New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மோட்சம் பார்க்கலாம் ... வாங்க .. வாங்க .. D.G.S.தினகரன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மோட்சம் பார்க்கலாம் ... வாங்க .. வாங்க .. D.G.S.தினகரன்
Permalink  
 


சொர்க்கத்திற்கு சென்று வந்து சாட்சி சொன்னவர்கள்.

http://narenpaarvai.blogspot.in/2011/08/blog-post.html


நரேன் பதிவு ஒன்றில் தான் கீழே வரும் அதிசயப் படங்களைப் பார்த்தேன்.  அவரது அப்பதிவில்  வாசிக்க வேண்டியது  நிறைய இருக்கிறது. வாசித்துக் கொள்ளுங்கள். படங்கள் மட்டும் உங்களுக்குக் காண்பிக்க  இங்கே மறுபதிவு செய்கிறேன். காண வேண்டிய காட்சியை எல்லோரும் பார்க்க வேண்டாமா?

***



சில directorial mistakes in Dinak's MOVIE !

*** இலக்கணப் பிழைகளை விட்டு விடுவோம்.

*** ரெண்டு apostles பார்த்ததாகச் சொல்கிறார். ஒருவர் பீட்டர்; இரண்டாவது பால். ஆக பால் ஒரு apostle என்கிறார். இது சரியா?

*** பரிசுத்த ஆவியைப் பற்றிய விளக்கம் ஏதுமில்லாமல் வெறும் sound effect மட்டும் கொடுத்திருக்கிறாரே :( அவரை இப்படி உதாசீனம் செய்கிறாரே தினக்!

*** முதல் MOVIE ஒரு நாளிலும் அதற்கு அடுத்த நாள் இரண்டாவது MOVIE  எடுத்திருப்பதாகச்  சொல்கிறார்கள். ஆனால் முந்தின நாள் போட்ட அதே சட்டை, கோட், டை என்று ‘அழுக்காக’ ஏன் உட்காரணும்? Asst. Director அடுத்த costume கொடுக்காமல் விட்டாரே ... A bad continuity. So sad.

***





கிறித்துவ வரலாற்றில் எத்தனையோ புனிதர்கள் - Saints - உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர்கள், அவர்களும் கூட இப்படி மோட்சம் போய் வந்தேன்; நரகம் போய் வந்தேன் என்று இதுவரை ‘கதை விடுவதில்லையே’ ...  இவருக்கு மட்டும் எப்படி இம்புட்டு தைரியம்??!!

தினக் இன்றும் மோட்சம் போய் வந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.
முகமது அன்று சுவனம் போய் வந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.

நல்ல நம்பிக்கைகள் ......... வேறென்ன சொல்ல நம்புபவர்களை!

நான் சொல்லவில்லை. Doris Egan என்பவர் சொல்கிறார்: “You talk to God, you're religious. God talks to you, you're psychotic.” 
***





great BGM.

நல்ல make-up!! Kudos to the make up man.

ஆயிரக்கணக்கில் மோட்சம் பார்க்க போயிருக்காங்க ... you tube சொல்லுது. ஆனால் நரகத்தைப் பார்க்க வெறும் எட்டாயிரம் சில்லறை! sad ... அங்கேயும் போய்ட்டு ‘திரும்பி’ வாங்க ...

வேற வேற டிபார்ட்மென்ட் நரகத்தில் பார்க்கலாமே ... 

***
தினக், ஜாஹீர் நாயக் போன்றோரை ஒரு விஷயத்திற்கு மிகவும் பாராட்ட வேண்டும். என்ன நினைவாற்றல் ... கண்ணை மூடித்திறந்தால் நாலு மேற்கோள்கள் .. அத்தியாயம், வசனம் எல்லாம் எண்களோடு .. பிரம்மாதம். 

தினக்  I love everybody என்கிறார். ஆனால் காருண்யாவில் அடிமிஷன் கேட்பவர்களிடம் அப்படி எதையும் காண்பித்ததில்லை என்பார்களே!

தினக் பயங்கர மூடில் இருக்கிறார்; நிறைய “ஜோக்குகள்” ....

***

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: மோட்சம் பார்க்கலாம் ... வாங்க .. வாங்க ..
Permalink  
 


 சார்வாகன் said...

வணக்கம் சகோ,
அருமையான பதிவு,
சொர்க்கத்திற்கு போய் வந்தவர்களின் கதை அருமை.மிகவும் சிறப்பான விள‌க்கமான் தினகரன் பயணத்தின் சாராம்சங்கள்
1.காதில் குரல் கேட்கிறதுது.(அது இல்லை இது வேற!!!!!!!!!!)

2. ஆன்மா(?) மட்டுமே உயர்த்தப்படுகிற‌து.உட்ல் அல்ல‌(மனதின் கற்பனை அல்லது கன்வு இல்லை!!!!!!!!!).

3. இயேசுவை சாதாரணாமாக பார்த்திருக்கிறார்.இறைவன முகம் தவிர்த்து பார்த்து இருக்கிறார்.

4. பிதா(இறைவன்) ஆங்கிலம் பேசி இருக்கிறார்.

5. ஒருமாதம் ஜெபம் பண்ணி சொர்க்கம் சென்று வந்துள்ளார்.

6. மேலே குறிப்பிட்ட ஹதிதுகள் போல் முந்தைய தீர்க்க தரிசிகளை வர்ணிக்கிறார்..அது போலவே சொர்க்கம் மூன்று படிகள் உடையது.முகமது கண்ட சொர்க்கம் 7 படிகள் உஅடையது.தினகரன் முகமதுவிற்கு நன்றி என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே.
He is not citing the previous writings on this topic which is not ethical.

7.இந்தக் காலத்திலேயே இப்படி கனவு கதை சொலப்வர்கள் இருப்பதால் அக்கால்த்திலும் இருந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

8.இப்படிப்பட்ட உறுதியான ஒரு வெளிப்பாடு கொடுக்கப்பட்டும்(?) இவர் சரியாக் மத பிரச்சாரம் செய்யாமல், கல்லூரி,பல்கலை கழகம் கட்ட திரு ஜெயேந்திரர் சிபாரிசு தேடியது மிக பெரிய காமெடி.

9.பல கேள்விகளுக்கு விடை கேட்காமலேயே வந்தது மிக பெரிய முட்டாள்த்னம்.
எ.கா பைபிளின் படி உலகம் படைக்கப்பட்டது 6000 ஆண்டுகளுக்கு முன்.ஆனால் பல உயிரின‌ங்களின் படிமங்கள் பல கோடி ஆண்டுகள் பழமை கொண்டவை.அவற்றை படைத்தது யார்?
10.நித்யானந்தாவின் பறக்கும் வித்தையை விடவே அருமையான செயல் இது
நன்றி

August 11, 2011 10:06 AM
தருமி said...

அடடா .. எவ்வளவு முக்கியமான பதிவு; இது வரை என் கண்ணில் படவில்லையே!
சில directorial mistakes in Dinak's MOVIE !

*** ரெண்டு apostles பார்த்ததாகச் சொல்கிறார். ஒருவர் பீட்டர்; இரண்டாவது பால். ஆக பால் ஒரு apostle என்கிறார். இது சரியா?

*** பரிசுத்த ஆவியைப் பற்றிய விளக்கம் ஏதுமில்லாமல் வெறும் sound effect மட்டும் கொடுத்திருக்கிறாரே :(

*** முதல் MOVIE ஒரு நாளிலும் அதற்கு அடுத்த நாள் இரண்டாவது MOVIE என்று சொல்கிறார்கள். ஆனால் முந்தின நாள் போட்ட அதே சட்டை, கோட், டை என்று ‘அழுக்காக’ ஏன் உட்காரணும்? Asst. Director அடுத்த costume கொடுக்காமல் விட்டாரே ... A bad continuity. So sad.

August 13, 2011 1:57 AM
தருமி said...

தினக் இன்றும் மோட்சம் போய் வந்ததாக மக்கள் நம்புகிறார்கள். 
முகமது அன்று சுவனம் போய் வந்ததாக மக்கள் நம்புகிறார்கள். 

நல்ல நம்பிக்கைகள் ......... வேறென்ன சொல்ல நம்புபவர்களை!

August 13, 2011 1:59 AM

.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சொர்க்கத்தை மனிதர்கள் பார்த்தார்களா என்ற கேள்விக்கு, இரண்டு நபர்கள் தான் சொர்க்கத்தை பார்த்து மக்களுக்கு அதைப்பற்றி சொல்லியிருக்கிறார்கள்.
முதலாவது இஸ்லாத்தின் கடைசி தூதர் முகமது

பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)    ஸூரா  17:1

 (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.


ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்



3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்" என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!" என்றார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்" என்றார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்" என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்" என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்" என்றார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்" என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது.
Volume :3 Book :59


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

naren said...

ஹா..ஹா..நீங்கள் தந்த காணொளியில் அண்ணாச்சி நன்றாகத்தான் வியாபாரம் செய்கிறார்.

தினகரன் 1990 களின் முற்பகுதி வரை, பிரசங்க வியாபாரத்தில் கோலோச்சி வந்தாலும், அவருடைய பிரசங்களில், நான் சொர்க்கம், நரகம் சென்றேன், கடவுள், ஏசு,....etc., பேசினேன், என்ற line க்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நான் பிரசங்கதிற்கு முன் கடவுளிடம் பேசினேன், அவர் இதை பிரசங்கம் செய்ய சொன்னார், என்ற line தான் ஓடும்.

முன்பெல்லாம், சென்னை மெரினா கடற்கரையில் “பேரின்ப பெருவிழாக்கள்” நடைப்பெறும். கடைசி இரண்டு மூன்று நாட்கள் climax ஆக தினகரன் மற்றும் அவர் குடும்பத்தினர் பேசுவார்கள். கூட்டம் அலைமோதும் அதுவே அந்த விழாவின் பெரிய கூட்டம் highlight.

ஆனால், ஒரு 1990 முற்பகுதி வருடத்தில் தினகரன் & co.வால் விழாவிற்கு வரமுடியவில்லை. அதனால் கடைசி நாளன்று கூட்டமே இருக்காது என்று நினைத்தார்கள். அந்த வருடம் john solomon என்பவர் கடைசி நாளன்று பேசினார். ஆச்சிரயத்திலும் ஆச்சரியம் கூட்டம் கட்டு கட்ங்காமல் வந்தது.( இதை 20 வருடம் கழித்தும் john solomon இன்னும் சொல்லிக்கொண்டு பெருமைபட்டு கொண்டிருக்கிறார்). அதேப் போல் அடுத்த அடுத்த வருடங்களில் மற்ற ஊர்களில் நடந்த பேரின்ப பெருவிழா கூட்டங்களில் john solomon பேசிய கடைசி கூட்டங்களில் கூட்டம் ஜே.ஜே.

தினகரனுக்கு பயம் தொற்றி கொண்டது. என்னடா நாம கோலோச்சும் வியாபாரத்தில் போட்டியா? கடை இரண்டானால் வியாபாரம் குறையுமே என்று நினைத்து- 1990 களிலிருந்து நான் சொர்க்கம், நரகம் சென்றேன், கடவுள், ஏசு,....etc., பேசினேன், என்ற line க்கு முக்கியத்துவம் தந்து, இழக்கிற் மாதிரி இருந்த market யை நிலை நிறுத்தினார்.

அது நன்றாக workout ஆக நீங்கள் அளித்த சினிமா கானொளியில் வரை வந்து நிற்கிறது. இந்த மத வியாபாரிகள் எல்லாம் ஏசு மீண்டும் வந்தால் அவரை இரண்டாவது முறை crucify செய்து விடுவார்கள். ஏசப்பா அங்கேயே பத்திரமாக இருங்கள்.

இதில் மனதை தொட்டது, ஜூதாஸ் கதை, உலகத்தில் யார் யாரோக்கோ மன்னிப்பு தந்த ஏசு, தான் செய்த தப்பை உணர்ந்து பிராய்ச்சித்த செய்ய முனைந்த அவருக்கு ஏன் மன்னிப்பு இல்லை. ஏசு எப்படியும் சாகத்தானே வந்தார். அவர் சாவுக்கு ஜூதாஸை கடவுள் ஒரு கருவியாகத்தானே பயன்படுத்திக் கொண்டார்.

முகமதுதான் கடைசி தூதர் என்றால், ஏசு தூதர் அண்ணாச்சியை அவர் தூதராக நியமித்தாரே. agentக்கு agent செல்லாதே.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சார்வாகன் said...

அய்யா வணக்கம்
இம்மாதிரி விஷயங்களை ஆவணப் படுத்துவதே நல்லது.
1.இம்மாதிரி பல பிரச்சாரகர்கள் சொலவது அந்த மத பிரிவின் புத்தகம், கொள்கையாக்கம்,நடைமுறை போன்றவற்றில் இருந்து வேறுபடும்.அதாவது இத்னை ஒரு விமர்சகர் சொன்னால் இது மதத்தில் இல்லாத விஷயம் ,இத்னை கூறி அவதூறு கற்பிகிறாய் என்பவர்கள் ,அவர்கள் ஆள் கூறும் போது சும்மா இருப்பாது ஏன்?

2.கிறித்தவத்தின் படி இம்மாதிரி செயல் செய்ய முடியுமா?.முன் உதாரணம் உண்டா?.இறையியல் சிக்கல் நிறைந்த ஒரு பிரச்சினை.நியாயத் தீர்ப்பு, மரித்தோர் எழுப்பப் படல் முன் ஒருவர் சொர்க்கத்தில் இருக்க முடியுமா?.அதை ஒருவர் சென்று பர்த்து வர முடிய்மா?

3. சென்றவர் படைப்புகளின் மர்மம,முக்கியமான விஷயம் பற்றி எதுவுமே கேட்காமல் சுற்றுலா போய் வந்தவர் பயணகதை கூறுவது போல் பேசுவது ஏமாற்று வேலை என்பதை உறுதிப் படுத்துகிறது.

4.என் பதிவில் ஒரு ஆவணப் படம் (discovering religions) பதிவிட்டிருக்கிறேன்.அதில் ஆபிரஹாமிய மதங்களின் படைப்பு கொள்கையைஅ நன்கு அறிவியல் பூர்வமாக் விமர்சித்து இருக்கிறார்கள்.பாருங்கள்

[video=http://www.youtube.com/user/DiscoveringReligion]

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சார்வாகன் said...

கிறித்தவத்தில் ஒரு பிரிவான பிந்தைய தீர்க்கதரிசிகள் அமைப்பினர்(church of later Day saints) மட்டும் இம்மாதிரி விஷயங்களை நம்புவார்கள்.
எ.கா மர்மான்கள் அமைப்பின் நிறுவனன் ஜான் ஸ்மித் (இவர் கதை பெரியாஆஆஆஆஅ கதை,கதை சொல்லனும்) பிதா குமாரன் இருவரும் அவருக்கு காட்சி தந்ததை கூறி மத பிரிவை ஆரம்பித்தார்

ஜான் ஸ்மித்துக்கு தங்க ஏடுகளால் ஆன ஒரு மத புத்தகம் பைபிளின் இணைப்பு எகிப்தில் இருக்கும் இடம் வெளிப்படத்தப் பட்டது.உடனே எகிப்து சென்று அப்புத்தக்ம் பெற்று அதில் உள்ள பழங்கால் மொழியை மொழி பெயர்க்கும் சக்தி பெற்று புதிய மத புத்தகம் தயாரித்தார்.இவருக்கு பல மனைவிகள்,அமெரிக்க அதிபர் ஆக முயற்சித்தமை உள்நாட்டு போர் என்று பல சர்ச்சைக் குறிய செயல்களில் ஈடுபட்டார்.இவர் மர்மமான முறையில் கொலை செய்யப் பட்டார்.இவரின் வம்சமே தீர்க்க தரிசிகள் வம்சம் ஆகிவிட்டது(ஒரு பதிவிடுவேன்,விவரங்கள் சேகரித்து கொண்டிருக்கிறேன்). அமெரிக்காவில் பிரபல கிறித்தவ பிரிவு ஆகி விட்டது 
http://en.wikipedia.org/wiki/Joseph_Smith

**************
இந்த மத பிரச்சாரக்ர்களின் செயல்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது விஷயம் இல்லாமல் இருக்காது.தினகரன் இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் இம்மாதிரி ஏதாவது செய்யலாம் என்ற நோக்கிலேயே இந்த பரப்புரை காணொளி தயாரிக்கப் பட்டு இருக்க வேண்டும்.
*************
பல பிரபல பிரச்சாரகர்கள் ஒரு அளவிற்கு வளர்ந்து விட்ட்டல் தங்களை கடவுள் என்றோ அல்லது மிக பெரிய அந்தஸ்திற்கு உயர்த்த இம்மாதிரி கூறுவது வரலாற்றில் மிக சக்ஜம்.அதற்குள் இறைவனின் திருவடி அடைந்து விட்டார்.எங்கு,எப்படி இருக்கிறாரோ அதை யாராவது சென்று பார்த்து வந்து ஏதாவது நாளை கூறுவார்களா?.நல்ல காமெடி!!!!!!!!!!!
நன்றி



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Gujaal said...

கடவுள் (அல்லது கடவுளின் தூதர்?) ஏன் தினகரனிடம் ஆங்கிலத்தில் பேசினார்? ஒன்று அவருக்குத் தெரிந்த அராமைக், ஹீப்ரு(?) மொழிகளில் பேசியிருக்கலாம். இல்ல இவருக்குத் தெரிந்த தமிழில் பேசியிருக்கலாம். ஏன் இருவருக்கும் தொடர்பில்லாத ஆங்கிலத்தில் பேசணும்? 

விசயம் என்னன்னா துட்டு அங்கதான இருக்கு.

Monday, August 15, 2011 10:29:00 AM

Gujaal said...

பிண்ணனி இசை மனதை மயக்கி ஹிப்னாடைஸ் செய்ய உதவுது.

இடையில் வரும் சாமியாட்டங்கள், கண்ணாமூச்சி விளையாட்டுகள் இதைத்தான் நினைவுபடுத்துது.

Monday, August 15, 2011 11:48:00 AM

தருமி said...

/கடவுள் (அல்லது கடவுளின் தூதர்?) ஏன் தினகரனிடம் ஆங்கிலத்தில் பேசினார்? //

அட .. நல்ல கேள்வி.


தினக் ஒரு அமெரிக்கனுடன் பேசியதால் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். உங்களுடன் பேசியிருந்தால் தமிழில்தானே சொல்லியிருப்பார்!!!! 

நமக்குத் தெரிய வேண்டியது ‘சாமி’ எம்மொழியில் பேசினார்?!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard