New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாகிஸ்தான் கொடியை ஏற்றியதைப் பற்றிக் வெட்கபடாத, ரோஷமற்ற, இந்திய அரசு, இந்திய கொடியை ஏற்றுவரும


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பாகிஸ்தான் கொடியை ஏற்றியதைப் பற்றிக் வெட்கபடாத, ரோஷமற்ற, இந்திய அரசு, இந்திய கொடியை ஏற்றுவரும
Permalink  
 


பாகிஸ்தான் கொடியை ஏற்றியதைப் பற்றிக் வெட்கபடாத, ரோஷமற்ற, இந்திய அரசு, இந்திய கொடியை ஏற்றுவரும் போது தடுக்கிறது!

ஜனவரி 25, 2011

பாகிஸ்தான் கொடியை ஏற்றியதைப் பற்றிக் வெட்கபடாத, ரோஷமற்ற, இந்திய அரசு, இந்திய கொடியை ஏற்றுவரும் போது தடுக்கிறது!

 

22-01-2011 அன்று லால்சௌக்கில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டபோது, எந்த காங்கிரஸ் ஆளுக்கும் சூடு, சுரணை வந்து தடுத்துவிடவில்லை. எல்லைகளையெல்லாம் அடைத்துவிடவில்லை. ராணுவத்தை, பாதுகாப்பும்ப் படையை, ராணுவத்தை அனுப்பி அடக்குமுறைகாஇக் கட்டவிழ்த்து விடவில்லை; எல்லைகளிலேயே பிடித்து கைத் செய்யப்படவில்லை; குண்டுக் கட்டாக காரில் ஏற்றி, வேறு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை; ஆனால், இந்திய கொட்யை ஏற்றுஇவோம் என்றால், இவ்வளவும் நடந்தேரியுள்ளது? ஏன்? ஆஹா, அமைதிக்கு ஊறு ஏற்பட்டுவிடும் என்று அசளுக்கு ஆளுக்கு கிளம்பிவிடுகிறார்கள். லால்சௌக்கில் ஏன் கொடி ஏற்ற வேண்டும், வேறெங்கு வேண்டுமானால் ஏற்றலாமே? என்றெல்லாம் வாதங்களை வைப்பது வேடிக்கையாக இருக்கிறது.

 

20-10-2001: மஹாராஷ்ட்ர மாநிலம் நாசிக் அருகே உள்ள ஒரு தர்காவில் பானிஸ்தானின் தேசிக் கொடியை ஏற்றிய எல்லைப்பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை பொதுமக்கள் தாக்கினார்கள்[1]. நாசிக் அருகே உள்ள யாத்தேன்கிரி என்ற கிராமத்தில் ஹஜ்ரத் நாதுஷா பாபா என்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒருவர் பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றினார். இதைப் பார்த்தபொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். பிறகு அந்த நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கிய பிறகு போலீசில்ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றுபவர்என்றும், காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிர்கிட் மலையில் வேலை செய்துவருவதாகவும்தெரியவந்தது. போலீசார் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த பாகிஸ்தான் தேசியக் கொடியைக் கைப்பற்றினர்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டதால், அங்கு போலீஸ் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

 

உள்துறை அமைச்சர், திருவாளர் சிதம்பரம் கண்டனம் தெரிவிக்கவில்லையே, ஏன்?: 22-01-2011 அன்று லால்சௌக்கில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டபோது உள்துறை சிதம்பரத்திற்கு தெரியாமலா போய்விட்டது? அப்படியிருந்தால் அமைச்சராக இருப்பதற்கே யோக்கியதை இல்லையே? ஆனால், தெரிந்தும் அமைதியாகத்தான் இருந்தார். பிரதம மந்திரி, ஜனாதிபதி கண்டுகொள்ளவேயில்லை. அப்படியென்றல், இவர்கள் எல்லோருமே பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், தேசவிரோதிகள், பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் முதலியோர்க்கு ஆதரவாக செயல்படுவது போலத்தானே இருக்கிறது? இந்தியாவை ஆதரிக்கத இவர்கள் எப்படி பதவில்யில் இருக்கிறார்கள்?

லால் சௌக் இல்லாமல் வேறு இடத்தில் கொடியை ஏற்றலாமே?ஆமாம், தாராளமாக செய்யலாமே? ஆனால், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், தேசவிரோதிகள், பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் அவ்வாறு செய்வதில்லையே? லால் சௌக்கில் தான் பாகிஸ்தான் கொடியை ஏற்றுகின்றனர், இந்தியக் கொடியை எரிக்கின்றனர். அது ஏன்? மற்ற இடங்களில் இந்திய கொடியை ஏற்றினால், யாரும் எதிர்ப்பதில்லையே? முக்கியமாக முஸ்லீம் தீவிரவாதிகள் ரகளை-கலாட்டா செய்வதில்லையே? அது ஏன்?

சீனாவுக்கு வக்காலத்து வாங்கும் இந்திய அறிவிஜீவி: ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ஒரு அறிவுஜிவி எச்சரிக்கை விடுக்கிறது, இடா நகரில் போய் கொடியை ஏற்ற வேண்டியதுதானே, அவ்வாறு செய்தால், சீனாவே அதை எதிர்க்கும் என்றாரே பார்க்கலாம். அதாவது, இந்திய அறிவிஜீவிகளுக்கு, அந்த அளவிற்கு புத்தி மழுங்கி விட்டது என்று தெரிகின்றது.

காஷ்மீரத்தில் இப்பொழுது தான், ரொம்ப நாட்கள் கழித்து அமைதி திரும்பியிருக்கிறது. அதனை களைக்க வேண்டாம் – என்பது இன்னொரு வாதம்: ஆனால், அங்கு அமைதியை களைத்தது யார்? பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், தேசவிரோதிகள், பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் தாமே? ஆனால், இந்திய கொடியை ஏற்ருபவர்கள் அவ்வாறில்லையே? பிறகு ஏன் இந்த மயக்கம்?

மத்தியஸ்தம் செய்யவந்த ஆட்கள் எல்லாம் அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டனர்: இன்டர்லோகியூட்டர் எனப்படுகின்ற, இந்தியர்கள் தாம் இந்தியர்கள் என்பதனையே மறந்து, பாகிஸ்தானியர் போல பேசுவதும், காஷ்மீர இந்துக்களை உதாசினப் படுத்துவதும், இப்பொழுது, கொடி ஏற்றக் கூடாது என்றெல்லாம் அறிவுரைக் கூற வந்துவிட்டதும் பார்க்கும்போது, படுகேவலமாக இருக்கிறது. யார் இந்த ஆட்களுக்கு, இத்தகைய அதிகாரத்தைக் கொடுத்தது?

© வேதபிரகாஷ்

25-01-2011



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard