆகிய ஆண்டுகளில் கோவாவில் உள்ள தேசியக் கடலியல் கழகம் பூம்புகார்க் கடற்கரை அருகே கடலில் அகழாய்வை மேற்கொண்டு இறுதியில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. “இலாட வடிவில் (U) உள்ள கட்டிட அமைப்பு பூம்புகார்க் கடற்கரையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் 23 மீட்டர் ஆழத்திலும் காணப்பட்டது. இந்த அமைப்பின் மொத்த நீளம் 85 மீட்டர்; இரண்டு சுவர்களுக்கு இடையே 13 மீட்டர் இடைவெளி, சுவர்களின் அதிக அளவு உயரம் 2 மீட்டர்; மேற்குச் சுவரைவிடக் கிழக்குச் சுவர் உயரம் அதிகம்; சுவரில் கடற்பாசிகள், செடிகள் படர்ந்திருந்ததாலும் சில இடங்களில் கட்டுமான வேலைகளும் காணப்பட்டனஎன்பது அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.

 அதன்பின் 2001 ஆண்டு கிரகாம் ஆன்காக் என்கிற இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர் இங்கிலாந்து 4ஆவது தொலைக்காட்சி, அமெரிக்கத் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிதி உதவியுடனும், கோவாவில் உள்ள தேசியக் கடலியல் கழகத்தின் உதவியுடனும் பூம்புகார்க் கடல்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த இலாட வடிவில் (U) உள்ள கட்டிட அமைப்பு படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது 100 அடிகள் ஆழத்தில் மேலும் 20 பெரிய கட்டுமான அமைப்புகளைக் கண்டதாக கிரகாம் ஆன்காக் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாய்வு பற்றிய நூலின் 14ஆவது இயல் பூம்புகார் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வை விவரிக்கிறது. 11000 ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதை அவ்வாய்வறிக்கையில் கிரகாம் ஆன்காக் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

 இங்கிலாந்து டர்காம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் ஆராய்ச்சியாளர் கிளீண் மில்னே அவர்கள், கிரகாம் ஆன்காக் அவர்களின் கருத்து சரியானது தான் என்கிறார். ஆனால் கோவா-தேசியக் கடலியல் கழகத்தின் ஆய்வாளர் முனைவர் ஏ. எசு. கவுர் அவர்கள், “இலாட வடிவில் (U) உள்ள அமைப்பைக் கட்டுவதற்கு மாபெரும் தொழில்நுட்பம் தேவை... 11500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த பண்பாடுகளின் திறமைக்கு அப்பாற்பட்டது அது எனக் கூறியுள்ளார். கிளீண் மில்னே, கிரகாம் ஆன்காக் அகியோர்களின் கருத்துப் படி பூம்புகார் நகர நாகரிகம் மெசபடோமியாவில் இருந்த சுமேரிய நாகரிகத்திற்கும் முற்பட்டது. பூம்புகார் நகர நாகரிகம் குறித்த இத்தரவுகள், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தெரிவித்துள்ள தரவுகளாகும் (அவரது நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 22-24.)

மரக்காணம் & பந்தர்பட்டினம்:

 தமிழ்நாட்டுத்தொல்லியல் துறையினரின் காலாண்டிதழில் (ஜூலை-2004), திருமதி வசந்தி என்கிற அகழாய்வாளர், எயிற்பட்டினம் என்கிற சங்ககால ஊராகக் கருதப்படுகிற இந்நகரம் கி.மு. 300ஆம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு சங்ககாலத் துறைமுக நகரமாகத் திகழ்ந்துள்ளது எனக் குறிப்பிடுள்ளார் என்கிறார் நரசய்யா அவர்கள். மேலும் அவர் பெரிப்ளஸ் என்கிற கிரேக்கர் எழுதிய நூலில் இதனை சோபட்மா என அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும், நல்லியக்கோடன் என்கிற சிற்றரசனின் துறைமுகமாக இந்நகரம் இருந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார் (பக்: 125). அதுபோன்றே தஞ்சாவூருக்கு அருகிலுள்ள பந்தர்பட்டினம் என்கிற நகரம் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது எனவும் இங்கு முத்து, மணி, இரோம நாணயங்கள் முதலிய நிறைய பொருட்கள் கிடைத்துள்ளன எனவும் நரசய்யா அவர்கள் தெரிவிக்கிறார் (பக்: 172)

கரூர்:

 பொறையர்குலச் சேர அரசர்களின் தலைநகராக இந்நகர் இருந்துள்ளது. இங்கு கி.மு. 3ஆம் நூற்றாண்டு நாணயங்கள் கிடைத்துள்ளன என்கிறார் நரசய்யா அவர்கள் (பக்: 166). தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இப்பகுதியில் இருந்து கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொல்லிப்பொறை, மாக்கோதை என்கிற எழுத்துப் பொறிப்புகளைக்கொண்ட சேர நாணயங்களையும், குட்டுவன் கோதை என்கிற கி.மு. 1ஆம் நூற்றாண்டு சேர நாணயம் ஒன்றையும் கண்டறிந்துள்ளார். மாக்கோதை என்பவன் கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை என்கிற கோதை குலச் சேர வேந்தன் ஆவான்.

 கரூரின் வணிகச் சிறப்பு குறித்தக்கட்டுரையில் திரு. இராசசேகர தங்கமணி அவர்கள் பல விடயங்களைத் தந்துள்ளார். பல வணிகப் பெரு வழிகள் சந்திக்கும் இடத்தில் கரூர் அமைந்திருந்தது. முசிறித் துறைமுகத்திலிருந்து தரைவழியாகப் பாலக்காட்டுக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டில் புகுந்து கரூர், உறையூர் வழியாகப் பூம்புகாருக்குச் செல்ல முடியும். இதனால் கரூரின் வணிகம் நன்கு நடந்தது. இப்பாலஸ் பருவக்காற்றினை அறிந்து கொண்ட பின் (கி.பி.45) இரோம வணிகம் பெருகியது. ஆனால் அதற்கு முன்னரே கி.மு. 25 வாக்கில் ஆர்மஸ் துறைமுகத்தில் இருந்து 125 கப்பல்கள் இந்தியாவிற்கு புறப்படத்தயாராக இருந்ததை தான் கண்டதாக ஸ்டிராபோ எழுதியுள்ளார்(SOURCE: Srinivasa Iyengar, P.T., 1982, History of the Tamils Asian Educational Services Chennai, p.195). கரூரில் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த SILAசில செலூசிடியன் நாணயங்களும், கி.மு. 2ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த சில பொனீசியன் நாணயங்களும் கிடைத்துள்ளன என்கிறார் நடன காசிநாதன் அவர்கள். (SOURCE: R.KRISHNAMURTHY, CELEUCID COINS FROM KARUR, STUDIES IN SOUTH INDIAN COINS VOL-3 PP.19-28 TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 44).

வட இந்தியாவிலுள்ள தட்சசீலத்தில் நடந்த அகழாய்வில் கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்குரிய பால நிலையில் இருந்த கொங்கு நாட்டின் நன்கு பட்டை தீட்டப்பட்ட ‘பெரில் கற்கள் மௌரியர்களுக்கு முற்பட்ட காலத்திய மண்ணடுக்குகளில் கிடைத்துள்ளன(Nagasamy R. (ed) Dmilica Tamil Nadu State Department of Archaeologychennai, Vol. 1. 1970, p.58). மேலும் கி.மு. 200- கி.பி.200 காலகட்டத்தில் தென்சீனாவை ஆண்ட ‘அன் அரச மரபினரின் ஈமச் சின்னங்களில் தமிழ் நாட்டு மணிக்கற்கள் கிடைத்துள்ளன. ஆகவே இங்கிருந்து வெளி நாடுகளோடு கி.மு. 4ஆம் நூற்றாண்டிலிருந்தே வணிகம் நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. அதற்குச் சான்றாக ஆயிர்க்கணக்கான உரோமனிய நாணயங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட கிரேக்க நாணயங்களும், நூற்றுக்கணக்கான சீன நாணயங்களும், இருபதுக்கும் மேற்பட்ட பொனீசிய நாணயங்களும் அமராவதி ஆற்றுப்படுகையில் கிடைத்துள்ளன. (source: Nagasamy. R. 1995, Roman Karur, Prakat Prakasaham, Chennai; 2.Krisnamurthy. R., 2000, Non Roman Ancient Foreign Coins from Karur, India, Garnet Publishers, Chennai; 3.Krishnamurthy.R., 2009, Ancient Greek and Phoenician Coins from Karur, Tamil Nadu, India, Garnet Publishers, Chennai; 4.இராசசேகரதங்கமணி, ம., 2006, தமிழ் நாட்டு வரலாற்றில் புதிய கண்டு பிடிப்புகள்; 5.தமிழ் நாட்டில் அயல் நாட்டார் நாணயங்கள், கொங்கு பதிப்பகம், கரூர், பக்: 8-18), (நிகமம்-வணிக வரலாற்றாய்வுகள், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, பக்: 39-46).

 அழகன் குளம், அரிக்கமேடு, பூம்புகார், மரக்காணம், பந்தர்பட்டினம், கரூர் ஆகிய தமிழகத்தின் ஒரு சில நகரங்கள குறித்த ஒரு சில தரவுகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளன. இவைபோக மதுரை, வஞ்சி, மாந்தை, உறையூர், கொற்கை, தொண்டி, முசிறி, நரவு போன்ற பல இலக்கியப் புகழ் பெற்ற பெரு நகரங்களும், கொடுமணல் போன்ற அகழாய்வு நடந்த சிறு இடங்களும் உள்ளன. ஆகவே தரப்பட்டுள்ள சில நகரங்களின் தரவுகளை மாதிரியாகக் கொண்டு சங்ககாலத் தமிழகத்தில் அன்று நடந்து வந்த வணிகத்தின் அளவு, அதன் சிறப்பு குறித்த ஒரு பார்வையைப் பெற முடியும்.

தமிழரசுகளின் கடல் வல்லமை :

தமிழரசுகள் அன்று மாபெரும் கடல் வல்லரசுகளாகவும் இருந்தன. இது குறித்து வின்சென்ட் ஆர்தர் சுமித் என்கிற புகழ்பெற்ற வரலாற்றறிஞர், “தமிழ் அரசுகள் வல்லமை மிக்கக் கடற்படைகளை வைத்திருந்தனர். கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வணிகக் கப்பல்கள் தமிழகம் நாடி வந்தன எனத் தனது இந்திய வரலாறு என்கிற நூலில் குறிப்பிடுவதாகக் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பண்டையத் தமிழ் சமூகம் என்கிற தனது நூலின் முன்னுரையில் தெரிவிக்கிறார். வின்சென்ட் ஆர்தர் சுமித் அவர்கள் தனது அசோகர் என்கிற மற்றொரு நூலில் “தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகளாக பராமரித்து வந்துள்ளன எனக் குறிபிடுகிறார் (ஆதாரம்: “அசோகர்வின்சென்ட் ஆர்தர் சுமித், தமிழில் சிவமுருகேசன் பக் :79) அன்று தென்னிந்திய நாடுகள் என்பன தமிழக நாடுகளே ஆகும்.

பண்டையத் தமிழக அரசுகள் வலிமை மிக்கக் கடற்படைகளைக் கொண்டிருந்த போதிலும் அவர்களிடையே நடைபெற்ற போர்கள் அனைத்துமே நிலப் போர்களாக இருந்தன. அவர்களுக்கிடையே கடற்போர்கள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் இமயவரம்பன் நெடிஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் கடம்ப மன்னர்களை, அவர்களின் கடற்கொள்ளைகளைத் தடுக்கும் பொருட்டு, தங்கள் கடற்படை கொண்டு அவர்களைத் தாக்கி அடக்கினர். தமிழகக் கடல் வணிகத்துக்குத் தடையாக இருந்த கடற் கொள்ளையர்களையும் தாக்கி அடக்கினர் எனப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. அதுபோன்றே சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்செட் சென்னியும், தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும் தென் பரதவர்களை, அவர்களின் கடல் வல்லமையை, தங்கள் கடற்படை கொண்டு தாக்கி அடக்கினர் எனச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

ஆக கடற் பகுதியையும், கடல் வணிகத்தையும் பாதுகாக்க மட்டுமே கடற்படை பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. கடல் வணிகத்தை பாதுகாப்பதில் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்ததாகவும் தெரிகிறது. அதனால் தான் தமிழரசுகளுக்கிடையே கடற்போர் எதுவும் நடைபெறவில்லை. வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல் வணிகத்தை பாதுகாக்கவும், வடக்கிலிருந்து வடுகர்கள் போன்ற அநாகரிக மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும், மொழி பெயர் தேயப் பகுதியைப் பாதுகாக்கவும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. புகழ்பெற்ற நெடியோன் எனப்படும் நிலந்தரு திருவிற்பாண்டியன் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரும் கடற்படை வைத்திருந்தான் எனவும் “சாவகம் (இன்றைய இந்தோனேசியா தீவுகள்) அன்றே அவனது கடற்படை கொண்டு கைப்பற்றப்பட்டது எனவும், அப்பாதுரை அவர்கள் குறிப்பிடுகிறார். அதன்மூலம் “கிராம்புஎனப்பட்ட வாசனைப் பொருள் வணிகம் தமிழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. கிராம்பு என்பது உலகிலேயே இந்தோனேசியாவில் மட்டுமே விளைந்தது எனவும், உலகம் முழுவதும் அதற்கு மிக அதிகத் தேவை இருந்தது எனவும் அறிகிறோம்.

 கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே அத்தேவை கடல் வணிகம் மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. அதனால் தான் அவ்வணிகத்தைத் தமிழர்கள் தமது கடற்படை கொண்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். சங்ககாலத்தில் சாவகத்தில் தமிழ் பேசப்பட்டதாக மணிமேகலை காப்பியத்தின் கூற்று அச்செய்தியை உறுதிப் படுத்துகிறது(ஆதாரம் : கா.அப்பாதுரை அவர்களின் “தென்னாட்டுப் போர்க்களங்கள் பக்: 43 முதல் 48 வரை). மேலும் நரசய்யா அவர்களின் “கடல் வழி வாணிகம் என்கிற நூல் தமிழர்களின் பண்டையக் கடல் வணிகம் குறித்துப் பல விரிவான தகவல்களைத் தருகிறது. கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே பண்டையத் தமிழக அரசுகள் கடற்போரிலும், கடல்வணிகத்திலும் புகழ் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக இருந்து வந்துள்ளனர்.

ஆதலால் தான் கி.மு. 500 முதல் கி.பி. 250 வரையான 750 வருடங்களாக தமிழக வணிகம் இடைவிடாது உலகளாவிய அளவில் நடைபெற்று வந்தது. பண்டைய வணிகம் குறித்துக் குறிப்பிடப்படும் வணிகப் பொருட்களில் பெரும்பாலானவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் விளைகிற, உற்பத்தி ஆகிற பொருட்களே ஆகும். பண்டைய காலத்தில் இவை அனைத்தும் சிந்துவெளிப் பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், மேற்குலக நாடுகள் ஆகியவைகளுக்குத் தமிழகம் வழியாகவே அனுப்பி வைக்கப்பட்டன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard