New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள்-மனு ஸ்மிருதி, மனுநீதி,மனுக்குறள்?-முனைவர் செ.ம. மாரிமுத்து


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருக்குறள்-மனு ஸ்மிருதி, மனுநீதி,மனுக்குறள்?-முனைவர் செ.ம. மாரிமுத்து
Permalink  
 


http://www.tamilpaper.net/?p=877

திருக்குறளை உலகப்பொதுமறை என்றும், தமிழர் அனைவருமே சமயச்சார்பின்றிப் பின்பற்றக்கூடிய ஒப்பற்ற அறநூல் என்றும் சொல்கிறோம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் , இக்கருத்து எவ்வளவு பெரிய மாயை  என்பது விளங்கும்.  குறள் பக்தி கொண்ட யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதைச் சொல்லவில்லை. காரணம் இருக்கிறது.

அன்வர் செரிபு என்று எனக்கொரு நண்பர்.  என்போலவே மார்க்ஸீய சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டு, மதம் என்னும் பேய் பிடிக்காத, மதம் கடந்து சிந்திக்கும் அகண்ட பார்வை கொண்டவர். தொழிற்சங்கத் தோழர். பல எதிர்ப்புகளை மீறித் தன் மகளுக்குக் கேரளப் புரட்சி வீராங்கனையான அஜிதாவின் பெயரை வைத்தவர். தமிழில் மிக நல்ல புலமை கொண்டவர். என் திருமண அழைப்பிதழில் திருக்குறளை அச்சிட்டிருப்பதைப் பார்த்து இவர் ஆச்சரியப்பட்டுவிட்டுச் சொன்னார்.

‘எதைப் படித்தாலும் முழுசாய்ப் படிக்க வேண்டும். ஆழ அகலப் படிக்க வேண்டும். இங்கே அங்கே ஒரு பாட்டை உருவிப் பார்த்தால் இப்படித்தான். திருக்குறள் இன்றைக்கு இந்துத்வாவாதிகள் பரப்பிவரும் பிற்போக்கு மனுவாதக் கருத்துகளுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூசகமாய் வித்திட்ட ஒரு நூல். எத்தனை பெரியார் வந்தாலும் மீட்கமுடியாத, தமிழர்களுடைய மூடநம்பிக்கைகளுக்கு ஆதாரமான நூல் இதுதான்’ என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆத்திரம் பொங்கிவர,  ‘என்னப்பா இப்படிக் குண்டைத் தூக்கிப் போடுகிறாய்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவத்தைச் சொல்லும் திருக்குறள் எங்கே, பிறப்பால் பேதம் கற்பிக்கும் வர்ணாஸ்ரமத்தைத் தூக்கிப் படிக்கும் ஆரிய மனுவாத நூல்கள் எங்கே?’ என்றேன்.

‘முதல் அடியைச் சொல்லிவிட்டு அடுத்த அடியை விட்டுவிட்டால் எப்படி? சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்று தொழில்ரீதியாக மனிதர்களைப் பிரிப்பதே மனு தர்மம்தானே’ என்ற நண்பர், மேலும், ‘வள்ளுவர் பிறப்பிலேயே உயர்ந்த பிறப்பு, இழிபிறப்பு, (மேல்பிறந்தார், கீழ்ப்பிறந்தார்) பிறப்பொழுக்கம், குலவொழுக்கம் போன்ற ஆதாரமான வர்ணாஸ்ரம நம்பிக்கை கொண்டவர்தான்; ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரமே இதற்கு உதாரணம்; ஒழுக்கம் என்றால் நன்னடத்தை (டிஸிப்லின்) என்ற பொருளில் இங்கே சொல்லவில்லை, அவனவன் ‘குலதர்ம’ப்படி, சாதிவழக்கப்படி ஒழுகுவதையே இங்கே ஒழுக்கம் என்கிறார். ‘ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்’ என்ற குறளுக்கு அடுத்து, பார்ப்பானின் பிறப்பொழுக்கம் குன்றக்கூடாது என்று அவர் சொல்வதிலிருந்து உயர்ந்த பிறப்பு, இழிந்த பிறப்பு என்ற கேடுகெட்ட நம்பிக்கையைத் தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.

’இப்படி ஆரிய வேதநூலுக்கு விளக்கம் சொல்லவந்த தமிழ்நூலே திருக்குறள்’ என்றும் சொன்னார். அவர் என்னை மேலும் ஆழ்ந்து படிக்கச்சொன்ன பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர், பரிதியார் முதலிய பலர் எழுதிய உரைகளையும், தொடர்புடைய பல நூல்களையும் தேடிப் படித்தேன்.

படிக்கப்படிக்க எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

அந்தணர் (பிராமணர்), அரசர் (சத்திரியர்), வணிகர் (வைசியர்), வேளாளர் (சூத்திரர்) ஆகிய நான்கு வர்ணத்தார்க்கும் உரிய கடமைகளைப் புகழ்ந்துபாடி அவர்கள் அவற்றை விட்டுவிடாமல், தொடர்ந்து செய்வதுதான் உத்தமமான செயல் என்று தெள்ளத் தெளிவாய்ச் சொல்வதோடு, அவர்ணாக்கள் (குலமிலர், பஞ்சமர்) என்போரைக் ‘குடியிலார்’ என்றும், ‘கீழ்’ என்றும் சொல்லும் இந்த நூலா உலகப்பொதுமறை என்று இத்தனை காலம்  சொல்லப்பட்டு வந்திருக்கிறது!

இதை ஓர் அபாண்டக் குற்றச்சாட்டாக பலர் நினைக்கலாம். ஆனால் ஆதாரங்கள் இருக்கிறதே.

மனுநூலின் தமிழ்வடிவே திருக்குறள்!

“எழுத்துமுதல இலக்கண வகையும்
வழுத்து வேதாகம வகையதன் பயனும்
தங்கிய குறட்பா தமிழ்மனுநூல்…”
(பெருந்தொகை – 1543 )

அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்ததைச் செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.

வழக்காவது ஒரு பொருளைத் தனித்தனியே எனது என்று இருப்பார் அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன் கோடல் முதலிய பதினெட்டு பதத்ததாம்.

தண்டமாவது அவ்வொழுக்க நெறியினும், வழக்க நெறியினும் வழீஇயனாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்.

இவற்றுள் வழக்கமும் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதல்லது ஒழுக்கம் போல மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பு இலவாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வு மிகுதியானும், தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதுதான் நால்வகை நிலைத்தாய் (நால்வகை நிலையாவன: பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆசிரமங்கள்) வருணந்தோறும் வேறுபாடு உடைமையாயின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும்பான்மையாகிய பொது இயல்பு பற்றி இல்லறம், துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது.

- இது திருக்குறள் உரையின் முன்னுரையில் (உரைப்பாயிரம்) பரிமேலழகர் சொல்வது. திருவள்ளுவரின் இதயம் கண்டவர் என்று தமிழ்ப்புலவர்களால் வானளாவப் புகழப்படும் பரிமேலழகர், சுற்றிவளைத்து இங்கே குறள் சொல்லும் அறம் என்பது மனு தர்மமே என்றும், அதனைப் பொது இயல்பு பற்றிப் பெரும்பான்மைக்குத் திறம்பட திணித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்.

ஏதோ பரிமேலழகர் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார் என்று கருதவேண்டியதில்லை. அவர் இந்த முடிவுக்கு வந்ததன் ஆதாரங்களை வள்ளுவர் வாய்மொழி மூலமே பார்க்கலாம்.

பிராமண தர்மத்தைப் போற்றிச் சொல்வது:

பல குறள்கள் இருந்தாலும் முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தின் முன்னுரையிலேயே பரிமேலழகர் சொல்வது: அஃதாவது தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதல்.

(அதாவது அவரவர் வர்ணாஸ்ரம தர்மப்படி ஒழுகுவது)

ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.

மறந்தவழி இழிகுலத்தனாம் ஆதலின் மறக்கலாகாது என்னும் கருத்தான், மறப்பினும் என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.

பரிதியார் உரை:

பிராமணன் வேதம் ஓதி மறந்தாலும் பின்பு சந்தத்தை விட்டு ஓதிக்கொள்ளலாம். ஒழுக்கம் கெட்டால் பிராயச்சித்தம் பண்ணினாலும் போகாது; செய்த தோஷம் அநுபவிக்க வேண்டும்.

அதாவது மற்றவன் எப்படிக் கெட்டாலும், பிராமணன் குலத்தொழிலை விட்டுவிடக்கூடாது என்று பார்ப்பன ஜாதிய பீடங்கள் கவலைப்படுவதைவிட இது மோசமாக அல்லவா இருக்கிறது!



-- Edited by Admin on Saturday 10th of March 2012 07:30:18 PM



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: திருக்குறள்- மனுக்குறள்?-முனைவர் செ.ம. மாரிமுத்து
Permalink  
 


நேற்றுப் பார்த்த உதாரணங்களின் தொடர்ச்சியுடன் இன்று ஆரம்பிப்போம். திருவள்ளுவர், சத்திரிய தருமத்தையும் போற்றியிருக்கிறார் என்பது தெரியுமா?

இதற்கு உதாரணம் சொல்ல ஏராளமான குறள்கள் இருந்தாலும், அன்றிலிருந்து தமிழ்மக்களை அடிமையாக்கிய பார்ப்பன – சத்திரிய கூட்டுச் சதிக்கு ஆதாரமான சில குறள்களை மட்டும் பார்ப்போம்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

பரிமேலழகர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது – அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது;

மன்னவன் கோல் – அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல்.

(வேதமானது) அரசர், வணிகர் என்னும் ஏனையோர்க்கும் உரித்தாயினும், தலைமை பற்றி, அந்தணர் நூல் என்றார். ‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்’ (மணிமேகலை 22: 208,9) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு அறம் என்பது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் (சநாதன தர்மம் என்று படிக்க) செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு ஆதி என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிது இல்லை என்பார் நின்றது என்றும் கூறினார்.

காளிங்கர் உரை:
மற்றும் அறநூல் என்று இங்ஙனம் ஒன்று சொல்லாது அந்தணர் நூல் என்றது, அரசர் நெறியாகிய செங்கோலும் நால்வருணத்தார் நடையுள் ஒரு நடை ஆகலானும், அவை யாவையும் பிறவும் துறவுமாகிய அனைத்தினையும் பழுது அற உரைப்பது பார்ப்பார் ஓதியும் ஓதுவித்தும் இங்ஙனம் விளங்க நடைபெற்று வருகின்ற வேதம் ஆகலான்.

கவிராஜபண்டிதர் உரை:
அரசன் நீதியாய் நடத்தினால், வேதமும், சாஸ்திரமும், தருமமும் வர்த்திக்கும்.

அதாவது பார்ப்பனரின் வேதநூலே அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரே நீதிநூல்; அதைக் காப்பாற்ற வேண்டியது அரசனின் கடமை என்கிறார் வள்ளுவர். என்னே ஒரு கூட்டுச்சதி இது!

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

பரிமேலழகர் உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்;

ஆபயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்;

அறுதொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.

ஆபயன் – ஆவால் கொள்ளும் பயன்,

அறுதொழில்களாவன (வேதம்) ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.

பசுக்கள் பால் குன்றியவழி அவி இன்மையானும், அது கொடுத்தற்கு உரியார் மந்திரம், கற்பம் என்பன ஓதாமையினும், வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று.

அடப்பாவிகளா! இங்கே அரசன் சரியாக ஆட்சி செய்யாவிட்டால் பொதுமக்களுக்கு நேரும் சிரமம் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை வள்ளுவருக்கு. பார்ப்பனன் தொழில் நடக்காது என்பதுதான் பிரதானமாய் இருக்கிறது!

உலக நாடுகளில் எல்லாம் இன்று மரணதண்டனை தவறு என்றும் அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் விவாதம் எழுந்துள்ளது. ஆனால் கேள்வி ஏதும் கேட்காமல் ‘இவன் கொடியவன், இவன் தலையை வெட்டலாம்’ என்ற உரிமையை மன்னனுக்குக் கொடுத்தது மனு தர்மம். அதனால்தான் மதுரை பற்றி எரிந்தது. அது சத்திரியன் மனு, சத்தியர்களுக்காகவே உருவாக்கிய சிறப்புச்சலுகை.

வள்ளுவர்தான் மனுவாதி ஆயிற்றே! இங்கே அவர் பரிந்துரையும் மனுதர்மப்படியே இருக்கிறது.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

பரிமேலழகர்:
வேந்து கொடியாரை கொலையின் ஒறுத்தல் – அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்,

பைங்கூழ் களை கட்டதனொடு நேர் – உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனொடு ஒக்கும்.

கொடியவர் என்றது தீக்கொளுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவாரென்று இவர் முதலாயினாரை. இவரை வடமொழியில் ஆததாயிகள் என்ப. இப் பெற்றியரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புல் களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதி தருமம் என்பதாயிற்று.

ஆக தன் விருப்பப்படி ஒருவனைக் கொல்வது இங்கே ஒருவன் சாதி தருமம் என்றாகிப் போனது. என்ன கொடுமை இது!

வள்ளுவராவது இதை  ‘மனுதர்மப்படி’ என்று சொல்லாமல் விட்டார். ஆனால், இந்த மனுதர்மத்தை நியாயப்படுத்தி ‘மாபெரும் தமிழ்த்துரோகி’ என்று பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட கம்பன் சொல்வதைப் பாருங்கள்.

நன்றி கொன்றரு நட்பினை நார் அறுத்
தொன்று மெய்ம்மை சிதைத்துரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்
சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய்..
நஞ்சம் அன்னவரை நலிந்தாலது
வஞ்சம் அன்று மனுவழக்கு ஆதலால்..
(கம்பராமாயணம் – கிட்கிந்தை 3,5)

ஆகாதவனைப் போட்டுத்தள்ளுவது மனுதர்மம். இங்கே ஆரிய சத்திரியன் இராமன் இந்த நாட்டின் ஆதிகுடிகளைப் பிரித்தாள்வதற்கு, சகோதரர்களுக்கிடையேயான சண்டையைப் பெரிதுபடுத்தி அண்ணனைக் கொன்று, தம்பியின் ராஜியத்தைத் தன் ஆளுகைக்குக் கொண்டுவந்த குயுக்திக்கும் இதே மனுதர்மம் பயன்பட்டிருக்கிறது. அது எந்த வெட்கமும் இல்லாமல் கம்பன் வாயாலேயே இங்கே உறுதிப்பட்டுள்ளது.

திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் ஆய்ந்தறிந்த பெரியார் அன்றே தெள்ளெனச் சொன்னார்:

கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். இவன் முழுப் பொய்யன். முழுப் பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூடச் சொல்லப் பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். தொல்காப்பியன், வள்ளுவன், கம்பன் இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர் ஆவார்கள்.

வைசியரும், வேளாளரும், குடிப்பிறப்பால் அமையும் குணங்களும்:

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின் (குறள் – 120)

என்ற குறளிலே வைசியரைக் குலதர்மப்படி ஒழுகச் சொல்லும் வள்ளுவர், உழவு என்ற அதிகாரத்தில் (104) வைசியர் மற்றும் நான்காம் வர்ணத்தாரின் குலத்தொழிலை உயர்த்திப்பாடுகிறார்.

பரிமேலழகர்:
அஃதாவது சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கும் உரித்தாய உழுதல் தொழில். செய்விக்குங்கால் ஏனையோர்க்கு உரித்து. இது மேல்குடி உயர்வதற்கு ஏது என்ற ஆள்வினை வகையாகலின் குடிசெயல்வகையின் பின்வைக்கப்பட்டது.

உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றெல்லாம் இவரைப் புகழ்ந்து இவர்தம் குலதர்மப்படி ஒழுகச் சொல்வதை இந்த அதிகாரத்தில் காணலாம்.

இப்படி நால்வகை வர்ணத்தில் பிறக்கும் கொடுப்பினை பெற்றவரே குடிப்பிறந்தார். அப்படிப் பிறப்பதால் இயல்பாகவே அமையும் குணங்களை ‘குடிமை’ என்ற அதிகாரத்தில் (96) பட்டியல் போட்டே காட்டுகிறார் இந்த மனுவாதி.

பரிமேலழகர்:
அஃதாவது உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை.

உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகலின், அச்சிறப்புப்பற்றி இது முன்வைக்கப்பட்டது.

மாதிரிக்கு இரண்டு குறள்கள்:

இற்பிறந்தார் கண்அல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. (951)

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். (952)

அதாவது நால்வருணத்திலே நல்ல குடியிலே பிறந்தவனுக்கு நடுவுநிலைமை, பழிபாவங்களுக்கு நாணுதல், நல்லொழுக்கம், வாய்மை இதெல்லாம் இயல்பாகவே அமையும் என்று சொல்கிறார்.

சிலர், குடிப்பிறப்பு என்றால் நல்ல குடும்பத்திலே நல்ல தாய் தகப்பனுக்குப் பிறப்பதைச் சொல்வதாகப் புரிந்துகொண்டு உரை எழுதி இருக்கிறார்கள். அது தவறான புரிதல். குடிமை என்ற அதிகாரத்திலேயே, குடி என்பதற்கு மாற்றாகக் குலம் என்றும் (குலம் பற்றி வாழ்தும் – 956, குலத்தின்கண் ஐயப்படும் – 958, குலத்தில் பிறந்தார் – 959) வள்ளுவர் சொல்வதிலிருந்தே அவர் சொல்வது வருணாசிரம அடிப்படையிலான பிறப்பைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

பிறப்பின் அடிப்படையில் அமைவதாக, அமைய வேண்டியதாக வள்ளுவர் தரும் சிறப்புக் குணங்களின் பட்டியல்:

குறள் எண்வாரியாக
951 – குடிப்பிறந்தாரே பண்பாளர்; தீயன செய்ய நாணமும், நடுவு நிலைமையும் (செப்பம்) உடையவர்
952 – ஒழுக்கமும் வாய்மையும் உடையவர்
953 – முகமலர்ச்சியும், ஈகையும் இன்சொல்லும் கொண்டவர்
954 – எத்தனை கோடி கொடுத்தாலும் மானத்தை விடாதவர்
956 – சிறுமையான செயல் செய்ய மாட்டார்
959 – வாய்ச்சொல்லே அவர் சாதி காட்டும்
963 – பெருக்கத்திலும் பணிவுடையவர்; சுருக்கத்திலும் பண்பு மாறாதவர்
992 – அன்பும் பண்பும் நிறைந்தவர்
794 – நட்பை மதித்து நடப்பவர் ஆகவே சாதிபார்த்து நட்பு கொள்ள வேண்டும்.

இந்த வள்ளுவரைத்தான் தமிழ்மக்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, இத்தகைய பிதற்றல்களை உலகப்பொதுமறை என்று கொண்டாடி வருகின்றனர்.

அதுசரி, இப்படிப் பிறப்பு அமையக் கொடுத்து வைக்காத துரதிருஷ்டசாலிகளின் பாடு என்ன? அதை மட்டும் விட்டுவிடுவாரா இந்த மனுவாதி?

வருணாசிரமதருமத்தின் வழக்கப்படி நால்வருணத்தாரும் அவரவர் குலத்தொழிலை விடாமல் தொடர்ந்து அதன்படி ஒழுக வேண்டும். அதை விட்டுவிட்டால் சாதிவிலக்கு ஆகிவிடும். ஒருவன் சாதிவிலக்கம் ஆகிவிட்டால் குடியில்லாதவன் ஆகிவிடுவான். அப்புறம் அவனும் அவன் சந்ததியும் இழிந்த பிறவிகளாகத் தொடர வேண்டியதுதான். இப்படித்தான் பஞ்சமர் என்ற அவர்ணாக்கள் உருவானதும், அவர்கள் மிதியடியாய்ப் பயன்படுத்தப்பட்டதும்.

இதை மிகத்தெளிவாக வள்ளுவம் எடுத்து வைக்கிறது:

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும் – 133

பரிமேலழகர்:

ஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலன் உடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் – அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.

இப்படி வருணத்தில் தாழ்ந்தானோ அல்லது விலக்கப்பட்டவனோ (நான்காம் வகுப்பில் இருப்பவன் அதற்குமேல் தாழ்ந்தால் அவர்ணா) அவன் கீழான இழிபிறவியாகிவிடுவான்.

இவர்களுக்குக் ‘கீழ்கள்’ என்று அடைமொழி கொடுத்து ஆண்டைகள் கொடுமைப்படுத்த வள்ளுவர் கொடுக்கும் அதிகாரத்தைப் பாருங்கள்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது 1075

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் 1078

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ் 1079

கீழானவனை எப்போதும் அச்சுறுத்தி வை! கரும்புபோல் கசக்கிப்பிழி! நீ நன்றாக உடுத்தி, உண்டு, அதை அவன் கண்டு வயிற்றெரிச்சல் படுவான், அது விளங்காமல் போகும். ஆகவே அவனை விலக்கி வை!

இத்தனையும் சொல்பவர் வள்ளுவர்தான்.

இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுவோர் மனு ஸ்மிருதியை நேராகவே படித்து அதில் உள்ள எத்தனை பிற்போக்கான கருத்துக்கள் வள்ளுவரால் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன என்று தாமாகவே அறிந்து கொள்ளலாம்.

பல குறள்கள் மனுஸ்மிருதியிலிருந்து சொல்லுக்குச்சொல் மாறாமல் அப்படியே வள்ளுவரால் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: திருக்குறள்-மனு ஸ்மிருதி, மனுநீதி,மனுக்குறள்?-முனைவர் செ.ம. மாரிமுத்து
Permalink  
 


பல குறள்கள் மனுஸ்மிருதியிலிருந்து சொல்லுக்குச்சொல் மாறாமல் அப்படியே வள்ளுவரால் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது பற்றி நேற்று கண்டோம். சில உதாரணங்களையும் காணலாம்.

Manusmriti II:218
http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch2/ch2_211_220.html
As the man who digs with a spade (into the ground) obtains water, even so an obedient (pupil) obtains the knowledge which lies (hidden) in his teacher.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு – 396

Manusmriti III:78
http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch3/ch3_71_80.html
Because men of the three (other) orders are daily supported by the householder with (gifts of) sacred knowledge and food, therefore (the order of) householders is the most excellent order.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை – 41

Manusmriti IX:12
http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch9/ch9_11_20.html
Women, confined in the house under trustworthy and obedient servants, are not (well) guarded; but those who of their own accord keep guard over themselves, are well guarded.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை – 57

II வள்ளுவரின் வடமொழிப்பற்று

தமிழ் என்ற சொல்லையே ஓரிடத்திலும் பயன்படுத்தாமல் கவனமுடன் தவிர்த்திருக்கும் வள்ளுவர் அதே நேரத்தில் குறள் நெடுகிலும் ஏராளமான வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

எகா:
அமரர், அமிழ்து, அவி, ஆசாரம், ஆசை, ஆதி, இந்திரன், இலக்கம், கணம், கருமம், காமம், காமன், காரணம், காலம், சலம், சூது, சூதர், தண்டம், தவம், தானம், தூது, தேவர், நாகரிகம், நாமம், பகவன், பண்டம், பாக்கியம், பாகம், பாவம், பாவி, பூசனை, பூதம், மங்கலம், மந்திரி, மாயம், மனம், மானம், வரன், வாணிகம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதிலே பலவற்றிற்கும் இணையான தமிழ்ச்சொற்கள் இருந்தும் வலிந்து வடமொழியைப் பயன்படுத்தியிருப்பது வள்ளுவரின் வடமொழிப்பற்றைத் தெள்ளென விளக்கும். இதற்குப்போய் தமிழ்மறைநூல் என்று பெயரிட்டு அழைக்கும் கொடுமையை என்னென்பது!

III தவிர்க்கப்பட்ட தமிழர் வழிபாடு

ஆரிய மொழிப்பற்று ஒருபுறம் என்றால் காடன், மாடன் போன்ற நாட்டார் தெய்வங்களையும், தத்தம் குலதெய்வங்களையும், சித்தர், முனிகளையும் வணங்கும் தமிழ்மரபு வழிபாடு வள்ளுவரால் முற்றாய்ப் புறக்கணிக்கப்பட்டு, ஆரிய தெய்வங்களே பெருந்தெய்வங்களாக திறமையுடன் காட்டப்பட்டுள்ளன.

வள்ளுவர் குறளினூடே அடுக்கிப்போகும் ஆரியவழித் தெய்வங்களின் தொகுப்பு:

விஷ்ணுவும் ஸ்ரீதேவியும்: 84, 167, 179, 519, 617, 920, 1103
பூதேவி: 1040
ஸ்ரீதேவிக்கு மூத்தவள்: 167, 617, 936
இந்திரன்: 25, 899
பிரும்மா: 1062
மக்கள் உள்ளத்தே காமத்தை ஊட்டும் மன்மதன்: 1197
கூற்றுவன்: 269, 326, 765, 894, 1050, 1083, 1085

மேலும் லஜ்ஜா, தரா என்று வடமொழியார் பாணியில் நாணெணும் நல்லாள் (924) என்பதும் நிலமெனும் நல்லாள் (1040) என்பதும் குறிப்பிடத்தக்கன.

இப்படித் தான்கொண்ட ஆரியப்பற்றை எந்தவித ஐயத்துக்கும் இடமின்றித் தெளிவாகக் காட்டும் வள்ளுவரை, பெரியார் ஒருவரே மிகச்சரியாகப் புரிந்து கொண்டிருந்தார். பெரியார் அன்றே சொன்னார்:

திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றான்.

குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மதச் சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்.

IV பார்ப்பனரின் நீதிநூலே திருக்குறள்

பார்ப்பனரின் நீதிநூலே திருக்குறள் என்பதற்குச் சான்றாக திருவள்ளுவமாலையில் பல பாடல்கள் உள்ளன.

வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந் திதனின்இது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்துத் தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து
– வண்ணக்கஞ் சாத்தனார்

ஆரியவேதம் சொல்வதற்கும் இதற்கும் வேறுபாடே இல்லை, ஒன்றுக்கு ஒன்று குறைவே இல்லை என்று ஆராய்ந்து பார்த்து மகிழ்கிறார் இவர்.

பரிமேலழகரும் சரி, இவர் போன்ற சங்கப்புலவர்களும் சரி, தத்தம் பின்னணியால் மூளைச்சலவை செய்யப்பட்டுத் திரித்துக் கூறுவதாகச் சொல்வார் சிலர். இந்த ஆய்வுக்கட்டுரை அவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

திருக்குறள் அந்தணரின் சொந்த நூலே அன்றி அது உலகப்பொதுமறை அன்று என்பதற்கு மிக முக்கியமான சான்று கிபி.இரண்டாம் நூற்றாண்டு காலத்திய கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனால் இயற்றப்பட்ட மணிமேகலையில் இருக்கிறது.

இதிலே சிறைசெய் காதையில் கிளைக்கதையாக ஒரு காட்சி விரிகிறது.

‘அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்’
– என்ற குறிப்பால் அறியப்படும் பரசுராமன் காலத்திய புராதனமான புகாரை ஆண்ட ககந்தன் என்ற சோழமன்னன், மருதி என்ற பார்ப்பனப் பெண்ணைக் கண்டு காமுறுகிறான். ’கற்புநெறி தவறாத நான் இந்த மன்னன் உள்ளம் புகுந்தமை எங்ஙனம்’ என்று பார்ப்பனத்தியான மருதி கலங்கி நிற்கிறாள்.

பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
“நீ வா” என்ன நேர் இழை கலங்கி
“மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
முத் தீப் பேணும் முறை எனக்கு இல்” என
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்

‘மழைவளமே எம்போன்ற பெண்களால் அன்றோ! இனி நான் எப்படி அகம் திரும்பி பூணூல் மார்பனான என் கணவனுக்காக முத்தீ பேணுவேன்!’ என்று வீடு திரும்பாமல் புகாரின் காவல்தெய்வமான சதுக்கபூதத்திடம் சென்று அழுகிறாள் மருதி.

அவளைத் தேற்றுவது போல் அந்த பூதம் சொல்கிறது:

மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்
“கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன்
வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்
பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீ” எனச் சேயிழை அரற்றலும்

மா பெரும் பூதம் தோன்றி “மடக்கொடி!
நீ கேள்” என்றே நேர் இழைக்கு உரைக்கும்
“தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை” என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!

இங்கே இந்தச் சதுக்கபூதம் சொல்லும் அறிவுரையைக் கவனித்துப் பார்க்க வேண்டும். பார்ப்பனியான மருதிக்கு அது இருக்குமுதலான வேதத்தை எடுத்துச் சொல்லவில்லை. உபநிடத நூல்களையோ, மனுமுதலான சாத்திரநூல்களையோ எடுத்துச் சொல்லவில்லை. ஆனால் பெண்ணடிமைத்தனத்துக்கு ஊற்றுக்கண் போன்ற ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி அறிவுரை சொல்கிறது.

“தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை” என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!
– என்று சொல்லி “இனி நீ உன் கணவனையே கும்பிட்டு வா! இதர தேவதைகளுக்கான விழாக்களிலே மனதைச் செலுத்தாதே!” என்றும் சொல்லி அந்தப்பூதம் அவளை வழியனுப்புவதாய் போகும் இக்கதை.

மணிமேகலை பௌத்தகாவியம். பின்னாளில் நாகார்ச்சுனர் போன்ற சில பார்ப்பனர் புகுந்து குழப்பிய மகாயானம் போலன்றி, இது உண்மையான மூலபௌத்தமான ஹீனயானம் என்னும் தேராவாத பௌத்த நூல். பெண்விடுதலைக்கு வித்திட்டது பௌத்தம். ஆகவே சீத்தலைச்சாத்தன் எந்தச்சார்புமின்றி, ‘திருக்குறள் பார்ப்பனர் நூலே’ என்று வரும் தலைமுறைக்குக் காட்டவே இதை அமைத்திருக்கிறார்.

இதிலிருந்து தெரியவரும் மற்றொரு உண்மை என்னவென்றால் இரண்டாம் நூற்றாண்டுக்கு மிகவும் தொன்மையான புராண காலத்திலேயே திருக்குறள், மருதி போன்ற சாதாரணமான பார்ப்பன மக்களிடம் நீதிநூலாய் இருந்திருக்கிறது. எனவே, பின்னாளில் இயற்றப்பட்ட மனுநூல் போன்றவை திருக்குறளை அடியொற்றியே இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதவும் வாய்ப்பிருக்கிறது.

இதைப்படிக்கும் தமிழ்மக்கள் இனியாவது குறள் மயக்கத்திலிருந்து மீளவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பிலிப் 

#28

November 7th, 2010 at 11:26 pm

தமிழறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவரும் திருக்குறள் இந்துமதம் சேர்ந்ததில்லை அது சமணநூல் என்று அதற்கு சமணமுலாம் பூசி பெரும்பான்மை தமிழர்களை மூளைச்சலவை செய்திருக்கும் இந்த காலகட்டத்திலே முனைவர் மாரிமுத்து அவர்கள் மிகச்சிறப்பான இந்த ஆய்வின் மூலம் தேங்காய் உடைத்ததுபோல் பல உண்மைகளைப் போட்டு பொதுவில் உடைத்திருக்கிறார். முனைவருக்கும், இதை துணிச்சலுடன் வெளியிட்ட தமிழ்பேப்பருக்கும் வாழ்த்துக்கள்.

கந்தர்வன் 

#3


 

வள்ளுவர் என்ன செய்வார் பாவம். தொல்காப்பியமும் சந்கநூலும் கூடத் தான் மாயோனையும், இந்திரனையும், வருணனையும் பாடுகின்றன. நீதி நூலில் நாட்டார் சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி எதற்குப் பாட வேண்டும்?

வடமொழி சொல்லாட்சி பற்றிக் கேட்கவேண்டுமா? ‘கருணாநிதி’ என்ற பெயரை ‘இறக்கச் செல்வம்’ என்று மாற்றிக் கொள்ளட்டும் தற்காலத்துப் பகுத்தறிவுப் பகலவர்.

நாகார்ச்சுனர் பிறவிப் பார்ப்பனர் என்னும் ஒரே காரணத்துக்காக avar மீதும் சீறி விழுகிறார் கட்டுரையாளர். இதிலிருந்து பகுத்தறிவு வாதிகள் பெரும் சாதீய வெறியர்கள் என்று தெரிகிறது. ஆரிய-திராவிட பொய் இனவாதத்திற்கு மயங்கியுள்ளார் என்று தெரிகிறது. ஹிட்லரும் இப்படித் தான் இரண்டாம் உலகப்போருக்கு முன்னாள் யூதர்களைப் பற்றிப் பொய்ப்பிரச்சாரம் செய்து மக்கலாதரவைத் திரட்டி அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்றான்.

இக்கட்டுரையை வெளியிட்டு தமிழர்களின் தொன்மையான ஹிந்து சனாதன தருமம் என்ற உண்மையைக் காட்டிவிட்டார் கட்டுரையாளர். இன்னும் ஒன்று செய்யலாம். இவர்கள் தலைவர் போல, “தமிழ் மொழி காட்டுமிராண்டி பாஷை; தமிழ்க் கலாச்சாரம் காட்டுமிராண்டிக் கலாச்சாரம்” என்று தெளிவாக எல்லாத் தொலைகாட்சி அலைவரிசைகளிலும் ஒரு அறிவிப்பு சொல்லிவிட்டால், தமிழ் மக்கள் பகுத்தறிவு வாதிகளின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கமாட்டார்கள். அப்போது தான் நம் தமிழ்நாட்டிற்கு விமோசனம் பிறக்கும்.

Laxman 

#7


தன்னை அறியாமல் இந்தக் கட்டுரையாளர் தமிழ் ஹிந்துக்களுக்கு ஒரு பெரும் சேவை செய்திருக்கிறார். இத்தனை நாளாய், திருக்குறளை சமணநூல் என்று ஒரு சாராரும், பௌத்தம் என்று சிலரும் ஏன் கிறுத்துவம் என்றும்கூட சிலர் திரித்துவந்தனர். இந்தக்கட்டுரையில் தந்திருக்கும் சான்றுகளின் அடிப்படையில் (அதுவும் மணிமேகலைக் குறிப்பு மிக அருமை) – கட்டுரையாளரின் பிதற்றல்களை, சொந்தக்கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் – திருக்குறள் 200 % தொன்மையான சநாதன தர்மநூலே என்பதற்கு ஆணித்தரமான நிரூபணங்கள் கிடைக்கின்றன. தமிழ்ஹிந்துக்களின் சார்பிலே மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுப்ரமண்யன் சுவாமிநாதன் 

#13


வள்ளுவர் ஒரு வைதீகர் என்று காஞ்சி மகாப் பெரியவர் ஸ்ரீ ஸ்ரீ சங்காராச்சாரியார் கூறியிருக்கிறார்.

a) ”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை”

பிதிர்க்கடன், பரமேசுவர பூஜை, வேத யக்ஞம், எல்லா ஜீவ ராசிகளுக்கும் உணவு படைப்பது ஆகியவற்றை வைதிக மதம் விதித்திருக்கிறது. வள்ளுவர் இதனையே பின்பற்றுகிறார். அவர் ஒரு வைதீகர்.

b) ”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று”

வள்ளுவர் வைதீக அனுஷ்டானங்களில் நம்பிக்கை கொண்டவர். காவிரியின் பெருமையைச் சொல்ல வந்த ஒருவர், ‘ஆயிரம் கங்கையை விடக் காவிரி சிறந்தது’ என்று கூறினால் கங்கையும் உயர்ந்தது என்று தானே பொருள்.

அவ்வாறே, ‘ஆயிரம் யாகத்தைவிட அஹிம்சை உயர்ந்தது’ என்றால் ‘யாகமும் உயர்ந்தது’ என்றே பொருள். இக்குறள் இல்லறவியலில் சொல்லப்படவில்லை. துறவறவியலில் சொல்லப்பட்டிருக்கின்றது. துறவிக்கு யாகத்தில் அதிகாரம் இல்லை.

“திருவள்ளுவர் வைதீகத்தை ஆட்சேபிக்கும் நாஸ்திகர் அல்லர்”

– காஞ்சி மகாப்பெரியவர் ஸ்ரீ ஸ்ரீ சங்கராச்சாரியார்:

ஆதாரம்: வள்ளுவமும் சமயமும் (ஆசிரியர்: கலை அரசு)

இதற்கு என்ன பதில் நண்பர்களே!

தமிழ்வாணன் 

#17


இந்த கட்டுரைத்தொடரில் உள்ள அவதூறு வார்த்தைகளையும், காழ்ப்புணர்ச்சிகளையும் நீக்கிவிட்டு பார்த்தால், திருக்குறள் ஒரு இந்து நூலே என்றுதான் தெளிவாகிறது.
இந்த கட்டுரையை வரைந்தவர் ஆழ்ந்த படிப்பு உள்ளவராக இருந்தாலும், அவரது காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் அடையும் முடிவுகள் அபத்தமாகவே இருக்கின்றன.
//வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந் திதனின்இது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்துத் தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து
– வண்ணக்கஞ் சாத்தனார்
//
வள்ளுவர் என்பது தற்போதைய தாழ்த்தப்பட்ட பிரிவினரில் ஒன்று. ஆனால் வள்ளுவர் காலத்தில் வேதமும் வடமொழியும் படிக்கக்கூடியவர்களாகவும் படித்தவர்களாகவுமே இருந்திருக்கின்றனர் என்பதும் தெளிபு. வள்ளுவர் வேதம் படித்ததற்காக அவரது காதில் ஏதுவும் ஊற்றப்படவில்லை. ஆனால், மனுநீதி என்று இப்போது புழங்கும் நூலில் அப்படி ஒரு சூத்திரர் படித்தால்காதில் ஈயம் ஊற்றப்படவேண்டும் என்று இருக்கிறது. ஆகையால் மனுநீதி என்று இப்போது புழங்கும் நூல் இட்டுக்கட்டப்பட்டதா அல்லது அதில் இடைச்செருகல்கள் உண்டா என்பது ஆராய வேண்டியது.
இதனை ஆராய்ந்த போது இந்த இணைப்புக்கு வந்தேன்.
http://haindavakeralam.com/HKPage.aspx?PageID=11325&SKIN=B
சமஸ்கிருதம் அறியாதவர்களும், ஆங்கில ஜட்ஜுகளும் கடைந்தெடுத்த ஒரு கலவைதான் மனுஸ்மிருதி மொழிபெயர்ப்பு. அதனை நம்பி இங்கே வாந்தி எடுக்கும் பலரும் தங்களை அறியாமலேயே காலனிய அடிமைத்தனத்துக்கு துணைபோகிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வேங்கடசுப்ரமணியன் 

#31


இந்த மாதிரி எழுத்துக்கள் எல்லாம் வர காரணம், தமிழ் வெள்ளாளர்கள் தமக்கு என்று ஒரு தனி வரலாறு இருப்பதாக எண்ணிக் கொண்டு அதை இன்னும் தேடிக்கொண்டும் இருப்பது தான்.

திரும்பிய பக்கம் எல்லாம் சம்ஸ்கிருத வார்த்தைகள், வேதத்தைப் பற்றிய வார்த்தைகள் , பக்தி இலக்கியத்தின் பூரண வைதீகச் சாய்வு , தொல்காபியர் பிராம்மணர் என்ற உண்மை இது எல்லாம் வெள்ளாளன் மனத்தில் தீயை அல்லவா எழுப்பி வருகின்றது ?

சங்க காலப் பெண் கற்பு பேணக் கூடாதா ? இதற்காக குறள் மேற்கோள் காட்டக் கூடாதா ? ஆசிரியர் என்ன ஈ வே ரா மாதிரி கற்பு மறுக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவரா ? அப்படியே ஆயினும் அதைத் தன் குடும்ப அளவில் பேணி வரட்டும்.

இவருக்கு தன் குல தெய்வம் பற்றி சங்க இலக்கியத்தில் பாடல் வேண்டுமாம். குல தெய்வம் என்பது பறையன் முதல் பாப்பான் வரை உள்ளது. பொதுவாகவே அம்மன் தான். அதுவும் அவர்களின் மூதாதையரான பெண்டிரே. அவர்கள் மேல் ஏதாவது துதி வேண்டுமென்றால் ஆசிரியர் தமக்கு வேண்டியவற்றை எழுதிக் கொள்ளுதல் நலம். முக்தி விழைபவன் சிறு தெய்வங்களை தொழான். பின் ஏன் அனைத்து சாதியினரும் மாலோனும், சங்கரனும், அன்னையும் , ஐங்கரனும் குடிகொண்ட கோவிலுக்கு செல்கின்றனர் ? குல தெய்வத்தோடு நின்று விடுவது தானே ?

இதற்கெல்லாம் மனு இவருக்குக் கை கொடுக்க மாட்டார். மனு பிரம்மச்சரியம் பூணு என்றால் ஆசிரியர் ஒதுக்குவாரா ? அல்லது தமிழனின் வழக்கமான ‘பிரபல ‘ பத்திரிக்கைகளின் நடுப்பக்க அலங்கோலத்தில் தமிழனின் ஆண்மை ‘பிழியப்’படுவதை ரசிப்பாரா ? மனுவிடம் இந்தக் காலத்துக்கு ஒவ்வாததை விட்டு விட்டு வேண்டியதை எடுத்துக் கொள்ள வேண்டியது தானே ? அரசனுக்கு என்று கூறிய ஒன்றை இந்தக் காலத்தில் எடுத்துக் கொள்ள முடியுமா ?

இந்த ஆரியன் விஷயம் வெள்ளாளர்களுக்கு இடித்து சொன்னால் தான் புரியும். ஒவ்வொரு வெள்ளாள ஜாதியிலும் ஆரிய (உயர் ) சாதி உண்டு. வன்னியரில் ஆரியப் படையாச்சி என்ற உயர் குலம் உள்ளது. கவுண்டரில் எசமான் ஆரியப் பரம்பரை. மற்றவர் குடியானவர். தேவர் சாதியில் பண்பட்டவர் எல்லாம் “சைவ வெள்ளாளர் ” ஆக இருந்தனர். இன்று அவர்களை பிராக்கட் போட்டுத் தாக்கி அழித்தே விட்டனர் இந்த வெள்ளாளர்கள். கள்ளர் , அகமுடையார் மெல்ல மெல்ல பிள்ளை ஆனார் என்று பழமொழியே உண்டு.

இந்த வெள்ளாள கலகம் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்க வேண்டாம். பாரதம் முழுக்க உமட்ட வைக்கும் அரசியல் நடத்தி வரும் சிறு அரசியல் வாதிகள் அனைவரும் வெள்ளாளர்களே . தேவே கௌடா , சந்திரபாபு நாய்டு, மம்தா, முலாயம், லாலு, முக குடும்பம், சசிகலா குடும்பம், ராமதாஸ் குடும்பம், தேவி லாலின் மகன் சௌதாலா , பவார், மற்றும் இவர்களது கட்சி அனைத்துமே வெள்ளாளர் மயம தான். தலித்துகள் இவர்களுக்கு ஊறுகாய் மாதிரி.

உண்மையில் மனுவின் சந்தேகமான வரிகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பட்சத்தில், இவர்கள் பள்ளர் மற்றும் பறையர் இனத்தில் கலப்பு மணம செய்ய வேண்டும். மாரி ‘வெள்ளாள’ முத்து வின் வார்த்தைக்கு அப்போது தான் நல்ல பயன் இருக்கும்.


jomo
 

#49


ஆதாரங்கள் ஏதுமில்லாமல் திருவள்ளுவரை சமணர் என்றும், அவர்பெயர் குந்தகுந்ததேவர், படுக்கபடுக்க மனிதர், ஓடஓட அசுரர் என்று பலரும் உளறிக்கொண்டிருக்கிறார்கள். இதில் ஜெமோவும் சேர்ந்தாகிவிட்டதா! சுத்தம். முதலில் இந்தக் கட்டுரையை அவர் படித்தாரா?
ஜோமோ (ஜோலார்பேட்டை மோகன்)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Image may contain: text



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழில் யமன்!!

??????????????????????????

எழுதியவர் சந்தானம்/லண்டன் சுவாமிநாதன்

English version of this article is posted already.

இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள், தினமும் யமனை வழிபடுகின்றனர். மரண தேவனை பயமில்லாமல் கும்பிடும் ஒரே இனம் இந்துக்களாகத் தான் இருப்பார்கள். பிராமணர்கள் தினமும் காலை, மதியம், மாலையில் சூரியனை நோக்கி சந்தியாவந்தனம் செய்வர். இதில் தெற்கு திசையை நோக்கி யமனைப் பார்த்து சொல்லும் மந்திரமும் வருகிறது. இதில் யமனைக் கருப்பன் என்று கூறுகிறது. காளி, கலி, சனிக் கிரஹம், கிருஷ்ணன், விஷ்ணு, ராமன் போல யமனும் ஒரு கருப்பன். வெள்ளைத் தோல் தெய்வங்கள் ஆரிய தெய்வங்கள் என்றும் கருப்புத்தோல் தெய்வங்கள் திராவிட தெய்வங்கள் என்றும் எழுதி இந்துக்களை பிளவுபடுத்தி இந்தியாவை சீர்குலைக்க எழுதிய வெள்ளைத்தோல் அறிஞர்களுக்கு யமன் சரியான அடி கொடுக்கிறான்.

யமனைப் பற்றி சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் பல குறிப்புகள் வருகின்றன. ஏற்கனவே இந்திரனையும் வருணனையும் தமிழர் தெய்வங்கள் என்று தொல்காப்பியம் கூறியதைக் கொடுத்தேன். இப்போது சங்கத் தமிழ் இலக்கியம் யமதர்மன் பற்றிக் கூறுவதையும் காண்போம். அதில் ஞமன் என்றும் கூறுவர்.

சங்கத் தமிழில் புறநானூறு மிகவும் பழமையான பகுதி. அதில் பாடல் 4,13,19,22,56,195, 226,294 ஆகியவற்றிலும் பதிற்றுப்பத்தில் பாடல் 13, 14 கலித்தொகையில் பாடல் 105, 120 ஆகியவற்றிலும் காலன் என்ற பெயரில் புறநானூறு பாடல் 23, 41, 240, பதிற்றுப்பத்தில் பாடல் 39 ,கலித்தொகையில் பாடல் 105, 143 ஆகியவற்றிலும் யமதர்மராஜா பவனி வருகிறார்.

ஞமன் என்ற பெயரும் எருமை வாஹனமும் பரிபாடலில் வருகிறது (3, 5, 8 ஆம் பாடல்கள்) மீளி, மறலி, கணிச்சிப்படையோன், மடங்கல், கூற்றம் என்ற பெயரிலும் யமன் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

ஆரிய திராவிட வாதத்தை நகைப்புள்ளாக்கும் யமனைப் பற்றிய குறிப்புகளை மட்டும் பார்ப்போம்:

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை, இரங்குவீர் மாதோ (புறம் 195)

பொருள்: கடுந்திறலோடு மழுப்படையுடன் கூற்றுவன் பாசத்தால் கட்டி இழுத்துச் செல்லும்போது வருத்தப்படுவீர்கள்.

இந்துமதத்தில் இன்றுள்ள நம்பிக்கையை 2000 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூவுத்தலையாரும் பாடிவிட்டார். எருமை வாஹனம் உடையவன் என்பதும் புராணக் கருத்தாகும்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார் பாடிய பாடலிலும் (புறம் 42) ‘’கணிச்சி என்னும் படைக் கலத்தை உயிரை வருந்தச் சுழற்றி வரும் கூற்றம்’’ என்று யமன் வருணிக்கப்படுகிறான்.

TIBET15_Yama, 16c

ஒரு மன்னரின் சீற்றத்தை விவரிக்கும் போது, தமிழ், வடமொழி இலக்கியங்கள் மன்னனை யமனுக்கு ஒப்பிடுவது வழக்கம்.

திருக்குறளில் கூற்று/யமன் என்ற சொல் 326, 765, 1050, 1083ல் வரும். கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் யமன் பற்றி மட்டுமின்றி ஏராளமான புராணக் கதைகளையும் உவமைகளையும் கையாளுகின்றன.

பிராமணர்கள் தினமும் மும்முறை சொல்லும் யம வந்தனத்தில் யமன் பற்றி 13 பெயர்கள் வரும். இதை தெற்கு திசை நோக்கி நின்றுகொண்டு சொல்லுவர். இறந்த மனிதர்கள் தென் திசைக்குச் செல்லுவர் என்னும் இந்து மதக் கருத்தை ஆணித் தரமாக, அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, ஆரிய திராவிட வாதத்துக்கு ஆப்பு வைக்கிறான் வள்ளுவன்:

‘’தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’’ ( குறள் 43)

இந்துக்கள் தினமும் பஞ்ச யக்ஞம் செய்யவேண்டும் என்பதை வள்ளுவன் இரண்டே வரிகளில் சொல்லும் குறள் இது. ஆறாவது பகுதி தானியத்தை மன்னனுக்கு வரியாகச் செலுத்தவேண்டும்.

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறா அதீரும் (புறம்-9)

என்று சொல்லி நெட்டிமையார் என்னும் புலவரும் ஆரிய திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுப்பார். இறந்தோருக்கு திதி, தர்ப்பணம் செய்வதை அழகாக எடுத்துரைக்கிறார் புறநானூற்றுப் புலவர்.

சித்திரகுப்தன் யார்: யமனுடைய காரியதரிசி ஒரு தனி ஆள் அல்ல. சித்திரகுப்தன் என்றால் ‘’ரகசிய வரைபடம்’’ என்று தமிழில் பொருள். நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் செயல் வடிவம் பெரும் முன் சித்திரமாகப் படியும். அப்பொழுதே யமன் நமக்கு மதிப்பெண் போட்டு விடுகிறான். அதன் படியே, புண்ணிய பாபங்கள் ஏற்படும். அதன் அடிப்படையில் நாம் நரகத்துக்கோ, சுவர்க்கத்துக்கோ செல்கிறோம். இதையே சித்திர குப்தன் (ரகசிய=குப்த, வரைபடம்=சித்திர) என்போம். ஒரு கம்ப்யூட்டரும் மூளையும் கோடிக் கோடி கணக்குகளைப் போடும். சித்திரகுப்தன் கணக்கு சூப்பர், சூப்பர் கம்ப்யூட்டருக்கும் மேல்!

yama

இந்துக்கள் ஏன் மரணதேவதையை வழிபடுகிறார்கள்?

மஹாபாரதத்தில் மிகவும் சுவையான கதை ‘’ஒரு பேயின் கேள்விகள்’’ ( யக்ஷப் ப்ரஸ்னம்) என்ற பகுதியாகும். இதில், ‘’உலகிலேயே அதிசயமான விஷயம் என்ன?’’ என்ற கடைசி கேள்விக்குப் பதில் கொடுத்த தருமன் ‘’ உலகில் தினமும் எவ்வளவோ பேர் இறந்து போகிறார்கள். அதைப் பார்த்த பின்னரும் எல்லோரும் தினமும் வாழப் போகிறோம் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்களே’’ என்பதாகும். ஆக நாம் எல்லோரும் எந்தக் கணத்திலும் இறக்கலாம் என்பதை நினைவு படுத்தவே இப்படி தினசரி ய்ம தர்மன் வழிபாடு போலும்.

திருவள்ளுவரும் மஹாபாரத ஸ்லோகத்தை ‘’நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’’ (குறள் 336) என்ற குறளில் தந்துள்ளார்.

மற்றொரு காரணமும் உண்டு. இது கார்களில், வண்டிகளில் உள்ள ‘’ஷாக் அப்சார்பர்’’ போன்றது. குழந்தைகள் பிறக்கும் போது மகிழும் மனிதன், ஒரு உறவினர் இறக்கும்போது,உலகமே பறிபோய்விட்டது போல மயங்கி பறிதவிக்கிறான். இறப்பும் ஒரு இயற்கை நிகழ்வே என்பதை மறந்து விடுகிறான்.  தினமும் மரண தேவனை நினைத்து வழிபட்டால் அதுவே  ‘’குஷன் மெத்தை’’ போல செயல்படும். மரண பயம் நீங்கும். நமது ஆயுளும் நூறு ஆண்டு நீடிக்கும். ஏனெனில் பிராமணர்களின் மதிய வேளை சந்தியாவந்தனத்தில் ‘’நூறாண்டுக்காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க’’ (பஸ்யேமஸ் சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம்  என்ற மந்திரமும் வருகிறது. இதையே கண்ணதாசன் திரைப்படத்தில் பாடி இருக்கிறார்.

 

யமனைப் பற்றிய சில சுவையான குறிப்புகளையும் காண்போம்:

1.யமன் தென் திசைக்கு அதிபன். யமன் பற்றி உலகிலேயே பழமையான மத நூலான ரிக் வேதத்திலும் வருகிறது. யம என்ற வார்த்தைக்கு இரட்டையர் என்ற பொருளும் உண்டு. அவனுடன் பிறந்தவள் யமி.

2.யமன் தான் உலகில் இறந்த முதல் மனிதன் என இந்துமத நூல்கள் பேசும். யமனுக்கு உதவி செய்ய ஒரு கணக்குப் பிள்ளை உண்டு. அவன் பெயர் சித்திர குப்தன்.

3.யமனிடம் இரண்டு நாய்கள் உண்டு அதன் பெயர் சரமா. அதற்கு ஒவ்வொன்றுக்கும் நான்கு கண்கள்.

4.யமனுடைய மனைவியர்  பெயர்கள் ஹேமமாலா, சுசீலா, விஜயா.

5. யமனுக்குப் பல கோவில்களும் தனி சந்நிதிகளும் இருக்கின்றன.

6.யமன் மிகவும் நியாயமானவன். அவரவர் புண்ணிய பாபத்தால் கிடைப்பதைப் பாரபட்சமின்றி கொடுப்பதால் அவனுக்கு தர்மராஜன் என்று பெயர்.

7.யமனுடைய அப்பா பெயர் விஸ்வவத். இதனால் யமனை வைவஸ்வதன் என்றும் அழைப்பர். அம்மா பெயர் சரண்யு.

8. இவன் கருப்பன் என்பதால் ‘’நீலாய’’ என்றும் அழைப்பர்.

யமனுடைய வாஹனமும் கருப்பு— எருமை!

9.யமன் கையில் உள்ள ஆயுதத்தை கணிச்சி என்று சங்கத் தமிழ் இலக்கியங்கள் பகரும். அவனுடைய கையில் பாசக் கயிறும் இருக்கும்.

10. யமனுடைய ‘பெர்சொனல் அஸ்ஸிஸ்டன்ட்’ சித்திர குப்தனின் கையில் இருக்கும் ரெஜிஸ்டருக்குப் பெயர் ‘’அக்ர சந்தனி’’.

ஆக, ஆரிய யமனும் இல்லை, திராவிட யமனும் இல்லை; ஒரே ஒரு யமன் தான்! அவன் இந்தியாவையும் இந்துமதத்தையும் சீர்குலைக்க எண்ணுவோரின் உயிர்குடிக்கும் இந்திய யமன்!!

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

Pictures are taken from various websites;thanks. contact swami_48@yahoo.com



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0043.aspx
 
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:43

பொழிப்பு: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். 

மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. 
தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். 
(பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)

இரா சாரங்கபாணி உரை: இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு:
பதவுரை: தென்-தென்திசை; புலத்தார்-இடத்திலுள்ளவர்; தெய்வம்-தேவர்; விருந்து-விருந்தினர்; ஒக்கல்-சுற்றத்தார்; தான் -தான்; என்று-என; ஆங்கு-(அசைநிலை).

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னும்; 
பரிதி: பிதிர்லோகத்தார்க்கும், வழிபடு தெய்வத்துக்கும் உறவின் முறையார்க்கும் தந்து தன்மரபையும்; 
காலிங்கர்: தன்குடியில் இறக்கப்பட்ட பிதிர்களுக்கும் கடவுளர்க்கும் விருந்தினர்க்கும் சுற்றத்தார்க்கும் தனக்கும் என்று சொல்லப்பட்ட; 
பரிமேலழகர்: பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; 
பரிமேலழகர் விரிவுரை: பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை.

'பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட' என்று பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தென்புலத்தார் நிலத்தெய்வம் விருந்து சுற்றம் தன்குடும்பம் என்ற', 'இறந்த உயிர்க்குத் துணைநிற்கும் பிதிரர்கள், கடவுள், புதியராய் உதவிநாடி வந்தோர் (அகதிகள்) சுற்றத்தார், தான் என்னும்', 'தென்நாட்டவர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட', 'தன்குல முன்னோர், வழிபடுதெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற' என்றபடி உரை தந்தனர்.

தன் குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட என்பது இத்தொடரின் பொருள்.

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை: 
பதவுரை: ஐம்-ஐந்து; புலத்து-இடத்தின் கண்; ஆறு-நெறி; ஓம்பல்-வழுவாமற் செய்தல்; தலை-சிறப்பு.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஐந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. 
மணக்குடவர் கருத்துரை: தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.
பரிதி: கிருகஸ்தன் ரட்சிப்பது தன்மம் என்றவாறு.
காலிங்கர்: ஐந்து கூற்று நெறியையும் வழுவாமல் பாதுகாத்தலே இல்வாழ்க்கைக்குத் தலைமை என்றவாறு.
பரிமேலழகர்: ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
பரிமேலழகர் கருத்துரை: ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.

'ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஐவகையையும் காக்க', 'ஐந்து வகையாரிடத்துஞ் செய்யப்படும் நெறிச் செயல்களை வழுவாது செய்தல் முதன்மையான அறமாகும்', 'ஐந்து இடத்தும் செய்யும் அறநெறித் தொண்டினைத் தவறாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம்', 'ஐந்திடத்துச் செய்யும் அறத்தையும் பேணுதல் இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாம்' என்றபடி பொருள் உரைத்தனர்.

ஐந்து இடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் தலையாய கடமையாம் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை: 
குடும்பத்தை மேம்படச் செய்யும் ஐந்து கடமை நெறிகள் பற்றிக் கூறும் பாடல்.

தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐம்புலத்து ஆறு போற்றிக் காத்தல் தலையாய கடமையாம் என்பது பாடலின் பொருள்.
ஐம்புலத்து ஆறு என்றால் என்ன?

ஓம்பல் அல்லது ஓம்புதல் என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லாகும். இச்சொல் பேணுதல், போற்றுதல், காப்பாற்றுதல், பாதுகாத்தல், வளர்த்தல், தீங்கு வாராமற் காத்தல்; உபசரித்தல், சீர்தூக்குதல் என்ற பொருள்களைத் தரும். இங்கு போற்றுதல், காத்தல், பேணுதல் என்ற பொருள்களில் ஆளப்பட்டுள்ளது.
தலை என்பதற்கு முதன்மையான அல்லது சிறந்த என்பது பொருள்.

தென்புலத்தார்

தென்புலத்தாரை ஓம்புதல் எப்படி?
நம்மிடையே வாழ்ந்து மறைந்தோரை குறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவர்களும் அன்பிற்குரியவர்களும் இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதல் தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாகும். அவரை நினைத்து அடையாள முறையிற் சில உண்டிகளை, அவர் பெயரால், இரப்போர்க்கு சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல் ஆகும். இது இன்றும் நம் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்தாம். தென்புலத்தார் என்போர் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் அருள்பார்வை நம்மை வாழவைக்கும் என்பதும் நம்பிக்கை. நம்முடைய வாழ்க்கை முறையில் நம்முடைய முன்னோர்களை என்றும் மறப்பதில்லை. தெய்வம் கூட இரண்டாம் இடத்தில்தான். எனவேதான் வள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார்.
தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேர் பொருள் தெற்குத் திசையிலுள்ள இடத்தில் இருப்பவர் என்பது.
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்(புறநானூறு 9)
(பொருள்: தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய இறுதிச் சடங்குகளைப் பண்ணும்) என்ற சங்கச் செய்யுள் அடி ஒன்றில் தென்புலவாழ்நர் என்ற தொடர் இறந்தார் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. இறந்த வீரனுக்காக நடப்பட்ட கல்லுக்கு இறந்த நாளில், பூச்சூட்டிப் புகை காட்டிப் பொங்கலிட்டு எல்லாருடனும் இருந்து உண்டதாக (நடுகல் வணக்கம்) வரலாற்றுச் செய்தி உண்டு..
இறந்துபோன மூதாதையர் தென்திசையில் உறைவதாகத் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையுண்டு. அதனால் காலமாகிவிட்ட முன்னோர்களைத் தென்திசையிலுள்ளவர் எனக் கூறுவது ஒரு மரபு. பொதுவாக சுடுகாடு/இடுகாடு ஒரு ஊரின் தெற்குத் திசையில் அமையும். இதுவும் தென்புலம் என்ற வழக்குக்குக் காரணமாகலாம். காலிங்கர் தென்புலத்தார் என்பதற்கு தன்குடியில் இறக்கப்பட்ட பிதிரர் என்று பொருள் கூறியுள்ளார். 
தம் குடும்பத்தில் தோன்றி மறைந்தவர் நினைவுகளைப் பாதுகாப்பது தென்புலத்தார் ஓம்பல் ஆகும்.

தெய்வம்

தெய்வம் என்ற சொல் பல்வேறு நிலையில் ஐயப்பாட்டிற்கு இடமாகிறது என்பார் தண்டபாணி தேசிகர். தொல்காப்பியம் மற்றும் சங்க கால இலக்கியங்களில் பயின்று வரும் 'தெய்வம்' என்ற சொல், இனக்குழுக்களின் சிறு தெய்வங்களையே குறிக்கிறது என்பர். எல்லாம் கடந்த முழுமுதற் பொருளுக்குக் கடவுள் என்பது பெயர். மற்றக் கடவுளரை தெய்வம், சிறு தெய்வம் அல்லது தேவர் என்று அழைப்பர். பரிதி இக்குறளுக்கான தனது உரையில் தெய்வம் என்ற சொற்கு 'வழிபடு தெய்வம்' எனப் பொருள் கண்டிருக்கிறார். இங்கு சொல்லப்பட்ட தெய்வம் குலதெய்வத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இல்வாழ்வான் தெய்வத்தை ஓம்புதல் என்பது எவ்வாறு? இது தெய்வத்தைப் போற்றுவதைக் குறிக்கும். தெய்வத்தை நினைத்து வணங்குதலே தீமை செய்யாமைக்கும், உண்மை வழி நிற்பதற்கும் துணை செய்யும். கோயில்களில் செய்யப்படும் உணவுக் கொடையும் தெய்வ வழிபாட்டின் பாற்படும். குலதெய்வ வழிபாடு தெய்வத்திற்குச் செய்யும் கடன் ஆகும்.

விருந்து

விருந்து என்பது இங்கு விருந்தினரைக் குறிக்கும். முன்வந்து போனவரும் முன்னே அறியப்படாத அயலார் விருந்தினராவர். நாட்டால், மொழியால், சமயத்தால் அயல் வழியினர்; அறிமுகம் இல்லாதவர் விருந்தினராவர். விருந்தினர் எனப்படுபவர் நாடி வந்துள்ள அன்பர்கள்; அவர்களை மனம் நோகாதவாறு ஓம்புதல் பண்பாகும். இவர்களை வரவேற்று ஊண் உடை முதலியன வழங்கிப் பேணவேண்டும். இதனால் அயல்வழி உறவுகள் வளரும். குமுகாயம் விரிவடையும். புதிதாகத் தம் வீட்டை நாடி வரும் அயலார் யாவரே யாயினும் அவரை உவந்து வரவேற்று ஓம்புதல் அக்காலத்தில் மிகவும் வேண்டப்பட்டதாக இருந்தது. இது இல்லறத்தான் கடமையாயாகவும் இருந்தது எனத் தெரிகிறது. இன்றும் புதியவர்களுக்கு இயலும் வரை உதவவது அறச்செயல்தான்.

ஒக்கல்

ஒக்கல் என்பது சுற்றத்தைக் குறிப்பது. சுற்றம் என்பது இல்வாழ்வானது உடன் சுற்றமாகும். பிறப்பு மற்றும் திருமணத்தினால் உண்டான இயற்கையான உறவுகள், தொடர்புகள் இவற்றைக் குறிக்கும். சுற்றத்தார்களே உண்மையில் ஒருவரின் உடனடிச் சமூகம். இல்வாழ்வானது உடன்பிறந்தார் முதற்சுற்றம். அடுத்துத் தந்தை, தாய்வழி, உடன் பிறப்புச் சுற்றம், தம் வாழ்க்கைத் துணைவழி உடன்பிறப்புச் சுற்றம் என்றவாறு விரியும். 
சுற்றத்தினரைப் பேணுதல் என்பது அவர்தம் வாழ்க்கைத் தேவைகளைப் பெறுதற்குரிய வாயில்களை அமைத்துத் தருதல் என்பது. சுற்றம் பழகும் பழக்கங்களால் அகவுணர்வுகள் செழுமையாக வளர்ந்து பயன்தரும். அதனால் அடிக்கடி கண்டும் கலந்தும் மகிழ்ந்து உரையாடியும் கலந்து உண்டும், உதவிகள் செய்தும், உறவு நிலைகளைப் பேணுதல் இன்றியமையாதது. சுற்றத்தினரை ஓம்பல் குடும்பம் வளமையாக அமையத் தூணை செய்யும். உறவுகள் செழிப்பாக அமையாத சுற்றம் சுமையாகிவிடும் என்பர்.
செல்வ நிலையிலிருப்போர் தம் சுற்றத்தாரை ஓம்புதல் வேண்டற்பாலது என்ப்தனைச் 'சுற்றம் தழாஅல்' எனும் அதிகாரத்திலும் வள்ளுவர் வலியுறுத்துகின்றார்:
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் 
பெற்றத்தால் பெற்ற பயன்
(குறள் 524) (பொருள்: சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.)

தான்

தன்னைப் போற்றிக் காத்தலும் இன்றியமையாதது என்றது தான் இன்றி பிறர்க்குச் செய்யவேண்டிய அறங்களைச் செய்தல் இயலாது என்பதனால். சுவரின்றிச் சித்திரம் வரையமுடியாது. ஆதலால், பிறருக்குத் தொண்டு செய்பவன் தன்னையும் பேணிக் கொள்ளல் வேண்டும். தன்னைப் போற்றுதலைக் குற்றம் என்போரும் உளர். ஆனால், வள்ளுவர் வெளிப்படையாகவே உன்னையும் போற்றிக் காத்துக் கொள் என உலகறிய உரைக்கின்றார். 
குடும்பத்தலைவன் இல்வாழ்க்கையின் ஆக்க நிலையில் அமைந்த உறுப்பு. ஆதலால் அவனும் காலத்தில் உணவு அளவாக உண்ணுதல், உடல்நலத்திற்குரிய பயிற்சிகளை மேற்கொள்ளல், நல்ல நூல்களைக் கற்றல், அன்பு நலத்தை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவை வழி தன்னைப் பேணிக்கொள்ளுதல் வேண்டும்.
'எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று' என்று பரிமேலழகர் தன்னை ஓம்புதலும் அறச்செயலே என்பதற்கு விளக்கம் தந்தார்.

ஐம்புலத்து ஆறு என்றால் என்ன?

ஐம்புலத்து ஆறு என்ற தொடர்க்கு 'ஐந்திடமாகிய நெறி' என மணக்குடவரும் 'ஐந்து கூற்று நெறி' எனக் காலிங்கரும் 'ஐந்திடத்தும் செய்யும் நெறி' எனப் பரிமேலழகரும் உரை கூறுவர். 'ஐந்து வகையாரிடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களை' என்றனர் கா சுப்பிரமணியபிள்ளையும்., சொ தண்டபாணியும்.. ஐந்திடத்திலும் அறநெறியை என்பது திரு வி க., குழந்தை ஆகியோர் உரை. 'ஐந்திடத்தும் செய்யப்படும் அறநெறி' என்பது பொருத்தமாகும்.

தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்து இடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் தலையாய கடமையாம் என்பது இக்குறட்கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

தென் (25)
தென் புலம் காவலர் மருமான் ஒன்னார் - சிறு 63
தென் குமரி வட_பெருங்கல் - மது 70
தென் பரதவர் போர் ஏறே - மது 144
தென் புல மருங்கின் விண்டு நிறைய - மது 202
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப - நெடு 52
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் - நெடு 61
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும் - பட் 189
தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு - நற் 153/5
தென் புலம் படரும் தண் பனி நாளே - குறு 317/7
தென் கழி சே_இறா படூஉம் - ஐங் 196/3
தென் திசை நோக்கி திரிதர்_வாய் மண்டு கால் சார்வா - பரி 10/121
மங்குல் மா மழை தென் புலம் படரும் - அகம் 24/8
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு - அகம் 281/9
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் - புறம் 9/3
தென் குமரி வட_பெருங்கல் - புறம் 17/1
இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும் - புறம் 35/7
தென் புலம் காவலின் ஒரீஇ பிறர் - புறம் 71/18
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் - புறம் 117/2
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் - புறம் 132/8
தென் பரதவர் மிடல் சாய - புறம் 378/1
தென் பவ்வத்து முத்து பூண்டு - புறம் 380/1
வட திசை நின்று தென்_வயின் செலினும் - புறம் 386/22
தென் திசை நின்று குறுகாது நீடினும் - புறம் 386/23
வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல் - புறம் 388/1
தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும் - புறம் 397/24

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Thirukural & Manu Smruthi

 
Thirukural:

With divine instinct Thiru Valluvar composed this work. Legend has it that, he took it to Madurai for arangetram and the golden  louts tank int he temple, Kural was accepted in a golden Lotus miraculously and this became Universally famous.


Accordance of Kural with the Vedic concepts:


First of all we have to understand the logic / concept behind the arrangement of the Chapters  - Aram, Poul and Inbam in Thamiz are direct translations of Dharma, Artha Kama - which are the first three purusharthas. Moksham, which is glorified as the fourth objective of life has been mentioned in Thiru Mantriam and together these two works tach us allt he 4 objectives of life. As anyone can guess the  atheists reject Dharma and Moksha - and just accept  Porul (Commerce) and Inbam (Pleasure). These so called Dravidian atheists are none but the charvakas in disguise. Ancient Thamizh Kings have given funds to protect Dharmas and have given grants to villages/ temples/ Vedas etc.. and these fools seem to do the opposite.



Here's one of the glorious Kural(s):


Pirappokkum ella uyirkkum sirappovva 

seithozhil vaetrumai yaan.

Meaning: By the nature of the work one does fame / bigotry is acquired. This indirectly quotes the Varna Dharmas - where Brahmanas  recite Vedas, Kings protect the nation, Vaishyas do trade and Shudras work hard for the welfare of the society. This could be seen in both the sides . Although there are not explicit references of Varna system, Valluvar elaborates the duties of Kings, Brahmans farmers etc. which is a proof for the existence  and acceptance of the Varna system even in Sangam times. (Luckily there was no opportunistic atheistic dumb groups in those times to suppress the righteousness of the society).


In Gita Krishna Says: 


catur-varnyam maya srstam
guna-karma-vibhagasah
tasya kartaram api mam
viddhy akartaram avyayam:

Desc: This is an exact translation of the above kural. Based on the karma = the work one does, and the Guna (Sathvam, Thama: Raja:)  one gets transformed into one of the four varna(s).  This explicitly states that anyone (even if low by birth) possess Sathva Guna would be considered a Brahmana as against one who posses thamasic Guna would be considered lower even if born into a higher caste. There should be no confusion about this to any of us. Just with some hatred towards Brahmins / Vedas some fools declared Thirukural to be great, without even knowing that Thirukural was never intended to conflict with the Vedic principles.


Note: We cant declare that Valluvar is denying the Varnas base don this Kural - as there are references to kings, Brahmanas etc.. in Thirukural as we see below.


மறப்பினும், ஒத்துக் கொளல் ஆகும்; பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

Meaning:  Right conduct for a Brahmana is very important. Even if he forgets the Vedas, he can learn it back - but not if he forgets or loses his  right codnuct, which is supposed to be followed by birth. Valluvar uses the work parapanan - which enas that he's twice born.


Note: Here Valluvar very clearly accepts the Varna Dharma - where he declares that the status of a Brahmaan is obtianed by birth , and the birth of a Brahmana is sacred.


A very close equivalent of this in the Manu Smruthi can be seen here:



AchAraH paramo dharmaH shrutyoktaH smArta eva cha |
tasmAdasmin.h sadA yukto nityaM syAdAtmavAn.h dvijaH ||
 
Desc: The acharam or conduct , which has been taught through the Sruit or Vedas and Smrthi or the shastras must be followed by a twice-born (Parapanan) allt he times. 
 
AchArAd.h vichyuto vipro na vedaphalamashnute |
AchAreNa tu sa.nyuktaH sampUrNaphalabhAg.h bhavet.h 
 
Desc: A Brahmana, who does not follow the acharam of his varna (as preached by Sruit and Smruti) does not obtain the fruit of (learning) Vedas. Only a Brahmana, who follows his acharam, get the right benefit of VEdas.
 
Note: Only igonorant  ones may think that Kural is different from the Shastras . All the rgeat wise men of realization have been saying the same fact in different languages and different ways. Atheism and racist theory has no place in this domain. 

Kural 259: Pulal Maruthal


அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன்

உயிர் செகுத்து உண்ணாமை நன்று.

Explanation: Here  Valluvar makes direct reference to the Vedic yagnas. He declares that, abstaining from eat meat is much more virtuous than making 1000  offerings of Havis (or rice) in the yagnas. The beauty here is that, the Vedic culture was very well established even 3000 years ago, during the Sangam period. The word Havis or Avis refers tot he offerings of rice and ghee in fire in a Vedic sacrifice. This kural is also a direct translation of the sloka from Manu Smruthi:


Equivalent Sloka from Manu Smruthi:


Varshe Varshe Aswamedhena Yo Yajetha Shatham Sama:

Mamsaani Cha Na Khadedhyasthayo: PunyaPhalam Samam

Desc: Now Manu declares the merits of being a non-meat eater . One who avoids meat and remains as a vegetarian (and also avoids the prohibited food items from the Shastras) is rewarded with the fruit of performing AswaMedha Yagnam each year for a period of 100 years.


Note: Some narrow-minded fools call themselves as social reformers without the knowledge of the glorious scriptures of our ancestors translate Kural with  their half-boiled knowledge and impose the concept of Aryan -Dravidian crap on us. Glorious are our scriptures and Thiru Kural is no different than the Dharma Shastras.


Kural:  Neethar Perumai


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டிவிடும்.


Kural 543: Sengoinmai


அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் 

நின்றது மன்னவன் கோல்.

Explanation: The sengol or the dandam or the authority of a King is the basis / source of protection for the  scriptures of the Brahmanas and Dharma . This internally means that it's duty of the king to protect the Brahmaans, Vedas and Dharma (as he does protect all the other 2 varnas).



Kural 21: neethar Perumai


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவற் றுணிவு.

Kual: 560 (Kodungonmai)


ஆ பயன் குன்றும்; அறுதொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின்.

Explanation: Here Valluvar talks about the atrocities, when a King does not administer his country in the right manner. Cows and Brahmins are considered noble and the Sanskrit prayer for the both says:


Go Brahmanebyo Sukamasthu Nithyam:


Which literally means that, the Cows, which showers it's milk for the children of human beings, and the Brahmana, who uses the Vedas, which he learnt for the welfare of this Society and performs the yagnas should be happy and prosperous. 


ThiruValluvar glorifies the above statement, and says that if a King would do mis-management , then the cows would stop giving milk and the Brahmans - who have the six fold duties would forget the Vedas. The important point to be noted here is that, if there's no milk form cows - imagine how many kids would die, so is the case if the Brahmans forget the Vedas (Vedas are not supposed to be written - only through memory). Such is the status, which Valluvar gives to the Vedas.


Note: Here Valluvar describes Brahmanas as the ones with 6 duties, which is described in the Dharma Shastras as below:


adhyApanamadhyayanaM yajanaM yAjanaM tathA |

dAnaM pratigrahaM chaiva brAhmaNAnAmakalpayat.h |

Exp: Teach Vedas, Learning Vedas, doing yagnas, leading yagnas, giving gifts accepting gifts are the 6 duties prescribed to Brahmans.


Here's another Kural:


Kural 931: Soodhu

வேண்டற்க, வென்றிடினும் சூதினை! வென்றதூஉம்,
தூண்டில்-பொன் மீன் விழுங்கியற்று.

Exp: Just like the fish in water , which thinks the iron in the fishing rod to be its food and gets killed / trapped, gambling may offer small benefits / victory but destroy everything.


Equivalent sloka from Manu Smruthi is:


dyUtaM samAhvayaM chaiva rAjA rAShTrAtnivArayet.h |

rAjAntakaraNAvetau dvau doShau pR^ithivIk****Am.h ||

Manu declares that, gambling and betting money etc. should be totally avoided in a kingdom as it may lead to the total destruction of a country.



Kural 41: Ill Vazhkai

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

Desc: In this glorious Kural, Valluvar elaborates the three ashramas - Brahscharya, VanaPrstha and Sanya, all of which is supported / benifitted (by food,e tc..) by a housleholder.

brahmachArI gR^ihasthashcha vAnaprastho yatistathA |
ete gR^ihasthaprabhavAshchatvAraH pR^ithagAshramAH ||

The four orders - Brahscharit, gruhastha, vaanaprstha, and sanyasi, these (constitute) spring from (the order of) householders
 
 
Ashraf N.V.K. said...

You are absolutely right in criticising the Dravidian atheists who misinterpret the Kural as Charavakas in disguise. However, you are also not faring well either. Let me take குறள் 972 you have referred:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (972)

Translation:
“By birth all men are equal. 
The differences in their action render their worth unequal.”

You translate this Kural as “By the nature of the work one does fame, bigotry is acquired”. Has anyone translated this couplet the way you have done? Would like to know where the words “pirappu” (birth) and “okkum” (equal) are there in your translation. These are missing and it shows that you have mistranslated it to suit some agenda. This couplet falls under “Greatness” (perumai) and not under any chapter by name “Varnashrama” for you interpret this way. 
You have cited a sloka from Gita and claimed that it is nothing but a literal translation of the Kural 972. No sloka number was given and I had to find that out. It is Gita 4.13. It means….
“According to the three modes of material nature and the work associated with them, the four divisions of human society are created by Me. And although I am the creator of this system, you should know that I am yet the non-doer, being unchangeable.”
(Source of translation: https://www.bhagavad-gita.us/bhagavad-gita-4-13/) 

Yes, YOUR mistranslation of the Kural resembles Gita 4.13. Still, this is not, even by any stretch of imagination, an EXACT translation of the Kural in original form. Where are the equivalents for Sanskrit words “varynyam” (four varnas), “maya” (By God’s maya) and “srstam” (creation) in the original Kural?

Is this honesty and impartiality, my friend? 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சுமிருதி-வள்ளுவம்

 
வேத சமயத்தின் புனித நூல் தொகுதிகளுள் ஒன்றாக சுமிருதி விளங்குகிறது. நான்கு வேதங்களும் எழுத்து வடிவம் பெறாது காதால் கேட்டு மனனம் செய்வதன் வாயிலாகவே பாதுகாக்கப்பட்டு வந்தன. இதனாலேயே ‘எழுதாக்கிளவி’ என்ற சொல்லால் வேதம் சங்க இலக் கியத்தில் குறிப்பிடப்பட்டது. வேதங்களைப் போன்றே சுமிருதிகளும் வாய்மொழியாக ஒரு குறிப்பிட்ட காலம் வரை வழங்கியுள்ளன. சுமிருதி என்பது குறித்து ‘அபிதான சிந்தாமணி’ (பக்கம் 702) பின்வருமாறு விளக்கம் தருகிறது. “இவை தர்மசாத்திரங்கள், நித்தியகருமங்கள், ஆசாரம், விவகாரம், பிராயசித்தம், இராசதர்மம், வருணாசிரமம், அக்நிகார்யம், விரதம் முதலிய பலவற்றைக் கூறும். இவைகள் பல இருடிகளால் (ரிஷிகளால்) கூறப்பட்டவை”. சுமிருதிகளின் எண்ணிக்கை பதினெட்டாகும். இந்நூல்கள் யாவும் பார்ப்பனியத்தை உள்வாங்கி எழுதப் பட்டவை. பார்ப்பனியம் சார்ந்த வேதங்களும் வேள்விகளும் சங்ககாலத் தமிழகத்தில் ஊடுருவியிருந்ததையும், வேத எதிர்ப்பாளர்களையும் சங்க நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. சங்ககாலத்தை அடுத்த பல்லவர் காலத்தில் வேதசமயத்தின் தாக்கம் அதிகரித்து சோழர் காலத்தில் அது உச்சகட்டத்தை அடைந்தது. வள்ளுவர் காலத்திற்கு முன்னரும், அவர் வாழ்ந்த காலத்திலும், வாழ்ந்து மறைந்த பின்னரும், பார்ப்பனிய சமயமும், அதன் புனிதநூல்களும் தமிழ்நாட்டில் செல்வாக்குடன் விளங்கின. இப்பின்புலத்தில் வள்ளுவரின் திருக்குறளை ஆராய்வது அவசியமான ஒன்றாகிறது. இதன் முதற்படியாக சுமிருதிகளின் பொதுவான இயல்புகள் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது. சுமிருதிகள் தோன்றிய சமூகம்: சுமிருதிகளின் காலம் கி.மு நான்காம் நூற்றாண்டி லிருந்து ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலமாகும். இக்காலகட்டத்தில்தான் அடிப்படையான பொருளாதார மாறுதல்கள் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருந்தன. தனிச்சொத்துரிமை வளர்ந்து வலுவடையத் தொடங்கியது. நில உடைமை உறவுகள் முகிழ்ந்து அதன் அடிப்படையில் முரண்பட்ட வர்க்கங்களும் உருப்பெற்றன. நில உடைமை யாளர்கள், கால்நடை உரிமையாளர்கள், ஒரு பக்கமும், குத்தகை விவசாயிகள், உழவர்கள், கால்நடை மேய்ப் பவர்கள் மற்றொரு பக்கமும் சமூகத்தில் உருப்பெற்றனர். (பிரபாவதி சின்கா 1982 : 9) சமத்துவம் வாய்ந்த இனக்குழு வாழ்க்கையழிந்து தனிமனிதர்களுக்கும் வர்க்கங்களுக்கும் இடையிலும் நில உரிமையாளர்களுக்கும் உழவர்களுக்கும் இடையிலும் முரண்பாடுகள் வளரத் தொடங்கின. மற்றொரு பக்கம் அவைதிக சமயங்கள் அல்லது வேதமறுப்புச் சமயங்கள் என்றழைக்கப்பட்ட சமணம், பௌத்தம், ஆஜீவகம் ஆகியனவற்றின் மீதான தாக்குதலில் பார்ப்பனிய சமயம் வெற்றி பெற்றுத் தன்னை வலுவான சக்தியாக நிலைநிறுத்திக் கொண்டது. திருக்குறள் தோன்றிய சமூகம் : சுமிருதிகள் தோன்றிய சமூக அமைப்பை ஏறக்குறைய ஒத்ததாகவே திருக்குறள் தோன்றிய சமூக அமைப்பும் இருந்தது. சங்க காலத்தில் நிலவிய திணை வாழ்க்கை அழிந்து நிலவுடைமையின் வளர்ச்சி நிலையைத் தமிழ்ச் சமூகம் எட்டியிருந்தது. குறுநில மன்னர்களின் ஆட்சிக்கு மாறாக நிலவிய வேந்தர்கள் ஆட்சி முறை வலுவடைந்து, பேரரசன் ஆட்சி முறையாகியது. விளைநிலங்கள் கொடைப்பொருளாகவும் மாறின. இத்தகைய ஒத்த சமூகச் சூழலில் உருவான சுமிருதியின், திருக்குறளும் ஒத்த கருத்துடையனவாய் விளங்கினவா அல்லது மாறுபட்டு விளங்கினவா என்பது ஆய்விற்குரிய ஒன்று. இதனடிப்படையில் சுமிருதி கூறும் கருத்துக்களையும் திருக்குறள் கூறும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆராய இடமுள்ளது. இதன் முதற்படியாக ஆளுவோனைக்குறித்து சுமிருதியும் திருக்குறளும் கூறும் செய்திகளைக் காண்போம். சுமிருதியின் நோக்கில் மன்னன்: அரசின் தோற்றம் குறித்துப் பல்வேறு கோட் பாடுகளை அரசியல் அறிஞர்கள் உருவாக்கியுள்ளதாகக் கூறும் பிரபாவதி சின்கா அவற்றுள் ஒன்றாக ‘தெய்வீகக் கோட்பாடு’ என்பதைக் குறிப்பிடுகிறார். இக்கோட் பாட்டின்படி அரசு என்பது கடவுளால் படைக்கப் பட்டது. எனவே அது ஒரு தெய்வீகமான அமைப்பாகும். இக்கோட்பாட்டுடன் நெருக்கமானதாக ‘தெய்வீக உரிமை’ என்ற கோட்பாடு அமைகிறது. ‘தெய்வீக உரிமை’ என்பதன் அடிப்படையில் மன்னனானவன் வரைமுறையற்ற உரிமைகளையுடையவன். அவனது அதிகாரங்களைக் கட்டுப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. அவனது கட்டளைக்குக் கீழ்ப்படி யாதவர்கள் மரணதண்டனைக்குரியவர்கள். குடிமக்கள், மன்னனிடம் தாழ்ந்து பணிந்து போவதை, தெய்வீகக் கோட்பாடும், தெய்வீகக் கடமையும் வலியுறுத்துகின்றன. இதற்குச் சான்றாகப் பின்வரும் செய்திகளைக் குறிப்பிடலாம். “சுக்கிர நீதி” என்ற வட மொழி நூல், “எல்லாவுலகங்களும் அரசனின்றி அச்சத்தால் எப்பக்கங்களிலும் சிதறுண்டிருக்குங்கால் அவ் வெல்லாவற்றையும் காத்தற் பொருட்டுப் பிரம்ம தேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன் அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு அரசனைப் படைத்தான்.” என்று மன்னனின் தெய்வீகக் கூறுகளைச் சுட்டுகிறது. பல்வேறு தெய்வங்களின் மனித வடிவமே மன்னன் என்பது நாரத ஸ்மிருதியின் கருத்தாகும். கணக்கற்ற அதிகாரங்களைக் கொண்டிருப்பதால் அக்கினி, இந்திரன், சோமன், யமன், குபேரன் ஆகிய தெய்வங்களின் ஆற்றல் மன்னனிடம் குடி கொண்டிருக் கின்றன என்பது அவரது கருத்தாகும். சில புராணங்களும் கூட இவற்றையொட்டியே சில கருத்துக்களைக் கூறு கின்றன. மனுதர்ம சாஸ்திரம் மன்னனைக் குறித்துப் பின்வரும் கருத்தை முன்மொழிகிறது. “வேதம் கட்டளையிட்டிருக்கின்றவாறு உபநயன முதலிய சமஸ்காரங்களைக் கொண்ட க்ஷத்திரி யனால் இவ்வுலகம் விதிப்படி காப்பாற்றத்தக்க தாகும். இந்திரன், வாயு, எமன், சூரியன், அக்கினி, வருணன், சந்திரன், அளகேசன் ஆகிய திசைக் காவலர் அனைவரின் தன்மைகள் ஓருருவாகத் தோன்றியவனே அரசன். திசைக்காவலரான தேவர்களின் வடிவினன் ஆதலால் மனிதர்களின் மிக்கொளியுடையவனாய் ஆண்டு கொள்ளும் ஆற்றல் மிக்கவனாய் அரசன் திகழ்கின்றான். ஏறிட்டுப் பார்க்கும் எவரையும், அவரது கண்ணையும் மனத்தையும் காந்தச்செய்வதால் யாரும் அரசனுக்கெதிரே நின்று பார்க்கக் கூடாதவராகின்றனர். தனது மகிமையினால் அவ்வப்போது தீயாகவும், காற்றாகவும், சூரியனாகவும், சந்திரனாகவும், யமனாகவும், குபேரனாகவும், வருணனாகவும், தேவேந்திரனாகவும் இருப்பான்.” வள்ளுவர் எந்த ஒரு மன்னனின் அவையிலும் அரசவைக் கவிஞராக இருந்ததாகத் தெரியவில்லை. அவரை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழிக் கதைகள் அடித்தள மக்கள் பிரிவைச் சார்ந்தவராகவே அவரைச் சுட்டுகின்றன. இந்நிலையில் அரசனின் சிறப்பைக் கூறும் ‘இறைமாட்சி’ என்ற அதிகாரத்தைத் தம் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் அடிப்டையிலேயே உருவாக்கியுள்ளார் என்று கருதுவதில் தவறில்லை. இறைமாட்சி என்ற அதிகாரத் தலைப்பிற்கு ‘இறைவனது உண்மை கூறுதல்’ என்று மணக்குடவரும், ‘இறைவனது தன்மை கூறுதல்’ என்று பரிப்பெருமாளும் பொருள் உரைத்துள்ளனர். மன்னனை இறைவனாகவே காணும் சுமிருதி கருத்தை வள்ளுவர் உள்வாங்கியுள்ளார் என்பதை ‘இறை’ என்ற சொல்லால் மன்னனைச் சுட்டுவதிலிருந்து உணரலாம். முதற்குறளில் மன்னனுக்கு இருக்க வேண்டிய படை, சூடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறு உறுப்புகளைக் குறிப்பிகிறார். அடுத்து மன்னனுக்கு இருக்க வேண்டிய அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்ற நான்குகுண நலன்களையும், தூங்காமை, கல்வி, துணி வுடைமை என்ற மூன்று குணநலன்களும் நீங்கப் பெறாத வனாய் இருக்க வேண்டும். அறவழிநிற்பவனாகவும், பொருளை ஈட்டி அதைப் பாதுகாத்துப் பகுத்தளிக்கும் ஆற்றல் உடையவனவாகவும் இருக்க வேண்டும் என்கிறார். இச்செய்திகளையடுத்து, “காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்” (386) “செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு” (389) என்று கூறும் செய்திகள் மக்களின் கண்ணோட்டத்தி லிருந்து மன்னனைப் பார்த்ததால் உருவானவை என்று கூற முடியும். இதன்வழி சுமிருதிகளின் கண்ணோட்டத்தி லிருந்து அவர் மாறுபட்டு நிற்கிறார். மன்னனின் கடமை : உலகின் பல்வேறு நாடுகளிலும் ‘தெய்வீக அரசு’ என்ற கருத்தியல் மன்னராட்சிக் காலத்தில் நிலவியுள்ளது. ஆனால் இந்திய மன்னராட்சி முறையில் வழக்கமான மன்னர் கடமைகளுடன் வேறுபாடான ஒரு கடமையும் மன்னர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஆர்.எஸ்.சர்மா, பார்ப்பனிய ஆதாரங்களின் கூற்றுப்படி, சாதிகளை நிலை நாட்டுவதும் அரசனின் குறிப்பிடத்தக்க கடமைகளுள் ஒன்று. “நான்கு சாதியாரும் அவரவர்க்கு உள்ள கடமை களைச் செவ்வையாகச் செய்வதை மேற்பார்வை யிடுவதும் அதற்கு வழி வகுப்பதும் அரசனின் கடமை என்று பெரும்பாலும் எல்லா ஆதாரங் களும் சொல்லுகின்றன.” என்கிறார். பிற நாடுகளின் மன்னர்கள் வர்க்க வேறு பாடுகளை நிலைநிறுத்தியும், தான் பின்பற்றும் சமயத்திற்கு ஆதரவளித்தும், சில நேரங்களில் மாற்றுச் சமயத்தினருக்குத் தொல்லை தந்தும் ஆட்சி புரிந்துள்ளனர். இந்திய மன்னர்கள் இக்கடமைகளுடன் வருணப் பாகுபாடுகளைப் பாதுகாக்கும் கடமையையும் மேற்கொண்டிருந்தனர். மன்னனின் வருணம் குறித்தும், வருணக்கலப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் அவனது கடமை குறித்தும் திருக்குறள் எதுவும் கூறவில்லை. சுமிருதிகளிலிருந்து திருக்குறள் மாறுபடும் முக்கிய பகுதி இதுவேயாகும். “நாலாம் வருணத்தோன் அரசனாயிருக்கும் நாட்டில் அந்தணர் வாழக்கூடாது என்பது மனுவின் வழியாகும்” (4.61). “மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தாரால் நடை பெறுகின்றதோ அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போலக் கண் முன்னே துன்பமுறுகின்றது’ என்று குறிப்பிடுகிறார்” (8.21) “நாலாம் வருணத்தாரும், நாத்திகருமே மிகுந்து இருபிறப்பாளர் இல்லாமல் போகின்ற நாடு வறுமை வயப்பட்டு விரைவில் அழிந்துபோகும் என்றும் எச்சரிக்கிறார்”. (8.22) ஆனால் திருக்குறள் குறிப்பிடும் அரசனும் குடி மக்களும் தனித்தனியான வருண அடையாளங்கள் இன்றியே காட்சியளிக்கின்றனர். மன்னனது இன்றியமையாத ஆறு உறுப்புகளுள் ஒன்றாக ‘படை’ என்பதை வள்ளுவர் குறிப்பிடுகிறார். இப்படையினர் போரில் வெற்றிபெற்றால் உரிமையாக்கும் பொருட்களில் ஒன்றாகப் பெண்ணைக் குறிப்பிடுகிறார் மனு. (7:96) ஆனால் வள்ளுவர், “சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை”. (769) என்று படையின் பெருமையைக் குறிப்பிடும் ‘படை மாட்சி’ அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். இக்குறளில் இடம்பெறும் ‘செல்லாத் துனி’ என்ற சொல்லுக்கு ‘செல்லாத்துனியாவது மகளிரை வெளவல், இளிவர வாயின செய்தல் முதலியவற்றால் வருவது’ என்று பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். பரிப்பொருள் ‘செல்லாத்துனி’ என்பதற்கு ‘போகாத் துன்பம் உறுதலும்’ என்று உரை எழுதி ‘போகாத் துன்பமாவது பெண்டிரைக் கைக் கொள்ளுதலும் இளிவரவு செய்தலும் போல்வன’ என்று விளக்கமளிக்கிறார். போரில் கைப்பற்ற வேண்டிய பொருட்களில் ஒன்றாக ‘மகளிர்’ மனுசுமிருதியில் குறிப்பிடப்பட்ட திருக்குறள் அச்செயல் படையிடம் இருக்கக் கூடாது என வலியுறுத்துகிறது. தனி உரிமை பெற்றோர் : நான்கு வருணப் பாகுபாட்டை வலியுறுத்தும் சுமிருதிகள், அவற்றுள் தலையான வருணமாகவும், தனி யுரிமை உடைய வருணமாகவும் அந்தணரைக் குறிப்பிடு கின்றன. விதிக்கப்படும் தண்டனைகளில் பாகுபாடு காட்டுதல், கொடை வழங்கல் ஆகியன பார்ப்பனர்களை மையமாகக் கொண்டு மனுசுமிருதியில் கூறப்படுகின்றன. ஆனால் திருக்குறளில் இத்தகைய தனியுரிமை பெற்ற பிரிவினர் எவரும் இடம் பெறவில்லை. வேள்வி குறித்தும், அதை மேற்கொள்ளும் அந்தணர் குறித்தும் திருக்குறள் குறிப்பிடுகிறது. ஆனால் அதன் அடிப்படையில் தனி யுரிமை பெற்றவர்களாக எவரையும் குறிப்பிடவில்லை. உழுதொழில் என்பது பார்ப்பனர் மேற்கொள்ளத் தகுதியற்ற ஒன்றாக மனுசுமிருதியில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் உழு தொழிலின் மேன்மையை வலியுறுத்தி ‘உழவு’ என்ற தலைப்பில் ஓர் அதிகாரமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது. ‘சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம்’ (1031) ‘உழுவார் உலகத்தார்க் காணி’ (1032) ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ (1033) என்று உழு தொழிலையும் உழவரையும் போற்றுவதுடன் நில்லாது ‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கும் நிலை’ (1036) என்று சற்று அழுத்தமாகவே உழவின் தேவையை வலியுறுத்துகிறார். தனியுரிமை பெற்ற வருணப் பிரிவினர் மேற் கொள்ளக் கூடாத தொழிலாக ஸ்மிருதிகள் குறிப்பிடும் உழுதொழிலையும் அதை மேற்கொள்வோரையும் சிறப்பிக்கும் இச்செயலின் மூலம் சுமிருதியின் சாதிய மேலாண்மைக் கருத்துடன் வள்ளுவர் முரண்படுகிறார். ‘நாலாம் வருணத்தாருக்குப் பொருளியல் போன்ற இம்மைப் பயன்தரும் கல்விகள் கற்பித்தலாகாது (4.80) என்று மனு குறிப்பிட்ட, கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகக் குறளில் கூறப்படுகிறது. நான்கு வருணங்களும் தமக்கு விதிக்கப்பட்ட கடமை களை முறையாகச் செய்ய வேண்டும் என்பது சுமிருதிகள் சுட்டும் விதிமுறையாகும். ஆனால் வருணங்கள் குறித்தோ அவற்றிற்குரிய கடமைகள் குறித்தோ திருக்குறள் எதையும் குறிப்பிடவில்லை. மேலும் சலுகை பெற்ற வர்க்கத்தைச் சார்ந்த பார்ப்பனர்கள் தம் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக யாரிடமிருந்தெல்லாம் வற்புறுத்திப் பொருளைப் பெற வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன. தம் நலனுக்காக அறமில்லாத முறையில் பணம் பெறுவதை வருணத்தின் அடிப்படையில் ஸ்மிருதிகள் வலியுறுத்து கின்றன. ஆனால் திருக்குறளோ, “ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை” என்கிறது. குறளை மறந்த தமிழ் மன்னர்கள் : பல வடமொழிச் சுமிருதிகளில் குறிப்பாக மனு சுமிருதியின் கருத்துக்களுடன் பலவாறு வள்ளுவர் மாறுபட்டு நிற்பதைச் சில எடுத்துக்காட்டுகள் வாயிலாகக் கண்டோம். இம்மாறுபாடே தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளில் திருக்குறள் புறக்கணிக்கப்படக் காரண மாயிற்று. அறம் என்பதே சுமிருதியைச் சார்ந்ததாக மாறியது. திருக்குறளின் அறத்துப்பாலுக்கு உரை எழுதும் போது ‘அறமாவது மநுமுதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன வொழிதலுமாம்’ என்று பரிமேலழகர் விளக்கம் கூறும் நிலை தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது. தமிழ் மன்னர்களின் கல்வெட்டுக்களில் நாம் எந்த நெறியில் நின்று ஆட்சிபுரிகிறோம் என்பதைத் தொடக்கத்தில் குறிப்பிடுவார்கள். சான்றாகப் பின்வரும் தொடர்களைக் குறிப்பிடலாம். மனுவாறு விளங்க மனுநெறி சிறக்க மனுநெறி தழைக்க இவ்வாறு குறிப்பிட்ட தமிழ் மன்னர்கள் ‘குறள் வழி நின்று’, ‘வள்ளுவர் வழி நின்று’ என்று குறிப்பிடவில்லை. இதற்குக் காரணம் குடிமக்களின் கண்ணோட்டத்திலேயே அரசு மற்றும் அரசன் குறித்த பார்வை திருக்குறளில் இடம்பெற்றுள்ளமைதான். இது மன்னர்களுக்கும் அவரைச் சார்ந்து நிற்போருக்கும் உகப்பாயில்லாமல் போனதில் வியப்பில்லை. மன்னனையும் அவனை அண்டி நிற்போரையும் அரவணைத்து அவர்தம் நலனைப் பேணும் தன்மையால் சுமிருதிகள் தமிழ் மன்னர்களால் ஏற்றுக் கொள்ளப்பட திருக்குறள் ஓரங்கட்டப்பட்டது. இவ்வாறு மன்னர்களால் ஓரங்கட்டப்பட்டமையே திருக்குறளின் சிறப்பாகும். மற்றொரு பக்கம் மக்களிடையே அது பரவலாக வழங்கி வந்துள்ளது. இதன் அடிப் படையிலேயே திருக்குறளுக்கு தருமர் தொடங்கி திருமலையார் வரை பதின்மர் உரையெழுதியுள்ளனர். தன்காலத்திய மேட்டிமையோர் நெறியான சுமிருதி நெறியிலிருந்து விலகி நின்று அறம் கூறியமையே வள்ளுவரின் தனிச்சிறப்பாகும் http://www.keetru.com/index.php?option=com_


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மனு-சட்டம்

 
மனு-சட்டம்-நன்றி ஆறாம் திணை ''எந்தப் பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச் செயலும் இயற்றலாகாது'' (10 : 147) ''இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது'' (10 : 148). ''இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக'' (10 : 154). ''அன்றாட வேள்விகள் ஐந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு'' (9 : 14). ''நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை'' (9 : 15). இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17). 'படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்' (9 : 17). மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (9 : 18). காலத்தால் முந்திய வடமொழி நூல்களாக வேதங்கள் அமைந்திருக்கின்றன. வேதங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவான நீதி நூல்கள் 'ஸ்மிருதிகள்' என்றழைக்கப்படுகின்றன. இவை முனிவர்களால் கூறப்பட்டவை என நம்புகிறார்கள். தர்ம சாத்திரங்கள் நித்திய கருமங்கள் ஆசாரம் விவகாரம் பிராயச்சித்தம் இராச தர்மம் வருணாசிரமம் அக்நி கார்யம் விரதம் ஆகியன தொடர்பான விதிமுறைகளை இவை குறிப்பிடுகின்றன. ஸ்மிருதிகள் மொத்தம் பதினெட்டாகும். (19 என்ற கருத்தும் உண்டு) இவற்றுள் மிகப் பரவலாக அறிமுகமாகி இன்றளவும் பேசப்படுவது 'மனு தர்ம சாஸ்திரம்' என்ற மனுஸ்மிருதி ஆகும். மனுஸ்மிருதி இந்த நூலானது இதை இயற்றியவரின் பெயராலேயே பெயர் பெற்றுள்ளது. மனு என்ற பெயரில் ஏழு பேர் இருந்தனர் என்றும் ஏழாவது மனுவே இந்நூலை இயற்றியவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் மனு என்பது ஒரு தனி மனிதனின் பெயர் அல்லவென்றும் நீதிநெறிகளை வகுக்கும் பதவியின் பெயரென்றும் சிலர் கூறுவர். ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட 'மாணவ தர்ம சாஸ்திரம்' என்ற நூல் வாய்மொழியாக வழங்கி வந்துள்ளது. அந்நூலை மூல நூலாகக் கொண்டு மனுதர்ம சாஸ்திரம் உருவாகியுள்ளது. 12 அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்ட இந் நூலில் 2684 சுலோகங்கள் இடம் பெற்றுள்ளன. நூல் நுவலும் செய்தி வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய கடமைகள், மன்னன் ஆட்சி புரிய வேண்டிய முறையும், தண்டனையும், வழங்க வேண்டிய முறையும், பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆண் பெண்களிடையே நிலவும் சமூக உறவுகள், கணவன் மனைவியர் ஒழுக்க நியதி, பிறப்பு இறப்புச் சடங்குகள், குற்றங்களும் அவற்றிற்கான கழுவாய்களும், மறுபிறவி போன்றவை அந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் பின்வரும் ஐந்து கருத்துக்களை அழுத்தமாக வலியுறுத்துகின்றது. 1. நால் வருணப்படி நிலை 2. இதில் பிராமணிய மேலாண்மையும், கீழ் வருணங்களின் −ழிநிலையும் 3. உடல் உழைப்பு இழிவானது. எனவே அதை மேற்கொள்வோரும் இழிவானவர். 4. நால் வருணத்திற்கு வெளியில் உள்ள சண்டாளர்கள் என்ற பிரிவினர் பின்பற்ற வேண்டிய கொடூரமான கட்டுப்பாடுகள். 5. பெண்ணடிமை நூலின் காலம் இந் நூலானது கி.மு. 170 க்கும் 150 க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், மெளரியர்களின் புத்த மத அரசுக்கு எதிரான பிராமணப் புரட்சியின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் பிராமணியச் சட்டத் தொகுப்பாகவே இது வெளிவந்துள்ளது என்றும் அம்பேத்கர் (1995:165-166) கூறுகிறார். நூல் உருவான வரலாறு சுவாயம்பு மநுவான பிரம்மனிடம் முனிவர்கள் சென்று ''ஞான நிறைவும், வல்லமையும், செல்வமும், வீறும், திறலும், ஒளியும் பெற்றுத் திகழும் பெருமானே, நால்வருணந்தரும் மற்றோரும் கடைபிடிக்கத்தக்க அவரவர் செயல்கள், கடமைகளை எமக்கு உணர்த்துவீராக! என்று வேண்ட, பிரம்மா இவ்வுலகம் உருவான முறையையும் நாராயணன் என்ற பரம்பொருள் குறித்தும் உயிர்களின் தோற்றம் குறித்தும் கூறி விட்டு (சூத்திரம் 5 முதல் 56 முடிய) பின் ''எனது குமாரரான பிருகு இந்தத் தர்ம சாத்திரத்தைச் சற்றும் பிறழாமல் உங்கட்கு உபதேசிக்கக் கடவர். ஏனெனில் முறையாக என்னிடம் பிருகு முனிவரே இதனைப் பயின்று கைவரப் பெற்றவராகிறார்'' என்று கூற, பிருகு முனிவர் முனிவர்களை நோக்கிக் கூறிய செய்திகளே மநு தர்ம சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ளன. இக் கருத்தை அம்பேத்கர் (1995 : 165-166) ஏற்றுக் கொள்ளவில்லை. ''மனு என்ற பெயருக்கு இந்தியாவின் பண்டைக்கால வரலாற்றில் பெரும் மதிப்பு இருந்தது. சட்டத் தொகுப்புக்கு இந்த மதிப்பின் மூலம் பெருமை சேர்க்கும் நோக்கத்துடனேயே அதை மனு வெளியிட்டதாகக் கூறப்பட்டது. இது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. சட்டத் தொகுப்பில் அதை இயற்றுபவரின் பெயரைக் குறிப்பிடும் இடத்தில் பண்டைக்கால வழக்கப்படி பிருகு என்ற குடும்பப் பெயர் கூறப்பட்டுள்ளது. 'மனு தர்ம சாஸ்திரம்' என்ற தலைப்பில் பிருகு இயற்றிய நூல்'' என்பதே அதன் உண்மையான தலைப்பு ஆகும். தொகுப்பின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பிருகு என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நமக்கு அதை இயற்றியவரின் குடும்பப் பெயர் தெரிகிறது. அவருடைய சொந்தப் பெயர் நூலில் தெரிவிக்கப்படவில்லை. நாரத ஸ்மிருதியை எழுதியவருக்கு மனு ஸ்மிருதியை இயற்றியவரின் பெயர் தெரிந்திருந்தது. அவர் அந்த இரகசியத்தை வெளியிடுகிறார். மனு சாஸ்திரத்தை இயற்றியவர் சுமதி பார்கவா என்பது கட்டுக்கதைகளில் வரும் பெயர் அல்ல. அவர் வரலாற்றில் இடம்பெற்ற ஒருவராகவே இருக்க வேண்டும். ஏனென்றால் மனுவின் சட்டத் தொகுப்புக்கு உரை எழுதிய மேதாதிநே கூட இந்த மனு ஒரு குறிப்பிட்ட நபர் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். எனவே மனு என்பது மனுஸ்மிருதியின் உண்மையான ஆசிரியரான சுமதி பார்கவாவின் புனை பெயராகும். இந்நூல் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதைப் பின்வரும் சூத்திரங்களால் அறியலாம். தர்மங்களுக்கு ஆதாரமாக இருப்பவை வேதமும், ஸ்மிருதிகளும் தொன்று தொட்டு வந்த ஒழுக்க மரபும் கவலையற்ற மன நிறைவுமாகும். (2 : 6) மனுவினால் கட்டளையிடப்பட்ட நீதிகள் அனைத்தும் வேதத்தில் விதிக்கப்பட்டவையே. ஏனெனில் அவர் வேதசாரமுணர்ந்த பிரம்ம ஞானி. (2 : 7) வேத சத்யத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்தவையென்று தனது ஞானத்தால் உணர்ந்து அவ்வறத்தாறு ஒழுகுவோனே உண்மையான கல்விமான். (2 : 8) சுருதி, ஸ்மிருதிகளில் சொல்லப்படா நின்ற அறங்களை மேற்கொண்டு ஒழுகுவோன் யாரோ, அவனே இம்மையில் புகழையும் மறுமையில் சுத்தமான சுகத்தையும் பெறுவான். (2 : 9) வேதமே சுருதியென்றும் அறத்துணிபுகளே ஸ்மிருதியென்றும் உணர்க.... (2 : 10) மனு தர்ம சாஸ்திரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்ற செய்தியும் பிரம்மன் மற்றும் பிருகு முனிவர் ஆகியோரால் இது கூறப்பட்டது என்ற செய்தியும் மனுதர்ம சாஸ்திரம் புனிதமானது, உயர்வானது, ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தை நிலை நாட்ட உதவுகிறது. இனி மனு தர்ம சாஸ்திரத்தின் சுலோகங்கள் சிலவற்றைக் காணலாம். பிராமணர் உயர்வு ''மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31). இந்தச் சூத்திரத்தின் அடிப்படையில் இறைவனுடைய முகத்தில் பிராமணர் தோன்றியுள்ளனர். இதன் காரணமாகப் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்பதைப் பின்வரும் சுலோகங்களில் வலியுறுத்துகிறார். ''புருஷ தேகம் சுத்தமானது. இடைக்கு மேல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது (1 : 92). மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். (1 : 93) சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (1 : 94). மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே ஜீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (1 : 99). பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (1 : 100). எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்யவராயுமிருக்கிறார்கள் (1 : 101). இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு அதை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிடுகின்றார். மங்களம் மற்றும் மேன்மையைக் குறிக்கும் வகையில் பிராமணனது பெயர் அமைய வேண்டும் (2:31, 32) என்றும் பிராமணர் உணவு அருந்தும்போது மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்றும் (2 : 176-178) வலியுறுத்துகிறார். தவறு செய்யும் பிராமணர்களுக்கு விதிக்க வேண்டிய தண்டனைகள் குறித்து மனு கூறும் செய்திகள் வருமாறு. 'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378). எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379). பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379). அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281). அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412). சத்திரியர் - வைசியர் - சூத்திரர் நிலை இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு, சத்திரியர், வைசியர், சூத்திரர்களின் பணி மற்றும் சமூகநிலை குறித்துப் பின்வருமாறு வரையறை செய்துள்ளார். ''பிரஜா பரிபாலனம் செய்வது, ஈகை, வேள்விகள் புரிவது வேத பாராயணம் செய்விப்பது, விடிய சுகங்களில் மனதை அலைய விடாமல் உறுதியாக நிற்பது மன்னர் கடமையாகும். (1 : 89) வாணிபர்க்கு ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், வட்டிக்கு விடுதல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவற்றை விதித்தார். (1 : 90) ஏவலான மக்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும், ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார் (1 : 91). நான்கு வருணத்தாரின் கடைசி வருணமான சூத்திர வருணத்தவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற கருத்தை மனு உறுதிபடக் கூறுகிறார். ''நாலாம் வருணத்தோன் அரசனாகயிருக்கும் நாட்டிலும் அறம் அறியாதோரும், தீயழுக்கமுடையோரும் வசிக்கும் கிராமத்திலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக் கூடாது. (4 : 61). மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (8 : 21) நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (8 : 22). அனுஷ்டானங்களில்லாத அந்தணன் மன்னன் சார்பாகத் தீர்மானங்களைச் செய்யவும் கூடும். நாலாம் வருணத்தவன் செய்யக்கூடாது. வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள். (8 : 417) ...... இழி பிறப்பாளர் பெருகி வரும் நாடு விரைவில் குடிமக்களுடன் அழியும் (10 : 61). பிராமணனின்றி சத்திரியனுடைய சதகருமங்களும் சத்திரியனின்றி அந்தணனின் ஜீவனமும் நடைபெறாதாகையால், ஒருவரை ஒருவர் சார்ந்து நின்றால் இம்மை மறுமைகளின் இன்பங்களை அடையக் கடவர் (9 : 322). வருணமற்றவர் நான்கு வருணத்திற்கும் அப்பால், சண்டாளர் என்ற சாதியை மனு குறிப்பிடுகின்றார். தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (10 : 47 - 49) இவர்கள் வாழும் இடமாக ''இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்'' (10 : 50) என்று குறிப்பிடுகின்றார். சண்டாளர்களின் இருப்பிடம், மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய தொழில், வாழ்க்கைமுறை தொடர்பாக மிகவும் இழிவான கட்டுப்பாடுகளை மனு விதித்துள்ளார். ''ஊருக்கு வெளியில் சண்டாளனும், ஸ்வபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது'' (10 : 52) ''இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும்'' (10 : 52). ''நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்'' (10 : 53). ''இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது'' (10 : 54). ''அரசன் கொடுத்த அடையாளத்துடன், தங்களிடமுள்ள பொருளை விற்கவும், ஒன்றை வாங்கவும், பகலில் ஊர்த்தெருக்களில் திரியலாம். அனாதைப் பிணத்தை அகற்றுதலும் இவர்கள் கடன்'' (10 : 55). ''மரண தண்டனை பெற்றவரைக் கொல்லுதலும் இவர்கள் தொழில். தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் உடை, அணி, படுக்கைகளை இவர்கள் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்'' (10 : 56). இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இவர்கள் சொர்க்கம் போவதற்கான வழியையும் மிக எளிதாகக் காட்டுகிறார். ''அந்தணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு'' (10 : 62). பெண்கள் அடுத்து பெண்கள் குறித்த மனுவின் கருத்துக்களைக் காண்போம். ''எந்தப் பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச் செயலும் இயற்றலாகாது'' (10 : 147) ''இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது'' (10 : 148). ''இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக'' (10 : 154). ''அன்றாட வேள்விகள் ஐந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு'' (9 : 14). ''நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை'' (9 : 15). இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17). 'படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்' (9 : 17). மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (9 : 18). மனு தர்ம எதிர்ப்பு இத்தகைய அதர்ம சாஸ்திரத்திற்கு எதிரான கருத்துக்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சித்தர்களும், வடபுலத்தில் தாந்திரிகர்களும் மனுதர்மத்தின் நால்வருணக் கோட்பாடுகளுக்கு எதிராக உரக்கக் குரல் எழுப்பியுள்ளனர். மனு - மனு தர்மம் என்ற சொற்களைப் பயன்படுத்தாவிட்டாலும் இந் நூலின் வருணக்கோட்பாடுகளுக்கு மாறான கருத்துக்களை முன்மொழிந்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் மஹத் என்னும் நகரில் நடந்த தலித்துகள் மாநாட்டில் 1927 டிசம்பர் 25 - ஆம் நாள் மனு தர்ம சாஸ்திரத்தை எரிக்கும் பின்வரும் தீர்மானம் நிறைவேறியது. (அம்பேத்கர் 1997 : 197, 198) ''இந்துச் சட்டங்களின் பிதா எனக் கருதப்படும் மனுவின் பெயரால் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பவையும், மனு ஸ்மிருதியில் அடங்கியிருப்பவையும், இந்துக்களின் சட்டத்தொகுப்பான அங்கீகரிக்கப்பட்டிருப்பவையுமான இந்துச் சட்டங்கள், கீழ்ச்சாதியினரை அவமதிப்பவையாக இருக்கின்றன. மனித உரிமைகளை அவர்களுக்கு மறுப்பவையாக உள்ளன. அவர்களது ஆளுமையை நசுக்குபவையாக இருக்கின்றன. நாகரிக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது இந்த மனு ஸ்மிருதி எத்தகைய நன்மதிப்பையும் பெற அருகதையற்றது. ஒரு புனிதமான நூல் எனப் போற்றப்படுவதற்குத் தகுதியற்றது என இந்த மாநாடு கருதுகிறது. இதன்பால் தனக்குள்ள ஆழமான அளவிட முடியாத வெறுப்பை வெளிப்படுத்தும் பொருட்டும், மதம் என்ற போர்வையில் அது சமூக ஏற்றத் தாழ்வைப் போதித்து வருவதைக் கண்டித்தும் மாநாட்டு நடவடிக்கைகளின் முடிவில் இதன் பிரதி ஒன்றை எரிப்பதென இம் மாநாடு தீர்மானிக்கிறது''. இதன்படி இரவு ஒன்பது மணிக்கு மாநாடு நடக்கும் இடத்தில் பலிபீடம் போல் அமைக்கப்பட்டு மனு நீதி நூல் அதன் மேல் வைக்கப்பட்டது. தீண்டத்தகாத சாதிச்சாமியார்கள் சிலர் முறைப்படி அதற்கு நெருப்பு மூட்டித் தகனம் செய்தனர். மனுநூலின் தகனம் முடிந்த பின் அம்பேத்கர் எழுந்து ''ஏற்றத்தாழ்வை வற்புறுத்தும் நீதிநெறி இனி பாரதத்தில் செல்லாது என உலகம் தெரிந்து கொள்ளட்டும்'' என்று முழங்கினார். (வசந்த்தின் 1995:56) இந் நிகழ்ச்சி குறித்து அம்பேத்கர் பின்வருமாறு எழுதினார்: ''இந்து சமூக அமைப்பு என்னும் கட்டுமானம், மனு ஸ்மிருதி என்ற அடித்தளத்தின் மீது நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த மனுஸ்மிருதி இந்து சமய நூல்களின் ஒரு பகுதி. எனவே அது எல்லா இந்துக்களுக்கும் புனிதமாக உள்ளது. புனிதமானது என்பதால் பிழைபாடற்றதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு இந்துவும் அதன் புனிதத்தில் நம்பிக்கை வைக்கிறான். அதன் ஆவணங்களை ஏற்று நடக்கிறான். மனு, சாதியையும் தீண்டாமையையும் ஆதரித்து நிற்பதோடு அதற்குச் சட்ட வலுவையும் தருகிறார். எனவே, ஒரு அபகீர்த்தி வாய்ந்த மனுஸ்மிருதியை எதிர்த்தது ஒரு துணிகரமான செயலாகும். இந்து சமயம் என்ற கொத்தளத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். பிரான்சில், பாஸ்டில் சிறை எவ்வாறு கொடுங்கோன்மையின் உருவகமாக இருந்ததோ அவ்வாறே இந்து வாழ்க்கை முறைக்கும் சிந்தனைப்போக்குக்கும் அடிநாதமாக இருந்த ஏற்றத்தாழ்வுகளின் உருவகமாக இருந்தது மனுஸ்மிருதி. பாஸ்டிலின் வீழ்ச்சி பிரான்சிலும் ஐரோப்பாவிலும் பரந்த மக்கள் பகுதியினரின் விடுதலையையும் வெற்றியையும் எவ்விதம் குறித்ததோ அவ்விதமே 1927 ஆம் ஆண்டு மஸத்தில், மனுஸ்மிருதி எரிக்கப்பட்ட நிகழ்ச்சி தீண்டப்படாத மக்களின் விடுதலை வராற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகத் திகழ்ந்தது.'' மனு தர்மத்தின் மீது இத்தகைய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதற்கு முக்கியக் காரணம் என்ன? என்பதை அப்பேத்காரே (1997-232) குறிப்பிடுகிறார். ''சதுர்வருணமாக சமுதாயத்தை நான்கு வகுப்புகளாகப் பிரிப்பது மனுவுக்கும் பிரதானமானதாக இருக்கவில்லை. ஓர் அர்த்தத்தில், அது அவருக்கு இரண்டாம்பட்சமானதாகவே இருந்தது. சதுர் வருணத்திற்குள் இருப்போரிடையேயான ஓர் ஏற்பாடாகவே இதனை அவர் கருதினார். ஒருவன் பிராமணனா, சத்திரியனா, வைசியனா அல்லது சூத்திரனா என்பது பலருக்கு முக்கியமானதல்ல. இது அவருக்கு முன்பே இருந்து வருகின்ற ஒரு பிரிவினை. −ந்தப் பிரிவினையை மேலும் தீவிரப்படுத்தி அதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தார். இந்தப் பிரிவினை அவரிடமிருந்து தோன்றியதல்ல. மாறாக மனுவிடமிருந்து ஒரு புதிய பிரிவினை தோன்றியது. 1. சதுர் வருண அமைப்புக்குள் இருப்பவர்கள். 2. சதுர் வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள் என்பதே இந்தப் பிரிவினை. இந்தப் புதிய சமூகப் பிரிவினை மனுவிடமிருந்து உதித்ததாகும். இந்துக்களின் பண்டைத் தர்மத்துக்கு அவரது புதிய சேர்ப்பு இது. இந்தப் பிரிவினை அவருக்கு அடிப்படையானதாக, மூலாதாரமானதாக, இன்றியமையாததாக இருந்தது. ஏனென்றால் அவர்தான் இந்தப் பிரிவினையை முதலில் உருவாக்கியவர். அதற்குத் தனது அதிகார முத்திரை அளித்து அதனை அங்கீகரித்தவர்! இக் கூற்றின் உண்மைத் தன்மையை இதுவரை நாம் பார்த்த மனு தர்ம சூத்திரங்கள் உணர்த்துகின்றன. மனு தர்ம ஆதரவாளர்கள் ஆனால் இன்றும் மனுவைப் போற்றுபவர்கள் நம்மிடையே உள்ளனர். இந்தியா விடுதலை பெற்றவுடன் உச்ச நீதிமன்றம் உருவாகும் நிலையில் அந் நீதிமன்ற வளாகத்தில் மனுவின் சிலையை நிறுவ வேண்டுமென்று வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது. அவ்வாறு மனுக்குச் சிலை நிறுவினால் அதைத் தாமே முன்னின்று இடிப்பதாக அம்பேத்கர் கூறினார். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி புரிந்தபோது ஜெய்ப்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுவுக்குச் சிலை நிறுவப்பட்டது. இதற்கு மாநில காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சிலை மேற்கூரை எதுவுமின்றி வீதியில் உள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி புரிந்தபோது இமாசலப் பிரதேசத்தில் மனாலி என்னுமிடத்தில் ஏற்கனவே உள்ள மனு கோயிலைப் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்துள்ளனர். ''1992 ஏப்ரல் 18, 19 தேதிகளில் மதுராவில் உத்தரப்பிரதேச மாநில இந்து வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில பா.ஜ.க. அரசின் அட்வகேட் ஜெனரல் வி.கே.என். சவுதாரி பேசுகையில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சட்ட நூல் மனுஸ்மிருதிதான் என்று குறிப்பிட்டார். இதனை ஆர்.எஸ்.எஸ். சின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான 'ஆர்கனைசர்' (மே 10, 1992) வெளியிட்டுள்ளது''. (மார்க்ஸ்). இந்து தர்மாச்சாரியார்களும் மத அடிப்படைவாத இயக்கங்களும் மனுவைப் புறக்கணிக்க விரும்பியதில்லை. விசுவ இந்து பரிஷத் 1982 −ல் நிகழ்த்திய ஊர்வலத்தில் மனு தர்ம சாஸ்திரத்தின் ஒரு பிரதி எடுத்துச் செல்லப்பட்டது. (அஸ்கர் அலி இன்ஜினியர்) இவற்றுக்கெல்லாம் காரணம் இந்து மதத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட சாதிய அமைப்புதான். திலிப்போஸ் (1984 : 146) கூறுவது போல ''சர்ச் இல்லாமல் கிறிஸ்துவ மதம் இல்லை. அதுபோல் சாதி அமைப்பு இல்லாமல் இந்துமதம் இல்லை.'' இந்தச் சாதிய அமைப்பை நிலை நிறுத்தும் மனுதர்ம சாஸ்திரத்தை ஓர் உண்மையான இந்துவால் புறக்கணிக்க முடியாது. எனவே சமூக நீதியை இவர்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நிலை நாட்டவும் முடியாது. இந்துக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்று மக்கள் என்று உரக்கப் பேசி வருபவர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள்! ஏனைய சமயங்களைப் போன்றே கத்தோலிக்கத் திருச்சபையும் பல்வேறு தவறுகள் மற்றும் பிழைகளைச் செய்துள்ளது. விவிலியக் கருத்துடன் முரண்படும் அறிவியல் கருத்துக்களைக் கூறியமைக்காகக் கலிலியோவைச் சிறையிலடைத்தது. புரூனோவை உயிருடன் கொளுத்தியது. இசுலாமியர்களுக்கு எதிராகச் சிலுவை யுத்தம் என்ற பெயரில் நீண்ட கால யுத்தத்தை நடத்தியது. பாசிஸ்ட் முசோலினியை ஆதரித்தது. ஆனால் இன்றைய போப் இச் செயல்கள் எல்லாம் தவறு என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டதுடன் கடந்தகால வரலாற்றுப் பிழைகளுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இதை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து சங்கராச்சாரியார்களும் ஏனைய துறவிகளும் காசியிலோ, மதுராவிலோ கூடி, 'மனுவின் வருணக் கோட்பாடுகளை முற்றிலும் புறந்தள்ளுகிறோம். சமூக நீதிக்கும் மனிதநேயத்திற்கும் மனுநீதி எதிரானது என்பதை உணருகிறோம்' என்று வெளிப்படையாக அறிவியுங்களேன்!


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆய்வு விளக்கம்

முன்னுரை:-
‘திருக்குறளும் பிற்கால நீதிநூல்களும்’ என்னும் இவ்வாய்வுத் தலைப்பு திருக்குறளிலும் பிற்கால நீதிநூல்களிலும் காணப்படும் அடிக்கருத்துக்களைத் தொகுத்து அவற்றிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்கிறது.
ஆய்வு கருதுகோள்:-
அறம் என்றைக்கும் மாறாதது. உலகம் தழுவியது .ஆனால் அறம் என்பது காலம், சமுதாயம், சூழல், சமயம் போன்றவற்றால் சில நேரங்களில் மாறுபடுகின்றது. இதன் காரணமாகத்தான் அடுத்தடுத்து தோன்றிய நீதிநூல்கள் தங்கள் கருததுக்களைச் சற்று மாற்றி அமைந்துக் கொள்கின்றன. அக்கருத்துக்களை ஆராய்வதே ஆய்வின் கருதுகோள் ஆகும்.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வும் ஒப்பீட்டுமுறை ஆய்வும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்களாக ஏழு இயல்களைக் கொண்டுள்ளது.அவை 1. திருக்குறளும் பிற்கால நீதிநூல்களும் : அமைப்பும் வரலாறும் 2. அறம் ஒரு விளக்கம் 3. திருக்குறளும் பிற்கால நீதிநூல்களும் கூறும் இல்லறக் கருத்துக்கள் 4. திருக்குறளும் பிற்கால நீதிநூல்களும் கூறும் துறவறக் கருத்துக்கள் 5. திருக்குறளும் பிற்கால நீதிநூல்களும் கூறும் அரசியல் கருத்துக்கள் 6. திருக்குறளும் பிற்கால நீதிநூல்களும் கூறும் அரச அங்கங்கள் 7. திருக்குறளும் பிற்கால நீதிநூல்களும் கூறும் குடிமை என்பனவாகும்.
முடிவுரை:-
சமுதாயத்தில் நீதி தவறும்பொழுது அதனை அழித்து நீதியை நிலைநிறுத்தும் பொருட்டு நீதிநூல்கள் தோன்றுகின்றன. விஞ்ஞானம் வளர்ந்தாலும் மனிதன் அறஉணர்வுடன் செயல்படவில்லையெனில் விஞ்ஞானத்தின் பயனை முழுமையாகத் துய்க்கமுடியாமல் போய்விடும் எனவே விஞ்ஞானமும் அறமும் மனிதனின் இருகண்காளாகும். அறம் நிலைபெறவில்லையெனில் உலகில் மன்னுயிர்கள் நிலைத்து வாழ இயலாது. எனவே, மாந்தர்களுக்கு அடிக்கருத்துக்கள் போதிக்கபட வேண்டும் அப்போது எத்தகைய தீங்கு ஏற்பட்டாலும் அவற்றை அறவழியில் வெல்ல வேண்டும் என்ற துணிவும் மன உறுதியும் தோன்றும் திருக்குறள் மற்றும் பிற்காலநீதிநூல்களில் உள்ள அடிக்கருத்துக்களை மக்களிடத்தில் கொண்டுசெல்வதே இவ்வாய்வேட்டின் நோக்கமாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆய்வு விளக்கம்

முன்னுரை:-
‘திருவிவிலியம் - திருக்குர்ஆர் நோக்கில் அமைதிக் கோட்பாடு’ என்னும் தலைப்பில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வு விளக்கமுறை மற்றும் ஒப்பீட்டு நிலையில் அமைந்த ஆய்வாக உள்ளது.
ஆய்வுத் திட்டம்:-
இவ்வாய்வேடு 1. ஆய்வு முன்னுரை 2. உலக அமைதியும் சிக்கல்களும் 3. கிறித்தவ நோக்கில் அமைதிக்கோட்பாடு 4. இசுலாமிய நோக்கில் அமைதிக்கோட்பாடு 5. கிறித்தவம் - இசுலாம் அமைதிக்கோட்பாடுகள் ஓர் ஆய்வு 6. ஆய்வுத் தொகுப்புரை ஆகியஇயல்களைக் கொண்டுள்ளது.
முடிவுரை:-
திருவிவிலியம் திருக்குர்ஆன் வழி உணர்த்தப்பட்;ட அமைதிக்கோட்பாடுகளில் வேறுபாடுகள் இருந்தாலும் இச்சமயங்கள் உலக அமைதியை உருவாக்குவதற்காக உலக மக்கள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்த சகோதரர்கள் என எடுத்துரைக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் இச்சமயங்களைப் பின்பற்றும் மக்களிடையே அமைதி நிலவ வேண்டுமாயின் இவ்வேதங்கள் கூறும் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு பின்பற்றுதல் வேண்டும் மேலும் இவ்வேதங்களை ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள் நடைமுறை வாழ்வில் அமைதி உருவாக்க மேற்கொள்ளும் செயல்பாடுகளை இனிவரும் காலங்களில் கண்டறிந்து ஆய்வு மேற்கொள்ளுவதன் மூலம் உலகில் நிலையான அமைதியை உருவாக்கமுடியும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 முன்னுரை:-

‘சமயங்களின் தனித்தன்மையும் சமூக ஒற்றுமையும் கிறித்தவம், இஸ்லாம் ஓர் ஒப்பீடு’ என்பது ஆய்வுப்பொருளாகும்.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை அணுகுமுறை, ஒப்பீட்டு முறை அணுகுமுறையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாய்வேடு ஆறு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு:- 1. ஆய்வு முன்னுரை 2. சமயங்கள் - சமூகச்சூழலும் சமூக ஒற்றுமையும் 3. கிறித்தவ சமயத்தின் தனித்தன்மையும் சமூக ஒற்றுமையும் 4. இஸ்லாம் சமயத்தின் தனித்தன்மையும் சமூக ஒற்றுமையும் 5. தனித்தன்மைகள் ஒப்பீடு – கிறித்தவம் இஸ்லாம் 6. ஆய்வு தொகுப்புரை
முடிவுரை:-
கிறித்தவத்தில் ஆன்மீக நெறியாளர்களாகிய இறைப்பணியாளர்கள் சிறப்பிடம் பெறுகின்றனர். கிறித்தவம் இறைப்பணிக்கு உலகியலோடு இணைந்த ஆன்மீகத்தைக் காட்டிலும் இறைவனுக்காகப் பணிபுரியும் ஆன்மீகத்தையே வரவேற்கிறது. இறைப் பணியாளர்களின் மக்கட்பணிதான் கிறித்தவத்தில் தூணாகும். இஸ்லாம் இறையச்சம், இறைஉவப்பு என்ற கோட்பாடுகளே மனித மேன்மைக்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிகாட்டும் நெறிமுறையாக அமைந்துள்ளன. கிறித்தவமும் இஸ்லாமும் காலம் மற்றும் சமூகப் பின்னனியின் வேறுபாட்டிற்கேற்பப் பல்வேறான தனித்தன்மைகளைப் பெற்றிருப்பினும் இத்தனித்தன்மைகள் அனைத்தும் சமூக ஒற்றுமையை நோக்கமாகக் கொண்டே திருவிவிலியம் மற்றும் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆய்வு விளக்கம்

முன்னுரை:-
‘திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள்’ எனும் இவ்வாய்வேடு, இஸ்லாம் சமயத்தின் திருமறை திருக்குர்ஆனில் இடம்பெற்றிருக்கும் அறிவியல் குறித்த கருத்துக்களைத் தொகுத்து வகைப்படுத்தி தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வும், பகுப்பாய்வு முறையும் அணுகுமுறைகளாகின்றன.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு 1. ஆய்வு முன்னுரை 2. திருக்குர்ஆன் தோற்றம், அமைப்பு, எடுத்துரைக்கும் கருத்துக்கள் 3. அறிவியல் பொருள் விளக்கம், வகைகள், பயன்கள் 4. இறைமறையும் இயற்பியல் அறிவியலும் 5. இறைமறையும் இயற்கை அறிவியலும் 6. சமதர்ம மறையும் சமூக அறிவியலும் 7. தொகுப்புரை என்பனவாகும்.
முடிவுரை:-
இஸ்லாமிய ஒழுக்க வரம்புகள் மிக எளிமையானவை, மனிதனை மனிதனாய் மதித்து நடத்துதல் என்பது முதல், இறந்த பின்வரும் அந்த உடலுக்கு மரியாதை செய்யும் வகையில் ‘கபன்’ எனப்படும் புதுத்துணிகளை அணிவித்து ‘ஜனாஸாத் தொழுகை’ என்ற பெரில் இறந்தவருக்ககாத் தொழுகை செய்து பிராத்தித்து மண்ணறையில் அடக்கம் செய்வது வரை ‘ மனிதம்’ என்று அருமையாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாக அமைகின்றது. அறிவுசார்ந்த வாழ்க்கையைக் கடைப்பிடித்தொழுகும் எந்தவொரு தனிமனிதரும் இம்மை மறுமைப்பேறுகளைப் பெற்று ஈடேற்றம் காண்பர் இதுவே திருமுறையின் அடிப்படை நோக்கமாகும். இக்கருத்தக்களின் உண்மைத் தன்மையை நிரூபிப்பதால் இவ்வாய்வேடு அமைகின்றது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆய்வு விளக்கம்

முன்னுரை:-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய திருக்குறளை மேல்வரிச் சட்டமாகக் கொண்டு இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழ்கின்ற மனித இனத்திற்கு உரிய விழுமியங்களைத் தேடுகிற முயற்சியாக இந்த ஆய்வு அமைவதனால் ‘திருக்குறளில் சமூகவியல் சிந்தனைகள்’ என்பது ஆய்வின் தலைப்பாகக் கொள்ளப்பட்டுள்ளது.
கருதுகோள்:-
தமிழர்களின் நாகரிகமும், பண்பாடும் தற்போது பல்வேறு அரசியல் பொருளாதார சமூகக் காரணிகளால் சிதைவிற்குள்ளாகி தனித்த அடையாளங்களைத் தொலைத்து வருகின்றன. முரண் கலாச்சாரங்களையும் ஏற்று இருக்கின்றன. தமிழகத்தில் தற்பொழுது தனிமனித, சமூக நடைமுறையில் திருக்குறளின் வாயிலாக, விழுமியங்களைத் தேடுவதும் நிச்சயிக்கப்பட்ட முடிவுகளைக் கொண்ட மனித வாழ்க்கைக்கு திருக்குறளின் வாயிலாக நிரந்தரமாண தேவையெனில் விழுமிங்களைக் கண்டறிதலும் கருதுகோளாகக் கொண்டு இவ்வாய்வு அமைந்துள்ளது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் பகுப்பாய்வு அணுகுமுறையும், விளக்கவியல் அணுகுமுறையும், சமூகவியல் அணுகுமுறையும் பயன்பாட்டு ஆய்வு அணுகுமுறையும் பின்பற்றப்பட்டுள்ளன.
ஆய்வேட்டின் அமைப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்களாக நான்கு இயல்களைக் கொண்டது. 1. குறள் கூறும் தனிமனிதனும் குடும்பமும் 2. குறள் கூறும் தனிமனிதனும் சமூகமும் 3. குறள் கூறும் தனிமனிதனும் சமயமும் 4. குறள் கூறும் தனிமனிதனும் அரசியலும்
முடிவுரை:-
1. ‘திருக்குறளில் சமூகவியல் சிந்தனைகள்’ என்ற இவ்வாய்வில் கண்ட இயல்களின் முடிவுகளும், எதிர்கால ஆய்விற்கான பரிந்துரைகளும் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ன. 2. தனி மனிதன் குடும்பக் கட்டமைப்பில் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான பல கருத்துக்களையும் திருக்குறளின் மூலம் உணர்த்தியும், தனிமனிதன் ஒருவருக்கொருவர் அன்பும் அமைதியும் சமூகத்தில் என்றும் நிலைத்திருக்க வேண்டும். செய்நன்றியறிதல் சமூக ஒற்றுமைக்கு மக்கள் இனம் முன்னேற வேண்டும் பிறனில் விழையாமை, வறுமை, அச்சம் போன்றவைகள் இல்லாமல் இல்வாழ்வோர் வாழவேண்டும் என குடும்ப கட்டமைப்புக்கு அடித்ததளமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆய்வு விளக்கம்

முன்னுரை:-
‘தொல்காப்பியமும் தொல்காப்பிய பூங்காவும் - மதிப்பீடு’ என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருதுகோள்:-
செய்யுளின் கட்டுப்பாட்டிற்கும் அடங்காமல் மக்களின் புரிதலுக்கான மொழிக்கும் தமிழர்களின் பரந்துபட்ட சிந்தனைகளை எளிமையாகவும், ஆழமாகவும் பதிவு செய்வதைத் தொல்காப்பியப் பூங்கா நிகழ்த்தியிருக்கிறது. தமிழின் தனித்துவமான இலக்கிய வாழ்வியல் பண்புகளைப் பதிவு செய்கிற முயற்சியில், பாமரரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அற்புதமான கற்பனை நயத்தோடு எடுத்தச் சொல்லும் முறையில் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியத்தைக் கடந்தலாகப் பெருங்கடல் என்றும், அணுகலாகக் காடு என்றும், அளக்கலாகமலை என்றும் கருதிக் கொண்டிருப்போருக்கும் கலைஞர் அதனை மலர்ப் பூங்காவாக எங்கனம் தந்துள்ளார் என்பதைக் காண்பது இவ்வாய்வின் கருதுகோளாகும்.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு அணுகுமுறையும், ஒப்பீட்டு முறை ஆய்வு அணுகுமுறை, மதிப்பீட்டு முறை ஆய்வும் அமையப் பெறுகின்றது.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு 1. முன்னுரை 2. எழுத்திலக்கணம் 3. சொல்லிலக்கணம் 4. பொருளிலக்கணம் 5. புலப்பாட்டு உத்திகள் 6. மொழிநடை 7. முடிவுரை
முடிவுரை:-
பழந்தமிழர்களின் தொன்மைக் கருத்துக்கலை மறைக்காமல் அவற்றைக் கலைஞர் பல இயல்களில் கையாண்டுள்ளார். தவறான மதிப்பீடுகளைக் கட்டுடைத்துக் காட்டுவது புனிதங்களை மறு மதிப்பீட்டுக்கு உட்படுத்துவது எனும் சிந்தனைத் தளங்களுக்கு அவர் வipயமைத்துள்ளார். கடவுள் சிந்தனை கற்பனையே என்பது ஆய்வு வழி உணரமுடிகிறது. பகுத்தறிவு, சுயமரியாதைச் சிந்தனை, வருணாசிரமத்தை ஒழிப்பது, மகளிர் மான்புயேற்றல் முதலியனப்பற்றிக் கற்பித்தல் முறையில் எடுத்துச் சொல்லும் கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா உரைவளம் திகழ்கின்றது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆய்வு விளக்கம்

முன்னுரை:-
உலகின் மிகச்சிறந்த நூல்களாகத் திகழ்பவை திருக்குறளும் விவிலியமும் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறநெறிகளைத் தருபவை இவை. உலகம் அனைத்திற்கும் பொதுவான அறநெறிகளைத் தரும் திருக்குறளும் விவிலியமும் பலரால் ஒப்பிடப்பெற்றுள்ளன. அந்த வரிசையில் திருக்குறளும் விவிலியமும் தரும் அறக்கோட்பாடுகள் இந்த ஆய்வில் ஒப்பிடப்படுகிறது.
கருதுகோள்:-
விவிலியமும் திருக்குறளும் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டிய நெறிகளையே வகுத்தளிக்கின்றன. இல்லறம், சமுதாயம், சமயம், அரசியல் அனைத்துத் துறைகளிலும் சிறப்பானதொரு வாழ்வை அமைத்திட விவிலியமும் திருக்குறளும் துணைநிற்கின்றன. திருக்குறள் தமிழ்நாட்டைச் சார்ந்தது விவிலியம் மேலைநாட்டைச் சார்ந்தது. இரண்டும் வெவ்வேறு வெவ்வேறு மொழிகளில் இருந்தாலும் இவற்றில் காணப்படும் அறக்கொள்கைகள் காலம், இடம், மொழி தாண்டி ஒன்றுபட்டு விளங்குகின்றனர் வேறபட்டுக் காணப்படுகின்றனவா என்று ஆய்வதே இவ்வாய்வின் கருதுகோளாகும். அறக்கொள்கைகள் என்றும் மாறாதவை என்ற அடிப்படையிலேயே இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு அணுகுமுறை, ஒப்பீட்டு அணுகுமுறையும் மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. 1. திருக்குறள் - விவிலியம் : அமைப்பும் அறம் கூறும் முறையும் 2. இல்லறக் கோட்பாடுகள் 3. சமுதாயக் கோட்பாடுகள் 4. இறையியல் கோட்பாடுகள் 5. அரசியல் கோட்பாடுகள்
முடிவுரை:-
விவிலியமும் திருக்குறளும் உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய நெறிகளைத் தருகின்றன. இல்லறம், சமுதாயம், சமயம், அரசியல் கோட்பாடுகள் அனைத்துமே மனித இனம் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுபனவாக விளங்குகின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முன்னுரை:-
‘வெண்மணி நிகழ்ச்சியும் இலக்கிய பதிவுகளும்’ என்பது ஆய்வுத் தலைப்பாக அமைகிறது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வு, வரலாற்று ஆய்வு, உள்ளடக்கப் பகுப்பு, விளக்க ஆய்வு அணுகுமுறையும் பயன்படுத்தப்படுகிறது.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு 1. முன்னுரை 2. வெண்மணி நிகழ்ச்சியும் வரலாற்றுப் பின்புலமும் 3. கவிதை இலக்கிய வடிவமும் வெண்மணி நிகழ்ச்சிப் பதிவும் 4. சிறுகதை ஆக்கமும் வெண்மணி நிகழ்ச்சிப் பதிவும் 5. நாடக வடிவமும் வெண்மணி நிகழ்ச்சிப் பதிவும் 6. புதினங்களும் வெண்மணி நிகழ்ச்சிப் பதிவும் 7. இதழ்களும் வெண்மணி நிகழ்ச்சிப் பதிவும் 8. திரைக்கதை ஆக்கமும் வெண்மணி நிகழ்ச்சிக் கருவும் 9. இயக்கங்களும் வெண்மணி நிகழ்ச்சித் தாக்கங்களும் 10. வெண்மணி நிகழ்ச்சி குறித்துத் தொடரப்பட்ட வழக்குகளும் தீர்ப்புகளும் 11. முடிவுரை
முடிவுரை:-
காலந்தோறும் பண்ணை அடிமைகளாக வாழ்ந்த விவசாய மக்கள் சுதந்திரத்திற்குப் பின்பு தினக்கூலித் தொழிலாளிகளாக மாறிய நிலையில், அவர்கள் மீது பண்ணையார்களின் அடக்குமுறையும், அடக்குமுறைக்கு எதிராக மக்களிடைவே தோன்றிய விழிப்புணர்வும் செங்கொடி இயக்கமும், செங்கொடி இயக்கத்தின் தீவிரத்தின் காரணமாக மக்கள் எரிக்கப்பட்டதும் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளன. தலித் இயக்கத்தின் முதன்மையானதாகத் தலித் சிறுகதைகள் அமைகின்றன. இதில் வெண்மணிதீயின் தப்பித்த சிறுவனின் உள்ளக் குமுறல், பாத்திர வருணணை, குண்டர்களின் தோற்றம், குனிந்து வாங்கும் முறை, எவைதற்கானச் சூழல், வெண்மணி வழக்கின் தீர்ப்பு, இத்தீர்ப்பின் மறு பரிசீலனை ஆகியவையோடு கூலிப் போராட்டத்தின் காரணமாக எரிக்கப்பட்டது விளக்கப்படுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 முன்னுரை:-
‘திருக்குறள், மனுநெறித் திருநூல் : ஓர் ஒப்புமை’ என்பது இவ்வாய்வுப் பொருளாகும்.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் ஒப்பீட்டாய்வு முறையும், விளக்கவியல் ஆய்வு முறையும் இங்கு பின்பற்றப் பெறுகின்றன.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை நீங்களாக ஆறு இயல்களைக் கொண்டது. 1. ஆய்வு அறிமுகமும் சுவாமிகளின் வாழ்வும் தமிழ்ப்பணியும் 2. அற இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 3. திருக்குறளும் மனுநெறித் திருநூலும் 4. மரப வழியில் மனுநெறித் திருநூல் 5. மனுநெறித் திருநூலில் புதுமைக் களங்கள் 6. முடிவுரை
முடிவுரை:-
தண்டபாணி சுவாமிகளின் ‘மனுநெறித் திருநூல்’ நீதிக் கருத்துகளை வலியுறுத்துவதால் மக்கள் வாழ்வு சீர்ப்படும், செம்மைப்படும். ஆயின் நீதி இலக்கியங்கள் மன முதிர்ச்சிக்கும், சமுதாய நலத்திற்கும், மேம்பாட்டிற்கும், உயர்விற்கும், நல்லுறவிற்கும், அடிகோலுவன. இவற்றால் மக்கள் கலக்கங்களும் நீங்கி அமைதியான வாழ்வு உருவாகும் என்பது உறுதி, காலத்தின் கட்டாயம், தேவை கருதிக் கூறப்பட்ட அறங்கள் இன்னும் நம் சமுதாயத்திற்குப் பொருந்தி வருவதென இவ்வாய்விலிருந்து உணரலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 முன்னுரை:-
‘திருக்குறளும் குருகிரந்தமும் - ஓர் ஒப்பாய்வு’ என்னும் தலைப்பில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு கருதுகோள்:-
திருக்குறளும் குருகிரந்தமும் தனிமனிதனுக்கும் அவன் வாழும் சமூகத்தில் ஒழுகவேண்டிய நெறிமுறைகளையும் விளக்குகின்றன. இரண்டும் காலத்தாலும் இடத்தாலும் மாறுபட்டுக் காணப்படுகின்றன. எனவே இவ்விரண்டு நூல்களும் கூறும் கருத்துகள் ஒன்றுபட்டு விளங்குகின்றனவா மாறுபட்டு விளங்குகின்றனவா எனக் காண்பதே ஆய்வின் கருதுகோள், ஏனெனில் உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளின் கருத்துகளால் சமயநூலான குருகிரந்தமும் தாக்கப்பட்டிருக்கலாம்.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வு விளக்கமுறை ஆய்வாகவும், ஒப்பீட்டு அணுகுமுறை ஆய்வாகவும் அமைந்துள்ளது.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை நீங்கலாக நான்கு இயல்களைக் கொண்டுள்ளது. 1. திருக்குறளும் குருகிரந்தமும் : அமைப்பும் ஆசிரியர்கள் வரலாறும் 2. இறைச் சிந்தனை 3. தனிமனித ஒழுகலாறுகள் 4. சமுதாய ஒழுகலாறுகள்
முடிவுரை:-
ஆய்வு முடிவுரை என்னும் இயலில் இவ்விரு நூல்களின் மூலம் பெறப்பட்ட செய்திகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard